Thursday, October 24, 2013



முதல் இஸ்லாமிய ஹலால் செக்ஸ் ஷாப்



துருக்கி நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய, ஹவுல்க் முரால் டெமிரேல், என்பவர் புதிய 'ஆன் - லைன் செக்ஸ் ஷாப்' ஒன்றை துவங்கியுள்ளார்.
 

உடலுறவுக்கு தேவைப்படும் வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற முக்கிய பொருட்கள் அனைத்தும், ஆன் - லைனில் விற்பனை செய்யும் இவர், இஸ்லாத்தில் எவ்வகை செக்ஸ் முறைக்கு அனுமதி உள்ளது, எந்த முறையில் செக்ஸ் செய்யக் கூடாது போன்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார். இந்த புதிய முறைக்கு, 'ஹலால் செக்ஸ்' எனவும் கூறியுள்ளார். செக்ஸ் டாய்ஸ்களான வைப்ரேட்டர்கள் போன்றவைகள் இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

இது குறித்து, ஹவுல்க் முரால் டெமிரேல் கூறியதாவது: செக்ஸ் பற்றி அறிந்து கொள்ளவும், அது பற்றி ஆலோசனை பெறவும், ஏராளமான இணையதளங்கள் உள்ளன. ஆனால் இந்த மாதிரியான  இணையதளங்களில், ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளன. அதனால் முஸ்லிம்கள் இந்த தளங்களுக்கு செல்ல  & பார்க்க தயக்கம் காட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல் செக்ஸ் பற்றி அறிய விரும்பும் பலரும் இவ்வகை இணையதளங்களை பார்ப்பதால் மன சங்கடத்திற்கு ஆளாகின்றனர். அதனால், ஆபாச படங்கள் இடம் பெறாத, செக்ஸ் பற்றி தகவல்கள் தர வேண்டும் என திட்டமிட்டேன். அதிலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயங்களை, அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் எண்ணினேன். அதனால், www.bayan.helalsexshop.com என்ற இணையதளத்தை துவங்கி, செக்ஸ் பற்றிய ஆலோசனை மற்றும் அதற்கு தேவையான பொருட்களையும் ஆன் - லைனில் விற்பனை செய்து வருகிறேன். என்று கூறினார். எனினும், இந்த தகவல்களை தரும் முறைக்கு, 'லவ் ஷாப்' என, பெயரிட வேண்டும் என, அந்நாட்டு முக்கிய தலைவர்கள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

http://in.reuters.com/article/2013/10/21/us-turkey-sexshop-idINBRE99K0OH20131021

Turkish entrepreneur opens first online 'halal' sex shop

Reuters) - A Turkish entrepreneur has opened what he says is the country's first online sex shop for Muslims, selling everything from lubricants to herbal aphrodisiacs and offering advice on how to have "halal" sex.

Haluk Murat Demirel, 38, said he had been inspired to launch the site (www.bayan.helalsexshop.com) by friends who wanted sex advice and products but found the content on other websites and in specialist stores too explicit.

"Online sex shops usually have pornographic pictures, which makes Muslims uncomfortable. We don't sell vibrators for example, because they are not approved by Islam," Demirel said.

Sexual mores provoke frequent debate in the majority Muslim but constitutionally secular country. There are relatively few sex shops, even in major cities, although in parts of Istanbul those that do exist advertise themselves with neon signs.

Critics of Prime Minister Tayyip Erdogan, whose roots are in Islamist politics, have often accused him of puritanical intrusiveness into private life, from his advice to women on the number of children they should have to his views on abortion.

Demirel said the website - which offers advice on which sexual practices are banned by Islam and which are not - had proved unexpectedly popular since launching last Tuesday, with 33,000 visitors on Sunday alone.

(Reporting by Humeyra Pamuk; Editing by Nick Tattersall and Robin Pomeroy)

13 comments:

  1. பெயரே வித்தியாசமாக உள்ளதே. மதவாதிகள் கோவித்துக் கொள்ள மாட்டார்களா?

    ReplyDelete
    Replies
    1. மதவாதிகள் கோபித்து கொள்ள தவறான செயல் ஏதும் அந்த கடை ஒனர் செய்யவில்லையே

      Delete
  2. புதிய தகவல்
    நாம் எதையும் சகித்துக் கொள்வோம்
    பொறுத்துக் கொள்வோம்
    காலப் போக்கில் பழகி ஏற்றும் கொள்வோம்
    தீவீரங்கள் என்ன நினைக்கிறார்களோ ?
    பொறுத்துப் பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. புதிய தகவல்தான் , திவிரங்கள் இதை எதிர்க்க மாட்டார்கள். காரணம் மத சட்டத்திற்கு கொள்கைகளுக்கு உட்பட்டே இந்த ஷாப் நடத்தப்படுகீறது

      Delete
  3. செக்ஸ் என்றாலே அருவருக்கத் தக்க கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி விடுபவர்கள்தான் இங்கு அதிகம்! அது குறித்து சரியான தெளிவோடு அதுவும் வாழ்வின் ஒரு அங்கம் என்ற பார்வையுடன் அணுகினால் அது புனிதம்தான்! நல் ஆலோசனைகளை வழங்க ஒரு ஹலால் ஷாப் (ஹமாம் ஷாப்னு முதல்ல தப்பாப் படிச்சுட்டேன்) இருப்பது நல்ல விஷயம்தான். வாடிக்கையாளர்கள் இதன் சேவையை சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்த வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக சரியான கருத்தை சொன்னதற்கு பாராட்டுக்கள்.

      Delete
  4. முதலில் தலைப்பை பார்த்தவுடனே அதிர்ந்து போனேன் !

    மதுரை தமிழன் இஸ்லாத்தை பற்றி தவறாக சித்தரிக்கிறாறோ என்று
    ஆனால் முழுவதுமாக படித்தவுடன் தான் புரிந்தது .
    அப்படி இல்லை என்று .

    இருந்தாலும் அந்த கடைக்கு ல்வ் ஷாப் என்று வைப்பதுதான் சரியாக இருக்கும் .

    சகோ , ரமணி அவர்களுக்கு ,

    தீவிரங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டது பற்றி விளக்கம் தரமுடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. நான் மதங்களை அல்ல மனிதனை நேசிப்பவன் ஆனால் அதே நேரத்தில் மதங்கள் எனக்கு எதிரி அல்ல, அதனால் எந்த மதத்தையும் பற்றி தவறாக ஏதும் சொல்லவும் மாட்ட்டேன் எழுதவும் மாட்டேன்.. அதே நேரத்தில் எந்தமத நண்பர்கள் அழைத்தாலும் அவர்களின் வழிபாட்டு தளங்களுக்கு சென்று வருவேன்.அதுதான் மதுரைத்தமிழன்

      Delete
  5. துருக்கியர்கள் இஸ்லாமியர்களுக்குள் முற்போக்கானவர்கள். அவர்கள் பெரும்பாலும் பெண்களை முக்காட்டிட்டு மூடி வைப்பதில்லை. ஆனா துருக்கிய பிரதமர் பிற்போக்கு மதவாதி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. பாலியல் பகுத்தறிவு அனைவருக்கும் வர வேண்டும். மதங்கள் பரிந்துரைக்கும் பாலியல் அறிவு அம் மதம் தோன்றிய இடம், காலத்துக்கு மட்டும் அடிப்படையில் உருவானவை, அது இக்காலத்துக்கு எந்தளவுக்குப் பொருந்தும் எனத் தெரியவில்லை. இருந்த போதும் பாலியல் உறவுகளை மெருகூட்ட இவை உதவலாம், ஆனால் பாலியல் சிக்கல்களை தக்க மருத்துவ ஆலோசனையில் தான் தீர்க்க இயலும். பாலியல் திருப்தியும், தாம்பத்ய நெருக்கவும் இல்லற வாழ்வுக்கும் உடல் உளத்துக்கும் நன்மையே பயக்கும். அதே சமயம் பாலியல் சமாச்சாரங்கள் முழுவதும் வியாபார திணிப்பு மயமாக்கப் படுவதில் எனக்கு உடன்பாடில்லை .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.