உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 22, 2015

தூங்கும் எதிர்கட்சி தலைவர்களும் தூங்காமல் உழைக்கும் ஜெயலலிதாவும்தூங்கும் எதிர்கட்சி தலைவர்களும் தூங்காமல் உழைக்கும் ஜெயலலிதாவும்

பாதிக்கப்பட்டவங்களுக்கு மட்டும் தானே நிவாரண நிதி தரணும். ஆனால் கடலூரில் ஒருத்தர் விடாம எல்லாருக்கும் 5,000 ரூபாய் தந்திருக்காங்க தமிழக அரசு. இதற்கு என்ன காரணமுன்னு சொல்லியே ஆகணும்
- பொன். ராதாகிருஷ்ணன்எல்லோரும் கூட்டணிப் பேசிக்கிட்டு இருக்கும் போது அம்மா வேட்பாளரை முதலில் அறிவிச்சுட்டு அதிரடியாக பிரச்சாரம் ஆரம்பிப்பாங்க. ஆனால் இந்த தடவை அம்மா தேர்தலை அறிவுக்கும் முன்பே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க...

இது தெரியாம தமிழக அரசு இதற்கு காரணம் சொல்லனும் அதற்கு காரணம் சொல்லனும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கட்சி தலைவர்களே நீங்கள் தூங்கி கொண்டிருந்தால்  இந்த தடவையும் நீங்கள் கோட்டை விட வேண்டியதுதான்.

ஆர்கே நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பார்வையிட்ட போதே வாக்களர் பெருமக்களே என்று ஜெயலலிதா ஆரம்பித்த போதே நீங்க விழித்து இருக்கணும் அது போலத்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படாதவர்கள் என்று கடலூரில் ஒருத்தர் விடாம எல்லாருக்கும் 5,000 ரூபாய் தந்திருக்காங்க இது அட்வான்ஸ்துதான்....

இப்பவாவது முழிச்சுக்கோங்க தூங்காதே தம்பி தூங்காதே அப்புறம் கோட்டையை விட்டு விட்டு ராகம் பாடதே

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. அப்படியா! திருவண்ணமலை மாவட்டத்துக்கும் வந்துட்டு போகச் சொல்லுங்க

  ReplyDelete
 2. இந்த ரணகளத்துலயும் உமக்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு?!
  மாப்ள இங்கன ஜனங்க மழைய போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு பொழிஞ்சி தள்ளிட்டாலும்.. நம்ம மக்களை ஆளும் மகராசர்களுக்கு ஆசை கொறையலை.. இத நீங்க வேற சொல்லி உங்களால இங்க இருக்குற உங்க சங்கத்து ஆளுங்கள்ளாம் அடிபடனுமா?...

  போதுமுய்யா போய் புள்ளகுட்டிகள படிக்க வையுங்கய்யா..! இதுக்கு மேலயாவது ரியல் எஸ்டேட் பண்ணாம..., வெவசாயத்த பாருங்கய்யா...

  ReplyDelete
 3. ம்ம்ம்... ஆரம்பிச்சாச்சா தேர்தல் விளையாட்டுகள்! :(

  ReplyDelete
 4. தேர்தல் சித்துவேலைகள், நாடகங்கள் நன்றாகவே தொடங்கிவிட்டன. ஆளாளுக்கு நல்ல வேஷங்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் வேஷங்கள் கலையும் என்பது இந்த முட்டாள் மக்களுக்குத் தெரிவதில்லையே...

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog