Friday, October 30, 2015



avargal unmaigal
லேடி முதல் மோடிவரை நடிகர் முதல் கலைஞர்வரை இங்கே அடித்து துவைக்கப்படும் பேஸ்புக் ஸ்டேடஸ்

ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலே இந்திய மக்களின் பிரச்சனைகளான பொதுகழிப்பறை தரமான சாலைகள், பொதுக் கல்வி . உணவு உற்பத்தி ஏழைகள் பட்டினியால் வாடுவது போன்ற பிரச்சனைகளை தீர்த்த மோடி அடுத்தக்கட்டமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு, 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும்,'' என,  தெரிவித்து உள்ளார்.


கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக எழுத்தாளர் கலைஞர் தனது கலைஞர்பட்டத்தை திருப்பி கொடுக்க ரெடியா?( என்னது வாங்கிதான் பழக்கம் கொடுத்து பழக்கமில்லையா )

இந்திய மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் மீது வெறுப்பு கிடையாது அது போல பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய மக்கள் மீது வெறுப்புகிடையாது ஆனால் இரு நாட்டுமக்களுக்கும்  அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீதுதான் வெறுப்பு

பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்: ஜெயலலிதா. சேமிப்பு நாள் வாழ்த்து
ஆமாங்க பிள்ளைகள் சேமித்தால்தான் அப்பங்காரங்க டாஸ்மாக்ல சரக்கு வாங்க முடியும். அம்மானா அம்மாதானு சும்மாவா சொன்னாங்க

போயஸ்கார்டனில் எடுத்த ரெஸ்டினால் களைப்பாகி போன ஜெயலலிதா கொட நாட்டில் ரெஸ்ட் எடுக்க சென்றாறோ?

நடிப்புல உதயநிதியின் நடிப்பை ஸ்டாலின் மிஞ்சிவிடுவார் போல இருக்கே.... நமக்கு நாமே

ஸ்டாலினுக்கும் மட்டும் இப்ப வயசு 30 ஆக இருந்தால் நயன்தாரா பாடு திண்டாட்டாமாக இருந்திருக்கும்

கோவையில் எம்.எல்.ஏ., தனியரசு ஆட்கள் அராஜகம்: அரிவாள், தடிகளுடன் வாகனங்களை நொறுக்கினர்
ஓ இதுக்கு பெயர்தான் மக்கள் சேவையா ?

பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகிறார்கள். திமுகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி சேரமாட்டோம் - திருமாவளவன்
இதைப்படித்ததும் என் நினைவில் வந்தது காண்டம் மட்டுமே திமுக இவரை பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தி கொண்டது போல இருக்கிறது

'மாட்டிற்கு' தரும் மரியாதையில் பாதியாவது தான் கட்டிய 'மனைவிக்கு' மோடிதருவாரா?

திருட்டு கொலை கொள்ளை பலாத்காரம் திவிரவாதம் போன்றவைகளை கண்டுபிடிக்க அல்ல மாட்டி இறைச்சி வைத்திருப்பவர்களை கண்டுபிடிக்கவே போலீஸ் படையை மாற்றி அமைத்திருக்கிறார் திருவாளர் #மோடி. கூடிய சீக்கிரம் மாட்டி இறைச்சி தின்பவர்களை கண்டுபிடிக்க இந்திய ராணுவம் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சிரியம் இல்லை . இந்தியா நிச்சயம் வல்லரசு ஆகிவிடும் #modi #beef #india

விஜயகாந்த் ஜெயலலிதாவை திட்ட பிரமலதா திமுக வை திட்ட விஜயகாந்தின் மச்சான சைலன்டா பிஜேபி கூட பேரம் பேசிக்கிட்டு இருக்காரு. ஆனா தம்பி அன்புமணி மட்டும் இன்னும் விபரம் பத்தாம அடுத்த முதல்வர் வேட்பாளர் நாந்தான் என்று சொல்லிகிட்டு திரிகிறார். அந்த கடவுளே வந்தாலும் இனிமே பாமாகவை காப்பாற்ற முடியாது போல இருக்கிறது

நாடு முழுவதும் டன் கணக்காக பதுக்கி வைத்ததிருந்த பருப்பை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்றுதான் செய்திகள் வருகின்றதே தவிர பதுக்கி வைத்து இருந்தவர்கள் கைது அவர்கள் யார் என்று இன்னும் ஊடகங்களில் கூட செய்திகள் வரவில்லை. பதுக்கி வைத்திருந்தவர்கள் மோடியின் நண்பர்களா என்ன?

இந்தியாவில் மாட்டு சதையை(இறைச்சியை) வைத்திருப்பதாக சந்தேகித்தாலே மரண தண்டனையாம் ஆனால் பெண்ணின் சதையை(உடலை) கூறு போட்டு(பலாத்காரம்) செய்தால் சில ஆண்டுகள் மட்டும் சிறைதண்டனையாம். நல்ல இருக்குப்பா இந்திய சட்டங்கள்

காவேரி பிரச்சனை போன்ற பொதுப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் நடிகர் சங்கம் கலந்து கொள்ளாது - புதிய தலைவர் விஷால்
அதே மாதிரிதான் கூத்தாடி உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தா நீங்களாவே சங்கத்தை கூட்டி பிரச்சனையை தீர்த்துகணும் பொதுவில் வந்து ஊடகங்களை கூட்டி ஊளை இடக் கூடாது


இந்திய இஸ்லாமியர்களுக்கு இப்ப நேரம் சரியில்லை. மாமிசம் இறைச்சி வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு இஸ்லாமியரை கொன்றவர்கள் 'பருப்பை' நீங்கள் வைத்திருந்ததற்காகவும் கொல்லப்பட வாய்ப்புக்கள் இருக்கிறது. காரணம் இப்போது இந்தியாவில் நடப்பது மோடி ஆட்சி #modi

மோடியின் இந்துத்துவா ஆட்சியில் அரியானாவில் இரண்டு குழந்தைகள் எரித்து புதுவிதமாக நவராத்திரி விழா கொண்டாட்டம்.. # இந்தியா

திமுகவில் இருக்கும் 90% சதவிகித ஹிந்துகளுக்கு விடுமுறை தின வாழ்த்துக்கள் # ஸ்டாலின் #கலைஞர்


பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி .சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:எங்கள் பலம், கொள்கை மற்றும் இளைஞர்களை நம்பியே, சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளோம். அ.தி.மு.க., - தி.மு.க., தவிர, வேறு யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம்.

அன்புமணிக்கு தலையில ஏதாவது கலண்டுச்சா என்ன? தனித்து போட்டி  என்று சொல்லிவிட்டு யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம்.  என்று சொன்னால் என்ன அர்த்தம்

இவையெல்லாம் என் பேஸ்புக் தளத்தில் வெளிவந்தவை
அன்புடன்
மதுரைத்தமிழன் (டி.ஜே.துரை)
அவர்கள்...உண்மைகள்
http://avargal-unmaigal.blogspot.com/
பேஸ்புக்கில் உடனுக்குடன் ஸ்டேடஸை படிக்க https://www.facebook.com/avargal.unmaigal (இன்பாக்ஸ் தொந்தரவு கிடையாது)

4 comments:

  1. அரசியலில் எதுவும் நடக்கும். எப்போதும் நடக்கும்.

    ReplyDelete
  2. நம் மக்கள் கவுண்டர் டயலாக் கொடுப்பதில் கில்லாடிகள் எனபதை மீண்டும் நிருபிக்கும் பதிவு!
    த ம 1

    ReplyDelete
  3. நல்லா துவைச்சு காயப்போடுறீங்க! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.