உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 16, 2017

ஆண்டுக்கு லட்சகணக்கிற்கு மேல் வேலை இழப்பு ஏறபட போகும் இந்திய IT துறை....அதிர வைக்கும் செய்தி

@avargal_unmaigal
ஆண்டுக்கு லட்சகணக்கிற்கு மேல் வேலை இழப்பு ஏறபட போகும் இந்திய IT துறை....அதிர வைக்கும் செய்தி

இந்திய IT துறையை தாக்கப் போகும் சுனாமி


அமெரிக்கா ,சிங்கப்பூர் ஆஸ்திரேலியா  மற்றும் யூரோப் போன்ற மேலைநாடுகளில் வெளிநாட்டினர்க்கான வேலை வாய்ப்பை குறைப்பதாலும் மேலும் மிக முக்கியமாக இந்தியாவில் புதிய தொழில் நுட்பங்களை பலரும் கற்று கொள்ளாததாலும் இந்தியாவில் வரும் ஆண்டுகளில்  ஆண்டுக்கு 1.75 லட்சம் முதல் 2 லட்ச அளவிற்கும் ஆன ஆட்கள்  IT துறையில் வேலை இழக்க போவதாக இந்தியாவில் உள்ள  Executive search firm Head Hunters India வின் மேனேஜிங்க் டைரக்டர் கே.லட்சுமிகாந்த நேற்று PTI செய்தி நிறுவனத்தினரிடம் பேட்டி அளித்து இருக்கிறார்.


ஊடக அறிக்கைகள் இந்த ஆண்டு 56,000 ஐ.டி. தொழில் வல்லுனர் வேலைகள் இழக்க 6,000  போவதாக முரண்பாடாக செய்திகள் வெளியிடுகின்றன என்றும் சொல்லிய அவர்  மெக்கின்சே & கம்பெனி  , நாஸ்காம் இந்தியாவிற்கு  ( Nasscom India Leadership Forum ) பிப்ரவரி 17 ம் தேதி சமர்ப்பித்த அறிக்கையை சிபிஐ மற்றும் பி.ஐ.டி. யை நிறுவனத்திற்கு சுட்டி காட்டி அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.75 லட்சம் மற்றும் ஆண்டுக்கு இரண்டு லட்சம் வரை  ஆட்குறைப்பு ஐடி துறையில் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க போன்ற மேலைநாடுகள் வெளிநாட்டினர்க்கான வேலை வாய்ப்பை குறைப்பதால் அல்ல என்றும்  இந்தியாவில் புதிய தொழில் நுட்பங்களை பலரும் கற்று கொள்ளாததால் ஏற்படுகின்றது  என்று தெளிவு படுத்தி இருக்கிறார்.

இந்த வேலை குறைப்பில் யார் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் என்று பார்த்தால் அதிக அனுபவம் கொண்ட 40 வயதிற்கும் மேல் உள்ள லட்சகணக்கில் மாத சம்பளம் வாங்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் காரணம் அதே வேலையை இன்றைய இளைஞர்கள் மிக குறைந்த ஊதியத்தில் செய்ய ரெடியாக இருப்பதுதான்.

அடுத்தாக பாதிக்கப்படுபவர்கள்  வேலையில் இருந்து கொண்டு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களை சொல்லாம். இந்த வேலை குறைப்பால் மும்பை மற்றும் பெங்களுர்  இரண்டு நகரங்களில் உள்ள கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் மற்ற சிறு நகரங்களில் அதிக அளவு பாதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது ..

இந்திய ஜாப் மார்க்கெட்டில்  தகவல் தொழில்நுட்பத்துறையின் புதிய பிரிவுகளுக்கு ஆட்கள் இல்லை அதனால் ஐடி வேலையில் இருப்பவர்கள் இன்னும் பழைய மாவையே அரைத்து கொண்டிருக்காமல் காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை  விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கல்லூரிகளும் இன்னும் ஜாவா சி  சி++ என்று இன்னும் பழைய சரக்கையையே சொல்லிக் கொடுக்காமல் காலத்திற்கேற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் இல்லையென்றால் கல்லூரிகளில் சில ஆர்சியர்கலை தேர்ந்தெடுத்து அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியோ அல்லது வெளிநாட்டு ஆசிரியர்களை அழைத்து இந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இதை கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும் மேலும் அரசும் இதற்கு உதவலாம் மேலும்  இந்திய  மற்றும் மாநில  கல்வி அதிகாரிகள் கல்லூர்களின் பாடத்திட்டங்களை காலதிற்கேற்ப விரைவாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் இதைசெயல்படுத்தாத கல்லூரியின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்

இதை எல்லாம் மிக அவசரவேகத்தில் செய்து முடிக்க வேண்டும். அதுமட்டடுமல்லாமல் தரமற்ற எஞ்சினியரிங்க கல்லூரிகளை  தடை செய்யவேண்டும் இதனால் பெரும்பாலான ஏழைகள் ஏமாறுவதில் இருந்து தடுக்கப்படும்


2008 ல் ஏற்பட்ட  பொருளாதார சரிவின் போது அப்போது நம்மை ஆண்ட பொருளாதார நிபுணர் ஆன மன்மோகன்சிங்க எடுத்த நடவடிக்கைகளினால் அதன் பின் வந்த ஆண்டுகளில் ஐடி துறையில்  நல்ல வளர்ச்சி இருந்தது அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது நாட்டை ஆள்வது பொருளாதார நிபணர் அல்ல குஜராத்தை சார்ந்த ஒரு சேல்ஸ்மேன்தான் அதனால் சேல்ஸ்மென் போல கையில பை வாயில பொய் என்று ஃபேக் fake GDP டேட்டாவை கொடுத்து நாடு வளர்ந்துவிட்டது என்று சொல்லாமல்  செயல்படவேண்டும் அதுமட்டுமல்லாமல் DIGITAL INDIA START UP INDIA STAND UP INDIA  என்று சொல்லி டிராமா பண்ணாமலும் இருக்க வேண்டும்

இந்த செய்தியை மிக எளிதாக எடுத்து கொள்ளாமல் மோடி அரசு  அவசரகால நடவடிக்கையை எடுக்கவேண்டும் இல்லையென்றால் பல உயிர் இழப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரம் பெருத்த ஆட்டம் காண வேண்டி இருக்கும்...

மோடியின் அடுத்த இரண்டு கால ஆட்சி மிக சோதனைக்குள்ளாகப் போகிறது அதில் இருந்து அவர் மீள்வாரா அல்லது அதிலே புதைந்து போவாரா காலம்தான் இதற்கு பதில் சொல்லும்


டிஸ்கி : இந்த மாதிரி செய்திகளை நம் ஊடகங்கள் விவாத பொருளாக எடுத்து பேசி அலசாமல் ரஜினி அரசியலுக்கு வருவாரா? எட்ப்பாடி ஒபிஎஸ் ஒன்று சேர வாய்ப்பு உண்டா  என்று அலசுவதனால் ஒரு மயிருக்கும் பிரயோஜனமில்லை


பல நாடுகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கதவை அடைக்கும் வேளையில் ஒரு நாடு இப்போது திற்மையானவர்களுக்கு தன் கதவை திற்ந்து வைத்துள்ளது. அது பற்றிய பதிவு அடுத்த சில தினங்களில்..... படிக்க ம்றந்துவிட வேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. டிஸ்கி ஸூப்பர் தமிழரே...

  ReplyDelete
 2. மதுரை சகோ நல்ல பதிவு. இதில் தொழிலில் உள்ளவர்கள் மட்டும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், 40 வயதுக்குள்ளாவர்களை நீக்கி இளைஞர்கள் குறைவான சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்வதால் 40 ஆனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதன் அடித்தளம் எங்கு தொடங்குகிறது என்றால் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகள். தனியார்க்கல்லூரிகள் தான் அதிகம் என்பதும் தெரிந்ததே அதுவும் பினாமிக்கள். அங்கு பேராசிரியர் ஒருவர் 30 வாங்குகிறார் என்று வையுங்கள் அனுபவத்தினால்....ஃப்ரெஷர்ஸ் அப்லை செய்தால் அவர்களுக்கு 10 ஆயிரத்திற்குள் சம்பளம் கொடுத்தால் போதும் என்று அவர்களைத்தான் எடுத்துக் கொண்டு அனுபவஸ்தர்களை நீக்கி விடுகிறார்கள். அனுபவஸ்தர்களுக்குச் சுதந்திரம் இல்லை தங்களை அப்டுடேட்டாக வைத்திருக்கும் ப்ரொஃபசர்கள் மாணவர்களுக்கு நல்ல கைடன்ஸ் கொடுக்கலாம் என்றால் வழியில்லை. ரிஸல்ட் தான் முக்கியம். பாசாகும் மாணவர்கள் தான் முக்கியம் அதற்கு என்னவெல்லாம் நடக்கிறது என்று நிறையவே தெரியும். அப்படி ஆசிரியர்கள் கற்பிப்பதில் தங்களை அப்டுடேட்டாக இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பதும் மாணவர்களும் தங்களை முன்னேற்றிக் கொள்ள நினைக்காமல் அடிப்படை கூடத் தெரியாமல் வெளியில் வருவதும் அதிகம். அப்போது எப்படி நல்ல வேலை கிடைக்கும்? அடுத்த கட்டம் நீங்கள் சொல்லியிருபப்து. நம்மூரில் கற்று வாமிட் பண்ணுவதுதான் தேர்வு. டிகிரி. பேப்பர்கள் பப்ளிஸ் பண்ணுவது என்படு க்காப்பி பேஸ்ட்..எத்தனை ப்ளெக்கேரிசம் கண்டுபிடிக்கபடுகிறது தெரியுமா....உங்கள் ஊரில் பேராசிரியய்ர் என்றால் மினிமம் பி எச் டி பெற்றிருக்க வேண்டும்.

  இங்கு பி எச் டி என்பது சர்வ சாதாரணம். கோயம்பேடு மார்க்கெட் போல. நல்ல தரமான பேப்பர்கள் வெளிவருவது மிகவும் குறைவு. ஏனென்றால் அதற்கான சூழ்நிலை கிடையாது. எனக்குத் தெரிந்து பெண்கள் எம்ஃபில்/பிஎச்டி பண்ணுவதற்கே பேப்பர் சப்மிட்பண்ண கைட் மிகவும் நலல்வராக இருந்துவிட்டால் நல்லது பிழைத்தார்கள் இல்லை என்றால் வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது. பள்ளிக் கல்வியே சரியில்லாமல் இருக்கும் போது நீங்கள் சொல்லியிருப்பதை எல்லாம் எங்கே எதிர்பார்க்க முடியும்? இப்போது மாணவர்கள் யாரும் கல்லூரியில் கற்றுக் கொடுத்தலுக்கு வருவது கிடையாது. ஆர்வம் இல்லை. மட்டுமல்ல இங்கு கல்வி என்பதே மனனம் செய்வது என்றாகி....யதார்த்ததக் கல்வியாக...வளரும் சுழுஅலுக்கு ஏற்ற கல்வியாக கற்றல் என்பது இல்லாமல் ஆகியிருக்கும் போது என்ன சொல்ல

  நல்ல கற்றல் பண்பு இருந்திருந்தால் இன்று நம் நாடு நல்ல வளர்ச்சி அடைந்திருக்குமே சகோ...இது பற்றி நிறைய சொல்லலாம்...பின்னூட்டம் என்பதால் இதுவே அதிகம் தான் இல்லை யா..!!!?..

  கீதா

  ReplyDelete
 3. டிஸ்கி....சூப்பர்...ஆம் அதுதான் ந்டக்கிறது.

  கீதா

  ReplyDelete
 4. நீங்கள் சொல்லும் விஷயங்கள், செய்தித்தாள்களில் பல மாதங்களாகவே அடிபட்டு வருகின்றன. சென்ற ஆண்டே இதன் விளைவு தெரிந்தது. எஞ்சினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் அதற்கு முந்தைய ஆண்டைவிட பதினைந்து சதம் அளவுக்குக் குறைந்துபோனது. அத்துடன் கம்பியூட்டர் சயின்ஸ் படிப்புக்கு பலரும் முழுக்கு போட்டுவிட்டனர். சென்ற ஆண்டு கொடுத்த offer letterகளின்படி அறுபதாயிரம் பேருக்கு இன்னும் அக்கம்பெனிகள் வேலை தரவில்லை. (syntel, polaris, infosys போன்றவை.) எனவே, இந்த ஆண்டும் எஞ்சினியரிங் படிப்புக்கு மேலும் மவுசு குறையும் என்று தெரிகிறது. இதெல்லாம் எதிர்காலத்துக்கு ஏற்ற நடவடிக்கைகள்.

  (2) ஆனால், நடுத்தர வயதில் இருக்கும், ஐடி பணிகளை இழக்கும், வேலையாட்களை எப்படி வேறு பணிகளுக்கு அமர்த்தப்போகிறோம் என்பது மிகப்பெரிய பிரச்சினைதான். அதே சமயம் இது ஒன்றும் புதிதல்ல. 2006 முதல் 2009 வரை இதேபோன்ற slump ஏற்பட்டது. பெங்களூரில், கணவன்-மனைவி இருவரும் ஐடி யில் அப்போது இருந்தால், இருவரில் ஒருவருக்கு வேலை போய்விட்டது. வங்கியில் இருந்ததால் இது எனக்கு நனராகத் தெரியும். வீட்டுக்கடன் கட்டமுடியாமல் பல கடன்கள் NPA ஆயின. ஆனால் படிப்படியாக அந்த நிலையில் இருந்து அவர்கள் மீண்டுவந்துவிட்டார்கள்.

  (3) அதேபோல், இன்றுமுதல் அடுத்த மூன்றாண்டுகள் இதே slump நீடிக்கலாம். ஆனால், அமெரிக்க போன்ற நாடுகளில் ஒரு மாதம் வேலை இல்லையென்றாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. இந்தியாவில் அந்த நிலைமை இல்லை. பெற்றோர்கள், குடும்பம் எனற அமைப்பும், மிகப்பெரும் ஜனத்தொகைக்கான வளர்ந்துவரும் தேவைகளால் புதிய வேலை வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும் என்பதாலும், கீழே விழுபவர்களைத் தாங்கிக்கொள்ளும் நிலைமை உண்டு. ஒரு பத்து சதம் அளவுக்கு பெரும் பாதிப்பை அடைபவர்கள் இருக்கலாம்.

  (4) என்னைப் பொறுத்தவரை, manufacturing industries பெருகினால் unskilled ஆட்களுக்கு வேலை பெருகும். ஆனால், online விற்பனைகள் உரிய வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும். மீண்டும் கடைகளுக்குச் சென்று மக்கள் வாங்கும் நிலை பெருகவேண்டும். அது ஒன்றே இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்புக்கு ஒரே வழி.
  (5) இந்தியாவின் ஐ டி -யைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும், இரண்டு மடங்கு உழைப்பைத் தந்துகொண்டிருக்கிறார்கள். பத்து மணிக்குப் போய் ஐந்து மணிக்கு வரும் வேலைகள் இந்தியாவில் இல்லை. எனவே அதில் ஒரு மடங்கு இழந்தாலும், அவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகாது. சம்பளமும் குறையாது. ஏற்கெனவே சேர்த்துவைத்த லாபத்தால் இன்னும் மூன்றாண்டு காலமாவது அவர்கள் சுகமாக வாழமுடியும். நிகழ்கால லாபம்தான் குறையும்.
  (6) உள்நாட்டு ஐ டி சேவைகளில் பெரிய ஐ டி நிறுவனங்கள் கவனம் செலுத்தாமல் இருந்தார்கள். எங்களுக்கு இந்திய அரசின் வேலைகள் வேண்டாம் என்று திமிராக என் ஆர் நாராயணமூர்த்தி போன்றவர்கள் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார்கள் ஒருகாலத்தில். இப்போது அந்த arrogance போய்விட்டது. சிறிய அரசு வேலைகளுக்கும் top 10 நிறுவனங்கள் டெண்டர் கொடுகிறார்கள். இது நல்ல ஆரம்பமே.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

  ReplyDelete
 5. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுபோல் ஐடி வேலைக்காரர்களும் செய்ய நேரிடுமோ என்னும் அச்சம் இருக்கிறது

  ReplyDelete
 6. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog