Saturday, April 19, 2014

என்ன ஆச்சு மதுரைத்தமிழனுக்கு????




என்னப்பா என்னுடைய பதிவுகள் ஏதும் இல்லாததால் எல்லோரும் சந்தோஷமா இருந்தீங்களா? பாவம் நீங்கள் உங்கள் சந்தோஷம் அதிக நாள் நீடிக்க வாய்ய்பு இல்லை. சில பேர் என்னுடைய பதிவுகளை படிக்காததால் பைத்தியம் ஆனாது போல ஆகி இருப்பீர்கள் உங்கள் பைத்தியம் தெளிய நான் மீண்டும் பதிவுகளை வெளியிடுகிறேன். இல்லைங்க எங்களுக்கு எல்லாம் அப்படி ஆகவில்லை என்ரு சொல்பவர்கள் நீங்களானல் கவலைப்படாதீர்கள். இனிவரும் என் பதிவுகளைபடித்தால் நிச்சயம் உங்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்.



சரி நான் ஏன் கடந்த ஒரு மாதமாக எழுதவில்லை என்ற காரணத்தை அறிய விரும்புவர்களாக நீங்கள் இருந்தால் அதற்கான காரணத்தை உங்களிடம் சொல்லிவிடுவதுதான் முறை. அது ஒன்றும்ம் பெரிய விஷயம் இல்லைங்க..

கடந்த மாதம் 17ம் தேதி பதிவு இட்ட பின் நான் நினைத்தேன்.. நாம் என்ன இந்த வலைத்தளத்திற்கு அடிமையாகிவிட்டோமா அதில் எழுதாமல், எந்த தளத்திற்கும் செல்லாமல் நம்மால் இருக்க முடியாதா என்று நினைத்தேன். அப்படி நினைத்த நேரத்தில் அதையும் நாம் ஏன் சோதித்து பார்த்துவிடக்கூடாது என்று எண்ணி அன்றிலிருந்து வலை சம்பந்தமாக எதையும் எழுதக் கூடாது படிக்க கூடாது வலை சம்பந்தமான
இமெயில் அக்கவுண்டையும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் அக்கவுண்டையும் ஒரு மாதத்திற்கு ஒப்பன் பண்ணக் கூடாது என்று முடிவு எடுத்து அதன்படி நடந்தேன். அதனால்தான் பதிவு எழுதவில்லை. உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் கொண்டவர்கள் விசாரித்து எழுதிய மெயிலையும் படிக்கவில்லை.

இது எனக்கொரு புது அனுபவத்தை தந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி எழுதுவது எனக்கு சந்தோசத்தை கொடுத்ததோ அது போல எழுதாமல் இருக்கும் போதும் அது போல ஒரு சந்தோசத்தை அனுபவித்தேன். சோம்பேறியாக இருப்பதும் சுகமான அனுபவமாகத்தான் இருந்தது.. ஹீ.ஹீ.ஹீ

எனக்கு என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..



அப்புறம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். வழக்கமாக வீட்டு அம்மாவிடம் பூரிக்கட்டையால் அடிவாங்குவது மட்டும் தடையில்லாமல் நடந்து வந்தது. அந்த அடிக்குதான் நான் அடிமையாகிவிட்டேனோ என்று நினைக்க தோன்றுகிறது. அதையும் சோதித்து பார்க்க நினைத்தால் என் வீட்டுக்காரம்மா அடிப்பதை கொஞ்சநாள் நிப்பாட்டுவார்கள் என்று பார்த்தால் ஹும்ம்ம்ம்ம் அது நடக்காது போலிருக்கிறது.



அன்புடன்,

மதுரைத்தமிழன்

17 comments:

  1. நல்வரவாகுக bro!!!! oh! net fasting மாதிரி blog fastingஆ!!
    பாவம் எத்தனை பேர் டயட்ல இருந்தாங்களோ?!
    நல்ல idea தான் . நான் கூட இதே மாதிரி மே மாதம் பண்ணலாம்னு நினைக்கிறன்.

    ReplyDelete
  2. வாங்க! வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

    ReplyDelete
  3. அப்பாடா... மிகவும் சந்தோசம் - பூரிக்கட்டை அடியை சொல்லவில்லை... ஹிஹி... மீண்டும் "மீண்டு" வந்ததற்கு....

    ReplyDelete
  4. நல்ல பரிசோதனைதான் . உண்மையில் அனைவருமே இது போல முயற்சி மேற்கொள்வது நல்லதுதான் என்று நினைக்கிறன்.

    ReplyDelete
  5. ஒவ்வொன்றையும் சோதித்துப் பார்க்க ஆரம்பித்தால்,,,,,,
    வேண்டாம் நண்பரே

    ReplyDelete
  6. Welcome back.பூரிக் கட்டை ஓவர் டயம் வேலை செய்துவிட்டதோ என நினைத்தேன்

    ReplyDelete
  7. அடி பலமாய் விழுந்து விட்டதை மறைக்க இப்படி ஒரு புருடாவா ?
    த ம +1

    ReplyDelete
  8. தங்கள் பதிவுகள் இல்லாதது
    பதிவுலகில் ஒரு வெறுமை உணர்வை
    ஏற்படுத்தி இருந்தது என்பது நிஜம்
    முக்கிய அலுவல் காரணமாக எழுதமுடியாமல்
    இருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

    மீண்டும் தொடர்ந்தது மகிழ்வளிக்கிறது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நல்ல முயற்சி... அதில் வெற்றியும் வேறு...
    இதற்கு அடிமையாகாமல் இருப்பதுதான் நல்லது...
    பூரிக்கட்டை அடி.... இதெல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.... எல்லா வீட்டிலும் நடப்பதுதானே...

    ReplyDelete
  10. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  11. இது விபரீத முயற்சி. நீங்க காணம்ன உடனே நிறையப் பேர் கவலைப்பட்டாங்க. அருணா செல்வம் தனியாப் பதிவே போட்டாங்க மதுரைத் தமிழனை எங்க காணம்னு...? இது மாதிரி சோதிச்சுப் பாக்கலாமேன்னு (முரளிதரன் சொன்ன மாதிரி) என்னைப் போல பலபேரு நினைச்சு.. யாரும் தேடாம விட்டு, அதனால அவங்க காணாமப் போயிட்டா...? அதுவும் மதுரைத்தமிழன் செய்ற சேவைன்னு சொல்றீங்களா...? சரிதாங்க... ஹி... ஹி... ஹி...!

    ReplyDelete
  12. welcome back மதுரைத் தமிழன். தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  13. என்னது ஒரு மாசம் சோதனை முயற்சியா!? இப்படிலாம் டூப்பு விடக்கூடாது. பொண்டாட்டிக் கையால உதை வாங்கி ஹாஸ்பிட்டலில் கிடந்ததா கேள்விப்பட்டேனே!!

    ReplyDelete
  14. மோடி ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து உங்கள் மீது வழக்குப் போட்டு, உங்களை "உள்ளே வைத்திருந்ததாக" கேள்வி?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.