ஆண்களிடம்
ஏன் பெண்கள் அட்வைஸ் கேட்பதில்லை
?
நம்
தமிழ் வார இதழ்களில் வரும்
அட்வைஸ் பக்கத்தையும் நான்
படித்த ஜோக்கையும் கலந்து
எழுதிய ஒரு கற்பனைதான் இந்த
பதிவு.
படித்து
விட்டு என்னை திட்டாதிர்கள்
நாம்
ஏதாவது தமிழ் வாரப் பத்திரிக்கைகளை
படித்தால் கண்டிப்பாக ஒரு
அட்வைஸ் பக்கம் (அந்தரங்கம்,
டைரி,
பாட்டியின்
அட்வைஸ்)
இருக்கும்.
அதில்
அநேகமாக பெண்கள் தங்களுக்குரிய
பிரச்சனைகளைப் பகிர்ந்து
அதற்கு அட்வைஸ்சை எதிர்
பார்ப்பார்கள்.
அதற்கு
அநேகமாக பெண் எழுத்தாளர்கள்
,
அறிஞர்கள்
அல்லது டாக்டர்கள் மட்டுமே
பதில் எழுதுவார்கள்.
நீங்கள்
எப்போதவது யோசிச்சு இருகிறீர்களா
ஏன் ஆண் எழுத்தாளர்கள் ,
அறிஞர்கள்
அல்லது டாக்டர்கள் பதில்
எழுதுவதில்லை என்று?
உங்களுக்கு
விடை தெரியவில்லை என்றால்
பெண்களே தொடர்ந்து கிழேயுள்ளதை
படியுங்கள் உங்கள் அறிவுக்
கண்கள் திறக்கும்.
ஒரு
பெண் தன் பிரச்சனையை எழுதி
அதற்கு ஆண் அறிஞர் மதுரைத்தமிழன்(
இந்தகாலத்தில்
நம்பளை நாமே அறிஞர் என்று
பில்டப் கொடுத்துகொள்ள
வேண்டும்)
பதில்
எழுதினால் எப்படியிருக்கும்
என்பதை பார்ப்போம்.
ஐயா
மதுரைத்தமிழன் அவர்களே கடந்த
இரு மாதங்களாக எனது குடும்பத்தில்
ஒரு தீராத பிரச்சனையிருக்கிறது
அதை நினைத்து எனக்கு இராப்பகலாக
தூக்கம் ஏதுவுமில்லாமலும்,
வேலையில்
முழுக் கவனம் செலுத்த முடியாமலும்
தவிக்கின்றேன் .
என்னை
உங்கள் அன்பு தங்கையாக ஏற்று
அதற்கு ஒரு நல்ல பதில் தருவிர்கள்
என்ற முழு நம்பிக்கையோடு இதை
உங்களுக்கு எழுதுகிறேன்.
இரண்டு
மாதங்களுக்கு முன்புவரை
நானும் எனது கணவரும் மிகவும்
சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.
ஒரு
நாள் எனது கணவர் உடல் நலமில்லையென்று
வேலைக்கு போகமல் ஒரு நாள்
லீவு எடுத்துக் கொண்டார்.
எனக்கோ
வேலைக்க்கு செல்லவேண்டிய
அவசியம் ,அதனால்
நான் எனது காரை எடுத்து
சென்றேன்.
ஒரு
மைல்தூரம் போனதும் கார் நின்று
போய்விட்டது.
எங்கள்
வீடு உள்ள ஏரியாவோ புதிசாக
டேவலப்மெண்ட் ஆன ஏரியா.
எனவே
ஆள் நடமாட்டமோ இல்லை.
ஆட்டோ
ஸ்டாண்டோ இல்லை.
எனவே
கணவருக்கு போன் செய்தேன்
அவர் லைனோ பிசியாக இருந்தது.
எனவே
வேண்டா வெறுப்பாக ஒரு பொடிநடையாக
நடந்து வீட்டிற்கு சென்றால்
அங்கே எனது கணவரும் பக்கது
விட்டு காலேஜ் பெண்ணும்(
20 வயது)
அலங்கோலமாக
இருந்தனர்.
இருவரும்
தங்களுக்குள் ஆறுமாதமாக
தொடர்பு இருப்பாதாக உண்மைய
ஒத்துக் கொண்டனர்.
நானும்
என் கணவரிடம் ஏதோதவறு
பண்ணிவிட்டிர்கள் .நாம்
இருவரும் குடும்ப மனநல
மருத்துவரிடம் சென்று ஆலோசனை
கேட்கலாம் என்று சொன்னால்
அதை மறுத்து வருகிறார்.எனக்கோ
என்ன செய்வது என்று தெரியவில்லை.
எனக்கு
நீங்கள்தான் நான் என்ன செய்ய
வேண்டுமென்று ஒரு நல்ல பதிலை
தருவீர்கள் என்று காத்துக்
கொண்டிருக்கின்றேன்,
ப்ளீஸ்
சிக்கிரம் பதில் எழுதுங்கள்.
அன்புடன்,
ஷாலினி.
அன்புள்ள
ஷாலினி உங்கள் கடிதத்தை
மிகவும் வெகு கவனத்துடன்
படித்து பார்த்தேன்.
பிரச்சனை
உங்கள் கணவரிடம் இல்லை.
உங்களிடம்
தான் உள்ளது..கார்
ஒட்ட கற்றுக்கொண்டால் மட்டும்
போதாது அதில் பிரச்சனை வந்தால்
எப்படி சமாளிக்க வேண்டுமென்று
கற்றுக் கொள்ள வேண்டும்..
முதலில்
கார் நின்றுவிட்டால் அதில்
தேவையான அளவு பெட்ரோல்
இருக்கிறதா என்று பார்க்க
வேண்டும்.
பெட்ரோல்
இருந்தால் மட்டும் போதாது
அதில் தேவையான் ஆயில் சேர்த்தோமா
என்று சரி பார்க்க வேண்டும்.
மேலும்
எல்லா வயர்கலும் சரியாக
இருக்கிறதா என்று பார்க்க
வேண்டும்.
அல்லது
காரின் புகைப்போகும் பைப்பில்
ஏதாவது அடைப்பு இருக்கிறதா
என்று பார்க்க வேண்டும்
.இதையெல்லாம்
விட்டுவிட்டு கணவரை குறை
கூறுவதில் அர்த்தமில்லை.
கார்
ஒடவில்லை என்றால் ஏன் கணவருக்கு
போன் செய்கிறிர்கள் ?
நீங்கள்
மெக்கானிக்கு அல்லவா போன்
செய்து இருக்க வேண்டும்.
அல்லது
வீட்டிற்கு போகாமல்
புத்திசாலித்தனமாக மெக்கானிக்
கடைக்கு சென்றுயிருந்தால்
இவ்வளவு பிரச்சனை வந்து
இருக்காது.எனக்கு
ஒன்று மட்டும் புரியவில்லை
ஏன் நீங்கள் உங்க கணவரை குடும்ப
மனநல மருத்துவரிடம் அழைத்து
செல்ல விரும்புகிறீர்கள்.
நீங்கள்தான்
ஒரு நல்ல மெக்கானிக்கிடம்
சென்று நிறைய கற்று கொள்ள
வேண்டும்.
உங்கள்
கணவர் அந்த காலேஜ் பெண்ணிடம்
தனிமையில் இருக்கும் போது
ஏன் அவர்களை தொந்தரவு
செய்கிறீர்கள்.
கணவர் அல்லது
மனைவியாகட்டும் அடுத்தவரின்
ப்ரைவேஸியில் தலையிடாமல்
இருக்க வேண்டும்.
அப்போதுதான்
வாழ்க்கை பாதை இன்பமாக
இருக்கும்.
நான்
சொன்னதை கவனத்துடன் மனதில்
போட்டு இனிமேலாவது கணவரை
குறை சொல்லாமல் வாழ முயற்சிக்கவும்
வாழ்க்கை
வளமுடன் இருக்க இந்த மதுரைத்தமிழனின்
வாழ்த்துக்கள்.
வாழ்க
வளமுடன்.
அன்புடன்,
மதுரைத்தமிழன்
(
அட்வைஸ்
திலகம் )
டிஸ்கி
:
இந்த
கடினவுலகில் நீங்களோ வேலைக்கு
சென்று கடினமாக உழைத்து டையடாக
வரும் போது கணவர் உங்களை
தொந்தரவு பண்ணாமல் இருந்தால்
ஒரு கும்பிடு போட்டு நல்லா
ரெஸ்ட் எடுங்கள்
இந்த
பதிவு நான் பதிவு எழுத ஆரம்பித்த
காலங்களில் பதிவிட்டது.
இதை
அநேக பேர் படித்து இருக்க
வாய்ப்பில்லையாததால் அது
இங்கு மறுபதிப்பாக வெளியிடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல்
என் பழைய பதிவுகளை நீங்கள்
படிக்காமல் என்னிடம் இருந்து
தப்பிக்க முடியாது ஹீ.ஹீ.ஹீ
நல்லாதான் அட்வைச் பண்ணி இருக்கீங்க அந்த பொண்ணுக்கு. உங்கள் சேவை தொடருங்கள். அப்போதான் எல்லோரும் குட்டிச்சுவரா போக முடியும்.
ReplyDeleteநல்ல வேளை,மெக்கானிக் உடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்வது நல்லது என்று அந்த பெண்மணிக்கு ஆலோசனை சொல்லாமல் விட்டீர்களே ...அதற்க்கு நன்றி !
ReplyDelete"பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை தெரியும்" என்பது இதுதான் போல!
ReplyDeleteபிரச்சனையின் அடி ஆழம் வரைச் சென்று
ReplyDeleteஇத்தனை அருமையாக இப்போதெல்லாம்
யார் தீர்வு சொல்கிறார்கள்
அனைவரும் அவசியம் அறிந்துத் தெளிய வேண்டிய
விஷயத்தை அருமையான பதிவாகத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வயித்தெரிச்சல் போங்க !
ReplyDeleteமுதல்லர்ந்தே இப்படித்தானா...?
ReplyDeleteஹி....ஹி....ஹி....Advice Super
ReplyDeleteரசித் தேன்.
ReplyDeleteஆலோசனைகளுக்கு அணுகவும் உளவியல் நிபுணர் மதுரைத் தமிழன்னு விளம்பரம் கொடுத்துடலாமா?
ReplyDelete