Monday, October 24, 2016



avargal unmaigal
எல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்?Nobody trusted  dmk leader  stalin


கலைஞர் மற்ற கட்சி தலைவர்களை எப்படி எப்போது அரவணைத்து கொள்வது தனக்கு சாதகமாக அல்லது எப்படி எந்த நேரத்தில்  மிக நாசுக்காக வெட்டிவிடுவது என்ற கலையை நன்கு கற்று அறிந்தவர். அதனால்தான் அவர் பல வெற்றிகளை தனக்குரிய வெற்றியாக ஆக்கி இது நாள்வரை மிக சிறந்த் திமுக தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார்.


ஆனால் அவரின் மகனாக இருந்தும் இன்று வரை சரியாக கலைஞரிடம் பாடம் கற்றுக் கொள்ளாமல் அவசரக் குடுக்கையாக ஸ்டாலின் செயல்பட்டு பல தோல்விகளை மாறி மாறி அடைந்து வருகிறார்., ஸ்டாலினை கலைஞரின் மகனாக பலர் கட்சி தலைவர்கள் கருதினாலும் அவரை சிறந்த தலைவராக எந்த ஒரு சிறு கட்சியும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதை சமீபகால அரசியலை உற்றுக் கவனித்தவர்களுக்கு இந்த உண்மை நன்கு தெரியும்


கலைஞர் பல முறை வைகோவை துரோகி என்று அழைத்த போதிலும் கலைஞர் அவரை வைகோ நீ என் தம்பி மீண்டும் வா என்று அழைத்தால் வைகோ எல்லாவற்றையும் மறந்து மீண்டும் அவரிடம் சென்று சேர்வார் ஆனால் அதே நேரத்தில் ஸ்டாலின் அழைத்தால் தம்பி நீ நேற்று பெஞ்ச மழையில் முளைத்த விதைடா என்று சொல்லி சென்றுவிடுவார்,

அது போலத்தான் பாமாக கட்சி தலைவர்களும் ஏன் அன்புமனியும்,திருமாவளவன்  மற்றும் விஜயகாந்த போன்றோரும் அப்படிதான் நினைத்து கொள்வார்கள் இதற்கு காங்கிரஸும் விலக்கு அல்ல. அவர்களை பொருத்தவரை நாங்கள் தலைவர் கலைஞரிடம் சேர்ந்து அர்சியல்  கற்றுவர்கள் & பண்ணியவர்கள் ஆனால் ஸ்டாலினை யாரும் அவர்கள் அப்படி நினைப்பத்தில்லை. அதனால்தான் பலரும் கடந்த தேர்தல்களில் ஸ்டாலினை முண்ணிலைப்படுத்தியதும் அவர்கள் திமுகவைவிட்டு விலகி நின்றார்கள்.

கடந்த கால ஆட்சியில் அதிமுக அரசு செயல்படாத அரசாக இருந்தது இந்த சூழ்னிலையில் கலைஞர் தலைமையில் திட்டமிடபட்டு இருந்திருந்தால் திமுக அரசு இப்போது ஆச்சி கட்டிலில் எளிதாக இருந்திருக்கும் ஆனால் ஸ்டாலின் தன்னை முன்னிலைபடுத்தினார்


ஸ்டாலினை மட்டும் முண்ணிலை படுத்தபடாமல் இருந்தால் இந்த நேரம் திமுக ஆளும் கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கும். யாரையும் அரவணைத்து செயல்படும் குணம் இல்லாததால்தான் ஸ்டாலின் தோல்வி மேல் தோல்வியாக திமுகவிற்கு தேடி தந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தன்னை ஒரு செயல்படும் தலைவாரக காட்டிக் கொள்ள காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை தன் தலைமையில் நடத்தி அதை வைத்து வரும் மூன்று தொகுதி தேர்தல்கலில் பழம் பறிக்க நினைக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே இப்படி  நாடகம் போடுகின்ற  ஸ்டாலின் ஆளும் கட்சிக்கே அழைப்பு விடுக்கின்றாராம்.. கோமாளியை காட்டிலும் நகைப்புக்கு உரியவர் ஆனால் எல்லா கட்சி தலைவர்களும் முட்டாள்களா என்ன இவர் தலைமையில் கூடுவதற்கு அதனால் அவர்கள் இவரின் அழைப்பை அலட்சியப்படுத்தி தனி தனியாக போராடுகிறார்கள்..ணத்துக்காக பல்லிளிக்கும் கூட்டம் வேண்டுமானால் இவர் வாசலில் காத்திருக்கலாம்..அரசியல் அறிந்த எவரும் ஸ்டாலின் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு செல்லவே மாட்டார்கள் என்பதுதான் கண் கூடாக இப்போது காணும் காட்சி.


 ஸ்டாலின் ஜெயலலிதா வழியை காப்பி அடிக்க முயற்சிக்கிறார். ஒவ்வொரு தலைவனுக்கும் என்று ஒரு தனிவழி உண்டு அதனால்தான் அவர்கள் தலைவராக ஆகுகிறார்கள்  ஒரு அண்ணா ஒரு காமராஜர் ஒரு எம்ஜியார் ஒரு கலைஞர் ஒரு ஜெயலலிதாதான் இருக்க முடியும் ஆனால் அவர்களை காப்பி அடித்து தலைவராக ஆக முயற்சித்தால் அது தோல்வியில்தான் முடியும்.


ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றும் வரும் நேரத்தில் எல்லோரும் பரிதாபபட்டு பார்த்து வரும் வேளையில் ஏன் விஜயகாந்து கூட பகைமையின் காரணமாக பார்க்க செல்லாமல் இருந்தாலும் ஜெயலலிதாவை பற்றி ஒன்றும் சொல்லாமல் அமைதிக் காத்து வருகிறார். ஆனால் ஸ்டாலினோ சென்று பார்த்து விட்டு அவர் பழைய படி பணியாற்ற வேண்டும் என்று போலியாக  ஒரு அறிக்கையைவிட்டு  இப்போது சொல்லுகிறார் விரைவில், தி.மு.., மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏறும். என்று. அவர் எதை மனதில் வைத்து இப்படி சொல்லி இருப்பார் என்று விபரம் தெரிந்த எல்லோருக்கும் தெளிவாக புரியும் அல்லவா?

ஸ்டாலின் அவர்களே ஜெயலலிதா அவ்வளவு எளிதாக மறைந்துவிட மாட்டார் அப்படியே அவர் மறைந்தாலும் மக்கள் நிச்சயம் உங்களை முதல்வராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்

ஸ்டாலின் அவர்களே மாற்று கட்சி தலைவர்களை முதலில் கவருங்கள் அதன் பின் மக்களை கவருங்கள் அதன் பின் ஆட்சி கட்டிலில் அமர்வதை பற்றி கனவு காணுங்கள் அது  வரை கலைஞரை செயல்படவிடுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி ஸ்டாலின் 'அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை' என, .தி.மு.., மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்து விட்டார்.இதையடுத்து, அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தை, நாளை தி.மு.., கூட்டி உள்ளது.

இதற்காக, .தி.மு.., - காங்கிரஸ் - ..., - பா..., - பா.., - வி.சி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, அனைத்து கட்சிகளுக்கும், அனைத்து விவசாய சங்கங்களுக்கும், தி.மு.., அழைப்பு அனுப்பியது. அழைப்பை பெற்றுக் கொள்ள அ.தி.மு.., மறுத்து விட்டது.

அதேபோல, 'அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த, தி.மு..,வுக்கு அருகதை இல்லை; கூட்டத்தில், பா.., பங்கேற்காது' என, தமிழக பா.., தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியும், 'தி.மு.., கூட்டும் அனைத்து கட்சி கூட்டம், ஏமாற்று வேலை; பங்கேற்க மாட்டோம்' என, அறிவித்துள்ளது.

பா...,வும் இதே நிலையை எடுக்கப் போவதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. விவசாய சங்கங்கள் சிலவும், 'இடைத்தேர்தலைமனதில் வைத்தே, தி.மு.., அரசியல் செய்கிறது' என, விமர்சித்துள்ளன.

1 comments:

  1. ஸ்டாலின் ஜெயலலிதா வழியையே காபி அடிக்க முயல்கிறார் என்பதுதான் உண்மை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.