தீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி
ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன?)Jashodaben Modi
தீபாவளி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது எல்லோரும் ஏழைகள் முதல்
பணக்காரர்கள் வரை அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப துணிமனிகளை வாங்கி புது துணிமணி அணிந்து
தீபாவளியை கொண்டாடுகின்றனர்.கஷ்டப்படுபவன்
கூட தன் மனைவிக்கு தன் வசதிக்கேற்ப கடனோ உடனோ வாங்கி ஒரு சேலையாவது வாங்கி கொடுத்துவிடுவான்.
ஆனால் இந்த தீபாவளிக்கு இந்திய உயர் பெண்மணியாகி ஜசோதாபென்னிற்கு (#Jashodaben Modi) மோடி ஒரு சேலை கூட எடுத்து கொடுக்கவில்லை சரி
அவர்தான் இந்தியாவிற்க்காக 24 மணிநேரமும் உழைத்து உலகம் பூராவும்
சுற்றிக் கொண்டிருக்கிறார் அதனால் அவர் கட்சிகாரர்கள் கூட அவரின் சார்பாக ஒரு சேலை
கூட எடுத்து தரவில்லை சரி அவர்கள் தான் தரவில்லை எதிர்கட்சியினரும் கூட எடுத்து தரவில்லை
சரி அவர்கள்தான் தரவில்லை என்றால் இந்தியாவின் உயர்ந்த பெண்மணிக்கு இந்திய குடி மக்களில்
ஒருத்தருக்கு கூட எடுத்து தர மனமில்லையே அது ஏன்? ஜசோதாபென் என்ன தீண்டதாகதவரா என்ன?
இதை படிக்கும் யாரவது ஒருத்தர் அவருக்கு புது துணிமணிகளை வாங்கி
அனுப்பலாமே வட இந்தியாவில் இன்றுதானே தீபாவளி முடியாமா இந்திய மக்களே. இந்திய உயர் பெண்மணிக்கு தரும் மரியாதை இந்தியாவிற்கு மட்டுமல்ல
இந்து மதத்திற்கும் தரும்
மரியாதை... அதனால் மரியாதை தருவீர்களா அல்லது சுயநலம் மிகுந்த
இந்தியர்களாக இருக்க போகிறீர்களா?
சிந்தியுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
என்ன அந்த அம்மாவைப்போய் இந்திய முதல் பெண்மணின்னுட்டீங்க! பிரணாப் மனைவி அல்லவா இந்திய முதல் பெண்மணி. மற்றவர் மனைவிக்கு ஆண்கள் புடவை பரிசளிப்பது (உடன்பிறந்தாளையும் பெரியவர்களையும் தவிர) இந்திய வழக்கமில்லையே
ReplyDelete
Deleteதவறுக்கு மன்னிக்கவும் அப்ப இவர்களை இரண்டாவது பெண்மணி என அழைக்கலாம் சரிதானே... இவரும் நமக்கு தாய் போன்றவர்தானே
நீங்களாவது ஒண்ணு எடுத்து அனுப்பி இருக்கலாம் நண்பரே
ReplyDeleteநான்தீபாவளி கொண்டாடுறது இல்லையே அப்புறம் நான் இந்தியனே இல்லையே
Deleteஅட! நல்ல எண்ணம், நல்ல ஐடியா. நாங்கள் சொல்ல நினைத்ததை அதான் முதல் பெண்மணி அல்ல என்பதை நெல்லைத் தமிழன் சொல்லிவிட்டார். அது சரி இந்திய மக்கள் எல்லோரும்...சரி எல்லோரும் இல்லை ஒரு நூறு பேர் கூட வாங்கி அனுப்பிவிட்டால் பாவம் அந்த அம்மா எங்கு கொண்டு வைத்துக் கொள்வார்? பிரதமர் பங்களாவிலா? அவர்தான் அவருக்கே இடம் கொடுக்கவில்லையே...அந்த அம்மா பாவம்.
ReplyDeleteகீதா
கொடுமை கொடுமை ,அவர் இருக்கும் மாநிலமான சூரத்தில் இருந்துதான் நாடெங்கும் சேலை சப்ளை ஆகிறது :)
ReplyDelete