சிந்திக்க மட்டுமல்ல
நம்பிக்கையை தூண்டும் சித்தர் எழுதிய பாடல்
ஒவ்வொரு பூக்களுமே...
சொல்கிறதே...
வலைப்பூவென்றால்
போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே...
சொல்கிறதே...
வலைப்பூவென்றால்
போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே...
சொல்கிறதே...
கருத்திட்டால்
நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது
வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம்
சிறக்கும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு...
அனுபவமோ அது
சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
உள்ளம் என்றும்
எப்போதும்
உடைந்து போக
கூடாது...
"என்ன இந்த
வலைப்பூ...?" என்ற
எண்ணம் தோன்றக்
கூடாது...
எந்த வலைப்பூ
பதிவில்
கருத்தில்லை
சொல்லுங்கள்...
காலப்போக்கில்
கருத்தெல்லாம்
மாறி போகும்
மாயங்கள்...!
கருத்து தாங்கும்
பதிவுகள் தானே
முன்னணி பதிவில்
நிலையாகும்...
எதையும் தாங்கும்
உள்ளம் தானே
நிலையான நட்பு
காணும்...
யாருக்கில்லை
போராட்டம்...?
பகிர்ந்து கொள்ள
ஏன் தயக்கம்...?
ஒரு கனவு கண்டால்...
அதை தினம் பகிர்ந்தால்...
ஒரு நாளில் நிஜமாகும்...!
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு...
அனுபவமோ அது
சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே...
சொல்கிறதே...
வலைப்பூவென்றால்
போராடும் போர்களமே...
வலைப்பூ பகிர்வை
வாசிப்போம்...
வானம் அளவு யோசிப்போம்...
பதிவுகள் என்ற
ஒன்றை மட்டும்...
பகிர்ந்து கொண்டு
சிறப்பிப்போம்...
லட்சம் பதிவுகள்
கண்ணோடு...
லட்சியங்கள்
நெஞ்சோடு...
நம்மை வெல்ல
யாருமில்லை...
உறுதியோடு போராடு...!
பதிவரே... உன்
மனதை கீறி
பதிவு போடு மரமாகும்...
கருத்துரை மறுமொழி
எல்லாமே நட்பாகும்...
பதிவுகள் இன்றி
வலைப்பூவா...?
நேரம் ஏனில்லை
என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்...
அதில் தெளிவிருந்தால்...
வலைப்பூ வானில்
சிறகடிக்கும்...
மனமே ஒ மனமே
நீ மாறிவிடு
அனுபவமோ அது
சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு...!
ஒவ்வொரு பூக்களுமே...
சொல்கிறதே...
வலைப்பூவென்றால்
போராடும் போர்களமே...
ஒவ்வொரு பூக்களுமே...
சொல்கிறதே...
வலைப்பூவென்றால்
போராடும் போர்களமே...
ஒவ்வொரு வலைப்பூவுமே...
சொல்கிறதே...
கருத்திட்டால்
நட்பு ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது
வேண்டும்... நம் வலைப்பூவில்...
பதிவுகள் நிச்சயம்
வெல்லும் ஒரு நாளில்...
மனமே ஓ மனமே
நீ மாறிவிடு
அனுபவமோ அது
சிந்தனையோ நீ பகிர்ந்துவிடு..
எழுதியவர் : திண்டுக்கல்தனபாலன் புதன், அக்டோபர் 07, 2015
படித்து ரசித்து மிகவும்
மனம் மகிழ்ந்தவர் மதுரைத்தமிழன்
இந்த பாடலை படித்ததும் என் மனம் சந்தோஷவானில் சிறகடித்து பறந்தது. நன்றி தனபாலன்
பாராட்டுக்கள் தனபாலன்....
இந்த பாடலை படித்ததும் என் மனம் சந்தோஷவானில் சிறகடித்து பறந்தது. நன்றி தனபாலன்
பாராட்டுக்கள் தனபாலன்....
DD எழுதியதா? அட! பாராட்டுகள்.
ReplyDeleteஅடடே அவரது பாட்டு உங்களுக்கு பதிவாகிருச்சே.... அருமை வாழ்த்துகள் டி.டி.ஜி
ReplyDeleteதமிழ் மணம் 2
அங்கேயே படிச்சேன்! இங்கும் மீண்டும் படித்து ரசித்தேன்! சித்தர் அல்லவா? சிறப்பாகவே எழுதியிருக்கிறார்!
ReplyDeleteஆகா...! நம்ம தலைவரின் பகிர்வில் பார்த்து விட்டீர்களா...?
ReplyDeleteநன்றி... மிக்க நன்றி...
ஆகா
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களை
வலைச் சித்தர்
என்று மட்டும்தான்
இத்தனை நாளாய் நினைத்திருந்தேன்
இப்பொழுதுதான் புரிகிறது
அவர் வலைச் சித்தர்
மட்டுமல்ல
வார்த்தைச் சித்தரும்
என்பது இப்பொழுதுதான் புரிகிறது
நன்றி நண்பரே
தம +1
முந்திக்கிட்டீங்களே சகோ :)
ReplyDeleteசினிமாவுக்கு(ம்) எழுத ஆரம்பிச்சாச்சா? நடத்துங்க ஜீ...!!!
ReplyDeleteஆஹா..
ReplyDeleteசித்தர்களின் எண்ணிக்கை 19 என்று மாற்றிவிட வேண்டும்.
திரு. தனபாலன் அவர்களின் பணி போற்றுதற்குரியது.
கைமாறு கருதமால் செயலாற்றிக் கொண்டிருக்கும் அவர்க்கும் அவரது புதிய பாடல் ஒன்றை எடுத்து எல்லாரும் அறியப் பகிர்ந்து போகும் உங்களுக்கும் என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.
நன்றி.
சூப்பர்! அருமையாயிருக்கிறது. புதுகை வலைப்பதிவர் விழாவின் பாடலாக வைத்துவிடலாம் போலிருக்கிறது! பாராட்டுக்கள் தனபாலன் சார்!
ReplyDeleteஇத்தனை விஷயமிருக்கா வலைப்பூவில்.. :) 👍😁 வாழ்த்துகள் !!
ReplyDeleteபாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்த வலையுலக மந்ததிரவாதிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதிருவள்ளுவதாசன் கவிஞராகவும் உருவாகிவிட்டார் !!!! அருமை! டிடி வாழ்த்துகள்!!!! ஒரே மகிழ்ச்சி....
ReplyDeleteநாங்களும் பாடியே பார்த்துவிட்டோமே..!!!
நேற்று இதைப் பார்த்ததும்....மதுரைத் தமிழன் பதிவில் சித்தர் என்று ஏதோ விசயம் என்று க்ளிக் பண்ண நினைத்து அப்படியே வைத்துவிட்டு....வேலைப்பளுவினால்...இப்போது கூட்டாஞ்சோறு செந்தில் அவர்களின் பக்கம், கிடைக்க அங்கு போனால் நம்ம க்ரேஸ் அப்புறம் பார்த்தா அங்கருந்து மதுரைத்தமிழன், அப்புறம் அதன் ஒரிஜினல் இடம் கண்டு..ஆஹா சுத்துதே சுத்துதே....என்று பாட்டு நினைவுக்கு வந்து...
பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துகள் தமிழா...
சே நாங்க லேட்டு...ம்ம் நேத்தைக்கே கீதா தலைப்பு மட்டும் பார்த்துட்டு சொல்லவும் செய்தார் ஆனால் இருவருக்குமே வேலைப்பளு...அப்படியே முடியயமப் போச்சு....
ReplyDeleteஇன்று கீதா இதைப் பாடி பதிந்தும் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். ஃபோனில் பாடிக் காட்டினார்...இனிதான் கேட்க வேண்டும்...
டிடியின் இன்னொரு அவதாரம் கவிஞராக வாழ்த்துக்கள் கருத்தாளம்மிக்க பாடல்.
ReplyDeleteநானும் வாசித்து என் தளத்திலும் பகிர்ந்தேன... அருமையான பாடல்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
அருமையான பாடல்
ReplyDelete