இந்தியாவை பற்றிய புது புதுதகவல்களை
அறிந்து கொள்ளுங்கள்
'அவர்கள் உண்மைகள்' பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal தகவல்களை உடனுக்குடன் படிக்க
இந்தியாவில் சில
மாநிலங்களில் மாட்டி இறைச்சி சாப்பிடுவதுமட்டுமல்ல அதை நீங்கள் வைத்திருப்பதாக மக்கள்
கருதினால் அல்லது அவர்கள் சந்தேகித்தால் கூட உங்களை அடித்து கொல்ல மக்களுக்கு அதிகாரம் உண்டு.
இந்தியாவில்
உங்களை யாராவது மனநோயாளி என்று சொன்னால் ஆத்திரப்படாதிர்கள் இந்தியர்கள் நேர்மையானவர்களை
மனநோயாளிகள் என்றுதான் அழைப்பார்கள்.
இந்தியாவில்
டாக்டர்கள் கடவுளாக ஒரு காலத்தில் கருதப்பட்டார்கள் ஆனால் இப்போது அவர்கள் எமனின் தூதர்களாகவே செயல்படுகிறார்கள்.
இந்தியாவில் குற்றவாளிகளை
கொண்டு போய் நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் அவர்கள் குற்றமற்ற அப்பாவிகள் என நீதிபதி
தீர்பளிப்பார்.
இந்தியாவில்
பள்ளிக்கூடங்களில் சிந்திக்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அதிக மார்க் எடுக்கமட்டுமே
கற்றுக் கொடுக்கிறார்கள்
இந்தியாவில்(தமிழ்நாட்டில்)
மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அமைச்சர்கள் முதல்வருக்கு பாதசேவை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில்
(தமிழ்நாட்டில்) அரசாங்கம் தரமான இலவச கல்வியை கொடுப்பதற்கு பதிலாக தரமான மதுவை குறைந்த
விலையில் விற்றுக் கொண்டிருக்கிறது,
இந்தியாவில்(தமிழ்நாட்டில்)
மது தொழிற்சாலைகளை நடத்துபவர்களே மதுவிலக்கு போராட்டங்களையும் நடத்தி கொண்டி இருக்கிறார்கள்.
இந்தியாவில்
டிவியில் சீரியல் வரும் நேரங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்வீட்டுகளுக்கு செல்ல வேண்டாம்.
இந்தியாவில் குப்பைகளை
போட குப்பை தொட்டிகளை தேட வேண்டாம். உங்களுக்கு விருப்பபட்ட இடங்களில் போடலாம். அபராதம் எல்லாம்
கிடையாது
சாலைவிதிகளை
மீறியதற்காக உங்களை காவல் துறை பிடித்தால் உங்களுக்கு பேரம் பேச தெரியவேண்டும் அல்லது
அவர்களை மிரட்ட தெரியவேண்டும்.
இந்தியாவில் மருத்துவர்களின்
சீட்டு இன்றி எந்த மருந்துகடையிலும் மருந்துக்களை எளிதில் வாங்கலாம்.
இந்தியாவில்
நீங்கள் உங்கள் தாய்மொழியில் பேசினால் பதில் அளிப்பவர்கள் ஆங்கிலத்தில்தான் பதில் அளிப்பார்கள்
(இதற்கு சிறு நகரங்கள் விதிவிலக்கு)
இந்தியாவில்
மாட்டு சதையை(இறைச்சியை) வைத்திருப்பதாக சந்தேகித்தாலே மரண தண்டனையாம் ஆனால் பெண்ணின்
சதையை(உடலை) கூறு போட்டு(பலாத்காரம்) செய்தால் சில ஆண்டுகள் மட்டும் சிறைதண்டனையாம்.
நல்ல இருக்குப்பா இந்திய சட்டங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இப்படியே போய்க்கிட்டிருந்தா
ReplyDeleteமதுர தமிழன் பக்கத்த வாசிக்கிறவனும்...
மதுர தமிழன் வீட்டுக்கு பக்கத்துல வசிக்கிறவனும்
நிறைய அடி படுவாங்க போலிருக்கே தலைவரே
அநீதிக்காக ட்விடர்லயும், வாட்ஸ் அப்லயும், மூஞ்சி புக்குலயும்தான் பொங்குவாங்க. நேரில் கண்டுக்கவே மாட்டாங்க.
ReplyDeleteபக்கத்து வீட்டில் பேசிப் பழக மாட்டோம். ஆனா, முகமறியாதவங்க கிட்ட நட்பு பாராட்டுவோம்.
ReplyDeleteஉண்மை சுடுகிறது. நாட்டுல எத்தனையோ தொல்லைகள் (பிராப்ளம்ஸ்) அவசரத் தீர்வுக்காகக் காத்திருக்கின்றன. இதுல 'மாட்டு இறைச்சி' போன்ற நாட்டுக்குத் தேவையில்லாத விஷயங்களை ஆரம்பிப்பவர்களையே குண்டர் சட்டத்தில் 20 வருடம் போடமுடிந்தால் நல்லது.
ReplyDelete