மெயில் பேக்
2 : படித்த பார்த்த நிகழ்வுகளால் மனதில் தோன்றிய எண்ணங்கள் இங்குக் கிறுக்கல்களாக
அறிவு பசியா
கூகுளில் தேடுங்கள் ... வயிற்றுப் பசியா மனைவியைத் தேடுங்கள்
ஒவ்வொரு கணவனின்
ஆக்ஷனுக்கு பின்னால் மனைவியின் ஓவர் ரியாக்ஷன் ( என் வீட்டில் பூரிக்கட்டை ஆக்ஷன்
)கண்டிப்பாக இருக்கும்
கேம்பிளிங்கை
(gambling) எதிர்க்கும் அரசாங்கமும் மதமும் கல்யாணத்தை ஆதரிப்பது மட்டும் ஏன்?
கட்சி ஆரம்பிப்பதும்
பைனான்ஸ் நிறுவனம் ஆரம்பிப்பதும் ஒன்றுதான். காரணம் இரண்டும் மக்களை ஏமாற்றவே ஆரம்பிக்கப்படுகின்றன.
இந்தியப் பிரதமர்
: உள்நாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க மாநிலம் மாநிலமாகச் செல்லாமல் வெளி நாட்டுப் பிரச்சனைகளை
தீர்க்க நாடு விட்டு நாடு சென்று கொண்டிருப்பவர்
கொடுமையான
நேரம் : நண்பரின் வீட்டில் நமக்குப் பிடிக்காத அல்லது டேஸ்ட் இல்லாத உணவை நமக்குப் பிடித்து
இருப்பதாக நடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
நேரம் தான்
நண்பர்களே
யாரை விரும்புகிறீர்களோ இல்லையோ அல்லது நன்றி சொல்லுகிறீர்களோ இல்லையோ ஆனால் கை,கால்களை
மட்டும் என்றும் மறந்து விடாதீர்கள். காரணம் எந்த பிரச்சனைகள் வந்தாலும் நமக்கிடையில்
இருப்பது கைகள்தான். எந்த நேரத்திலும் நம்மை சப்போர்ட் பண்ணிக் கொண்டிருப்பது கால்கள்தான்
ஆண்கள் பெண்கள்
குழந்தைகள் தூங்கச் சிறந்த இடம் :
குழந்தைகள்
: பள்ளிக் கூடம்
ஆண்கள் : அலுவலகம்
பெண்கள் :
படுக்கை அறை
அன்புடன்
மதுரைத்தமிழன்
நண்பர்கள் வீட்டிலும் சுவையை எதிர்ப்பார்த்தால்... (அங்கும் பூரிக்கட்டை இருக்கும்... ஹிஹி...)
ReplyDeleteசின்ன சின்ன் நொறுக்ஸ் அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
சகோதரருக்கு வணக்கம்
ReplyDeleteஆம் கைகால்கள் தான் நமக்கு துணை. கைகள் பூரிக்கட்டை அடிகளைத் தடுக்க, கால்கள் ஓட்டம் பிடிக்க (அடி ஓவரா பொயிட்டா). நம்ம பிரதமர் தானே ஹி ஹி..
மெயில் பேக்.... ரசித்தேன் மதுரைத் தமிழன்.
ReplyDeleteகொடுமையான நேரம் ஜாக்கிரதை... அதனால் யாரும் எங்க வீட்டுக்கு வரக்கூடாது...!
ReplyDelete