மோடி ஒன்றும்
புத்தன் அல்ல
இஸ்லாமியர்கள்
தீவிரவாதிகள் இல்லை. ஆனால் இஸ்லாமிய வேஷத்தில் பல திவிரவாதிகள் இருக்கின்றனர் அது போல
இந்துக்கள் அனைவரும் மதவெறியரகள் அல்ல . இந்துகளின் வேஷத்தில் பல மதவெறியர்கள் உள்ளனர்.
அது போலதான் மோடி ஒன்றும் நல்ல தலைவன் அல்ல. நல்ல தலைவன் வேஷத்தில் மோடி ஒழிந்து இருக்கிறார்.
இதைத்தான் மோடி ஒன்றும் புத்தன்னல்ல என்று சொல்லுகிறேன்,
இதை உறுதிபடுத்த உலகில்
நடந்த இரு நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த இரு நிகழ்வுகளும் மூஸ்லீம் சமுதாயத்தை
சந்தேக கண்ணோட்டத்தில் பார்த்து அதனால் எழுந்த பிரச்சனைகளை இரு தலைவர்கள் எப்படி கையாண்டார்கள்
என்பதை விளக்குவதே இந்த பதிவு. இதனை படித்த பின் நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்..மோடி
புத்தனா இல்லையா என்று.
சம்பவம் நடந்த
இடம் அமெரிக்கா:
அமெரிக்காவில்
உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மூஸ்லீம் மாணவன் ஒருவன் தான் சொந்தமாக
ஒரு கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறான். அந்த கடிகாரத்தை அடுத்த நாள் பள்ளிக்கு எடுத்து
சென்று தன் ஆசிரியரிடம் காண்பித்து அவரின் பாராட்டை சம்பாதிக்க எண்ணி அதை ஆசிரியரிடம்
காண்பித்து இருக்கிறான். ஆனால் அந்த ஆசிரியரோ அவன் மூஸ்லீமாக இருப்பதால் அவன் மீது
சந்தேகம் கொண்டு அவன் வெடிகுண்டு தாயாரித்து இருக்கிறான் என்று கருதி பள்ளி நிர்வாகத்தினர்
மூலம் போலீஸுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். போலீஸாரும் அந்த மாணவனை விலங்கிட்டு கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு
சென்று விசாரித்து இருக்கின்றனர். இறுதியில் அவன் குற்றமற்றவன் என தெரியத் தொடங்கியது.
இந்த தகவல்
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் மிக அதிவேகமாக காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது
இந்த தகவல் டீவிட்டர் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமவில் இருந்து பல தலைவர்களையும் சென்று
அடைந்தது. உடனே அமெரிக்க அதிபர் அந்த மாணவனின் திறமையை பாராட்டி அவனுக்கு தனது ஆதரவை
தெரிவித்தது அல்லாமல் தன் மாளிகைக்கு வர அழைப்பும் விடுவித்தார் அது போல அதிபர் பதவிக்கு
போட்டியிடும் ஹில்லாரியில் இருந்து பேஸ்புக் அதிபர் மார்க் வரை பலர் தொடர்ந்து தங்கள்
ஆதரவை அவனுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். பேஸ்புக் நிறுவனர் மார்க்க்கும் அவரது
கம்பெனிக்கு வர அழைப்பு விடுவித்து இருக்கிறார் , அது போல ரெட்டிடிட் டிவிட்டர் தளங்கள்
அவனுக்கு இண்டெர்ன்ஷிப்பிற்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. அது போல கூகுல் அவர்களது
சைன்ஸ் விழாவிற்கு ஒரு இடத்தை ஒதுக்கி அழைப்பு விடுவித்து இருக்கிறது MITயும் அவனுக்கு
அழைப்பு விடுவித்து இருக்கிறது. இப்படி ஒபாமவில் இருந்து பெரிய நிறுவனதலைவர்கள் மற்றும்
பொதுமக்களிடம் இருந்து அந்த மூஸ்லீம் மாணவனுக்கு ஆதரவு கொடுத்து இருக்கின்றனர். இந்த
மாணவன் சூடான் நாட்டை சேர்ந்த மூஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவன். கனவுகளோடு அமெரிக்கா
நாட்டில் படித்து வந்தவன் மீது களங்கம் கற்பிக்கபட்ட போதிலும் அந்த களங்கத்தை துடைத்து
பீனிக்ஸ் பறவை போல வானத்தில் சிறகு அடித்து பறந்து கொண்டிருக்கிறான்.
அன்புடன்
மதுரைத்தமிழன் |
சம்பவம் நிகழ்ந்த
இடம் இந்தியா.
இந்தியாவில்
உபி மாநிலத்தில் மூஸ்லீம் ஒருவர் மாட்டு இறைச்சி வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்
பேரில்( நல்ல கவனமாக படியுங்கள் மாட்டி இறைச்சி அவர் வைத்து இருந்தார் என்று அல்ல
வைத்திருந்தார் என்ற சந்தேகம் மட்டும்தான்) இந்துக்களால் அல்ல இந்துக்களின் மதப்போர்வையில்
ஒழிந்து கொண்டிருக்கும் வெறியர்களால் அடித்து கொள்ளப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல
அவரின் மகனும் அடித்து கொல்லப்பட்டு இருக்கின்றனர்.. இதில் மிகப் பெரிய ஆச்சிரியம்
என்னவென்றால் இறந்தவரின் இன்னொரு மகன் நாட்டை காக்கும் ராணுவ வீரனாக எல்லைபகுதியில்
பணிபுரிந்து இருக்கிறான். இன்னும் ஒரு விஷயத்தை இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும்.
மாட்டு இறைச்சி வைத்திருப்பது சட்டப்படி குற்றம் அல்ல. அதுமட்டுமல்ல இந்து மதத்தில்
குறிப்பிட்ட சில பகுதியினரை தவிர அநேகம் பேர் மாட்டு இறைச்சியை உண்பவர்கள்தான் அதுமட்டும்மல்ல
நம் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் கேரளாவில் முக்கால் வாசி பேர்கள் மாட்டு இறைச்சியை
வைத்திருப்பவர்கள் உண்பவர்கள்தான் அப்படி இருக்கும் போது இந்த மூஸ்லீம் மதத்தை சார்ந்தவர்
மட்டும் என்ன பாவம் செய்தார். இவர் வெளிநாட்டு ஆள் அல்ல இந்தியக் குடிமகன் தான்.
இந்த சம்பவத்தால்
தன் தந்தை மற்றும் சகோதரனை இழந்த அந்த மூஸ்லீம் ராணுவவீரனிடம் மீடியாக் பேட்டி கண்ட
போது அவர் சொன்னது எனக்கு இந்தியாவின் மீதும் இந்திய அரசின் மீது முழு நம்ப்பிக்கை
இருக்கிறது யாரோ சில பேர்கள் செய்யும் இந்த இழி செயல்களால் இந்தியாவின் மீது இருக்கும்
என் தேசப்பற்று என்றும் மாறாது என்று மிகவும் பெருமையாக சொல்லி இருக்கிறார்.
இந்த செய்தி
இறப்பு செய்தி இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி
இன்றைய தேதிவரை பலரின் கண்டனத்திற்குள்ளாகியும் புத்தனாக வேஷம் போடும் மோடி இது வரை
வாயை திறந்து கண்டனம் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அவரின் அமைச்சரவையை சார்ந்தவர்கள்
மோடிக்கு இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த நேரமில்லை என்று கருத்து தெரிவித்து
இருக்கிறார்கள்..
உலகத்தின் பல
விஷயங்களில் இன்வால்வு ஆகி இருக்கும் ஒபாமாவிற்கே தன் நாட்டில் நடக்கும் ஒரு சிறு
விஷயத்திற்கு கருத்து தெரிவிக்க நேரம் கிடைக்கிறது என்றால் இந்தியாவை இந்திய மக்களை காப்பேன் என்று வேஷம் போடும் வேஷதாரிக்கு
அப்படி என்ன வேலை?
தமிழர்களுக்கு
தெரியும் மோடி ஒரு வேஷதாரி என்று அதனால்தான் கடந்த தேர்தலில் அவர் ஆடிய நாடகங்களை
பார்த்தும் ஏமாறாமல் அவருக்கு தமிழகத்தில் மிகப் பெரிய தோல்வியை கொடுத்தனர். ஆனால்
மற்ற மாநிலத்தவர் அவரின் நடிப்பை பார்த்து ஏமாந்துவிட்டனர்.பாவம் அவர்கள் செய்த தவறுகளுக்கு
மிக நல்லபாடம் படிப்பார்கள்.
இந்தவேடதாரி
மோடிக்கும் தமிழகத்தில் ஆதரவு சிலர் கொடுக்கின்றனர். அவர்கள் தமிழகத்தை அழிக்க நினைக்கும்
விஷம். அதை நாம்தான் கண்டுபிடித்து வேறோடு அழிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்
உங்களின் வருங்காலம் அழிவின் பிடியில்தான்
|
சரியான ஒப்பிடு. வாழ்த்துக்கள் இந்தியாவை பிடித்த சனி இன்னும் மூன்ரையாண்டு விடாது என்னவெல்லாம் நடக்க போவுதோ இறைவனுக்கே வெளிச்சம்.
ReplyDeleteநன்றி
அன்புடன் M. செய்யது Dubai
சில ஜாதியைசேர்ந்தவர்கள் கண் மூடித்தனமாக மோ(ச)டியை ஆதரிப்பது ஆச்சரியம் இல்லை
ReplyDeleteஆனால் பல நடுதரவர்க்கத்தை சேர்ந்தவர்களும் போலி ஊடகங்களால் சுய சிந்தனை அற்றுபோய் ஆதரிப்பது ஆச்சரியமாக உள்ளது
அமெரிக்கா முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள், பிரபலங்களைக் கொண்டுள்ளது. அவர்களுக்கு நாட்டின் பிம்பமும், அவர்கள் தங்கள் மக்களுக்குக் காட்டும் பிம்பமும் மிகவும் முக்கியம்.
ReplyDeleteஇருந்தபோதும், இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக மோடியை எதிர்க்கும்போது, அவர் கண்மூடித்தனமான ஆதரவை இந்துக்களிடமிருந்து பெறுகிறார்; பெறுவார். முதலிரண்டு பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் இதைப் புரிந்துகொண்டிருக்கலாம்.