Wednesday, October 23, 2013



அலசி ஆராய்வது மதுரைத்தமிழன்

(செய்திகளும் அதன் பிண்ணணியில் மறைந்து உண்மை இருக்கும் செய்திகளும் )



செய்தி : சீன ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதியில் ஊடுருவல்

மதுரைத்தமிழன்: இந்தியாவில் சீன தொழில் நுட்ப பூங்கா ஆரம்பிக்க ராணுவத்தினர் வந்து இடம் பார்க்கச் சென்று இருப்பார்கள்


செய்தி : பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதிகளில் தாக்கியதில் இந்திய இராணுவத்தினர் பலி

மதுரைத்தமிழன் ; பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களுடன் விளையாட விருப்பம் இல்லாததால் இப்படி ஏற்பாடு பண்ணி இருக்கலாம்

செய்தி : ஊழல் வழக்கில் தண்டனைபெற்று சிறையில் இருக்கும் லாலுவை, இந்தியாவின் உயரிய பதவியில் இருக்கும் பிரணாப் முகர்ஜியின் மகன் சந்தித்தார்

மதுரைத்தமிழன் : எல்லையில் இராணுவத்தினர் இறப்பது வேலையில் நடக்கும்  விபத்து. ஊழல் வழக்கில் சிறைக்கு செல்பவர்கள் தியாகிகள் என்று ஜனாதிபதி மகனுக்கு போதித்து  இருக்கலாம்.

செய்தி : டில்லி சட்டசபையில் தேதிமுக கட்சி போட்டி

மதுரைத்தமிழன் : யாரோ விஜயகாந்திடம் டில்லி சட்டசபையில் ஜெயித்து வந்தால் பிரதமர் பதவி கிடைக்கும் என்று சொல்லி இருப்பார்களோ

செய்தி : பாமகா வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு:  ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ராமதாஸ் அறிவித்துவிட்டார். கட்சியின் முக்கியப் புள்ளிகளான கோ.க.மணி, வேலு, ஏ.கே.மூர்த்தி, சேலம் அருள் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளார் ராமதாஸ்.  ஆர்.கே.ஆர்.அனந்தராமன் என்பவர் புதுச் சேரியில் போட்டியிடுகிறார்.



மதுரைத்தமிழன் :  அரசியல் பவர் ஸ்டாரின் ஜோக்கர் ஆட்டம் ஆரம்பம்


செய்தி :'என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்': ராகுல் திடீர் அலறல்

மதுரைத்தமிழன் : கலைஞர் எழுதி கொடுத்த வசனம் போல இருக்கிறதே?

அன்புடன்
மதுரைத்தமிழன்

23 Oct 2013

8 comments:

  1. ராகுல் பூந்தி இந்த பயத்துலேயே காலி ஆகலாம்.

    ReplyDelete
  2. இந்தியாவுக்காக உயிர் சிந்தியே அந்த வம்சம் அழிஞ்சுடும் போல இருக்கே!

    ReplyDelete
  3. கலைஞரின் கேள்வியும் நானே
    பதிலும் நானே ஐ விட உங்கள் கேள்வி பதில்
    சிறப்பாக இருக்கு
    குறிப்பாக கடைசி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்லாத்தான் அலசி ஆராய்ஞ்சியிருக்கிங்க... எந்த யுனிவர்சிட்டியாவது லொள்ளுக்கு முனைவர் பட்டம் தர்றாங்களான்னு தேடிட்டிருக்கேன்..

    ReplyDelete
  5. கலக்கல் கமெண்ட்ஸ்! நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.