Wednesday, October 16, 2013

பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க )

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
என்று பாரதி சொன்னான்

ஆனால் பெண் என்று சொல்லும் போதினிலே
என் மனத் தோட்டத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன
காரணம்
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?
இவையெல்லாவற்றிற்கும் நன்றி செய்யும் வகையில்
பெண்களைப் பற்றிய நான் அறிந்த சில ரகசியங்கள் உங்களுக்காக இங்கே படமாக வெளியிட்டுள்ளேன்

 

@avargalunmaigal


@avargalunmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : இரண்டாவது கிராபிக்ஸ் ரெடி பண்ணும் போது சத்தியமாக, உண்மையாக, என் பின்னால் என் மனைவி பூரிக் கட்டையுடன் நிற்கவில்லை , நம்புங்கப்பா நம்புங்க ஹீ.ஹீ

12 comments:

  1. பெண்களைப் பற்றி ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு வரும் மதுரை தமிழனுக்கு மூங்கில் காற்றின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் பட்டம் தருபவர்கள் அதனுடன் சேர்த்து "சரக்கு" தருவார்களா? தப்பா நினைக்காதீங்க நான் சரக்க்குன்னு சொன்னது பணமுடிப்பைதான் சொன்னேன்

      Delete
  2. உண்மைகள்...

    வீட்டில் 'விருந்து' கிடைத்ததா....? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையால் விருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி கிடைத்தால் நீங்கள் தான் மருந்துக்கு ரெடிபண்ணணும்

      Delete
  3. வணக்கம்

    படத்தில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் நன்று வாழ்த்துக்கள்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பூரிக்கட்டையில வாங்கும்போதே இப்படின்னா!? கண்டுக்காம விட்டா!?

    ReplyDelete
  5. வாழ்க்கையில் ஆயிரம் அழகான பெண்களை நாம் பார்க்கலாம்.ஆனால் நம் வாழ்வை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண் தான்.(மனைவி).ரெண்டாவது , மூனாவது எல்லாம் கெடையாதா?

    ReplyDelete
  6. ஒரு கோட்டை அழிக்காமலேயே சின்னதாய் ஆக்க அதன் பக்கத்தில் பெரிய கோடு வரைவதை போல,அழகில்லாத ஒன்றை அழகாக்க அதை விட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்.நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண்தான்(மனைவி).என்பதன் மூலம் "நீ (Mrs.avargal unmaigal) அசிங்கமா இருக்க" ன்னு மச்சான் மறைமுகமா சொல்லியிருகாருக்கா(சொல்லி இருக்காரு அக்கா). இந்தாளு பூரிக்கட்டைக்கெல்ல்லாம் அடங்க மாட்டாரு.தோசை கரண்டிய அடுப்புல போட்டு வையி.அப்புறம் நாளைக்கு நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு ஆண்தான்(கணவன்) ன்னு நீ சொல்லாட்டியும் தோசை கரண்டியால வரப்போற தழும்பு சொல்லும்.

    ReplyDelete
    Replies
    1. “அழகில்லாத ஒன்றை அழகாக்க அதைவிட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்“

      அடடடடடா.... எவ்வளவு பெரிய தத்துவத்தைத்ச் சொல்லியிருக்கிறீங்க சேக்காளி....
      பத்திரம். உங்கள் வீட்டிலும் பூரிகட்டை வந்து விட போகிறது.

      Delete
    2. இரண்டாம் வாசகம் மிக அருமை.
      அதைவிட மூதல் வாசகம் மிகமிக அருமை “உண்மைகள்“

      Delete
  7. அருமையான மொழி
    இது அன்பில் விளைந்த மொழியாகத்தான்
    எனக்குப் படுகிறது
    மிரட்டலுக்கு இத்தனை அருமையாக
    வார்த்தைகள் கோர்வையாகக் கிடைக்காது இல்லையா /
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மனைவியை பற்றி சொல்லி எங்கோ போய்ட்டிங்க.... நிஜம்மா உங்களை பாராட்டியே ஆகனும்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.