உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 2, 2013

பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா!!

பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா!!
சாட்சியத்தை மாத்திச் சொல்லனைன்னா என் பிள்ளைகளை ஆசிட் தொட்டியில வீச கொன்னுடுவோம்னு நீதிமன்ற வளாகத்தில வச்சே மிரட்டினாங்க. கோயில்ல வச்சே ஒரு உயிரைத் துள்ளத் துடிக்கக் கொன்னவங்க இதையும் செய்வாங்கன்னு பயந்துதான் சாட்சியத்தை மாத்திச் சொன்னேன்!" என்று சங்கரராமனின் மனைவி பத்மா கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார்.

அவரது மகன் ஆனந்த் சர்மாவும், மருமகன் கண்ணனும் இதை ஆமோதித்திருக்கிறார்கள். ( 04.12.13 - ஜூ.வி.)


சாட்சி இருக்குனு சொன்னாலும் விடுதலை, சாட்சியே இல்லைன்னு சொன்னாலும் தூக்கு... இதுதான் இந்திய சட்டமா ரொம்ப நல்லா இருக்கு...

பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா

சாட்சியே தமிழகத்தில் உள்ள பிரபல பத்திரிக்கையில் இவ்வளவு ஒப்பனாக கதறி இருக்கிறதே இதை உண்மையான வாக்குமுலமாக எடுத்து கோர்ட் மீண்டும் விசாரணையை ஆரம்பிக்குமா???

November 28, 2013 -ல் வந்த தி.ஹிந்து ஆங்கில நாளிதழில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள ஒரு முழு பக்க விளம்பரம்அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. சட்டம் ஒரு இருட்டறைங்கோ!

  ReplyDelete
 2. என்ன சொல்வதென்று தெரியவில்லை! எது நீதி என்றும் புரியவில்லை! நீங்கள் எனது தளத்திற்கு வரமாட்டீர்கள் என்று தெரியும்! இன்று சோனியா உலகின் பணக்கார தலைவர்களில் எலிசபெத் ராணியை மிஞ்சி விட்டார் என்று ஹபீங்டன் போஸ்ட்டை மேற்கோளிட்டு தினமலர் வெளியிட்ட செய்தியை பகிர்ந்துள்ளேன்! அப்படியே காப்பி செய்யவில்லை என் பாணியில் எழுதியுள்ளேன்! இந்த ஹபீங்க்டன் போஸ்ட் நம்பகமான தளமா? நீங்கள் அமெரிக்க வாசி என்பதால் இதைப்பற்றி உங்கள் தளத்திலோ அல்லது என் தளத்தில் பின்னூட்டத்திலோ தெரிவித்தால் மகிழ்வேன்! நன்றி!

  ReplyDelete
 3. ஒரு சமயம் காவி கட்டிக்கொண்டு
  கொலை செய்தால் அரசாங்கம் விட்டுவிடுமோ என்னவோ...

  ReplyDelete
 4. சாட்சியத்தை மாத்திச் சொல்லலைன்னா ஆசிட் தொட்டியில் போடுவதாக மிரட்டியது யார்? மடத்தைச் சார்ந்தவ்ர்களா? இல்லைவேறு யாராவதா? சாட்சிகளை மிரட்டி இப்படி இப்படி சாட்சி சொல்ல வேண்டும் என்று முன்பே மிரட்டி வைக்கப் பட்டவர், ஒரு வேளை மனம் இடங்கொடாமல் மாற்றிச் சொன்னாரோ?முதலில் வழக்கைத் தொடர்ந்த போலீஸ் அதிகாரி மரண மடைந்து விட்டார் என்றும் படித்த நினைவு. ஏதோ ஆசுபத்திரி விவகாரத்தில் விட்டுக் கொடுக்காததால் பழி வாங்கப் படுகிறார் என்றும் கூட படித்த நினைவு. எது எது உண்மையோ அது கண்ணாமூச்சி காட்டுகிறது என்று தோன்றுகிறது. நேரங்கழித்து வந்தாலும் உண்மை நிலை நாட்டப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்தான் குற்றவாளி என்பது அதைச் செய்தவருக்கே தெரியும். ஹேஷ்யங்கள் திசை திருப்பிவிடக் கூடும் என்றும் நினைக்கிறேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog