Tuesday, October 8, 2013


   
silently crying

மெளனமாக ஒரு அலறல்

நான் பதிவு எழுத ஆரம்பித்த காலங்களில் எழுதிய பதிவை நான் மறு பதிவாக நேற்று இட்டு இருந்தேன். அதைப் படித்த திருமதி. உஷா அவர்கள் நீங்கள் ஆரம்பப்த்தில் இருந்தே இப்படித்தான் எழுதுகிறீர்களா என்று கேட்டு இருந்தார். அதற்குப் பதில்தான் இந்தப் பதிவு. இதுவும் ஆரம்பக் காலத்தில் நான் எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடித்த நல்ல பதிவு. இது அந்த நேரத்தில் சீண்டுவார் இல்லாமல் இருந்தது அதன் பின்தான் சீரியாஸா எழுதுவதற்குப் பதிலாகப் பல மொக்கை பதிவுகளை எழுத ஆரம்பித்தேன் அப்புறம் அந்த மொக்கைகள் பிரபலமாகின...

சரி இதைப்படித்து விட்டு அப்படியே போகாமல் உங்கள் மனதில் பட்ட கருத்தைப் பதிவிட்டுச் செல்லுங்கள். இல்லைன்னா உங்க கண்ணுலேயே வந்து குத்துவேன் அல்லது மொக்கை பதிவுகளாகப் போட்டு பதிவுலகத்தையே கலங்கடிச்சுடுவேன்

அம்மா...நான் உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டுதான் பார்ட்டிக்குப் போயிருந்தேன்...
அம்மா நீங்க சொன்னீங்க குடிக்கக் கூடாது என்று.
அம்மா நீங்கச் சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தேன்.
அம்மா நான் கோக் மட்டும்தான் குடித்தேன்

அம்மா என் உள்ளத்திற்குள் ஒரு கர்வம் & பெருமை
அம்மா நீங்கச் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கின்றேன் என்றுதான்

அம்மா எல்லோரும் குடி குடி என்று வற்புறுத்தினார்கள்
அம்மா நான் அதை மறுத்து கோக் மட்டும்தான் குடித்தேன்
அம்மா இருந்தாலும் நான் குடித்துவிட்டுக் கார் ஒட்டவில்லை
அம்மா நான் பார்ட்டியில் சரியாகத்தான் நடந்தேன்
அம்மா உங்கள் வழிகாட்டுதல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்.

அம்மா ஒரு வழியாகப் பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியேறத் தொடங்கினார்கள்.
அம்மா நானும் என் காரில் வந்து உட்கார்ந்தேன் எனக்குத் தெரியும் நான் நல்ல படியாக வீடு வந்து சேர்வேன் என்று

அம்மா நீங்க என்னை ரொம்பப் பொறுப்பான நல்ல பிள்ளையாக வளர்த்தீர்கள்.
அம்மா நான் காரை வாகன நிறுத்துமிடத்தில இருந்து எடுத்து மெதுவாக ரோட்டிற்குள் வந்தேன்

அம்மா அப்போது இன்னொரு காரில் வந்தவன் என்னைப் பார்க்கவில்லை.
அம்மா அந்தக் கார் என் காரில் ஒரு பாறாங்கல்லைப் போல வந்து மோதியதும்மா
அம்மா என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் தரையில் கிடந்தேனம்மா

அம்மா அப்போது போலிஸ்காரர் பேசியது என் காதில் விழுந்தது அம்மா
அம்மா அவர் யாரிடமோ சொன்னார் அந்த வாலிபன் நல்லா குடித்துவிட்டுக் கார் ஒட்டி வந்து மோதியுள்ளான் என்று

அம்மா குடித்தது அவன் ஆனால் எனக்கு ஏன் அம்மா இந்தத் தண்டனை?
அம்மா உன் ஆசை மகள் நான் தரையில் கிடக்கின்றேன்.

 
silent cry

நீ சீக்கிரம் இங்கே வாம்மா

அம்மா எப்படிம்மா இது நடந்தது? என் வாழ்க்கை பார்ட்டியில் உள்ள ஒரு பலூனை போல ஒரு நொடியில் உடைந்துவிட்டதேயம்மா

அம்மா இங்கே எங்க பார்த்தாலும் ஒரே ரத்தமயம்தானம்மா எல்லாம் இரத்தமும் உன் செல்லப் பிள்ளையினுடையது தானம்மா
ஆம்புலன்சில் வந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் நான் சீக்கிரம் இறந்து விடுவேன் என்று

அம்மா நான் உன்னிடம் ஒன்றை மீண்டும் சொல்ல விரும்புகிறேன் சத்தியமா நான் குடிக்கவில்லை
அம்மா மற்றவர்கள்தான் குடித்தார்கள் அந்தப் பார்ட்டியில்
அம்மா ஒன்று மட்டும் வித்தியாசம் குடித்து அவர்கள் ஆனால் இறப்பது நான் அம்மா

அம்மா இவர்கள் ஏனம்மா குடிக்கிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல்
மற்றவர்கள் வாழ்க்கையையும் அழித்துவிடு மம்மா

அம்மா ரொம்ப வலிக்குதம்மா சில நொடியில் கத்தியை எடுத்து மெதுவாக அறுப்பது போலவும் சில நொடியில் பாறாங்கல்லை மேலே தூக்கிப்போட்டது போலவும் வலிக்குதம்மா...

ஆனால் குடித்து விட்டு என் மேல் மோதியவனுக்கோ சிறு அடி கூட இல்லையம்மா.
அவன் வைத்த கண் மாறாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அம்மா.

அம்மா இது நியாயமில்லை அம்மா இது நியாயமில்லை.......

அம்மா தம்பியை அழ வேண்டாம் என்று சொல்லுமா
அம்மா என் செல்ல அப்பாவை தைரியமாக இருக்கச் சொல்லம்மா

அம்மா நீதான் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்
என் சாமாதியில் "டாடியின் பெண் இங்கே உறங்குகிறாள் "என்று போடும்மா

அம்மா உன்னைப் போல யாரவது அவனுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்திருந்தால்
இப்போது நானும் உயிரோட இருந்திருப்பேன் அம்மா.

அம்மா எனக்கு இப்போது பயமா இருக்கும்மா. என்னால முச்சுவிடமுடியலையம்மா
அம்மா எனக்காக அழாதேம்மா உனக்கு நான் எப்போது தேவையோ அப்போது உன் அருகில் இருப்பேனம்மா?

அம்மா நான் இறக்கும் முன் உன்னிடம் கடைசியாக ஒரு கேள்வியம்மா....
நான் குடித்துக்கொண்டு கார் ஓட்டவில்லை ஆனால் நான் ஏனம்மா இப்போது சாகனும்?
silent scream



இன்றைய இளைஞர்கள் நள்ளிரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு அவர்களே காரை ஓட்டி சென்று விபத்திற்கு உள்ளாவதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். அந்தமாதிரியுள்ள இளைஞர்கள் & இளம் சகோதரிகள் குடிப்பதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நான் உங்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதிகமாகக் குடித்து விட்டு விடிகாலையில் கார்களை ஒட்டி செல்ல வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் லிமிட் என்னவென்று தெரிந்து விட்டு அந்த அளவு குடியுங்கள் நண்பர்கள் சொல்லுவதற்க்காக அதிக அளவு குடிக்காதீர்கள். முடிந்தால் குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்

இழப்பு என்பது இழந்தவர்களூக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்குப் பெரிய இழப்ப ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைத்தான் இழக்கிறீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு. உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்

பதிவு பிடித்து இருந்தால் மற்றவர்களுக்கும் (உறவினர், நண்பர்கள்) அறிமுகப்படுத்துங்களேன்

ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்கள் மனசுலப்பட்ட கருத்தைத்தான் சொல்லிவிட்டு போங்களேன்


15 comments:

  1. நான் இனி குடிக்க மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முடிவுக்கு எனது பாராட்டுக்கள்.

      Delete
  2. நண்பரே மிகவும் உண்மையாகவே அலறியிருக்கிறீர்கள், மௌனமாக!
    சமூகம் என்பதில் அனைவரும் அங்கத்தினரே. இதில் ஒருவரின் தவறு என்பது மற்றவரை நிச்சயம் பாதிப்புள்ளாக்கும். இன்று சமூகத்தில் பலர் (அனைவரும் ?) நமக்கென்ன என்றே வாழ்கிறோம்.
    நான் திருடுவதில்லை
    நான் ஓட்டுக்கு பணம் வாங்கியதில்லை
    நான் குடிப்பதில்லை
    நான் பொய் பேசியதில்லை
    ஆனால் சமூகத்தில் உள்ள மற்றவர்கள்தான் இதையெல்லாம் செய்கின்றனர் என்பது இவர்களின் கருத்து. ஆனால் எவருக்கும் அது தவறு, அதை தடுக்கவேண்டும் என்று அக்கரை என்பதே இல்லை. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். "என்னை தொந்தரவு செய்யாதே" என்பது போன்ற நிலை. ஏன் நீங்களும் அதைத்தான் செய்துள்ளீர்கள் இந்த பதிவில்.
    குடிக்காதே என்று அலறாமல் லிமிட்டா குடி என்று போதித்துள்ளீர்கள்.
    பக்கத்து வீட்டில்தான் தீ என்றாலும் வெகுவிரைவில் பாதிப்பு நமக்கும்தான் என்பதை எப்போது உணரப்போகிறோம் நாம்?

    ReplyDelete
    Replies
    1. குடிக்காதே என்று அலறாமல் லிமிட்டாக குடி என்று சொன்னதற்கு காரணம்... குடிப்பவர்களிடம் குடிக்காகதே என்று சொன்னால் யாரும் கேட்டுவிடுவதில்லை அவ்வளவு எளிதாக ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கி கொஞ்சம் அளவோடு குடித்து நிதானம் தவறாமல் இரு என்று சொன்னால் சில பேராவது காது கொடுத்து கேட்பார்கள்.

      இன்னொறு காரணம் நான் சோசியல் டிர்ங்கர் என்ற வகையை சார்ந்தவன். அதாவது நானும் குடிப்பவன். ஆனால் இதை மறைத்து நான் யோக்கியன் என்று கூறவிரும்பவில்லை ஆனால் இதுவரை நான் நிதானம் இழந்தது இல்லை. அதனால் தான் முடிந்த வரை குடிக்காதீர்கள் அல்லது அளவோடு குடியுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்

      Delete
  3. குடிப்பது நிறுத்துவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கிறது. அவர்கள் இதை படிக்கட்டும்..

    ReplyDelete
  4. அவரவர் மனஉறுதியை பொறுத்து..!

    ReplyDelete
  5. மௌனமாக ஒரு அலறல் பதிவு மட்டுமல்ல இணைத்துள்ள படங்களும் உருக்கமான அதிர்வை ஏற்படுத்திவிட்டுதான் செல்கிறது. அவரவருக்கு வலி ஏற்படும் வரை அடுத்தவர் வலியை யாரும் பொருட்படுத்தவதில்லை... இப்படித்தான் சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. no answers only questions - ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள்ளேயே விடை காண வேண்டும். நல்லதை சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க... நாம் நல்ல பாதையில் போய்கொண்டிருப்போம். எனக்கும் சமுதாய நிகழ்வுகளில் தவறுகளை காணும் போது கோபம் வரத்தான் செய்கிறது. தவறை சுட்டி காட்டினால் திமிர் பிடித்தவள் என்று ஒதுக்கி வைப்பார்கள். புறம் பேசும் ஆட்களிடம் நான் அவ்வளவாக பேசுவதில்லை.. ஆனால் அப்படி புறம் பேசுபவர்கள்தான் நாட்டில் அதிகமாய்..! சமுதாயத்தை புரட்டி போடனும்னு நினைக்கிறவங்க எல்லாம் இப்படி மௌனமாத்தான் கூச்சல் போட்டுகொண்டிருக்க வேண்டும்.

    நீங்கள் குடிக்கிறீர்கள் என்பதை பல பதிவுகளில் உண்மையாக சொல்லியிருக்கிங்க. வெளியில் ஆன்மிக சிந்தனைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் பேசி உள்ளுக்குள் அழுக்காக இருப்பவர்களை காட்டிலும் அடுத்தவருக்கு தொல்லை தராத உங்கள் நேர்மை எவ்வளவோ பெரிது.

    உங்கள் நாட்டு இயற்கை சூழலுக்கு குடிப்பது அவசிய தேவையோ என்னவோ எனக்கு அதெல்லாம் தெரியாது. அதை குடிக்காமல் இருந்தால்தான் என்ன? என்ன ஆகிவிடப்போகிறது? நம் மனதுக்கு கடிவாளம் நாம்தான்... அதனால் முடிந்தவரை கடிவாளம் போடுங்கள்..... உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்காக.... இந்த தோழியின் வேண்டுகோள்...!

    ReplyDelete
  6. பதிவை வெளியிட்டவுடன் தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  7. ஒரு உயிரின் இழப்பு அது அந்த வம்சத்தையே ஆட்டம் காண வைத்துவிடும். இதை எந்த நிமிடமும் உணர்ந்தால் நல்லது. விதி முடிந்து போனால் பரவாயில்லை. அலட்சியத்தினால் ஒரு உயிரும் இனி போகாமல் இருந்தால் நல்லது

    ReplyDelete
  8. ovoru kudimaganum itha padikanum........
    payapullaiga appavum thiruntha matanga padichutu nera barukuthan povanga........!

    ReplyDelete
  9. இதைப் படித்த போது மௌனமாக என் மனதும் அலறியது.

    தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளையும்
    கொடுங்கள். “உண்மைகள்“.

    ReplyDelete
  10. மிக அருமையானதொரு பதிவு! இது மற்றவர்களை சென்றடையாதது வருத்தமே! இப்போது பலர் படித்து இருப்பார்கள் திருந்த வேண்டியவர்கள் திருந்தட்டும்! நன்றி!

    ReplyDelete
  11. இது போன்ற பதிவுகளை எத்தனை முறை திரும்ப போட்டாலும் , நல்லதுதான்
    நன்றி மதுரைத்தமிழன்

    ReplyDelete
  12. madurai karan daa nee...............paasamulla payapulla.


    ReplyDelete
  13. குடிப்பவர்களைப் பற்றி, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் பற்றி, வாகனத்தில் போகும் போது கைபேசியில் பேசிக் கொண்டே செல்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர்கள் அதீத புத்திசாலிகள். அவர்களால் ஒன்றுமறியா அப்பாவிகள் பாதிக்கப்படுவதைப்பற்றித்தான் நான் அதிகம் கவலைப்பட்டதுண்டு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.