Saturday, October 19, 2013



மோடியின் வேஷம் கலைந்து போகிறதா?

மோடியோடு சேர்ந்து அவரை ஆதரிக்கும் ஊடகங்கள் மோடி என்ற புதிய அலைவீசுவதாக இன்னும் விளம்பரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. சமீப காலத்தில் நரேந்திர மோடியின் புண்ணியத்தால் தமிழ்நாட்டில் ஒரு பெரிய அலை  உருவாகி அந்த அலை  பாரதிய ஜனதா கட்சியை மிக உயரத்தில் தூக்கி வைத்தாக ஒரு பிரம்மையை உருவாக்கி கொண்டிருக்கின்றனர் சிலர். ஆனால் அப்படிபட்ட அலை இல்லை என்பது உண்மையே...




இல்லை இல்லை மோடி அலை உருவாகி இருக்கிறது எனச் சொல்லும் பிஜேபி கட்சி மற்றும் ஆதரவுக்காரர்களிடம் ஒரு கேள்வி. உண்மையில் அப்படி ஒரு அலை தமிழகத்தில் உருவாகி இருப்பது உண்மையானால் ஏன் அந்த கட்சி தமிழகத்தில் ஏற்காட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை? இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும் அந்த தேர்தலில் போட்டியிட்டு மோடி அலை உண்டாகி இருப்பது உண்மையென்றால் 2 வது இடத்திலாவது அல்லது மூன்றாவது இடத்திலாவது வந்து, அதை உண்மை என்று நிருபிக்க பயப்படுவது ஏன்? தேர்தலில் நின்றால் சில ஆயிரம் ஒட்டுக்களை பெற்று டெபாசிட் காலியாகி சுயரூபம் தெரிந்துவிடும் என்று பயம்தானே காரணம். சுயரூபம் தெரிந்தால்  மோடி அலை அல்ல அது மக்களை ஏமாற்ற மோடி ஊடகம் மூலம் விரித்த வலை என்று தெரிந்து விடும் அதுக்கு அப்புறம் மோடியின் பருப்பு நாடாளுமன்ற தேர்தல் வரை வேகாதுதானே

தமிழக இடைத் தேர்தல் என்பது சிறு மழை அதில் மோடி என்ற குள்ள நரி நனையப் பயப்படுவது  சாயம் வெளுத்து போகும் என்பதால் தானே

மோடியின் புகழ்பாடும் துதிகளே "மோடி சிங்கம்" என்றால் இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி உறுப்பினரை நிறுத்தி நாலாவது இடத்திலாவது வந்து தன்னால் தன் கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்து இருக்கிறது என்பதை நிருபிக்க முடியுமா ? இதை சவாலாகத்தான் கேட்கிறேன்

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments:

  1. நீங்கள் குறிப்பிடுவது போல அலை இல்லாமல் இல்லை
    நிச்சயம் ஈழத்தமிழருக்கு எதிராக
    மத்திய காங்க்கிரஸ் அரசும் மாநில
    தி, மு,க அரசும் செய்த துரோகங்கள்
    காங்கிரஸ் அரசு செய்த்து வரும் உலக மகா
    ஊழலகள் இவைகளுக்கு எதிராக இங்கு
    மாற்று எதிர்பார்க்கும் மனோபாவம்
    இருக்கத்தான் இருக்கிறது

    இதற்கு மாற்று எனில் மோடி தவிர
    வேறு என்ன இருக்கு ?
    நீங்களே கூட ஒரு மாற்றினை
    சிபாரிசு செய்யுங்களேன்
    நாமும் ஆதரவு தெரிவிப்போம்

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸுக்கு மாற்று மோடி அல்ல. இதுவரை மோடி பேசிய பேச்சுகளை கவனித்து வந்தால் இந்தியாவை முன்னேற்ற எந்தவிதமான ஒரு திட்டத்தையும் இது வரை குறிப்பிட்டு பேசியது இல்லை. மன்மோகன்சிங்க் மெளனமாக இருந்து என்ன செய்தாரோ அதை இவர் கொஞ்சம் சத்தம் போட்டு செய்யப் போகிறார் அவ்வளவுதாங்க இவர் வந்தால் இலங்கை பிரச்சனையை தீர்க்கப் போகிறாரா அல்லது பாகிஸ்தான் சீனா நம் பகுதியை அக்கிரமித்தால் பதில் தாக்குதல் நடத்தி அதை நிறுத்திவிடுவாரா அல்லது இந்தியா மீது மறைமுகமாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்தப் போகிறாரா என்ன அதற்கு என்ன திட்டங்கள் வைத்து இருக்கிறார் என்பதை அவரால் தெளிவாக விளக்கப் போகிறாரா என்ன?


      இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கிறது கூடிய சீக்கிரம் உங்கள் கருத்திற்கான பதிலை விரைவாக ஒரு நல்ல பதிவின் மூலம் சொல்லுகிறேன்.

      Delete
    2. என்ன செய்யனும்...அவங்கள( சோனியா,மன்மோஹன்,பனா.சினா,ராஹூல்) மாதிரி எங்க எங்க ஊழல் பண்ணி இந்தியாவை முன்னேத்தனும்ன்னு லிஸ்ட் கொடுக்கணுமா...?>????

      Delete
    3. ஒரு நாட்டின் பலம் அதனுடைய Military power ல் மட்டும் இல்லை. அதன் தலைவர்களின் போர்க்குணங்கள் மற்றும் அவர்களுடைய அயல் தேசத்தினை கையாளும் திறன் போன்ற அரசியல் ராஜ தந்திரங்களைப் பொருத்தும் இருக்கிறது. திரு மன்மோகன் சிங் சோனியா காந்தி, ராகுல் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகளை கொண்டிருக்கும் நாட்டை, அன்றாடம் ஸ்ரீலங்கா போன்ற சுண்டைக்காய் நாடுகள் கூட சீண்டித்தான் பார்க்கும். இல்லையென்றால் தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது அவர்களுக்கு அன்றாட பொழுதுபோக்கு வேலையாகிப்போய்விடுமா?
      நாட்டுக்கு இன்றைய தேவை ஒரு பலம் பொருந்திய அரசியல் வாதி ( அவரை இந்திரா காந்தி போன்றபோன்ற தலைவர் என்று கூறினாலும் தகும். அன்று நேரத்தோடு ஓட ஆரம்பித்த ரயில்கள் இன்றும் நேரத்தோடு ஓடிக்கொண்டு இருக்கின்றன). நான் குஜராத்தில் இருபது காலம் அராசாங்க பணியில் இருந்தவன். வருஷத்திற்கு இரண்டு மதகலவரம் என்று இருந்த நிலைமையை பன்னிரண்டு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்த கலவரமுமில்லாமல் குஜராத்தை உண்மையான அமைதிப்பூங்காவாக மாற்றிய பெருமை மோதிக்கு உண்டு. காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் ஆண்ட காலத்திலும் 2002 விட பெரிய கலவரங்களை குஜராத் சந்தித்திருக்கிறது. ஒரு கலவர பூமியை அமைதிப்பூமியாக மாற்றி மேலும் வளர்சியையும் செழுமையும் கொண்டு வந்தவர். மூன்றுக்கு ஒரு பங்கு குஜராத் பாலைவனம் தான் (கட்ச் பாலைவனம்). இன்று நர்மதாவின் இனிய குடி தண்ணீர் அந்த பாலைவனத்தில் மூளை முடுக்குகளில் ஒடி செழுமையை உண்டாக்கியிருக்கிறது. இந்த நதி இன்று நேற்றல்ல நூறு ஆயிரம் ஆண்டுகளாக குஜராத்தில் ஓடிக்கொண்டுதான் இருந்தது ஏன் எந்த அரசியல்வாதியின் கண்களிலும் இந்த பாலைவனத்தின் வாழும் மக்களின் வறட்சி கண்ணில் படவில்லை. ஏன் இந்த நதியின் தண்ணீர் வீணாக ஓடி கடலில் கலப்பதை மக்களின் பயனுக்கு கொண்டு வரவில்லை. எழுதினால் இது போல் பல பக்கங்கள் போகும். இன்றைய அரசியல் வாதியிகளை நடுவில் மோதியை நான் ஒரு அரசியல்வாதியாக பார்க்கவில்லை ஒரு திறமையான நிர்வாகியாத்தான் பார்க்கிறேன்.

      Delete
  2. தங்கள் பதிவின் தலைப்பிலேயே
    நரேந்த்ர மோடிக்கு 69 சதவீத ஓட்டு
    விழுந்திருக்கு பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நான் மோடி பிரதமராக வருவதை எதிர்க்கவில்லை ஆனால் அவரை பிரமாண்டமாக உருவகப்படுத்தி ஏதோ சாதித்து விடுவார் என்று ஊடகங்கள் சொல்லிவருவதைதான் பொய் என்று கூறிவருகிறேன்.

      இந்த இணையம் மூலம் கிடைக்கும் வோட்டுக்கள் மட்டும்தான் வெற்றியை தீர்மானிக்கும் என்றால் அவர்தான் அடுத்த பிரதமர் ஆனால் அது உண்மையல்ல. உங்களுக்கு தெரியுமா மோடி என்ன செய்ய வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பது அமெரிக்க கம்பெனிதான் என்பது. அந்த கம்பெனி செயல்படுத்தும் திட்டம் மூலம்தான் அவரை இப்படி பிரமாண்டமாக காட்டுவது அந்த கம்பெனிதான் சமுகதளம் மூலம் அவரை பிரமாண்ட படுத்திக் கொண்டு மக்களை மாய உலகில் அழைத்து கொண்டிருக்கிறது பொறுத்து இருந்து பாருங்கள் இந்த வேடிக்கையை

      Delete
    2. நல்ல பதிவு.

      மோடி அலை இங்கு இருப்பதாக கூறுவது தமிழ் நாட்டு பா.ஜ.க தலைவர்களா?.. ஏதோ ஒரு அமெரிக்க விளம்பர நிறுவனத்தின் அடி பொடிகள்.
      கண்டிப்பாக மோடி பிரதமரானால் ஒட்டு மொத்த இந்தியாவையே அடகு வைக்கத்தான் போகிறார் குஜராத்தில் பல லட்சம் ஏக்கர் நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தானம் வழங்கியதைப்போல..

      Delete
    3. நல்ல பதிவு.

      மோடி அலை இங்கு இருப்பதாக கூறுவது தமிழ் நாட்டு பா.ஜ.க தலைவர்களா?.. ஏதோ ஒரு அமெரிக்க விளம்பர நிறுவனத்தின் அடி பொடிகள்.
      கண்டிப்பாக மோடி பிரதமரானால் ஒட்டு மொத்த இந்தியாவையே அடகு வைக்கத்தான் போகிறார் குஜராத்தில் பல லட்சம் ஏக்கர் நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தானம் வழங்கியதைப்போல..

      Delete
  3. நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது
    மோடிக்கு எதிரான விஷயங்களை அல்ல
    அதற்கு மதவாத எதிர்ப்பாளர்கள்,கம்னியூஸ்டுகள் என
    பலர் இருக்கிறார்கள்.அவர்கள் போதும்
    நான் தங்களிடம் காங்கிரஸ் மோடி நீங்களாக
    ஒரு நடைமுறை சாத்தியமான மாற்று
    ஒரு நேர்மறையான சாத்தியம்

    ReplyDelete
  4. மோடிக்கு மாற்று யார் என்ற திரு. ரமணி யின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ராகுல் ஆஹ் இல்லை வேறு யார் ? 2002 கலவரத்திற்கு பிறகு சட்டம் ஒழுங்கு குஜராத்ல் எப்படி உள்ளது. கோர்ப்ரடே இல்லாமல் எப்படி வளாச்சி அடயா முடியும். ஏன் காங்கிரஸ் யும் விளம்பரம் போடுங்கள், வெறும் 5 சாதனைகளை மட்டும் சொல்லுங்கள்.
    கலர் டிவி அம்மா இட்லி சைக்கிள் 1 ருபாய் அரிசி லேப்டாப் போல மோடி யின் கவர்ச்சி விளம்பரம் திட்டம் என்ன ... ஒரு சாம்பிள் Janmarg Bus Rapid Transit in அஹ்மேடபாத்
    At a time when the nation’s agriculture is growing at 3%, Gujarat’s agriculture growth rate is at 11%.

    ReplyDelete
    Replies
    1. //ஒரு சாம்பிள் Janmarg Bus Rapid Transit in அஹ்மேடபாத் //

      அவனவன் மோனோ ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில்னு மிகப்பெரிய அளவிலானா பொது போக்குவரத்து வசதிகளை மக்களுக்கு தந்துவிட்டு அமைதியா இருக்கும்போது, யப்பா, இவுரு, புதுசா பஸ்சு கம்பேனி ஆரம்பிச்சு பஸ்சு விடறதுக்கு குடுக்குற அலப்பரை இருக்கே, முடியல, (ஒரு வேளை பஸ்ஸையே இப்பதான் கண்ணுல காட்றாங்கலோ) யே , எதாச்சும் உண்மையிலே பண்ணிட்டு அதுக்கு மட்டும் வெளம்பரம் குடுங்கப்பா, ஒண்ணுமே பண்ணாம செலவுபண்ணி வெறும் வெளம்பரம் மட்டும் குடுத்துட்டா போதுமா?

      Delete
    2. //ஒண்ணுமெ பண்ணாம செலவு பண்ணி வெறும் வெ(வி)ளம்பரம்//
      கெணற(கிணறு) வெட்டாமலே இது காணாம போயிட்டுன்னு குற்றஞ்சாட்டுற ஊருல இருக்கோம்யா

      Delete
    3. Reply of கார்த்திக் அன்புசெல்வன் in thatstamil...

      .வணக்கம் ! முதல்ல நான் ஒரு விஷயத்தை சொல்லிடறேன். நான் இந்த இந்துத்வா,பா.ஜ.க இதுக்கு ஜால்ரா போடுறவனும் கிடையாது. அதே மாதிரி முஸ்லிம்களுக்கு ஒத்து ஊதுறவனும் கிடையாது. ஒ கே விஷயத்துக்கு வருவோம்.

      ஆமா மாப்பு என்ன கோனார் நோடஸ்ல இருந்து சுட்டீங்களா! இதோ உங்க கேள்விகளுக்கான பதில்கள்...

      ஆமாம் குஜராத்தான் அதிகமாக கடன் பெற்றுள்ள மாநிலம். அதுக்கு காரணம், குஜராத் அரசு தொழில் முனையும் நிறுவனங்களுக்கு கொடுத்த மானியங்கள் மற்றும் மாநில உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீட்டு செலவுகள் தான். பாஸு..டாட்டா போன்ற கம்பனிகளுக்கு 0.1% வட்டியில் கடன் கொடுத்தது நஷ்டம்னு சொல்றீங்க. அதுவும் தப்பு..ஏன்னா நீங்க தொழிற்சாலை நிறுவ குஜராத் மாநில அரசு குடுத்த சலுகையை மட்டும் சொன்னீங்க ஆனா அந்த நிறுவனத்தால உற்பத்தி செய்யப்படும் கார்கள் மீதான வரி வருவாய்(Productivity tax, Sales Tax,Vat) மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் மூலமாக மாநில அரசுக்கு கிடைக்கும் துறைமுக வருவாய்(Excise duty) பற்றி சொல்லவே இல்ல? யோவ் இதை நீ தப்புன்னு சொன்னா இந்தியா முழுக்க நான்கு வழிச்சாலை போட்ட எல்&டி,ரிலையன்ஸ் போன்ற நிறுவங்களுக்கு சாலை வரி வசூலிக்கும் உரிமை கொடுத்தது தப்பு தானே? உண்மையிலேயே இது தான் நஷ்டம். இப்போ புரியுதா குஜராத்தில் மோடி செய்றது முதலீடு. நஷ்டம் இல்லை !!

      அடுத்தது,தனி நபர் கடன் ஒவ்வொரு இந்தியன் மீதும் இருக்கு. அப்படின்னா நீயும் நானும் போய் எந்த சேட்டு கடையில வாங்குனோம்? இப்போ குஜராத் தனி நபர் கடன் பட்டியல்ல முதல் இடத்துல இருக்க உண்மையான காரணம் அதன் எதிர் கால முதலீடுகளால் தான். உதாரணம், சோலார் திட்டம், ஈ-சர்வீஸ் திட்டம், மாநில நதி இணைப்பு திட்டம் போன்றது.

      பாஸு திரும்பவும் தப்பு பண்றீங்க.. (இந்திய திட்ட கமிஷன் ) அறிக்கையின் படி 2001-2011 வரை குஜராத் மாநிலம் நாட்டின் நிகர வளர்ச்சியை விட 2.5% அதிகம் பெற்று முதல் இடத்தில உள்ளது.மேலும் இது 2001 ஆம் ஆண்டு மோடி முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன் இருந்ததை விட அதிகம். இதற்கு அடுத்த இடத்தில் பீகார் மாநிலம் 1% வளர்ச்சியுடன் உள்ளது.

      அடுத்தது, இந்தியாவிலேயே மாநில தேர்வாணையம் மூலம் அதிக பணியிடங்களை நிரப்பியதில் குஜராத்துக்கு தான் முதல் இடம்.

      அடுத்தது, ஊழல் இல்லாத மாநிலங்களில் நாட்டின் முதலிடம் குஜராத்.

      யோவ் உனக்கு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வித்தியாசம் தெரியுமா ? பீகார் மாநிலத்துல வாய்ப்புகள் இல்லாததால் தான் மற்ற மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு போறாங்க ...அங்க மட்டும் இல்ல உத்ராஞ்சல் , ஜார்கண்ட், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் கூட குஜராத், தமிழ் நாட்டை விட அதிகமா இருக்கலாம். ஆனால் அதுக்கு காரணம் வளர்ச்சி இல்ல மாறாக அங்கு இருந்து சுரண்டப்படும் இயற்கை வளங்கள் மற்றும் தாது பொருட்கள் மூலமாக தான். அதனால் தான் அங்கெல்லாம் நக்சலைட் தலை தூக்குது. காரணம் சாதாரண மக்கள் கொடுமையா பாதிக்கப்படுறாங்க. குஜராத்துல அப்படி ஏதாவது இருக்கா?

      யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா..தமிழ்நாட்டுல மோனோ ரயிலா,மெட்ரோ ரயிலான்னு குடிமி சண்டை போடுற இந்த சமயத்துல, 2008க்கு முன்னாடியே பஸ்சுக்கு தனி ட்ராக் போட்டு தனி சர்வீசையே செஞ்சுருக்காரு.

      பாஸு, குஜராத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள 28 தொகுதிகளில்18ல் மோடியை தேர்ந்தெடுத்து உள்ளனரே.

      இதுக்கு மேல நீங்க இங்க சொல்லி இருக்குறது எல்லாம் sensex report ல சொன்னத அப்படியே இங்க எழுதி இருக்கீங்க.

      யோவ்..ஆண் பெண் விகிதம் பத்தி இங்க எதுக்கு பேசுறீங்கன்னு சுத்தமா புரியல!!

      பாஸ் நீங்க சொல்ல மறந்தது இல்லன்னா மறைத்தது...

      1.சூரிய மின் உற்பத்தியில் நாட்டின் முதல் இடம்( பின் குறிப்பு: குஜராத் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யும் அளவானது , இன்றைய நிலையில் உலகில் வளர்ச்சி(GDP ) மற்றும் தொழிநுட்பத்தில் முதல் இடத்தில இருக்கும் சீனாவை விட அதிகம்.)

      2. இந்தியாவிலேயே 13685 கிராம பஞ்சாயத்துகளை ஆன்லைன் முறையில் இணைத்து முதல் இடத்தில் இருக்கும் மாநிலம்,

      3. கடந்த பத்து ஆண்டுகளில் 144 தடை சட்டம் அமல்படுத்தாத அல்லது அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாத மாநிலம்,

      4. மாநில நதிகள் அனைத்தையும் இணைத்துள்ள ஒரே மாநிலம்.

      ஆனால் ஒன்று, 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு மோடி காரணம் இல்லை என்றாலும் தார்மீக ரீதியாக பிரதமராக வெற்றி பெற்று பதவி ஏற்கும் முன்பு அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். கண்டிப்பாக மோடி இதை செய்வார்..ஏனென்றால் கடந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனே பொது மேடையிலே இதை செய்தவர்.

      Delete
  5. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்று தேடித் பார்த்து நம் முதுகை சொரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் இருக்கிறோம்...!!

    ஊழலைத் தவிர வேறு எதுவுமே தெரியாத கூட்டம் ஒரு புறம்...

    விட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓட வைக்கும் அளவிற்கு மதவெறி பிடித்த கூட்டம் மறுபுறம்.

    இவை இரண்டுக்கும் மாற்று என்ன என்று பார்த்தால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பலமில்லாத சிறு சிறு கூட்டணிகள்...

    கூட்டைக் கழித்து, இருப்பதில், கொள்ளைக்காரன் பெரிதா? கொலைகாரன் பெரிதா?? என்று பார்த்தால்... பணமாவது பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம். அனால், உயிர் போனால் திரும்ப வராது. எனவே, கொள்ளைக்காரனை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நாட்டில் ரத்த ஆறு ஓடவைக்கும் மதவெறிகூட்டம்... பாகிஸ்தானுடன் கைகோர்த்துக்கொண்டு நாடெங்கும் குண்டுவைக்கும் மதவெறிக்கூட்டம்.......ஆமாம் அது ஒடுக்கப்படணும்ன்னா மோடி வந்தே தீர வேண்டும்.....

      Delete
  6. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்று தேடித் பார்த்து நம் முதுகை சொரிந்து கொள்ள வேண்டிய அவலத்தில் இருக்கிறோம்...!!

    ஊழலைத் தவிர வேறு எதுவுமே தெரியாத கூட்டம் ஒரு புறம்...

    விட்டால் நாட்டில் ரத்த ஆறு ஓட வைக்கும் அளவிற்கு மதவெறி பிடித்த கூட்டம் மறுபுறம்.

    இவை இரண்டுக்கும் மாற்று என்ன என்று பார்த்தால், மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பலமில்லாத சிறு சிறு கூட்டணிகள்...

    கூட்டைக் கழித்து, இருப்பதில், கொள்ளைக்காரன் பெரிதா? கொலைகாரன் பெரிதா?? என்று பார்த்தால்... பணமாவது பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம். அனால், உயிர் போனால் திரும்ப வராது. எனவே, கொள்ளைக்காரனை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது.

    ReplyDelete
  7. Arun neengal evvalavu sonnaalum intha pathivar accept pannamaattar.ivar Ragul ----varudi

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.