Monday, April 28, 2014





2030 ல் அமெரிக்காவில் நடக்கவிருப்பது இதுதானோ?


மதுரைத்தமிழன் : ஹலோ பிட்சா (pizza hut)ஹட்டா?

பிட்சா ஹட் ஊழியர் : ஆமாம் இது பிட்சா ஹட்டுதான். உங்களுக்கு என்ன வேண்டும்

மதுரைத்தமிழன் :நான் பிட்சா ஆர்டர் பண்ண விரும்புகிறேன் மேடம்.

பிட்சாஹட் ஊழியர் :ஒகே முதலில் உங்கள் நேஷன் ஐடி (national identification number) நம்பரை சொல்லுங்கள்.

மதுரைத்தமிழன் : 58687898....

பிட்சாஹட் ஊழியர் :ஒகே இப்ப என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.

மதுரைத்தமிழன் :எனக்கு இப்ப ஒரு லார்ஜ் சைஸ் சீஸ் பிட்சா வேண்டும்.

பிட்சாஹட் ஊழியர் :ஸாரி மதுரைத்தமிழன். அதை உங்களுக்கு தர முடியாது.

மதுரைத்தமிழன் : ஏன் தர முடியாது.

பிட்சாஹட் ஊழியர் :உங்கள் டாக்டரின் நோட்படி உங்களுக்கு அதிக அளவு கொலஸட்ராலும் சுகரும் இருப்பதால் எங்களால் அதை உங்களுக்கு தர இயலாது.

மதுரைத்தமிழன் :என்னது, எனக்கு கொலஸ்ட்ராலலும் சுகரும் இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்..

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழன் உங்கள் நேஷன் ஐடி நம்பரை டைப் செய்தவுடன் உங்களைப் பற்றிய தகவல்கள் எல்லாம் எங்கள் சிஸ்டத்தில் தெரிந்து விடும். அதன் இன்ஸ்ரெக்ஷன் படிதான் நாங்கள் செயல்படுகிறோம்..

மதுரைத்தமிழன் :அது சரி ஆனால் இதை நான் எனக்காக ஆர்டர் செய்யவில்லை. இதை எனது குடும்பத்தினருக்காக செய்கிறேன்.

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழன்... நீங்கள் சொல்வது பொய்... உங்கள் மனைவி வெகேஷனுக்காக இந்தியா சென்றுள்ளார். உங்கள் மகள் மேல்படிப்பை பாஸ்டனனில் படித்து கொண்டிருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்புதான் அவர் ஒரு பெரிய பிட்சாவை ஆர்டர் செய்து தன் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை.. நீங்கள் இப்படி பொய் சொன்னதற்காக நாங்கள் உங்களை அரசாங்கத்தினரிடம் புகார் செய்யமுடியும். இந்த தடவை மன்னித்து விடுகிறோம்.

மதுரைத்தமிழன் :எப்படி என் குடும்பத்தார்கள் பற்றி உங்களுக்கு தெரிகிறது..

பிட்சாஹட் ஊழியர் :சார் நாந்தான் சொன்னேன் அல்லவா உங்கள் நேஷன் ஐடி நம்பரை எண்டர் செய்தால் எங்களுக்கு எல்லா விபரமும் தெரியும் என்று..

மதுரைத்தமிழன் :சரி கடைசியாகத்தான் நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

பிட்சாஹட் ஊழியர் :வேண்டுமானால் உங்களுக்கு சிறிதளவு சீஸ் போட்டு ஒரு சிறிய துண்டு பிட்சா நாங்கள் டெலிவரி செய்ய முடியும்.

மதுரைத்தமிழன் :சரி அதையாவது செய்யுங்கள்.

பிட்சாஹட் ஊழியர் :சரி அதற்காக பணத்தை எப்படி தருகிறீர்கள்?

மதுரைத்தமிழன் :எனது கிரெடிட் கார்டு மூலம்தான்...

பிட்சாஹட் ஊழியர் :மதுரைதமிழா உங்கள் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது,காரணம் அதை உபயோகித்து நீங்கள் வாங்கியதற்கான பணத்தை நீங்கள் செலுத்தவில்லை

மதுரைத்தமிழன் :சரி நானே காரை எடுத்து வந்து பணம் கொடுத்து வாங்கி கொள்கிறேன்.

பிட்சாஹட் ஊழியர் :மதுரைதமிழா நீங்கள் உங்கள் காரை மிக அதிவேகமாக ஒட்டியதாலும் ரெட் சிக்னலில் நிற்காமல் ஒட்டியதாலும் உங்கள் காரை அரசாங்கம் நேற்று இரவு பறிமுதல் செய்து அதற்கான விபரத்தை உங்களுக்கு இமெயிலில் அனுப்பி இருக்கிறார்கள். அதை நீங்கள் இன்னும் பாரக்கவில்லை போலும்...

மதுரைத்தமிழன் :என்னடா சிஸ்டம் இந்த அமெரிக்காவில் வைத்து இருக்கிறார்கள்.சரி சரி நான் வாடகை டாக்ஸியை அமர்த்தி வரும் வழியில் பேங்கில் பணம் எடுத்து நேரில் வந்து வாங்கி கொள்கிறேன்...

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழா.... உங்கள் பேங்க் அக்கவுண்டில் 5 டாலர் மட்டுமே உள்ளது அந்த பணம் எங்களது பிட்சாவிர்கே கொடுக்க பத்தாது.. அதுமட்டுமல்ல எந்த டாக்ஸியும் நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டார்கள் காரணம் போனமுறை நீங்கள் டாக்ஸி டிரைவரை மிக கடுமையாக பேசியதால் அவர்கள் இந்த முடிவை எடுத்து எல்லா டாக்ஸி கம்பெனிகளுக்கும் தகவல் பகிர்ந்துள்ளனர்..

மதுரைத்தமிழன் :ஒங்காத்தா என்னடா சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்.

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழா வார்த்தையை பார்த்து உபயோகிங்கள். இல்லையென்றால் அரசாங்கம் உங்கள் மீது அதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். 2 நாட்களுக்கு முன்பு பக்கதுவீட்டு ஆட்களை வன்மையான சொற்களை உபயோகித்து திட்டி இருக்கிறீர்கள். அதுவும் ரிகார்ட் பண்ணி இருக்கிறது இந்த அரசாங்கம் அதனால ஜாக்கிருதையாக இருங்கள்..

மதுரைத்தமிழன் :சரி இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள் எனக்கு பிட்சா தர முடியாது என்றா?

பிட்சாஹட் ஊழியர் :இல்லை ஸார் நீங்கள் விருப்பபட்டால் உங்கள் மனைவியை நாங்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் அனுமதித்தால் அவர்கள் அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்து உங்களுக்கு பிட்சா டெலிவரி பண்ணுகிறோம்.

மதுரைத்தமிழன் :அவ இந்தியாவிற்கு அல்லவா போய் இருக்கிறார் அதுமட்டுமல்ல அவ போன் நம்பர் என்னிடம் இல்லையே....

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழா அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் அந்த தகவல்கள் எங்களிடம் இருக்கிறது... நீங்கள் ஒகே சொன்னால் அவர்களை தொடர்பு கொள்கிறோம்...

மதுரைத்தமிழன் :வேண்டாம் அம்மா அவள் நிச்சயம் இதற்கு அனுமதி தரமாட்டாள்... காரணம் அவள் எனக்கு பண்ணி வைத்த புளியோதரை எலுமிச்சசை சாதம் தோசை மாவு எல்லாம் இருக்கிறது அதையே சாப்பிட்டு கொள்கிறேன்.. அதை சாப்பிடாம வேற என்ன உங்கள் வாய்க்கு கேட்கிறது என்று சொல்லி என் வாயிலேயே வந்து அடிப்பாள்..

பிட்சாஹட் ஊழியர் :மதுரைத்தமிழா உங்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது வேண்டுமானல் நாங்கள் உங்களுக்கு பிட்சா இலவசமாக தருகிறோம் அதற்கு கைமாற்றாக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்.

மதுரைத்தமிழன் :என்ன?......

பிட்சாஹட் ஊழியர் :நீங்கள் 2010 லிருந்து வலைத்தளம் நடத்தி வருகிறீர்கள். அது மிகவும் உலகப் புகழ் பெற்ற தளமாக இருந்து வருகிறது. அதில் எங்கள் பிட்சா பற்றி ஒரு நல்ல பதிவிட வேண்டும் அது மட்டுமல்லாமல் அதில் ஒராண்டுக்கு எங்கள் பிட்சா பற்றிய இலவச விளம்பரத்தை இட்டு வந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய பிட்சா நாங்கள் உங்களுக்கு இலவசமாக டெலிவரி பண்ணுகிறோம்


மதுரைத்தமிழன் :சரி சரி அதற்கு நான் ஒத்துக் கொள்கிறேன்...உடனே எனக்கு பிட்சா டெலிவரி செய்யுங்கள்

மதுரைத்தமிழன் மைண்ட் வாய்ஸ் :ஆஹா....... கடைசிகாலத்துல நமக்கு கை கொடுப்பது இந்த வலைத்தளமா அட சொக்கா உனக்கு மிகவும் நன்றிடா. அது தெரியாம இதை எழுதாம நிறுத்திவிடலாமா என்று நினைத்து வந்தேன் அதை அப்படியே தொடர்ந்து கடைபிடித்து இருந்தால் இப்படி நமக்கு அதிர்ஷடம் கிடைத்திருக்குமா என்ன... வலைதளம் நடத்துவதால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று பல பேர் அந்த காலகட்டத்தில் நினைத்து இருந்தார்கள் ஹும்ம்ம்ம்...


மதுரைத்தமிழன் :மேடம் எல்லாமே இந்த சிஸ்டம் முலம் தெரிந்து கொண்டீர்களே அது போல எனது நண்பர்களை பற்றிய விபரமும் அதில் இருக்கிறதா அப்படி இருந்தால் அதைப்பற்றிய விபரங்களை எனக்கு சொல்ல முடியுமா?

பிட்சாஹட் ஊழியர் :நார்மலாக இது பற்றிய மூழுவிபரங்களை சொல்லக் கூடாது ஆனால் பொதுமக்கள் சிறிது பணம் செலுத்தினால் அவர்களைப் பற்றிய சிறு விபரங்களைசொல்ல அனுமதி உண்டு... ஆனால் உங்களிடம் அதற்கான பணம் இல்லை என்பது தெரியும் என்பதால் உங்கள் மீது இரக்கப்பட்டு மிக சிறிய அளவு விபரங்களை தருகிறேன்... 10 பெயர்களை மட்டும் சொல்லுங்கள் விபரம் தருகிறேன்

ராஜி,சசி, உஷா அன்பரசு, அருணா செல்வம், அம்பாளாடியாள், ஜோதிஜி, ரமணி, திண்டுக்கல் தன்பாலன், பால கணேஷ்,சீனு,

ராஜி: தனது பேத்தியை பார்க்க அமெரிக்கா வந்து இருக்கிறார்,இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவர்.இப்போதைய தமிழக முதல்வர்.
உஷா அன்பரசு : உலகின் மிக பிரபல பெண் எழுத்தாளர் ஆகி பல தடவை உலகின் எழுத்தாளர்களுக்கான பிரபல விருதை பல முறை வாங்கி இருக்கிறார். அவரது பல புத்தங்கள் நீயூயார்க் டைம்ஸ் டாப் செல்லர் லிஸ்டில் பல தடவை வந்து இருக்கிறது,
அருணா செல்வம் : இவரது புத்தங்கள்தான் இந்தியகல்வி துறையில் அனைத்து வகுப்புகளில் பாடப் புத்தங்களாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் பெண் அதிபராகவும் இருக்கிறார்.
சசி: இவரின் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களால் பெரிதும் விரும்பபடுகிறது.இவரது கவிதையையை மேற்கோள்காட்டாமல் எந்த காதலும் வெற்றி பெற்றதில்லை.
அம்பாளடியாள் : இவர் ஆன்மிககடலில் அம்மா என்று உலகம் முழுவதும் அழைக்கபடுகிறார்
திண்டுக்கல் தனபாலன் : திருக்குறளை எழுதியவர் திண்டுக்கல் தனபாலனா அல்லது திருவள்ளுவரா என்று யாராலும் ஒரு விவாத முடிவுக்கு வரமுடியாமல் செய்வதர்களில் ஒருவராகவும் உலகம் முழுவது பேசபடுபவர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டார்,
பாலகணேஷ் : நீயூயார்க் டைம்ஸின் அதிபராக உள்ளார். இவர் இன்னும் பொக்கிஷம் என்று தலைப்பிட்டு நீங்கள் பூரிக்கட்டையால் அடிவாங்கியதை எல்லாம் மறு பிரசுரமாக இட்டு பெண்களை இன்னும் கவர்ந்து வருகிறார்.
ரமணி: பாரதி என்ற கவிஞர் பெயரை மக்கள் மனதில் இருந்து அகற்றி விட்டு ரமணி என்ற பெயர் எல்லோர் மனதிலும் வரும் படி செய்து இருக்கிறார்: இவரது பதிவுகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கபட்டபின் ஷேக்ஸ்பியர் எழுத்துக்கள் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டன
ஜோதிஜி: இந்திய சமுக காவலராகி இந்தியாவின் அதிபராகி இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் இவர்தான். இவர் 'ரூபாய் நகரம்' என்று அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியை பற்றி எழுதிய புத்தகம் இப்போது மிக பரபரப்பாக பேசப்படுகிறது
சீனு : தனது எழுத்துகளால் பெண்களை கவர்ந்து காதல் நாயகனாக இந்த வயதிலும் வந்து கொண்டிருக்கிறார்


அன்புடன்
மதுரைத்தமிழன்





11 comments:

  1. உங்களின் கற்பனையில் விளைந்த உரையாடல் கலக்கல். ஒரு அட்டையும் ஒரு எண்ணும் நம் அடையாளமாகி மொத்த ஜாதகத்தையும் புட்டுப் புட்டு வைக்கும் நாள் வரத்தான் போகிறது என்றேனும். அன்று மதுரைத்தமிழனும் நினைவுகூரப்படுவார். 2030ல தமிழக முதல்வரை நினைச்சா...ரொம்ப குஷியா இருக்குது எனக்கு. முதல்வரின் அண்ணன்னா சும்மாவா பின்னே...(நானும் இதைவெச்சே ஒரு டிவி சேனல் ஆரம்பிச்சுடுவேன்ல... ஹி.... ஹி,.. .ஹி...)

    ReplyDelete
  2. பீட்ஸா பற்றி முன்னர் வந்த ஒரு மின்னஞ்சல் செய்தியை உங்கள் பாணியில் மாற்றி மிகச் சிறப்பாக பதிவு செய்தமை மிகப் பொருத்தம். பத்து பதிவர்கள்... 2030-ல் அருமையான கற்பனை.... பாராட்டுகள் மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  3. ஆஹா! மதுரைத் தமிழனின் இடுகை பார்த்து எத்தனை நாள் ஆகிவிட்டது! னீங்கள் வந்த சமயம் நாங்கள் கொஞ்சம் பிசியாகிவிட்டோம்!

    மதுரைத் தமிழனின் அக்மார்க் இடுகை! அதுவும் அந்த கடைசி பஞ்ச்! மிகவும் ரசித்தோம்! நண்பர்களைக் குறித்த விளக்கங்கள்!!.....

    டெக்னாலஜி வளர வளர எத்தனையோநன்மைகள் இருக்கின்றனதான்....இதோ இந்த வலைத்தளங்கள் நம்மை எல்லாம் ஒருங்கிணைத்து எழுத்துலக நண்பர்கள் எத்தனை பேர் கிடைத்துள்ளீர்கள்! அதேசமயம்,நமது தனி மனித சுதந்திரம் பாழாவது உண்மைதான்...இதோ நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயம் நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!
    ஆன்ராய்ட் வந்த்தைல் மனைவியிடம் கணவன் பொய் சொல்ல முடியாதேமே....அதாவது எதோஒரு அப்பிளிகேஷன் கணவனின் மொபைலில் இருந்தால்.....அவர் ஒரு இடத்தில் இருந்து கொண்டு வேறு இடத்தில் இருப்பதாகச் சொல்ல முடியாதேமே! அவர் இருக்கும் இடம், தெருவின் பெயர் முதற் கொண்டு வந்து விடுமாமே!! இதற்கு மதுரைத்தமிழன் அழகாய் இரு இடுகையே இட்டு விடுவார் என்று எதிர்பார்க்கிறோம்!

    ReplyDelete
  4. கோபாலன் : தங்களுக்குத் தேவையான அளவு பணம் பெற இந்தியாவில் உள்ள எங்கள் தலைவரை போன் மூலம் பேச அனுமதிக்க முடியுமா.

    பிட்சாஹட் ஊழியர் : முடியாது. 60 வயதைத் தாண்டிய நபரை தலைவர் என்று ஏற்றுக்கொள்ள எங்கள் சிஸ்டம் மறுக்கிறது.

    கோபாலன்

    ReplyDelete
  5. நீங்கள் கற்பனையாக சொன்ன நேரம், உண்மையில் நடக்கப்போகிறதாம்? பார்த்து இருந்துக்கொள்ளுங்கள்.

    எனக்கு ஒரு சந்தேகம், அந்த பீட்ஸாஹட் ஊழியர் எல்லாத்தையும் சொன்னார், ஒன்றை மட்டும் விட்டுட்டாரே... நீங்கள் பூரிக்கட்டையால் தினமும் அடிவாங்குவதைப் பற்றி ஒன்றுமே சொல்லலை???

    ReplyDelete
    Replies
    1. இது என்ன பெரிய விஷயம் இந்த உலகமே அறிந்த ஓர் உண்மை இதைப்
      போயும் போயும் சீரியசாய் சொல்லவா முடியும் ?...:))))))))))))))))) இருந்தாலும்
      உங்களுக்கு இந்த குசும்பு கொஞ்சம் ஓவரா இல்ல ?..:))))))

      Delete
  6. ஆமாம்..... 2030 ல் நீங்கள் என்னவாக இருப்பீர்களாம்....?

    ReplyDelete
  7. நகைச்சுவை என்றாலும் இவையெல்லாம் 2030 இல் என்ன அதற்கு முன்னதாகவே நடக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete
  9. கற்பனை நன்றாக இருக்கிறது மதுரை தமிழா!!!! 2030-ல் பீட்சா கடையில் இந்த தகவல்கள் இல்லாவிடிலும், அமெரிக்க அரசிடம் கண்டிப்பாக இப்படிபட்ட தகவலை கொண்ட சிஸ்டம் இருக்கும் ...

    லிஸ்ட்-ல என் பேரையும் போட்டிருக்கல்லாம்..... ஒரு நப்பாசைதான்... ஹி..ஹி..

    ReplyDelete
  10. கற்பனை உண்மையாகும் நைள் வெகு தபரத்தில் இவ்வை நண்பா ஸூப்பர்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.