உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 18, 2015

நடிகர் சங்க தேர்தல் பற்றிய கலாய்ப்பு செய்திகள்நடிகர் சங்க தேர்தல் பற்றிய கலாய்ப்பு  செய்திகள்

வோட்டு போட வந்த பல திரைப்பட நடிகைகள் பலருக்கு ஒட்டுப் போட அனுமதி அளிக்கவில்லையாம் காரணம் அவர்கள் மேக்கப் போடாமல் வந்ததால் அடையாளம் தெரியாமல் திருப்பி அனுப்பட்டதாகவும் அவர்கள் மேக்கப் போட்டு திரும்பி வருவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


நடிகர் சங்கத்தினருடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தலில் போட்டியிட கலைஞர் விருப்பம். வந்தால் அவர்களை வரவேற்பேன் அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு கொடுக்க முயற்சி செய்வோம்

அரசியலில் குதித்து தலைவராக வர ஆசைப்படும் விஜய் நடிகர் சங்க தேர்தலில் குதித்து தலைவராகி அதில் உள்ள நடிகர்களுக்கு சேவை செய்து அதன் பின் பொதுமக்களுக்கு சேவை செய்ய வரலாமே? அதை ஏன் அவர் செய்யவில்லை. 3000 பேருக்கு சேவை செய்ய மனது இல்லாதவர்தான் பல கோடி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று சொல்கிறார்.

ரஜினி தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர்கள் சங்கம் என மாற்றம் செய்யவேண்டும் என்றும்  கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என்று சொல்லும் போது நம்ம காமெடி நடிகர் அதெல்லாம் வேண்டாம் அது நடிகர் சங்கமாக இருந்தால் போதும் என்று சொன்னது இந்த பெரிய நடிகர்களின் செவிட்டில் அறைந்தது போலத்தான் இருக்கிறது

நடிகர் சங்க தேர்தலில் ஸ்டாலின் வோட்டு போட்டாறா? காரணம் அவரும் ஒரு சிறந்த நடிகர்தானே (குறிஞ்சி என்ற படத்திலும் நமக்கு நாமே என்ற படத்திலும் நடித்து கொண்டிருப்பவர்தானே )

நடிகர் சங்கத்தில் வோட்டு போட நடிக்க தெரிந்த நடிகராக இருக்க வேண்டும் என்பதுதான் தகுதி என்று கொண்டு வந்தால்  விஜய் மாதிரி ஆட்களுக்கு வோட்டு உரிமை இல்லாமல் போய்விடும்

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளால் நாளை முதல் தமிழகம் மறுமலர்ச்சி அடையும் என நம்புவோம்....என்ன நான் சொல்லுறது

வெள்ளிதிரையில் மட்டுமல்ல "வலைதளங்களிலும் ,பேஸ்புக்கிலும் நல்லவர்கள் போல நடிப்பவர்களுக்கும்" நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக வாய்ப்புக்கள் தர வேண்டும்

ராதா ரவி தூற்றிய பரதேசி நாய்கள்வெற்றி பெற்றுவிட்டதாமே

நடிகர் சங்க தேர்தல் முடிஞ்சி போச்சு நமக்கு நாமே பூஸ்வாணமாக போய்விட்டது இனிமே எதை பற்றி நாங்க பதிவு போடுவோம் அதனால  சீக்கிரம் 20 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழிங்க....அல்லது  மாட்டை படம் வரைந்தற்காக  மாணவனை அடித்து கொல்லுங்க.....போராளிகளுக்கு செய்தி போட உதவுங்க

சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அணியினரிடம் சங்கத்தின் பெயரை 'அகில உலக இந்திய தமிழ் நடிகர்கள் சங்கம்' என்ற பெயராக மாற்றி அமைக்க வேண்டுகிறேன்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் அம்மா ஜெயலலிதாவிற்கு நன்றி என்று சொன்னதன் மூலம் அம்மாவிற்குதான் தங்கள் ஆதரவு என்று சொல்லி கலைஞருக்கு எங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள்

வருமான வரி ஒழுங்காக கட்டிய நடிகர்கள் நடிகைகள் மட்டுந்தான் உறுப்பினர்களாக இருக்க முடியும் என்று நடிகர் சங்கம் அறிவிக்க வேண்டும்அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. ரசித்தேன். இவற்றில் சிலவற்றை முகநூலில் படித்தேனே..பேராளியா போராளியா?

  ReplyDelete
  Replies
  1. போராளிதான் .தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

   Delete
 2. ஆக, கடைசி ரெண்டு வரிகளில் சங்கத்தைக் கலைக்க மறைமுக ஆலோசனை தந்துவிட்டீர்கள்.
  இதன் மூலம் நீங்கள் (ஆதரவு தரப்பட்ட அம்மாவின் எதிரி, அல்லது) கலைஞரின் கையாள் என்பது தெரிந்துவிட்டது. கண்டுபுடிச்சுட்டம்ல..எப்புடீ?

  ReplyDelete
 3. ஸ்டாலின் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  ஓட்டு போடவும் வரல, ஷீட்டிங்கையும் கேன்சல் பண்ணல.
  (நமக்கு நாமே).

  இது நான் படிச்சது.

  ReplyDelete
 4. என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் ‘’மாப்ளே’ என்று சரத் குமாரும் ‘’மாமா’’ என்று விஷாலும் கட்டிக் கொள்ளத்தான் போகிறார்கள். இந்த சினிமாக்காரங்க நடிப்பால் (தேர்தலால்) நம்ம மக்கள் பருப்பு விலை, வெங்காய விலை பற்றியேல்லாம் நினைக்கவே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க சார்! இந்த விஷயம் எல்லாம் கூட கவனிச்சு இருக்கீங்களே

   Delete
 5. ஹாஹா... செம கலக்கல். இந்த தேர்தலை வச்சே நாள் பூரா ஓட்டிடுச்சே நம்ம ஊர் ஊடகங்கள்...

  ReplyDelete
 6. MT
  "சங்க தேர்தல் முடிஞ்சி போச்சு நமக்கு நாமே பூஸ்வாணமாக போய்விட்டது இனிமே எதை பற்றி நாங்க பதிவு போடுவோம் அதனால சீக்கிரம் 20 பேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழிங்க....அல்லது மாட்டை படம் வரைந்தற்காக மாணவனை அடித்து"

  Just for you to have a blog post you wanted these things to happen? Although you wrote it sarcastically, I won't even think like these to happen even to my worst enemies.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு என்று தளம் இருப்பதால் நான் என்ன வேண்டுமானலும் எழுதுவேன் என்று எழுதவில்லை. என்னால் இப்படிதான் நம் சமுகத்தை இடித்துரைத்து எழுத முடிகிறது... ஒரு பிரச்சனை என்றால் எல்லோரும் சேர்ந்து கூக்குரல் இடுவது அதன் பின் இன்னொரு பிரச்சனை வந்தவுடன் அதை மறந்து விடுவது இப்படியாகத்தான் நம் சமுகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் கூக்குரல் இட்ட பிரச்சனையை அடியோடு வேரு அறுத்து போட முயற்சி செய்யமாட்னேங்கிறார்கள். டெல்லியில் ஒரு பெண் பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட போது பொங்கி எழுந்த சமுக போராளிகள் அதன் பின் எங்கே போனார்கள் அந்தமாதிரி பிரச்சனைகள் அதன்பின்னே நடக்கவே இல்லையா என்ன? நீங்க தமிழக செய்திகள் தினம் பார்க்கிறீர்களோ இல்லையோ நான் தினம் கவிக்கிறேன்.. கடந்த வாரத்தில் பார்த்த செய்தி என் மனதை மிகவும் பாதித்துவிட்டது ஒரு பெண்ணை தகப்பன் சகோதரன் மற்றும் அவர்களைப் பற்றி போலீஸில் ரிப்போர்ட் பண்ணிய போது அந்த போலீஸ் அதிகாரியும் அந்த பெண்னை பலாத்காரம் பண்ணினார். ஆனால் அந்த சமயத்தில் தமிழக ஊடகம் மற்றும் பெண்ணிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் என்ன செய்தது? இந்த கூத்தாடிகள் நடத்தும் தேர்தலுக்கு முக்கியதுவம் கொடுத்து கொண்டிருந்தது.. ...இந்த செய்திகள் உங்களை டிஸ்டர்ப் செய்து இருக்காது ஆனால் என் மனதை மிகவும் குலைத்துவிட்டது....

   அந்த ஆதங்கத்தில்தான் நான் இந்த பதிவை sarcasticall லாக எழுதி இட்டு இருக்கிறேன்

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog