Thursday, October 15, 2015



avargal unmaigal
வாங்க கலாய்க்கலாம் - முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஸ்டாலின்


#ஸ்டாலின் : தமிழர்களை காப்பாற்ற நாம் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்."
#மதுரைத்தமிழன் :அப்ப குடும்பதோட தமிழ்நாட்டைவிட்டு கிளம்பி சென்றுவிடுங்கள்

#ஸ்டாலின் : ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை தூக்கி எறிவேன் .
#மதுரைத்தமிழன் : ஆட்சிக்கு வர வேண்டுமானால் உங்கள் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை முதலில் தூக்கி ஏறியுங்கள் தலைவரே


#ஸ்டாலின். தி.மு.க வில் இருக்கிறவர்களில் 90 சதவீதம் இந்துக்கள்!!
பேஸ்புக்கில் லலிதா எஸ் நாராயணன் : இந்து என்றால் திருடன்!! என்று கருணாநிதி ஏன் சொன்னார் என்று இப்போதாவது புரிந்ததா!!?

avargal unmaigal


ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை தூக்கி எறிவேன்#ஸ்டாலின்
மதுரைத்தமிழன் :விஜயகாந்த் தூக்கி அடிப்பார் என்றாலாவது நம்ப மூடியும் ஆனால் ஸ்டாலின்  தூக்கி எறிவார் ,என்பதைதான் நம்ப முடியவில்லை.காரணம் ஸ்டாலினின் உடம்புவாகு அப்படி ஆமாம் விஜயகாந்த் மாதிரி காமெடிகிமடி பண்ணலேயே

avargal unmaigal

டிஸ்கி: இங்கு வருபவைகள் படித்து ரசித்து சிரிக்க மட்டுமே .யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்த அல்ல. செய்தி ஊடகங்களில் பேசபடும் தலைவர்கள் இங்கு கலாய்க்க மட்டுமே படுகிறார்கள்

avargal unmaigal

டிஸ்கி : இந்த பதிவை படிப்பவர்களும் பின்னுட்டங்களில் கலாய்க்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. இது சிரிக்க மட்டும்தானா... நண்பரே...
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க மற்றும் கலாய்க்க மட்டுமே ......

      Delete
  2. ஏற்கனவே தமிழக மக்களுக்கு நிறைய நாமத்தை போட்ட ஸ்டாலின் இப்போ நாமத்தை போட்டுக்கொண்டால் ஏமாந்து விடுவோமா?

    ReplyDelete
    Replies
    1. நாமம் இல்லமலே ஏமாறுகிறமக்கள் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை

      Delete
  3. Replies
    1. ரசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

      Delete
  4. ம்ம் , என்னதான் நடக்கும் ,,,, நடக்கட்டுமே !
    கே.எம். அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி 627416

    ReplyDelete
    Replies
    1. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ஏமாற்றம்தான் மிஞ்சும் இருக்கட்டுமே என்று நினைத்துதான் ஸ்டாலின் நடிக்கிறார்

      Delete
  5. ஹா... ஹா...
    கலக்கிட்டீங்க நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி

      Delete
  6. ஸ்டாலின் அம்பி ரொம்ம்ம்ம்ப நன்னாருக்கார் கேட்டேளா!!! கடவுள் இல்லைனு சொல்லிண்டவா இப்போ இருக்கார்னு லோகத்துக்குச் சொல்றாப்போல இருக்கே!

    "நான் "நாமம்" போட்டுக்க மாட்டேன். ஏற்கனவே போட்டாச்சு...வாங்கிண்டுமாச்சு. நேக்குப் பிடிக்கலை. பட்டை வேணும்னா போட்டுக்கறேன்.. என்ன ஸ்லோகம் சொல்லணுமோ நீங்களே சொல்லிடுங்கோ அர்ச்சனை பண்றாப்ல...நேக்கு நான் நினைச்சது நடந்தா சரி..."கோவிந்தா" வேண்டாம்...கேட்டேளா...பகவானே..."

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதாம்மா வர வர பதிவுகளில் மட்டுமல்லாமல் கருத்துகளிலும் நல்ல காமெடியாக எழுதுறீங்கள் பலே பலே ரொம்ப நன்னா இருக்கு,,கலக்குறேள் போங்கோ என் கண்ணே திருஷ்டி பட்டுடும் போல இருக்கு

      Delete
  7. "ஓய் அர்ச்சகரே தப்பாச் சொல்லிட்டேன்...நாமம் நேக்குத்தான் போட்டுக்கப் பிடிக்காது...மத்தவாளுக்குப் போடப் பிடிக்குமாக்கும்..."

    செம கலாய்ப்பு மதுரைத் தமிழா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பேஷ் பேஷ் கருத்துன்னா(கலாய்ப்புன்னா) கீதாம்மா கருத்துதான் நன்னா இருக்கு எங்கயோ போயிட்டேள் போங்கோ

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.