உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 20, 2013

மதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகிறாங்க !மதுரக்காரங்க மிக அப்பாவிங்க எப்படி எல்லாம் ஏமாறுகிறாங்க !

என் மனைவிகூட ஷாப்பிங்க் சென்றேன். வாங்க வேண்டியதை வாங்கி விட்டு பில் போடும் இடம் சென்றோம்.பில் போடும் இடத்தில் அழகான இளம் பெண்னொருத்தி எங்களை பார்த்து Did you find everything you were looking for?  என்று புன்னைகைத்து  கேட்டாள்.
அதற்கு  நான் ஆமாம் எனக்கு தேவையானது எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் உங்களை போல உள்ள ஒரு ஸ்வீட்டான பெண்ணைத் தவிர என்று சொல்ல மனம் துடித்தது ஆனால் பக்கத்தில் நின்ற என் மனைவியை ஒரு முறை பார்த்தேன் அதன் பின் அவள் கையால் கிடைக்கும் பூரிக்கட்டை பூஜையை சற்று நினைத்து பார்த்து ஆமாம் எல்லாம் கிடைத்துவிட்டது என்று சொன்னேன்.

இன்னொரு முறை எனக்கு மிக நல்ல வாய்ப்பு வந்தது.


என் மனைவி குழந்தையை அழைத்து கொண்டு அவளது தங்கை வீட்டிற்கு சென்று இருந்த நேரம் அது. காலையில் சாப்பிட ஏதும் இல்லாததால் கடைக்கு சென்று ப்ரெட் பழம் வாங்க் சென்றேன். வேண்டியதை வாங்கி கொண்டு பில் போடும் இடம் வந்தேன். பில் போடும் இடத்தில் அழகான இளம் பெண்னொருத்தி என்னைப் பார்த்து Did you find everything you were looking for?  என்று புன்னைகைத்து  கேட்டாள். அந்த ஸ்வீட்டான வாய்ஸை கேட்டவுடன் என் உடலில் உள்ள ஹார்மோன் மிக அதிகமாக வேலை செய்ததது. அதனால் நான் ஆமாம் எனக்கு தேவையானது எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டேன் ஒன்றை தவிர என்று சொன்னேன். அதற்கு அவள் அது என்ன சொல்லுங்கள் நான் உங்களுக்காக கண்டுபிடித்து தருகிறேன் என்று சொன்னாள்.


நான் அவளிடம் கொஞ்சம் வழிந்தவாரே உங்களை போல உள்ள அழகான பெண்ணைத்தான் தேடுகிறேன் என்றேன் அதற்கு அவளோ நோ ப்ராப்ளம் நான் உங்களுக்கு கண்டுபிடித்து இன்று மாலைக்குள் சொல்லுகிறேன் உங்கள் போனை நம்பரைத்தாருங்கள் என்றாள்

நானும் எனது நம்பரைத் தந்தேன். அதன் பின் வீட்டிற்கு வந்து சாப்பிடக்கூட இல்லாமல் கனவில் மிதந்தேன். கனவில் மிதந்த நேரம் எனக்கு போன் வந்தது. அந்த பெண்தான் போன் பண்ணினாள். நாம் ஈவினிங்க் சந்திப்போமா? உங்களுக்கான பெண்ணை கண்டுபிடித்து விட்டேன் என்றாள் நானும் சம்மதித்தேன்


அதன் பின் என் மனம் என்னச் சிறகில் பறக்க ஆரம்பித்தன... வண்ண வண்ண கனவுகள்... வந்து அலை மோதின.....மனத்தில் ஒரு இனம் புரியாத ஒரு பட படப்பு.......பட்டாம் பூச்சி போல பரக்க ஆரம்பித்தேன்அதன் பின் மாலை நேர சந்திப்பிற்காக தயாராகத் தொடங்கினேன். உடனே சலூன் சென்று முடி கட் மற்றும் நெயில் கட் பண்ணினேன்.  அதன் பின் பெர்ஃப்யூம் கடைக்கு சென்று மிக காஸ்ட்லியான செண்டை வாங்கினேன். (இல்லை என்றால் இந்தியன் மசாலா வாடை அடிக்குமே )அதன் பின் இருக்கிற கோட் சூட்டில் மிக நல்லது ஒன்றை அணிந்து கொண்டு போகும் வழியில் மலர் கொத்து ஒன்றை வாங்கி கொண்டு அந்த பெண்ணை சந்திக்க காத்து இருக்கத் தொடங்கினேன்

 மீண்டும் என் மனம் என்னச் சிறகில் பறக்க ஆரம்பித்தன... வண்ண வண்ண கனவுகள்... வந்து அலை மோதின.....மனத்தில் ஒரு இனம் புரியாத ஒரு பட படப்பு.......பட்டாம் பூச்சி போல பரக்க ஆரம்பித்தேன்.


நான் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்தது. அந்த பெண் சிரித்தவாறே காரை டிரைவ் செய்து வந்தாள். என் அருகில் வந்து நின்றதும் ஹாய் என்று சொன்னாவாறே நீங்க ரொம்ப ஹேண்ட்சம்மாக இருக்கிறீர்கள் என்று சொன்னாள். அதை கேட்ட நான் சொர்கத்தில் பறக்க ஆரம்பித்தேன். அதன் பின் அவள் சொன்னாள் நீங்கள் கேட்ட பெண்ணை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்லியவாறு காரின் கதவை திறந்து, உள்ளே உட்கார்ந்து இருக்கும் ஒரு மிக வயதான அழகான பெண்னை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்து நீங்கள் தேடிய பெண் இவர்தான் இவருடன் உங்கள் மாலை நேரத்தை கழியுங்கள். நான் இரவு வந்து இதே இடத்தில் வந்து பிக்கப் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி பறந்துவிட்டாள்..

அதன் பின் என் மாலை நேரம் எப்படி கழிந்து இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?

இப்ப எல்லாம் ஷாப்பிங் சென்றால் யாரவது Did you find everything you were looking for? என்று கேட்டாள் தமிழ் படத்தில் வரும் வில்லன் போல ஒரு முரைப்பு முரைத்து செல்கிறேன். அவர்களுக்கும் இவன் எதுக்கு இப்படி முறைக்கிறான் என்று தெரியாமல் முழிக்கிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்21 comments :

 1. இது தான் "மதுரைக்கு வந்த சோதனை" என்றார்களோ...?

  ReplyDelete
  Replies
  1. நகைச்சுவையான நல்ல பதில். எனது அடுத்த பதிவுக்கும் தலைப்பு கிடைத்துவிட்டது கூடிய சீக்கிரம் இந்த தலைப்பை வைத்து பதிவு இடுகிறேன்

   Delete
 2. செமயா பல்பு வாங்கினதுக்கு என்ன ஒரு பில்டப்பு....

  உங்க வீட்டு அம்மணியிடம் மாட்டி விடலையே அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கங்க....

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சந்தோஷம்தான் மாட்டி இருந்தா இப்படி பதிவு இட முடியுமா?

   Delete
 3. ஆமாமா! மதுரைக்காரங்க ஏமாளிகள் தான்!!!!!

  ReplyDelete
  Replies
  1. பாசத்திற்க்காக ஏமாறும் ஏமாளிங்க

   Delete
 4. ஆக மொத்தம் பாட்டியோட ஈவினிங் பார்ட்டியா!? ரைட்டு

  ReplyDelete
  Replies
  1. நான் ஏமாளிதாங்க ஆனா வடிகட்டன ஏமாளி இல்ல்லிங்க அதனால அந்த பாட்டியை அழகான ஹோட்டலுக்கு கூட்டிப் போய் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துட்டு நான் அப்படியே எஸ்கேப்புங்க ஹீ.ஹீ

   Delete
 5. ha..ha... நான் இதை இப்பத்தான் படிச்சேன். மிசஸ் மதுரையிடம் கொஞ்சம் பேசனுமே...? ரொம்ப நாளாச்சு பைட் ஸீன் எல்லாம் பார்த்து...!

  ReplyDelete
  Replies
  1. இப்ப எல்லாம் நாங்க பைட்டே பண்ணுவதில்லைங்க காரணம் போனதடவை நடந்த பைட்டில் அவர்கள் பூரிக்கட்டடையால் அடித்த அடியில் இருந்து ரெக்கவர் ஆக பல மாதங்களுக்கு மேல் ஆகும் என்று டாக்டர் சொல்லிவிட்டாருங்க.....

   Delete
 6. மதுரைக்கு நல்லா வேண்டும்...!!!

  நான் அந்தப் பெண்ணாக இருந்திருந்தால்
  பூரிக்கட்டையுடன் உங்கள் மனைவியைக் கொண்டு வந்து இறக்கி இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. அம்மா தாயே நீங்க ப்ரென்ஸில் தானே இருக்குறீங்க அங்கேயே இருங்கம்மா தப்பி தவறி அமெரிக்கா பக்கம் வந்துராதிங்க...ஏதோ இந்த அப்பாவி தமிழனுக்காக இரக்கப்படுவீங்கன்னு பார்த்தா இப்படி கொலைவெறியோடு அலைகீறீர்களே

   Delete
 7. மதுரை தமிழனுக்கு கதை கூட நல்ல எழுத வருதே!

  ReplyDelete
  Replies
  1. தமிழனுக்கு கதைவுட தெரியாதா என்ன?

   Delete
 8. நல்ல வேளை உங்க மனைவியை கூட்டி வந்து விடாம போனாங்களே! பூரிக்கட்டை பூஜை கிடைக்காம போனதுக்கு சந்தோஷப்படுங்க!

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டை பூஜை அடிக்கடி நடக்கும் ஆனால் சிறப்பு பூஜையில் இருந்து தப்பித்துவிட்டேன் எல்லாம் நான் போன ஜென்மத்தில் செஞ்ச புண்ணியம்தான்

   Delete
 9. நல்ல வேளை ஒரு எச்சரிக்கைப்
  பதிவினைப் போட்டு மீதி
  அப்பாவி மதுரைக்காரர்களைக் காப்பாற்றினீர்கள்
  சுவாரஸ்யமான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நான் அந்த நாளில் பட்ட கஷ்டம் மற்ற மதுரைக்காரர்களும் படக்க கூடாது என்று நல்ல எண்ணைம்தான் இந்த பதிவு

   Delete
 10. jollu partikalukku ithu oru nalla paadam okeyyaa

  ReplyDelete
 11. என்ன சார்... எப்ப பார்த்தாலும் பூரிகட்டை. அமெரிக்காவில் உலக்கை பாவிக்ககூடாது என்று சட்டமா?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog