Sunday, October 13, 2013


இந்த காலத்தில் தீக்குளிப்பது சீதைகள் அல்ல ராமன்கள்தான் ( மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் )










அன்று
ராமனின் சந்தேகத்தை தீர்க்க
சீதை ஒரே ஒரு தடவைதான்
தீக்குளித்தாள்



ஆனால்
இன்றோ சீதையின் சந்தேகத்தை தீர்க்க
ராமன்கள் தினம் தினம்

தீக்குளிக்க வேண்டியிருக்கிறது.


அன்று
கலைஞர் தலைவராக இருந்து
மக்களுக்காக போராடினார்.
அதே கலைஞர்
இன்று
தகப்பனாக மாறி
தன் குடும்பத்தில் உள்ள
மக்களுக்காக பாடுபடுகிறார்


முன் பின் தெரியாத பெண்களை
அம்மா என்று மரியாதையாக
அழைக்கும் போது
தமிழக முதலைமைச்சரை
அம்மா என்று அழைப்பதில்
என்ன தவறு இருக்கிறது?




அன்று அப்துல்கலாம் சொன்னார்
கனவு காணுங்கள் இந்தியா வல்லரசாகும் என்று
ஆனால் அவர் சொல்ல மறந்தது ஒன்று உண்டு
இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால்

முதலில் நல்லரசாக இருக்க வேண்டும் என்று




அன்புடன்
மதுரைத்தமிழன்












10 comments:

  1. தீக்குளிப்பது ராமன்கள்..... :)

    கலைஞர் - :))))) பாவம் என்ன பண்ணுவார்.....

    ReplyDelete
  2. ஆஹா தீ குளித்த அனுபவம் நிறைய இருக்கும் போல தெரியுதே....

    ReplyDelete
  3. சுருக்கமாகச் சொன்னாலும்
    சொல்லவேண்டியதை அருமையாகச்
    சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
    நீங்கள் சொல்வது சரிதான்
    இப்போது சீதைகள் ராமன்களை
    நம்புவதில்லைதான்-

    ReplyDelete
  4. பின்னே சிதையில் குதித்த சீதையின் சாபம் சும்மா விடுமா ?

    ReplyDelete
  5. ஆனால் அம்மா என்றால் அகம்பாவம் அகங்காரம் ஆணவம் தான்தோன்றித்தனம் போன்ற எதுவுமே இருக்காதே? அதெல்லாம் கவனிச்சீங்களா?

    ReplyDelete
  6. தீ வைப்பது யாருன்னு சொல்லவே இல்லையே.... தலீவா...........

    ReplyDelete
  7. அப்துல் கலாம் சொல்லாமல் விட்டதுதான் நல்லா இருக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.