உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, October 4, 2013

இப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ஆட்சிக்கு வந்துட்டா?

இப்பவே பிஜேபி காரங்க இப்படி பண்ணிண்ணா தப்பிதவறி ஆட்சிக்கு வந்துட்டா?


என்னமோ மோடி ஆட்சிக்கு வந்துட்டா அவர் இந்திய நாட்டை க்ளின் பண்ணி அதன் பிறகு இந்தியவை வல்லரசு ஆக்காமல் விடமாட்டார் என்று பில்டப் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிஜேபி கட்சிகாரர்கள் யாரவது கொலை செய்யப்பட்டால் அதை செய்தது மூஸ்லிம் திவரவாதிகள் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடுகிறார்கள்

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கிழ்கண்ட இந்த நிகழ்ச்சிகள் இங்கே சுட்டிக்காண்பிக்கபடுகிறது


கோயம்புத்தூர்ல சிவசேனாவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை எட்டு பேரு சேர்ந்து அட்டாக் பண்ணி யிருக்காங்க. அட்டாக் பண்ணினவங்க விஸ்வ ஹிந்து பரிஷத்காரங்க. விநாயகர் சிலை வைக்கிறதுல நடந்த முன் விரோதம்தான் காரணமாம்.


சில வாரத்துக்கு முன்னால திண்டுக்கல்லில் பி.ஜே.பி-காரர் ஒருத்தர் வீட்டு முன்னால அவரோட மனைவி நின்னுருக்காங்க. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாம அவங்க மேல பெட்ரோல் குண்டை வீசிட் டாங்க. கடைசியா விசாரிச்சதுல தெரியுது, 'குண்டு வீசினவரே அதே பி.ஜே.பி-காரர்தான்’னு. 'அப்பதான் ஃபேமஸ் ஆக முடியும்’னு செம டெரரா வாக்குமூலம் கொடுத்தார் அவர்.

அதுக்கும் கொஞ்சநாள் முன்னாடி கன்னியாகுமரியில் அனுமன் சேனாவைச் சேர்ந்த ஒருத்தர் காணாமப் போயிட்டார். கடைசியில ஓர் இடத்தில் ஒளிஞ்சுக்கிட்டு இந்த வதந்திகளைக் கிளப்பி விட்டவரே அவர்தான். இப்படி தமிழ் நாடு முழுக்க பிளான் பண்ணிப் பண்றங்க , பி.ஜே.பி-காரங்க

இப்படி பண்ணுற பி.ஜே.பி-காரங்க தேர்தலில் ஜெயிக்க அனுதாப அலை பெற இதுக்கும் மேலேயும் போயி எதுவும் செய்வாங்க. அதனால தமிழகத்தில் உள்ள இந்துகள் பாதுகாப்பாக இருந்துக்குங்க நீங்க தமிழகத்திற்குள் எங்காவது பஸ்ஸில் குழுவாக யாத்திரை சென்றால் பிஜேபி கட்சிகாரர்களுக்கு தெரியாமல் போங்க. இல்லையென்றால் உங்களை பஸ்ஸோட கொளுத்திவிட்டு அதை தீவரவாதிகள் செய்ததாக செய்தியை வரவழைத்து அதனால் கிடைக்கும் அனுதாப ஒட்டினால் பல சீட்டுகளை கைப்பற்றிவிடுவார்கள் அதனால் நீங்க ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்

தமிழ் நாட்டுல தம்மாத்துண்டு இருக்கிற இந்த கட்சி வளர்ந்துடுச்சுன்னா... தி.மு., .தி. மு.-வை எல்லாம் சாப்பிட்டு ஏவ்வ்வ் விட்டுடுவாங்கோவ்!

மனசில் தோன்றியதை சொல்லிட்டேன் .....அவ்வளவுதாங்க. பாதுகாப்பாக இருக்க வேண்டியது நீங்கதாங்க

அன்புடன்
மதுரைத்தமிழன்
 

6 comments :

 1. நம் நாட்டில் எல்லா கட்சிகளுமே ஏதாவது ஒரு ஸ்டண்ட் செய்வார்கள், ஆனால் மக்களை பிளவுபடுத்துவதையே முழு நேரமாக செய்து கொண்டு இருக்கும் ஒரே கட்சி இந்த பா.ஜ.க.வாக மட்டும் தான் இருக்கும்

  ReplyDelete
 2. எல்லாக் கட்சிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஆசை .அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்

  ReplyDelete
 3. தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தாங்களே குண்டு வீசியத விட்டுட்டீங்களே??
  ஆயிரம் ஆயிரம் இருக்கு...
  இந்தியாவில் வெடித்த முக்கால்வாசி குண்டு வெடிப்புகளுக்கு பின்புலத்தில் இவர்கள் தான் இருக்கிறார்கள்...
  நிச்சயம் ஒரு நாள் உண்மை வெளியில் வரும்...
  இதை வெளிக்கொண்டு வரவ கார்கரே மாதிரி ஒரு ஆபிஸர் வராமலா போக போறார்??? வருவார்.

  ReplyDelete
 4. நாடு சுடுகாடு அயிரும்

  ReplyDelete
 5. @சிராஜ் ,
  முக்காவாசி கணக்கு எப்படி கண்டுபுடிச்சீங்க. அந்த 72 நித்திய கன்னிகள் வந்து சொன்னாங்களா ...

  உங்க கூட்டத்தில் முக்கிய ஆட்கள் கொஞ்ச பேர் பிடிபட்டுள்ளார்கள். அந்த கொலைகார நாய்களை விடுவிக்க ஏதாவது போராட்டம் நடத்த திட்டம் ஏதாவது போட்டிருக்கீங்களா ..

  ReplyDelete
 6. எங்க வீட்டில் 7 வோட் இந்த தடவை பிஜேபிக்கு தான். எங்க தெருவிலேயே 100 வோட் கிடைக்கும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog