பெண்கள் புது
சேலை வாங்க என்னென்ன காரணங்கள் சொல்லலாம் அல்லது
நேரம் வந்து விட்டது என்பதை எப்படி அறியலாம்
1, சண்டை போட்ட
கணவனிடம் சமாதனமாக போக சேலை வாங்க வேண்டும்.
2. மாமியார்,
நாத்தனார் வாங்கிய சேலை நன்றாக இருந்தாலும் அதை நாம் அணிந்தால் அவர்களுக்கு பெருமையை
கொடுத்துவிடும் அதனால் அதை குறை கூறி அணியாமல் அதற்கு மாற்றாக சேலை வாங்க வேண்டும்.
3. முந்தானையில்
கை துடைத்து துடைத்து ஆயிலும் கறையும் அதிகம் ஆகிவிட்டதா அப்படியானால் புது சேலை வாங்கும்
நேரம் வந்து விட்டது
4. கணவர் பர்ஸில்
அதிகம் இருப்பதை பார்த்துவிட்டால் புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது.
5. பக்கத்து வீட்டுக்காரி புது சேலை வாங்கிவிட்டால்
புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது.
6. உறவினர்கள்
திருமண அழைப்பிதழ் தந்துவிட்டார்கள் என்றால் புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது
7. பழைய துணிகளை
வாங்குபவன் வரும் போதெல்லாம் கொடுத்துவிட வேண்டும் என்று மனது துடிக்கிறதா அப்படியானல்
புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது
8. கணவன்
பொய் சொன்னதை அல்லது தவறு செய்ததை கண்டுபிடித்துவிட்டால் பாவமன்னிப்பு கொடுப்பதற்கு
தட்சணையாக சேலை வாங்கி தர வேண்டும்
9. குழந்தையின்
பள்ளியில் ஆண்டு விழாவா அப்படியானல் புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது
10. பண்டிகை
தினங்கள் வந்து விட்டதா அப்படியானல் புது சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது
இதை படித்துவிட்டு
உங்கள் வீட்டிற்கு பூரிக்கட்டை வாங்கும் நேரம்
வந்துவிட்டது என்று யாரும் என் மனைவிக்கு வாங்கி அனுப்ப வேண்டாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆக மொத்தத்துல நம்மை துவைச்சி காயப்போடாம விடமாட்டாயிங்களோ ?
ReplyDelete365 நாட்கள் பத்தாது...
ReplyDeleteஇன்னொன்னு விட்டுட்டிங்களே புதுசா துணிக்கடை ஓப்பன் பண்ணா அப்பவும் சேலை வாங்கும் நேரம் வந்து விட்டது...!
ReplyDeleteவேலூர்ல போன வாரம்தான் " சென்னை சில்க்ஸ்" ஆரம்பமாச்சு... கூட்டம் கூட்டமா அப்பாவி கணவர்கள் பைகளை சுமந்து கொண்டு உள்ளே போன மனைவி வரும் வரை குழந்தைகளை சமாளித்து பாப்கார்ன், ஐஸ்கீரிம் வாங்கி கொடுத்து கொண்டிருக்கும் கண் கொள்ளா காட்சியை கண்டேன்...! (அந்த கூட்டத்துல எங்க வீட்டுக்காரரும்தான்.. ஹா..ஹா...!)
என்னண்ணே!
ReplyDeleteநம்ம வீட்டம்மணிக்குத்தானே வாங்கிதரப்போகிறோம்.
இதுக்கு ஏன் இவ்ளோ அங்கலாய்ப்பு?
இல்லாத பொல்லாத விஷயத்துக்கெல்லாம் பார்ட்டி என்று சொல்லி பணத்த "தண்ணியா" செலவு பண்றப்பெல்லாம் இது தெரியமாட்டேங்குது!
இப்படிக்கு
பூரிக்கட்டை உபயோகிப்பாளர்கள் (வீட்டுக்காரர் மீது மட்டும்) சங்கம்
இனி உங்களுக்கு பூரிக்கட்டைலாம் பத்தாது. அதை மாத்தும் நேரம் வந்துட்டு. இனி உலக்கைதான் சரிவரும்.
ReplyDeleteஆசைகள் அடங்கி விட்டது என்றார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு நாளைக்கு ஒன்று என்று அலுவலத்தில்மாதம்தோறும் குறைந்தபட்சம் 26 புடவைகளில் வருவார். அப்படியும் ஆசை அடங்காமல் சீட்டு போட்டு எடுத்துக் கொண்டே இருக்கின்றார்.
ReplyDeleteஏதாவது காஸ்லியாக தங்கம், வைரம் என்றா கேட்கிறார்கள்?
ReplyDeleteஇல்லை கேட்டால் தான் உடனே வாங்கிக் கொடுத்து விடுவீர்களா....?
சாதாரண புடைவைக்குப் போயீ.....
(மற்றபடி பெண்கள் நன்றாக உடுத்தவது
அவர்களின் கணவரின் கௌரவத்தைக் காப்பாத்த தான்.... தெரியாதா “உண்மைகள்“?)
அட இப்படி எல்லாம் கூட ஐடியா பண்ணலாமா? சொல்லித்தந்தற்கு நன்றி! அருமை! என் கணவர் உங்களைத் தேடி வந்தால் நான் பொறுப்பல்ல.. :-)
ReplyDeleteஆஹா..... என்ன கண்டுபிடிப்பு....
ReplyDeleteஅது சரி நிறைய பூரிக்கட்டைகளும் உலக்கைகளும் உங்கள் வீட்டுக்கு அனுப்ப ரெடியாகிக் கொண்டிருக்கிறார்களாம் சிலர்.....
அடுத்த வருடம் அங்கு வரும் போது கண்டிப்பாக உங்கள் மனைவியைப் பார்த்து என்ன மாதிரி பூரிக் கட்டை
ReplyDeleteஉபயோகிக்கிறார்கள் என்று பார்த்து சரியானதாக வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.