உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, November 9, 2015

இது இல்லாமல் தீபாவளியா?avargal unmaigal
   இது இல்லாமல் தீபாவளியா?

பட்டாசு பலகாரங்கள் இல்லாமல் கூட தீபாவளி கொண்டாடலாம் ஆனால் இது இல்லாமல் தீபாவளி நீங்கள் கொண்டாடினால் அது முழுமை அடையாதுங்க. அதுமட்டுமல்ல உங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்காதுங்க
இதுன்னா எது என்று கேட்பவர்களுக்கு  அதுதாங்க இதுஉங்கள் இதயம் கனிந்த பதிவரின்(வேறயாரு மதுரைத்தமிழன்தான்) தீபாவளி வாழ்த்துக்கள்

இங்கு வருகை தந்த  நல் இதயங் கொண்ட  அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்

எனது இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

யாரெல்லாம் எனக்கு தீபாவளி வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு ஸ்வீட் பாக்ஸை அனுப்பாமல் தான் மட்டும் ஸ்விட்டை தின்னுவிட்டு, அப்பாடின்னு குந்திகினு இருப்பவர்கள் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு இது
(கட்சிகளுக்கு சின்னம்மட்டுமல்ல வெடிகளும் உண்டு)

 ( இப்படி எல்லாம்வா கொண்டாடுவாங்க)

 அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய பதிவர்
மதுரைத்தமிழன்

பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal
டிவிட்டர் முகவரி : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

"பணக்காரனுக்கு சாதாரண நாளும் தீபாவளித் திருநாள் தான்
ஆனால் ஏழைக்கோ தீபாவளித் திருநாளும் சாதாரண நாள்தான்''

19 comments :

 1. இனிய தீபாவளி வாழ்த்துகள். இன்று மட்டுமாவது பூரிக்கட்டைக்கு விடுமுறை விட வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் வீட்டுக்காரம்மா சுற்றுபுற சூழ்நிலைகருதி பட்டாசுகள் வாங்காமல் அதற்குபதிலாக பூரிக்கட்டையை கொண்டுதான் தீபாவளி கொண்டாடுவார்கள் அவர்கள் மட்டும் உங்கள் கருத்தை படித்து இருந்தார்களேயானால் எனக்கு பதிலாக உங்களை பொரித்து எடுத்து இருப்பார்கள். நல்ல வேளை உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம் அவர்கள் இந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை அதனால் தப்பித்தீர்கள்

   Delete
  2. பூரிக்கட்டை தீபாவளியா ! அப்ப நீங்களும் சகோதரியும் தாண்டியா ஆடுவீங்களா தீபாவளிக்கு ஹை!!!
   கீதா

   Delete

 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்

  ReplyDelete
 3. இது மதுரைக்குறும்பு....
  ஆனாலும் கரும்பு.
  பூவாணமாய்
  உங்கள் வாழ்த்து...
  பட்டாசாய்
  உங்கள் பாட்டு...

  அந்நியச் சீமையிலும்
  அன்னைபூமிக்கு
  வாழ்த்து சொன்ன
  புண்ணியனே...

  தித்திக்கும்
  தீபாவளி வாழ்த்து...

  இனிப்புகள்
  எப்போதும்
  உண்டு
  உங்களுக்கு....

  உங்கள்
  வருகைதான்
  வேண்டும்
  எங்களுக்கு...

  ReplyDelete
 4. தமிழ்நாட்டுல பட்டாசு, இனிப்பு, புதுத்துணிலாம் இல்லாமக்கூட தீபாவளி கொண்டாடுவோம். ஆனா, சரக்கில்லாம தீபாவளி கொண்டாடமாட்டோம். இது தெரில பதிவு போட வந்திட்டாரு....

  ReplyDelete
 5. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். ஒழுங்கா தங்கச்சிக்கு செய்ய வேண்டிய சீர்லாம் வந்து சேரனும்.

  ReplyDelete
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே! கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகுடன்! இந்த வருடம் தீபாவளி மலர் போடலியா?

  ReplyDelete
 7. வித்தியாசமான பதிவு. நன்றி.

  ReplyDelete
 8. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 9. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல வலையுலகை எல்லாம் பூரிக்கட்டை பதிவுகளாலும், நையாண்டிப் பதிவுகளாலும் மீட்டுத் தன்பக்கம் வைத்திருக்கும் (அதான் நீங்களே சொல்லிட்டீங்களே) மதுரைத்தமிழனுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!!

  என்னது ஸ்வீட் பாக்ஸ் அனுப்பாதவங்க இந்தப் பதிவ படிக்கக் கூடாதா..ஹலோ வலைப்பதிவர் நண்பர்கள் நாங்க அனைவருமே ஸ்வீட்! நாங்க எல்லாருமே இங்கதான் வந்துக்கிட்டுருக்கோம் எங்கள் ஸ்வீட்டான வாழ்த்துகள் வழியா ஸ்வீட் அனுப்பறோமே...எங்கள் எல்லோரது வாழ்த்துகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு தமிழா.

  தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  பின் குறிப்பு :கீதா: அட! கொஞ்ச நாள் ஆச்சு போல எங்கள் சகோதரி (உங்க மனைவி) பூரிக்கட்டையை எடுத்து....மதுரைத் தமிழன் ரொம்பச் சமத்துப் பிள்ளையாயிட்டாரோ!!! ஹஹஹஹ் ..
  சுற்றுப்புறச் சூழல், செல்லங்கள் எல்லாம் பயப்படும் என்பதால் நாங்களும் பட்டாசு வெடிப்பதில்லை. சிறிய வயதிலிருந்தே.

  ReplyDelete
 10. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
 12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
  இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. கடைசி வரிகள் நன்று நண்பரே தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 15. எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீாவளியை கொண்டாடியது இல்லை..எப்போதாவது தீ....வலியைத்தான் பொருக்கமாட்டாமல் ஆடி இருக்கிறேன். அதனால்.. இந்த வலி என்னோடு போகட்டும் என்றுதான் தங்களுக்கு சுவிட் பாக்ஸ“ இல்லை நண்பரே....

  ReplyDelete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தமிழரே.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog