வளைந்து நெளிந்து செல்லும்
இந்திய நீதிதேவதை
சட்டம் எல்லா மக்களுக்கும்
சமம் ஆனால் அது இந்தியாவில் அல்ல. இந்திய நீதி தேவதை பணத்திற்கு ஏற்று வளைந்து செல்லும்
என்பதற்கு கீழ்கண்ட செய்தி ஒரு உதாரணம் ஆகும்
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., தலைவர் கலைஞரின் மனைவி தயாளு அம்மாவிடம்,
நாளை, 28ம் தேதி, சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் வீட்டில், எழும்பூர் நீதிமன்ற முதன்மை
மாஜிஸ்திரேட், விசாரணை நடத்துகிறார்.
சமூக வளர்ச்சியை பெரிதும்
சிதைவுக்குள்ளாக்க வல்லதான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மிகப்பிரசித்திபெற்ற
தலைவரின் மனைவி என்பதால், என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும் குற்றவாளியின் வீட்டிலேயே
நீதிபதி விசாரணை நடத்த இருப்பதாக வந்திருக்கும் செய்தியை படிக்கும்போது நம் மனதில் எழுவது இதுதான்
உலகத்தில் குற்றவாளிகளுக்கு இப்படியும் நீதித்துறை பணிந்து போகுமா? இது நாட்டிலுள்ள அனைவருக்கும் பொருந்துமா
என்ற கேள்வி கேட்டால் அந்த நீதி தேவதையே பதில் சொல்லாமல் கண்ணை மூடிக் கொள்வாள்
உடல் நிலை சரியில்லை என்ற
காரணம் உண்மையாக இருந்தாலும் டில்லி கோர்ட்டுக்கு வரச் சொல்லுவதைவிட சென்னை கோர்ட்டிற்காவது
வீல் சேரில் இருந்தாலும் கோர்ட்டிற்கு வரவேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பாக இருந்திருக்க
வேண்டும் அப்பொழுதுதான் அனைத்துதரப்பினருக்கும் நம்பிக்கை வரும். r
சரி அதுதான் இல்லை டெக்னாலஜி
மிகவும் வளர்ந்த இந்த காலத்தில் நீதிபதி குற்றவாளி என்று சுமத்தப்பட்டவரின் வீட்டிற்கு
சென்று விசாரணை நடத்துவதைவிட வீடியோ கான்பரன்ஸ் என்பதன் மூலம் நீதிபதிகள் கோர்ட்டில்
இருந்தவாரே விசாரிக்கலாமே இப்படி செய்வதன் மூலம் சட்டத்தின் கவுரவத்தை காப்பாற்றி இருக்கலாமே
நீதி எப்படியெல்லாம் வளைக்கப்படுகிறது,
வளைகிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு
,மறதி வியாதி உள்ளவரிடம் விசாரணை செய்து என்ன பயன்?.யாரை ஏமாற்ற இந்த நாடகம்?விசாரிக்க
வேண்டியவரான முதன்மை குற்றாவாளி என்று சொல்லப்படும் ராசாவை நாடாளுமன்ற குழு விசாரிக்க
மறுக்கிறது. விசாரிக்கப்பட வேண்டியவரான பிரதமரை விசாரிக்க வில்லை.....நல்லா நடத்துறாங்க
நாடகம்....
நீதிகள் ஆளாளுக்கு ஒன்று இருக்கும் போது எப்படி ஒருதலை சார்ப்பற்ற தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்! எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டது. நல்லதொரு பகிர்வு சகோதரரே. நன்றி.
ReplyDelete
Deleteபடித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி
நீங்க சொன்னது போல் வீடியோ கான்பரஸ் வைத்து விசாரிக்கலாம். இங்கு சட்டம் எல்லாருக்கும் சமமில்லை என்பது கசப்பான உண்மை! இதை மாத்த மதுரை தமிழன் தான் இங்க வரனும்...இங்க பாருங்க உங்க பின்னால எவ்வளவு கூட்டம்... அவர்கள் உண்மை கட்சி ஆஆரம்பம்....! மகளரணி தலைவி வாழ்க...!(வேற யாரு நாந்தான்...!)
ReplyDeleteஇப்ப வூட்ல பூரிக்கட்டையாலதான் அடிவாங்குறேன்...உங்க பேச்சை கேட்டு கட்சி ஆரம்பித்தால் மக்களிடம் இருந்து செருப்படி விளக்கமாற்று அடிதான்.... ஆமாம் ஏன் என் மேல் உங்களுக்கு இந்த கொலவெறி
Deleteஓர் இந்தியனுக்கு நீதி வேண்டுமென்றால், அவனிடம்
ReplyDeleteநிதி இருந்தாலே போதும்.
(பேசாமல் நாம் ஒரு கட்சி ஆரம்பித்து விடலாமா “உண்மைகள்“?)
கட்சி ஆரம்பிப்பதும் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிப்பதும் ஒன்றுதான். காரணம் இரண்டும் மக்களை ஏமாற்றவே ஆரம்பிக்கப்படுகின்றன.
Delete