உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, September 28, 2014

தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்களுக்குதான்


avargal unmaigal

தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்களுக்குதான்ஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பால் கிடைத்த தண்டனையை அறிந்த போது என் மனதில் ஒரு வேதனை ஒரு இரக்கம் ஏற்பட்டு இருக்கிறது. காரணம் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து தலைவராக வந்து சுகமாக வாழ்ந்து ஒரு நொடியில் எல்லாம் தலைகிழாக மாறி ஜெயில் வாசம் என்று கேட்கிற போது மனசு கேட்கவில்லை. இது போலதான் கனிமொழியும் ஜெயிலில் தன் குழந்தையை பிரிந்து வாழ்ந்த போதும் மனசு வலித்தது. அது போல கலைஞரை தர தர என போலீஸ் இழுத்து சென்ற காட்சியை பார்த்த போதும் மனது கேட்கவில்லைதான் இது போல நாளை மோடிக்கும் நிகழ்ந்தால் மனது வலிக்கதான் செய்யும்.


சட்டம் என்பது எல்லோருக்கும் சமம் அதனால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையை அனுபவிக்கத்தான் செய்யனும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தலைவர்கள் மக்களின் ஆதரவை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் போது அவர்கள் பெற்ற புகழ் அவர்களின் கண்களை மறைக்க செய்து தன்னை தட்டிக் கேட்க ஆள் யாரும் கிடையாது என்ற மமதையால் தவறுகளை செய்கின்றனர். அந்த நேரத்தில் அது தவறு என்று கூட தெரியாத நிலையில் இருக்கின்றனர்.ஆனால் காலமும் சூழ்நிலையும் மாறிக் கொண்டே இருக்கும் போது கோபுரத்தில் இருக்க கூடியவர்கள் குடிசைக்கு வந்துவிடுகிறார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்படி தவறு செய்யும் தலைவர்கள் தண்டனையை அனுபவிக்கிறார்கள். அப்படி தண்டனையை அனுபவிப்பவர்கள் நாம் தவறு செய்து விட்டோம் அதனால் தண்டனையை அனுபவிக்கிறோம் என்று நினைத்து அவர்கள் மன ஆறுதல் கொள்ளலாம்.ஆனால் இவர்களை மானசீகமாக தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட மக்கள் இதனால் மனது அளவில் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறார்கள் இது அந்த மக்களுக்கு கிடைத்த தண்டனைதானே... இவர்களின் மனது வலி தலைவர்களுக்குதான் தெரியுமா அல்லது புரியுமா?தலைவர்களே உங்களை தலைவாராக ஏற்று அமோக ஆதரவு தந்ததை தவிர வேறு ஏதும் செய்யாத மக்களுக்கு உங்களின் அற்ப ஆசைகளினால் தண்டனையை தருவது ஏன்...தலைவர்களே சுயநலமில்லாமல் சிந்தியுங்கள்டிஸ்கி : நான் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாளானோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. மோடியாக,ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின்,கனிமொழி, அழகிரி ,விஜயாகாந்த், ராமதாஸ், மற்றும் வைகோ யாராக இருந்தாலும் அவர்களை கலாய்த்தோ அல்லது அவர்களின் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் பதிவுகள் இடுவது வழக்கம் அதானல் நான் இவருக்கு ஆதரவாளன் அல்லது எதிர்ப்பாளன் என்ற நிலை கிடையாது எனது பதிவுகள் யாரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் வரும் சாமான்யனின் கருத்துதான். இங்கு வரும் எனது அனைத்து பதிவுகளும் படிக்க ரசிக்க சிந்திக்க மட்டுமேஅன்புடன்
மதுரைத்தமிழன்

20 comments :

 1. Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. விழுந்தவனை மாடேறி உழக்கும் என்று தான் அறிந்துள்ளேன். மற்றவர்களின் துயரில் மகிழும் இந்த உலகம். இன் நிலையில் மற்றவர்களின் கஷ்ட நிலை கண்டு வருந்தும் உள்ளம் கண்டு உண்மையில் நெகிழ்கின்றேன் சகோ! அதுவும் கலாய்த்தே பழக்கப் பட்ட தங்களிடம் இருந்து இப்படி ஒரு நெகிழ்ச்சி மகிழ்ச்சியாகவே உள்ளது சகோ வாழ்க வளமுடன் ....!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. ஆம்1 தமிழா வருத்தம் இருக்கத்தான் செய்தது! நாங்களும் இதையே தான் நேற்று பேசினோம். .மக்கள் தான் அறிவிலிகள்! ஜெஜெ வுக்கு இது எத்தனையாவது பதவி...கலைஞர், கனிமொழி எல்லாம் சிறைக்குச் சென்றதும் தெரியும் தானே. அவர்களுக்கும் ஜெஜெ இதற்கு முன் ஜெயிலுக்குப் போனது தெரியும். ஆட்சியில் இருந்து இப்படிச் செய்தால் குற்றம் அதற்கு தண்டனை உண்டு என்பதும் இவர்கள் எல்லொருக்கும் தெரியும். அவர்கல் இன்னொசென்ட் அல்ல. தெரிந்தும் எப்படி இவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிகின்றது? ஆணவம், திமிர் சரி..... பதவி கண்ணை மறைக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தமிழா......இதற்கானத் தண்டனை தெரியும்தாஏ அவர்களுக்கு! அதுவும் ஏற்கனவே அனுபவித்தவர்கள் தானே! விலங்குகளே தங்கள் அனுபவத்திலிருந்து பாடங்கள் கற்று அதற்கு ஏற்றார் போல் தங்களை மாற்றிக் கொள்ளும் போது......6 அறிவு மனிதர்கள்அனுபவத்திலிருந்தும் அவர்கள் கற்க வில்லை என்பதே உண்மை! ஆச்சரியமும் கூட! பல விஷயங்கள் புரியமாட்டேங்குதுப்பா!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. இந்த இலசனத்தில் ஒருவர் தீகுளிப்பாம். தொண்டன் திருந்தினால் தலைவன் திருந்துவன். உப்பு திண்டவன் தண்ணி குடிக்க விடுங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. ஆணவம் கண்ணை மறைப்பதால் வந்த விளைவுதான்! ஆனால் இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது! சகவாச தோஷம் இப்படி சிறைக்குத் தள்ளிவிட்டது அம்மையாரை!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. தண்டனை தலைவர்களுக்கு அல்ல அவர்களை தலைவனாக நினைக்கும் மக்(கு)களுக்குத்தான்.

  அருமை நண்பரே இந்த ஒருவரியே போதும் பதிவின் சிறப்புக்கு,

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. அப்போ ஜெயலலிதா,கருணாநிதி,கனிமொழி, மோடி போன்றோர் வசதியாக வாழ்ந்தோர் என்பதால் இவர்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது.
  சட்டம்,தண்டனை என்பது வசதியற்ற, கல்வியறிவு குறைந்த ஏழை பாழைகளுக்கு மாத்திரமென்கிறீர்களா?.
  கனிமொழி வீட்டிலிருந்த போது , பிள்ளையை மடியில் வைத்து கொஞ்சி ஊட்டித்தான் வளர்த்தவரா?வேலைகாரிதானே பல பிரபலங்களின் பிள்ளையை வளர்க்கிறார்கள்.இது நீங்கள் அறியாததா?.

  ReplyDelete
 10. உங்கள் மன நிலைதான் எனக்கும் ..தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிக்கனும் தான் !!ஆனா பாழும் மனசு பரிதாபடுது :(
  இது யாராக இருந்தாலும் நாமெல்லாரும் இப்படிதான் யோசிப்போம் .

  ReplyDelete
 11. ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக சிறையில் செக்கிழுத்தார்கள்.....

  இவர்கள் என்ன நாட்டுக்கு நல்லது செய்தா சிறைக்குச் சென்றார்கள்?
  கவலைப்படாதீர்கள்....... அவர்கள் அங்கேயும் சொகுசாகத் தான் இருப்பார்கள்.... என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்...

  ReplyDelete
 12. பதவி தந்த மமதையும் போதையும் இவர்கள் தவறு செய்யத் தூண்டுகோலாகி விடுகிறது. கூடவே சாமானிய மனிதர்கள் தரும் அதீத ஆதரவு.....

  தவறு செய்ததால் தண்டனை அடைந்தார்கள் - அதற்காக பொதுவான சொத்துகளை நாசம் செய்பவர்களையும், தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் மூடர்களையும் என்ன செய்யலாம்.....

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog