உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, October 19, 2016

இந்திய சட்டங்களால் மயிரைப் கூட பிடுங்க முடியாதா?இந்திய சட்டங்களால் மயிரைப்  கூட பிடுங்க முடியாதா?

இந்திய சட்டங்கள் வர வர கேலிக் கூத்தாக ஆகிறது போலத்தான் இருக்கிறது. அதை தெரிந்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற தமிழ் பெண் ஜெயலலிதா பற்றி  அவதூறு பரப்பிய பின் பலரும் கொதித்து எழுந்து அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கனும் என்று கூக்குரலிட்டனர். அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. அந்த சமயத்தில் அவர் சொன்னது இந்திய சட்டங்கள் என் மயிரைக் கூட புடுங்க முடியாது. அப்படி அவர் சொன்ன போதும் இந்திய சட்டங்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் இந்திய சட்டங்கள் வெளிநாட்டவரை எளிதாக ஒன்றும்  செய்ய முடியாது என்பதுதான் உண்மை.


இன்னும் சொல்லப் போனால் இந்திய சட்டங்கள் வெளிநாட்டவரின் மயிரை மட்டுமல்ல இந்தியர்களின் மயிரைக் கூட புடுங்க முடியாதுதான் அந்த சட்டங்களால் புடுங்க முடிவது எல்லாம் ஏழை மற்றும் மிடில் க்ளாஸ் மக்களின் மயிரைத்தான்.

1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்து விஷ வாயு வெளியேறியது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார். இதற்காக யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீது, பிடியில் வெளிவரமுடியாத நிரந்தர பிடி வாரண்ட்டை போபால் நீதிமன்றம் பிறப்பித்தது. ஆனால் நடந்தது என்ன அரசாங்க உதவியோடு தப்பி ஒடிய அவர் 2014 ல் காலமாகும் வரை அவரை இந்திய சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை


ஏன் சமீப காலத்தில் பல்கோடி கடன் வாங்கி பிஸினஸ் நடத்திய விஜய் மல்லையா இந்தியாவை விட்டு தப்பி ஒடிய அவரை இன்று கூட இந்திய சட்டத்தால் தொட கூட முடியவில்லை


அதைவிடுங்க.. இந்திய உயர் நீதிமன்றம் காவிரி பிரச்சனையில் தீர்ப்பு வழங்கிய போதும் அந்த தீர்ப்பை செயல்படுத்தாத ஒரு மாநில அரசை  இந்திய சட்டங்களால் ஒன்று கூட செய்ய முடியவில்லை...


இதையெல்ல்லாம் அறிந்ததால்தான் என்னவோ வசதி படைத்த பலரும் இந்தியாவின் சட்டத்தால் தங்கள் மயிரைக்கூட புடுங்க முடியாது என்று அட்டுழியங்கள் பலதை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் குடித்து விட்டு காரை ஒட்டி ஆளை கொன்ற நடிகரும் ஆயுதங்களை வீட்டில் வைத்த நடிகரும் ஊழல் குற்றங்களை செய்த தலைவர்களும் தைரியமாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஒரு மயிரைக்கூட சட்டத்தால் புடுங்க முடியாது


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. அதனால் தான் ,என்கவுண்டர்களும், சிறைச்சாலை 'தற்கொலைகளும் 'பெருகி வருகின்றன :)

  ReplyDelete
  Replies
  1. ஆனால் அந்த என் கவுண்டர்களும் தற்கொலைகளும் ஏழைகளுக்கே ஏற்படுகின்றது வசதி படைத்த குற்றாவாளிகள் என் கவுண்டரில் கொலையோ தற்கொலையோ செய்து கொள்வதில்லை

   Delete
 2. athellamcorrect...
  but why you always pronounce this disgusting word man
  even without that word your writing is good
  oruvelai GENES panra problemo

  ReplyDelete
  Replies


  1. சில நேரங்களில் சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது அப்படி சில வார்த்தைகளை பயன்படுத்து போதுதான் சொல்ல வரும் விஷயத்திற்கு சற்று அழுத்தம் ஏற்படுகிறது அது தவிர்க்க முடியாதது. நண்பரே.

   Delete
 3. தங்களது வார்த்தைகளில் கடுமை இருந்தாலும் நியாயமான, தேவையானதே... என்று நினைக்கத் தோன்றுகிறது தமிழரே
  த.ம.2

  ReplyDelete
 4. உங்க பட்டியலில் நம்ம தேர்தல்காலத்தில் பிடிபட்ட 5400(0)கோடி ட்ரக்கரை சேர்த்துக் கொள்ளலாம்...மற்றவை குற்றவாளி யாருன்னு தெரிந்தே பிடிக்காதவை என்றால் இதில் குற்றவாளி யாருன்னே தெரியலயே? என்ன தெரியும்ங்கிறீங்களா அதுவும் சரிதான் ஆனா பிடிபடலயே? ஒரு திருத்தம்...மயிரு அல்ல மசுரு ! (அப்பத்தான் நாம நினைச்ச எரிச்சல் கிடைக்கும்) உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படித் தலைப்பு கிடைக்குதோ போங்க!

  ReplyDelete
  Replies
  1. தமிழையும் நான் ஒழுங்காக கற்று கொள்ளவில்லை அதனால்தான் மசுரு என்று சொல்வதற்கு பதிலாக மயிருன்னு சொல்லிட்டேன் இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன். ஹீஹீ ரஜினிக்கு பஞ்ச் டயலாக் போல மதுரைதமிழனுக்கு தலைப்பு என்று நினைத்து கொள்ளுங்கள்

   Delete
 5. அந்தச் "சட்டத்திற்குள்" ஏழைகளும் பாழைகளும்தான் வேறுயாருக்கும் சட்டம் என்பது நம்மூரில் இல்லை. இங்க எதுக்குத்தான் சட்டம் இருக்குது...இந்தியா சுதந்திர நாடுனு தெரியாதா உங்களுக்கு!!!!

  ReplyDelete
  Replies
  1. சுந்திர நாட்டில் சட்டத்திற்கும் அப்ப அப்ப சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள் போல

   Delete
 6. அமெரிக்காவில் இருக்கும் சிலர் தமிழச்சியைப்போல் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள். அவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன சார் ??

  ReplyDelete
  Replies
  1. அவதூறு பேசுவது தவறுதான். ஆனால் அரசியல் தலைவர்களை விமர்சனம் பண்ணுவது என்பது வேறு.அவதூறு பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அந்தெந்த நாட்டு சட்டப்படி. ஆனால் இந்தியாவின் சட்டங்கள் இந்தியாவிற்குள்ளே மதிக்கப்படுவதில்லை என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog