Monday, May 4, 2020

 
தேவைகள் மாறும் போது விசுவாசமும் மாறுகின்றதா?


பலர் தங்கள் தலைவர்கள்மீது  தங்கள் அலுவலக அதிகாரிகள் மீது  மிகுந்த விசுவாசத்துடன் இருக்கிறார்கள். அதனால்  பல விஷயங்களில்  அந்த தலைவர்கள் அதிகாரிகள்  செய்வது சொல்லுவது  மிகத்  தவறாக இருந்த போதிலும் முட்டுக் கொடுக்கிறார்கள் அப்படி முட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்கின்றனர்... இது எல்லாம் உண்மையான விசுவாசம் இல்லை , காரணம்  அவர்களின் தேவைகளுக்காகவே அவர்கள் இப்படி விசுவாசமாக இருக்கிறார், அவர்களின் தேவைகள் எப்போது மாறுகிறதோ அப்போதே அவர்களின் விசுவாசமும் மாறுகிறது


இப்போது உள்ள ஆட்சியில் உள்ள அதிமுக அமைச்சர்கள் ஒரு காலத்தில் ஜெயலலிதா மீது எவ்வளவு விசுவாசமாக இருந்தார்கள் என்பது உலகமே அறியும் ஆனால் அந்த விசுவாசம் உண்மையானதா என்று பார்த்தால் சிறு பிள்ளைகள் கூடச் சொல்லும் அது ஒரு வேஷம் என்று காரணம் அந்த அமைச்சர்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே இப்படி விசுவாசம் என்ற வேஷம் தரித்து இருக்கிறார்கள்.அந்த அமைச்சர்களின் விசுவாசம் உண்மையாக இருந்திருந்தால் ஜெயலலிதா இன்னும் ஆட்சி செய்து கொண்டிருப்பார்

இவர்களை மட்டும் இப்படிச் சுட்டிக் காட்டவில்லை இது போலத்தான் அநேகம் பேர்கள் இருக்கின்றார்கள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் மோடியை எதிர்த்தனர்.. அப்படி எதிர்த்த பலர் இன்று தங்கள் சுய தேவைகளைப் பூர்த்தி செய்ய மோடியின் மீது விசுவமாக இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றார்கள் அது போலத்தான் மோடியும் ஒரு காலத்தில் அத்வானி மீது எவ்வளவு விசுவாசமாக இருந்தார் என்று உலகறியும் இப்போது அந்த விசுவாசம் எங்கே சென்றது என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். தற்போதைய திமுக தலைவர் கலைஞர் மீதும் கட்சியின் மீதும் விசுவாசமாக இருந்ததும் தலைவர் பதவியை கைப்பற்றத்தான்

இந்த பதிவைப் படிக்கும் பலர் அரசுத் துறையில் உயர் அதிகாரியாகவோ அல்லது பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய அதிகாரியாகவோ இருந்து இருக்கலாம் ஆனால் உங்களிடம் விசுவாசமாக இருந்த பலர் நீங்கள் ரிட்டையர்மென்ட் ஆன பிறகு அதே விசுவாசத்துடன் இருப்பதில்லைதானே

இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கி தரும் வரைதான் காந்தியின் மீது விசுவாசம் இருந்தது வாங்கி தந்த பின் அது மாறி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் இப்போது மோடியின் மீது விசுவாசத்தைக் காட்டுபவர்கள் அதற்கான பலனை அடைந்த பிறகு அவரும் கைவிடப்படுவார்,,,

ஏன் தாய் தந்தையர் மீது விசுவாசம் காட்டும் பலர் ஒரு வேலை கிடைத்துவிட்டாலோ அல்லது திருமணம் ஆகிவிட்டாளோ அவர்கள் மீது வைத்துள்ள விசுவாத்தையும் மாற்றிக் கொள்கிறார்கள்தானே ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அதன் பின்னும் விசுவாசம் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் மிருந்து நிறைவேற வேண்டிய தேஅவைகள் இன்னும் இருக்கிறது என்பதான் அர்த்தம்

அதனால்தான் சொல்கிறேன் தேவைகள் எப்போது மாறுகிறதோ அப்போதே  விசுவாசமும் மாறுகிறது



தமிழ் ஊடக பேச்சு நிகழ்ச்சியின் போது மக்கள் விவாதிக்கிறார்களா அல்லது வாதிக்கிறார்களா?


சில நொடி கொரோனா கால சிந்தனைகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. காலத்திற்கேற்ற கோலம் மதுர...

    ReplyDelete
  2. பச்சோத்திதனமும் கொண்ட மனிதர்கள்...

    ReplyDelete
  3. படிக்கக் கசந்தாலும் ..முழு உண்மை

    ReplyDelete
  4. இப்போது தேவை தொற்றிலிருந்து தப்புவதாகத்தான் இருக்க வேண்டும்அரசியல் விசுவாசங்களல்ல

    ReplyDelete
  5. இதெல்லாம் பொதுமனித குணங்கள் ட்ரூத் .சில விஷயங்கள் யோசிச்சா அட இவ்வளவு முட்டாளா இருந்திருக்கோமேன்னு தோன்றும் ..எதிர்பார்ப்பில்லாமல் இருந்தா எல்லாத்துக்கும் நல்லது .நீங்கள் இன்னுமா மனிதர்களை புரிஞ்சிக்கலை ட்ரூத் .பலர்  opportunist  தான் கேவலமான சந்தர்ப்பவாதிகள் இருக்காங்க ஆனா யாரையும் குற்றம் சொல்ல முடியாது இது தான் ஹியூமன் நேச்சர் .தேவைகள் மாறும்போது விசுவாசம் மட்டுமில்லை மனிதனே முழுதும்  மாறுவான்  ..வர வர ஞானி ரேஞ்சுக்கு யோசிக்கறீங்க :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.