Wednesday, October 14, 2015



இப்படி எல்லாமா கொலு வைப்பாங்க...கலிகாலம் முத்திடுச்சு

நவராத்திரி விழா ஆரம்பித்தாலும் ஆரம்பிடுச்சு எல்லாவீட்டிலும் கொலு வைச்சு அவங்க அவங்க வீட்டிற்கு வாங்க வாங்க வந்து பார்த்து பாட்டுகளை பாடி சுண்டல்களை வாங்கி செல்லுங்க என்று அழைப்பு விடாதவர்களே இல்லை. இந்த வாரத்தில் மட்டும் மாமி மாமாக்களிடையே நட்பு உறவு கொண்டவர்கள் அவர்களின் கண்ணில் படாமல் தப்பித்து கொள்வார்கள் இல்லையென்றால் சுண்டல் மட்டும் வாங்க அவ்வளவு தூரம் போகணுமே....


ஆனால் நீயூஜெர்ஸியில் உள்ள மாமா மாமிக்கள் மிக நல்லவங்க அவங்க சுண்டல் சாப்பிட அழைக்கமாட்டார்கள் அருமையான டின்னருக்கு அல்லது லஞ்சுக்கு ஏற்பாடு செய்து கூப்பிடுவார்கள். அப்படிதான் எங்கள் குடும்பத்திற்கு 2 அழைப்புகள் வந்துள்ளது இரண்டும் டின்னர்தான்.. மிக நல்ல குடும்பங்கள் (சாப்பாடு போட்டா நல்ல குடும்பம் என்றுதானே சொல்லனும் ஹீஹீ... )

இந்த கொலுவில் உள்ள விஷேசம் என்னவென்றால் வருடம் முழுவதும் கணவரை நிற்க வைத்து அவர்களை பற்றி பாட்டுபாடி கரைச்சு கொட்டி பயிற்சி பெற்ற பெண்கள். இந்த நவராத்திரி தினங்களில் மட்டும் கணவருக்கு செய்யும் அர்ச்சனைகளை நிறுத்திவிட்டு கொலு படிகட்டுகளுக்கு அருகில் உட்கார்ந்து எல்லோர் முன்னாலும் பாடிக்காட்டுவார்கள்


என்னடா இவன் இப்படி எல்லாமா கொலு வைப்பாங்க...கலிகாலம் முத்திடுச்சு என்று சொல்லி மொக்கை போடுறானே என் கிறீர்களா சரி சரி வழக்கமான நம்ம கலாய்ப்புக்கு வந்துவிடுவோம்.

மற்றவங்க கொலு வைச்சா மட்டும் போதுமா வலைப்பதிவர் சார்பாக அதுவும் அவர்கள் உண்மைகள் தளத்தின் சார்பில் கொலு வைக்கவில்லை என்றால் அரசியல் தலைங்க வருத்தப்படுமே என்பதால் வருடம் வருடம் நான் கொலு வைத்துவிடுவேன். அதே போல நான் இந்த வருடம் வைத்த கொலுவின் படமும் கடந்த காலங்களில் பகிர்ந்த கொலுப்படங்களையும் பார்த்து மகிழ்ந்து கடவுளின் அருளை பெற்று செல்லுங்கள்


#kolu 2015



kolu 2014
kolu 2011


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. எங்களுக்கும் சுண்டல் வாங்க நிறைய அழைப்புகள் வந்துள்ளன. சென்று வர வேண்டும். யுனிஎன்சைம் மாத்திரைக்கு இந்த வாரம் நிறைய வேலை!!!

    ReplyDelete
  2. கொலகார சாமி
    வேற யாரு
    அந்த லொள்ளுசாமிதான்
    அந்தாளு பன்னுற அட்டாகாசங்கள

    நெனச்சிகிட்டே
    ரோட்டுல போறப்போ
    தான சிரிச்சுட்டேன்.

    அதப்பாத்து
    எனக்கு
    மானம் கெட்ட(காசுக்கு ஓட்டு போடும்) ஒரு (ஆ)சாமி
    என்னப்பத்து சொன்னது
    'சரியான லூசு'

    நான் ஙேன்னாயிட்டேன்..

    ReplyDelete
  3. ஹஹஹஹஹஹ்ஹ்ஹஹ் ஐயோ வயிறு புண்ணாகிடுச்சு தமிழா! சிரிச்சு சிரிச்சு...

    கீதா: உங்க கொலுதான் சூப்பர் இந்த நவராத்திரிக்கு!!!! சரி கொலுவோட ஒரு டாக்டரையும் ஏற்பாடு பண்ணி வைச்சுருக்கலாம்ல....அதான் அன்பு மணி, மருத்துவர் ஐயா எல்லாரும் இருக்காங்களேனு சொல்லப்டாது.

    அப்புறம் இங்க சென்னைல ஏரியா வாரியா பரிசு எல்லாம் கொடுப்பாங்க தெரியும்தானே!! உங்க படத்தையும் கூட அனுப்பி வைங்க கண்டிப்பா பரிசு கிடைக்கும்!!!! என்ன பரிசுன்னு எல்லாம் கேக்கப்டாது...

    ReplyDelete
  4. சாமிங்க கொலு நல்லாருந்துச்சு......போன வருஷம் வைச்ச கொலுல 11வது படி லொள்ளு சாமி படி தான் டாப்பு...இந்த வாட்டி ஏன் 3 படியோட நிறுத்திட்டீங்க...தமிழா

    ReplyDelete
  5. அசத்தல் கொலு! வட இந்திய தலைவர்களையும் கொலுவுக்கு அழைத்திருக்கலாமே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.