இது
என்ன நியாமுங்க?
என்னங்க
காபி சாப்பிடுறீங்களா என்று
என் மனைவி கேட்டாள் அதற்கு
நான் பதில் சொல்லுவதற்கு
முன்பே என் மனைவி காபி எடுத்து
வந்துவிட்டாள்.
என்னடா
பலி ஆட்டுக்கு கிடைக்கும்
உபசரிப்பு போல உபசரிப்பு
பலமா இருக்குதே என்று மனதுக்குள்
யோசித்தேன்.
எப்படி
இருந்த போதிலும் அதில் இருந்து
தப்பிக்க வழி இல்லை என்பதால்
பேசாமல் காபியை வாங்கி குடித்து
கொண்டு அடுத்து என்ன நிகழப்போகிறதோ
என்று சிறிது அச்சத்துடன்
அப்பாவியாக முகத்தை வைத்து
கொண்டு அவளைப் பார்த்தேன்
அவளோ
என் அருகில் உட்கார்ந்து
கொண்டு என்னங்க குடும்ப விஷயம்
வீட்டுக்கு வெளியே தெரியாது
இருப்பத்துதான் நல்ல
குடும்பத்திற்கு அழகு என்றாள்.
நான்
உடனே அதற்காக நான் பதிவு
எழுதுவதை அதிலும் குடும்பத்தை
பற்றி எழுதுவதையும் நிருத்தனுமா
என்று கேட்டேன்.
அதற்கு
அவள் பதிவு என்னவென்று
கேட்டாள்.
அதற்கான
விளக்கத்தை நான் சொன்னதும்
அடச்சீ நீங்க எழுதுவது
பதிவா அதையும் நாலு பேர்
வேலைமெனக்கெட்டு படிக்கிறார்களா
என்று என் முகத்தில் காறி
துப்பி விட்டு அதன் பின்
சொன்னாள் அதைப் பற்றி எனக்கு
கவலையில்லை..
நம்ம
குடும்ப விசயம் வெளிய போகாம
இருக்கிறது உங்க கையிலதான்
இருக்கு.
அதிலும்
நம்மை சுற்றியுள்ள வீடுகளுக்கு
தெரியக் கூடாது அதைதான் நான்
சொல்ல வந்தேன் என்று சொன்னாள்.
சரிம்ம்மா
அதற்காக நான் என்ன செய்ய
வேண்டும் என்றேன்?
அதற்கு
அவள் நான் கோபப்பட்டு என்ன
அடி அடிச்சாலும் நீங்க கூச்சல்
போட்டு ஊரைக் கூட்டக் கூடாது.
கம்முன்னு
இருக்கணும் சரியா?
என்கிறாள்
இதற்கு
என்ன பதில் சொல்லனும் கூட
எனக்கு தெரியலை...தப்புன்னு
சொன்னா உடனே வாயிலேயே அடி
கிடைக்கும் சரின்னா இப்ப அடி
கிடைக்காது ஆனா வழக்கம் போல
லேட்டா அடி கிடைக்கும்...
என்ன
கொடுமையடா சாமி
அன்புடன்
மதுரைத்தமிழன்
எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காமல் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎன்ன கொடுமை... என்ன கொடுமை... /// நான் (நாங்கள்...?) கோபப்பட்டு என்ன அடி அடிச்சாலும் // நேரம்... முகூர்த்த நேரம்...
ReplyDeleteமாமியார் என்பது அம்மா மாதிரி அடிச்சாலும் வலிக்காது அவ்வவ்...
ReplyDeleteதங்கள் வீட்டில் வலிக்காமல் ருசிக்கிறபடி
ReplyDeleteரசிக்கிறபடி அடிக்கிறார்கள் எனத்
தாங்கள் அடி குறித்து சந்தோஷமாகப்
பகிர்வதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது
அடியும் பகிர்வும் விடாது தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எல்லா சகோதரிகளும் தலா ஒரு பூரிக்கட்டையை உங்க மாமியார் கையில கொடுத்தனுப்புறோம்
ReplyDeleteகலக்குறீங்க பாஸ்.
ReplyDeleteமதுரைத் தமிழன் சம்பலாவரா சட்னியாவாரா ஓவர் டவுட்டா இருக்குதே
ReplyDeleteயாரக் கேக்கலாம் எங்கள் பதிவுலக ஜாம்பவான்(கள் )கிகள் என்ன சொல்லினம்
என்று பார்க்கலாம் .விடியிறதுக்குள்ளாள ரிசேல்ற் வந்திருமில்ல ?????....:)))))))
கடவுள் தான் இந்த அப்பாவியைக் காப்பாற்றணும் !
Ahaa haa haa
ReplyDeleteஅட! உண்மையிலியே நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சுட்டேனா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஅப்ப, இனிமே ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடப்போறீங்களா தலைவா!! (ஒன்று - எப்பொழுதும் எழுதுவது அதாவது மனைவியிடம் அடி வாங்குவதைப் பற்றி. மற்றொன்று - மாமியாரிடம் அடி வாங்குவதைப் பற்றி. கரெக்ட் தானே!!!)
இப்பத்தான் புரியுது, ஏன் உங்கள் வீட்டில் வேலைக்காரி இல்லை என்று!!!
ReplyDeleteஇதுதான் மொக்கைப் பதிவா?
ReplyDelete:))))
ReplyDeleteமத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி..... கதையாகிவிடும் போல இருக்கே.....
அவ்ளோ அடிவாங்குனாலும் தாங்குறாரு. அவரு ரொம்ப நல்லவருன்னு உங்க மாமியாரிடம் மாமி சொன்னதா தகவல். வாழ்க வளமுடன்!!!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
அடிப்பவரை நோக்கி இடிப்பான் தமிழன்
வடிக்காதே கண்ணீா் வாி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மறத் தமிழன்றதை எப்படியோ நிரூபிச்சிக்கிட்டேயிருந்தா சரி...
ReplyDelete