உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, May 2, 2014

அட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும்
அட்சய திருதியும் அல்வா வாங்கிய பதிவர்களும்  சசிகலா(தென்றல்) ; என்னங்க அட்சய திருதிக்கு தங்கம் வாங்குனா வீட்டிற்கு மிகவும் நல்லதாம்?
சசியின் கணவர் : அப்படியா? சரி துணியை பெட்டியில் எடுத்து வைச்சு கிளம்பு நாம போய்வாங்கிட்டு வந்துடலாம்.
சசிகலா : துணியெல்லாம் எதுக்குங்க?
சசியின் கணவர்: உங்க வீட்டிற்கு போய் உங்க அம்மா அப்பாவிடம் இருக்கும் நகையெல்லாம் வாங்கிட்டு அப்படியே ஒரு நாள் இருந்து சாப்பிட்டு வரலாம்
சசிகலா ; ஙேஙேஙேஙேஙேஙே....


உஷா அன்பரசு ; என்னங்க அட்சய திருதிக்கு தங்கம் வாங்குனா வீட்டிற்கு மிகவும் நல்லதாம்?
உஷாவின் கணவர்: அழகு தங்கமாக நீ நம்ம வீட்டில் இருப்பதே நம் வீட்டிற்கு அதிர்ஷடம்டி
உஷா அன்பரசு ; ஙேஙேஙேஙேஙேஙே....

ராஜி ; என்னங்க அட்சய திருதிக்கு தங்கம் வாங்குனா வீட்டிற்கு மிகவும் நல்லதாம்?
ராஜியின் கணவர் ; நம்ம வீட்டில் 3 தங்கங்கள் (குழந்தைகள்) இருக்கு அது போதுமடி இந்த வயசில் இன்னொரு தங்கத்திற்கு ஆசைபடாதேடி
ராஜி ; ஙேஙேஙேஙேஙேஙே....

இந்தியாவிற்கு சென்றுவிட்டு திரும்பும் மதுரைத்தமிழனிடம் அவன் மனைவி

என்னங்க யாருங்க இந்த பொண்ணு?
நீ தானேடி சொன்ன அட்சய திருதிக்கு தங்கம் வாங்கினா நல்லது என்று அதனாலதான் இந்திய சென்ற போது இந்த 'தங்கம்' என்ற தங்கமான பொண்ணை பார்த்தேன் அவங்க அப்பாகிட்ட பணம் கொடுத்து வாங்கி வந்துட்டேன். இனிமே பாரேன் நம்ம வீட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி சந்தோஷம் பொங்க போது.
மனைவி : சந்தோஷம் பொங்காது இப்ப பூரிக்கட்டையால் நான் அடிக்கிற அடியால் உங்க உடம்புதான் பொங்க போது

அட்சய திருதிக்கு தங்கம் என்று மட்டுமல்ல வேறு ஏதாவது வாங்கினாலும் வீட்டிற்கு நல்லது என்று இப்போது பலர் நினைக்க ஆரம்பித்ததால் இதையெல்லாம் வாங்கலாம் என்பது மதுரைத்தமிழன் சொல்லும் ஐடியா வாங்கினால் கூட அதிர்ஷடம் கொட்டுமா?

அட்சய திருதியை முன்னிட்டு சரக்கை வாங்குங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்

அட்சய திருதியை முன்னிட்டு நண்பர்களிடம் கடன் வாங்குங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்

அட்சய திருதியை முன்னிட்டு லஞ்சம் வாங்குங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்

அட்சய திருதியை முன்னிட்டு நமக்கு பிடிக்காதவர்களின் மானத்தை வாங்கலாம்

அட்சய திருதியை முன்னிட்டு நமக்கு பிடிக்காதவர்களின் உயிரை வாங்கலாம்

அட்சய திருதியை முன்னிட்டு டாஸ்மாக்கில் சிறப்பு தள்ளுபடி

மதுரைத்தமிழனின் மனைவி : என்னங்க இப்படி லூசாட்டமா எழுதி என் மானத்தை வாங்குறீங்க
மதுரைத்தமிழனின் :இல்லடி அட்சய திருதியை முன்னிட்டு எதையாவது வாங்கினா நல்லது என்று நீதானே சொன்னே அதனால்தானடி இப்படி ஹீஹீஹீ


அன்புடன்
மதுரைத்தமிழன்

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=12492

9 comments :

 1. ஓஹோ, மத்த பதிவர்களுக்கெல்லாம் அல்வா, உங்களுக்கு மட்டும் "தங்கம்". ம்ம்ம்ம்... நடத்துங்க....

  ReplyDelete
 2. அட்சய திருதியை முன்னிட்டு நண்பர்களிடம் கடன் வாங்கி அதிர்ஷ்டத்தை அள்ளும் உங்க யோசனை எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு அவசரமா ஒரு லட்ச ரூபாய் கடன் தேவைப்படுது. என் அக்கவுண்டிற்கு அனுப்பி வையுங்க மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 3. அட்சய திரிதியை அன்று அடி வாங்கினால் கூட அதிர்ஷ்டமாம் . அதிர்ஷ்டம் அடிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. எனக்கு இந்த அட்சய திருதியை, அது இதுன்ற நம்பிக்கைலாம் இல்ல சகோ!

  ReplyDelete
 5. நல்ல காமெடி! ரசித்தேன்!

  ReplyDelete
 6. ஆஹா இஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு, அதுல பதிவர்கள யாரையெல்லாம் போட்டு தள்ளலாம்ன்னு ரோசிச்சிகிட்டு இருக்கேன்.

  ReplyDelete
 7. இனிமே உங்களை இந்தியாவிற்கு உங்கள் மனைவி தனியே அனுப்பவே மாட்டாங்களாம்!!!! சொல்லிட்டாங்க.

  ReplyDelete
 8. நல்ல ஹாஸ்யம்.....நாங்கள் சொல்ல நினைத்ததை பால கணேஷ் சாரும், னண்பர் முரளிதரனும் சொல்லிவிட்டதால் அதை வழி மொழிகின்றோம்.....கடைசி வரிகள்...அதாங்க மானத்தை வாங்கினது......மிகவும் ரசித்தோம்! கடவுள் உன்னகளைப் படைக்கும் போது ஏதோ தனித்தன்மையுடன் கூடிய ஒரு நகைச்சுவை மிகுந்த ஒரு எக்ஸ்ட்ரா பார்ட் மூளைக்குள் பொருத்திவிட்டாரோ!!!?? எப்படி இப்படி!!! எங்கள் விலா எலும்பு நோகின்றதே!!!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog