பதிவர் சங்கம்
தேவையா? பழனியப்பன் கந்தசாமி அவர்களின் பதிவிற்கு
எனது பதில்
பதிவர்களுக்கு
சங்கம் தேவையா என்பதற்கு பதிலாக பதிவர்களுக்குள் சண்டை தேவையா என்று கேட்கலாம். ஆம்
பதிவர்களுக்குள் சண்டை தேவை என்பதற்கு ஆதரவு ஓட்டு அதிகம் கிடைத்தால் சங்கத்தை உடனே
ஆரம்பித்துவிடலாம்.
இந்தியாவில்
எந்தவொரு சங்கத்தையும் அது ஆரம்பித்த நோக்கத்தில்
ஒரு நோக்கத்தையாவது நிறைவேற்றி இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்றுதான் சொல்லமுடியும்.
இந்த சங்கங்களினால் யாரவது சிலர் மட்டுமே பலன் பெருகிறார்கள்.மற்றவர்களுக்கு அது வேடிக்கையாகவே
இருக்கிறது
பதிவர் சங்கம்
அமைத்தால் அது கடைசியாக நடிகர்கள் சங்கம் மாதிரி ஆகிவிடப் போகிறது..... சங்கம் ஆரம்பித்தால்
முதலில் கோஷ்டிகள் தோன்றும் அதன்பின் மறைமுகமாக அரசியலும் உள்புகுந்துவிடும். அப்புறம்
ஆரம்பித்தவர்கள் விலகி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
சிலர் பதிவர்களுக்கு சட்டரீதியான பிரச்சனைகள் வரலாம்,அது
போன்ற சூல்நிலைகள் வரும் போது இது போன்ற சங்கங்கள்
இருப்பது அவசியம் என கருதுகின்றனர்.
இப்படி சட்டரீதியான
பிரச்சனைகள் எப்போது வருகின்றன என நன்கு கவனித்தால்
தலைவர்களையும் அவர்களின் இயக்கங்களையும் செலிபிரட்டிகளையும் பற்றி நாம் பேச, எழுத ஆரம்பிக்கும்
போதுதான் வருகின்றன. அப்படி வரும் போது இந்த சங்கங்களால் அதை எதிர்த்து நிற்க முடியாது. சில சமயங்களில் சங்க தலைவர்களே அவர்களுக்கு
விலை போகிவிடுவார்கள் அப்புறம் நீங்களாவது உங்க பிரச்சனையாவது.
நாம் பதிவு எழுதும்
போது அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதவேண்டும். நாம் எழுதும்
விஷயங்களில் உண்மைத்தன்மை இருக்கும்படி பார்த்து கொள்வது அவசியம். எப்போதும் ஆதாரம்
இல்லாமல் நான் இப்படி கேள்விபட்டேன் அப்படி கேள்விபட்டேன் என்று அவதூறு எழுதக்கூடாது
அப்படி இல்லாமல் எழுதி அதனால் பிரச்சனைகள் வந்தால் நம்மிடம் சங்கம் இருந்தாலும் அது
நமக்கு உதவ முன்வராது.அதனால் கூடி கழித்து பார்த்தால் சங்கம் இருப்பதும் இல்லாததும்
ஒன்றுதான்.
சங்கம் இல்லாமலே
நம்மிடையே மிக ஒற்றுமை இருக்கிறது அந்த ஒற்றுமை இருப்பதால் எல்லோரும் ஒன்று கூடி பதிவர்
சந்திப்பு விழா என்பதையே நடத்த முடிகிறது.
இப்படி நம்மிடையே
நல்ல ஒற்றுமை இருக்கும் போது சட்டரீதியான பிரச்சனைகள் வந்தால் அதுவும் நம்ம சைடில்
நியாயம் இருந்தால் நிச்சயம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆதரவு தருவார்கள் என்பது நிச்சயம்.
அதைவிட்டு விட்டு
சங்கம் ஆர்ம்பிக்கலாம் என்று நினைத்தால் ஆரம்பிக்கலாம் ஆனால் சங்கம் நடத்தவதற்கு நாம்
தளம் ஆரம்பித்து பதிவிட்டால் மட்டும் போதாது அதை நடத்த வருமானம் வேண்டும். அதை எப்படி
தேடுவீர்கள். வேண்டுமானால் சங்கத்தில் உறுப்பினர் ஆக 1000 ரூ வசூலிக்கலாம் அப்படி
1000 ரூ வசுலித்தாலும் எத்தனை பேர் வந்து சேர்வார்கள். அதுமட்டுமல்ல எத்தனை பதிவர்கள் ஆக்டிவாக உள்ளனர்
என்று பார்த்தால் அதுவும் மிக குறைவே உள்ளது என்று தெரியும். அதிலும் பாதிபேர் கதை
கவிதை சமையல் குறிப்பு என்று எழுதிவருகிறார்கள். அப்படி எழுதி வருபவர்கள் நினைப்பது
நம்ம பதிவினால் என்ன பிரச்சனைகள் வரப் போகிரறது அதனால் இதில் உறுப்பினர்களாக சேர்வதால்
என்ன நமக்கு லாபம் வந்து விடப் போகிரது என்று
நினைத்து சும்மாதான் இருக்கப் போகிறார்கள் சரி இப்படிபட்ட பதிவர்களும் இந்த சங்கத்தில்
சேர்கிறார்கள் என்றே வைத்து கொண்டாலும் யாரோ ஒருவர் பொறுப்பில்லாமல் ஒரு பதிவு எழுதி
அது பிரச்சனைகளுக்கு உள்ளாகி கோர்ட்டுக்கு போகிறது என்று வைத்து கொண்டால் இந்த சங்கம்
வக்கிலை வைத்து வழக்கை நடத்தவா போகிறது அப்படியே
நடத்தினாலும் அதற்கு ஆகும் கோர்ட்டு செலவிற்கு தேவையான பணம் எங்கிருந்து கிடைக்கப்
போகிறது நல்ல யோசிங்க பதிவர்களே...
நீங்கள் யோசிக்கும்
வரை நான் ஏற்கனவே எழுதி வைத்த பதிவிற்கு கிராபிக்ஸ்மிக்ஸ் செய்து ஒரு போட்டோ ரெடி பண்ணுகிறேன்
அதற்கு அப்புறம் எனக்கு பதிவுகளை எழுத தொடர்ந்து ஆதரவு தரும் மோடி அவர்களைப் பற்றி
பாதி எழுதிய பதிவை முடித்துவிட்டு அதன் பின் இந்தியாவில் உள்ள தலைவர்களின் பேச்சுகளை
கலாய்த்து எழுதிக் கொண்டிருக்கும் பதிவையும் முடிக்கிறேன்.
அதற்குள் நீங்கள்
ஒரு முடிவிற்கு வந்து சங்கத்தை ஆரம்பித்து வைத்திருந்தால் கவிதைகளை எழுதி என்னப் போன்றவர்களை
டார்ச்சர் பண்ணும் தோழிகள் மற்றும் தோழர்கள்
மீது எனக்கு அவர்கள் மன உழைச்சலை தருகிறார்கள் என்று வழக்கு தொடர்கிறேன்...
ஹீஹீ அப்ப நான்
வரட்டா?
டிஸ்கி : பலர்
பதிவு எழுதுபோது மிக நீளமாகவும் கருத்து போடும் போது மிக சுருக்கமாக அருமை என்று பதிந்து
செல்வார்கள் ஆனால் நானோ பதிவை சுருக்கமாக எழுதி கருத்தை மிக நீளமாக எழுதிவிடுகிறேன்.
இது பதிவு அல்ல கந்தசாமி அவர்களின் பதிவிற்கு நான் எழுதிய பதில் கருத்துக்கள்தான் இவ்வளவு
நீளமாக போய்விட்டதால் அதை அப்படியே இங்கே பதிவாக இட்டு செல்லுகிறேன்
டிஸ்கி: பதிவர்
சங்கம் ஆரம்பித்தால் அந்த சங்கம் பூரிக்கட்டை பிரச்சனையில் இருந்து என்ன காப்பாற்ற
உதவுமா? பதில் சொல்லுங்க.....
டிஸ்கி : சங்கத்திற்கு
அகில உலக கனவுக்கன்னி நயன்தாரா வலைப்பதிவர்கள் சங்கம் என்று வைக்கலாமா அல்லது அகில உலக அம்மா
புகழ்பாடும் வலைப்பதிவர் சங்கம் என்று வைக்கலாமா. தமிழக்கு உயிரை கொடுக்கும் தன்மான
கலைஞர் புகழ் பரப்பும் வலைப்பதிவர் சங்கம் என்று வைக்கலாமா? அல்லது பூரிக்கட்டை புகழ்
மதுரைதமிழன் ஆதரவு வலைப்பதிவர் சங்கம் வைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்களேன்
Photo
courtesy : பழனியப்பன் கந்தசாமி, புலவர் இராமாநுசம், பொன்.தனபாலன்
மூவருக்கும் எனது நன்றிகள். ஒருவேளை உங்கள் படத்தை இங்கு நான் பதிந்து இருப்பதற்கு
ஏதாவது ஆட்சேபணை இருந்தால் தகவல் தெரிவிக்கவும் . நீக்கிவிடுகிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
@அன்பேதமிழ் உங்களின் கருத்தை என்னால் இங்கு வெளியிட இயலாது. முதல் காரணம் அந்த கருத்து இந்த பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அது ஒருவரை குறிவைத்து காழ்புணர்ச்சிகாரணமாக அந்த கருத்து வெளியிடப்பட்டதாகவே நான் கருதுகிறேன். முடிந்தால் உங்களுக்கு என்று ஒரு தளம் அமைத்து அதில் தாராளமாக வெளியிடுங்கள்.நேரம் இருந்தால் அங்கு வந்து பதில் இடுகிறேன் மன்னிக்கவும்
ReplyDeleteமதுரைத் தமிழன் கருத்தே எனது கருத்தும். நான் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்கள். வலைப்பதிவர்களுக்கு என்று மாநிலம் தழுவிய ஒரு சங்கம் தேவையில்லை. புதுக்கோட்டை நண்பர்கள் நடத்தும் ’கணினித் தமிழ்ச் சங்கம்’ போன்று ஆங்காங்கே அமைப்புகள் இருந்தாலே போதும். வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டும் ஒருங்கிணைப்பு செய்து, இப்போது போல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.
ReplyDeleteசங்கத்திற்கு பதில் நம்ம பதிவர்களின் நட்பு வட்டமே சங்கத்தை விட மிக பலம் பெற்றது அப்படி இருக்க சங்கம் அவசியமில்லை.
Deleteஎன் போட்டோவை என் அனுமதி இல்லாமல் வெளியிட்டதற்காக சங்கம் ஆரம்பித்தவுடன் முதல் வழக்கு உங்கள் மீது போடப்படும் என்று அறியவும்.
ReplyDelete
Deleteஎன்னங்க வருங்கால சங்க தலைவர் பொருளார் செயலாளர் படத்தை கூட போட அனுமதி வாங்கணும்மா என்ன? உங்க படத்தை உங்கள் அனுமதி இல்லாமல் பதிந்தது தவறா, ச்சே ச்சே பதிவர்களுக்கு சங்கம் ஆரம்பிக்க நினைக்கும் போதே ஒற்றுமை இல்லையே
என்னாது.. சங்கமே ஆரம்பிக்கல .. அதுக்குள்ள மூன்று பதவியையும் தாரை வார்த்து விட்டீர்களே.. உங்கள் மேலானா ரெண்டாம் வழக்கு என்னிடம் இருந்து.
Deleteஎன்னது சங்கத்தின் வெளியுறத் துறை செயலாளரும் என் மீது வழக்கு தொடுக்கப் போகிறாரா என்ன அநியாயம் இது ஐயா
Deleteஅச்சச்சோ அ(ட)ப்பாவி அருமை (மருதை) தமிழன் மேல் வழக்கா. உங்கள் கண் எதிரில் உங்கள் கொடும்பாவி கொளுத்தப்படும். நீங்கள் செல்லுமிடமெல்லாம் (தமிழனின் கைக்காசை முதல் வைத்து) மகளீர் அணியினர் ஆர்பாட்டம் செய்வார்கள். அவருக்காக மண்சோறு சாப்பிடுதல் மற்றும் அலகு குத்துதல் என்ற தமிழ் கலாச்சார நிகழ்வுகள் ந்டைபெறும். மேலும் உங்கள் மேல் எல்லா மாவட்ட நீதி மன்றங்களிலும் வழக்கு தொடரப்படும் (இதுக்கும் வலையுலக புரட்டாசி சாரி புரட்சியாளர் வேறு யாரு நம்ம அமைப்பின் நிறுவனர் அண்ணன் தமிழன் தான்) முதலீடு செய்வார் என்பதை அன்போடு பகிர்கிறேன்.
Deleteஆஹா பல அதிரடி திட்டங்களை தீட்டுகீறீர்களே திராவிட கழக அனுபவம் அதிகம் உண்டோ
Deleteபதிவர்கள், பதிவர்கள் விழாவில் இணைவதுதான் பெருமை. 'நிறைய பதிவாளர்கள் கட்சி சார்ந்த கருத்தை இடுபவர்கள். சிலர் பொதுவாக எழுதுபவர்கள். சிலர் நகைச்சுவையாக எழுதுபவர்கள். நட்பினாலும், அவர்கள் எழுத்தினாலும் (எல்லா இடுகையும் அல்ல. பெரும்பான்மை இடுகைகள்) கவரப்பட்டுத்தான் இந்தமாதிரி விழாக்களுக்கு வருகின்றனர். சங்கம் ஆரம்பித்தால் சரிவரும் என்று தோன்றவில்லை.
ReplyDeleteமிக சரியா சொன்னீர்கள் சங்கம் ஆரம்பித்தால் கழகம் & கலகம் உள்ளே புகுந்துவிடும் அப்புறம் நமது நட்புக்குள் பிளவு வந்துவிடும்
Deleteஉண்மையை உண்மையாக ‘அவர்கள் உண்மைகள்’ வாயிலாகக் கேட்டதில் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி அடைந்....தேன்.
ReplyDeleteமுனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பின்னூட்டத்தை நான் மிகவும் ரஸித்....தேன் ! சிரித்....தேன் !!
நானும் ரசித்தேன்.....என் மீது கேஸ் போடமாட்டேன் என்று நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். சங்கம் வருகிறதோ இல்லையோ ஆனால் அதை பற்றி எங்களுக்கு இருவருக்கும் பதிவிட விஷயம் கிடைத்துவிட்டது
Deleteதங்கள் கருத்து முழுவதிற்கும் எங்கள் ஓட்டு. சங்கம் தேவையில்லை. இப்போது இருக்கும் நம் உறவுகள் மகிழ்வைத் தருவதனாலும், இந்த ஒற்றுமையினால் தான் கடல் கடந்தும் எழுதும் பதிவர்கள் உங்கள் அனைவரின் ஆதரவு, அன்புடனும் உள்ளூர் நண்பர்களின் ஆதரவு, புதுக்கோட்டை நண்பர்களின் உழைப்பு, ஆர்வம் எல்லாம் இணைந்து இப்படிப்பட்ட ஒரு விழாவை நடத்த இயலுகின்றது. இந்தியச் சங்கங்கள் எதுவுமே உருப்படவில்லை. கோஷ்டிப்பூசல், அரசியல் ....இப்போது இருப்பதே மிக நன்றாக இருக்கின்றது. இன்னும் திரு பழனி கந்தசாமி அவர்களின் பதிவை வாசிக்கவில்லை. உங்கள் கருத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. அதையும் வாசிக்கின்றோம்.
ReplyDeleteகீதா: அதே அதே....கொசுறு....உங்கள் டிஸ்கி சூப்பர். 3 வது டிஸ்கியின் முதல் பரிந்துரையும், கடைசிப் பரிந்துரையும் ஹஹாஹ் ஸோ நாங்க கை தூக்கிட்டோம் அதுக்கு....அதிலும் 3 வதிற்கு அதிகம் ஏனென்றால் இப்போது உங்கள் 2 வது டிஸ்கிக்கி வருகின்றேன்...
உங்களைப் பூரிக்கட்டை அடியிலிருந்துக் காப்பாத்திடலாம்னு சொல்லி பதிவுலேயே போட்டாச்சே...பரிந்துரையும் கொடுத்து...அஹஹஹ் ஆனால் ஒன்று தமிழா உங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வகைப் பூரிக்கட்டை அடிகளும் அங்கும், இங்கும், எங்கும் எல்லாமே அன்புடன் வழங்கப்படுவது!!!!!!ஹ்ஹஹ
எனக்கு நீங்கள் உங்கள் முதல் வோட்டை போட்டு இருப்பதை பார்த்ததும் எனக்கு ஒரு ஆசை சங்கம் வேண்டாம் என்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரையும் சேர்த்து நம்ம தலமையில் ஒரு சங்கம் ஆரம்பித்தால் என்ன?
Deleteஉங்களிடம் எல்லாம் சொல்லாமல் வந்து சந்தித்தது பூரிக்கட்டைக்கு பயந்தே சொல்லிவிட்டு வந்து இருந்தால் நீங்க எல்லாம் பூரிக்கட்டையோடு அல்லவா வந்து இருப்பீர்கள்,,,
//சூல்நிலைகள் ... //கூடி கழித்து //உழைச்சலை
ReplyDeleteஎப்பா..இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. மாற்றி கொள்ளவும்... என்னங்க தூக்கத்தில் எழுதப்பட்டதா பதிவு ???
நீங்கள் சொல்வது சரிதான் ... சங்கத்தினால் பல பிரச்சனைகள் வாய்ப்புண்டு..
இரவு நேரத்தில்தான் வீட்டு அம்மாவிற்கு தெரியாமல் இருட்டுக்குள் எழுதுவதால் இப்படி சில பிழைகள் வருகிறது கூடிய விரைவில் அப்படி வராமல் செய்கிறேன்..தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே
Deleteசங்கமே வேணாம்... இப்படியே ஒற்றுமையாய்த் தொடர்வோம்.
ReplyDeleteசங்கமே வேண்டாம் என்பதற்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் அதில் சேர வரீங்களா?
Deleteயோவ் தமிழா அவர(ல) நினைச்சு என்ன உரலில் இடாதீரும்.
ReplyDeleteஅட அன்பு நீ யாருப்பா? அப்ப அப்ப என்னை குழப்புகிறாய்
Deleteஎன்னப்பா இது இங்கேயுமா,
ReplyDeleteநான் பாட்டுக்கு ஏதோ எழுதலாம் என்று வந்தால்,,,,
நான் வரலப்பா இந்த ஆட்டத்திற்கு, நன்றி.
அப்ப நான் ஆரம்பிக்க போகும் சங்கத்தில் சேர்ந்துவிடுங்க அதானுங்க வலைப்பதிவர் சங்கம் வேண்டாம் என்பதற்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று ஐடியா நிறைய பேர் வருவாங்க போல இருக்கு அங்க நம்ம ஆட்டத்தையும் பாட்டத்தையும் வைச்சுக்கலாம்
Deleteஹஹ்ஹஹ்ஹா ....
ReplyDeletehttp://abayaaruna.blogspot.in/2014_03_01_archive.html என்கிற என் பிளாக்கைப் பார்க்கவும் .
சங்கம் வளர்த்த தமிழகம் நாம் என்பது புரியும்.
Deleteகண்டிப்பாக வந்து படிக்கிறேன்
வலைப்பதிவர் ஒற்றுமைக்கு உதவாது அய்யா இந்த சங்கம்!
ReplyDeleteசங்கம் என்றாலே பிளவு என்றாகி விட்டது.
வலைப்பதிவர் அவரவர் அவரது எழுத்தின் மீது நம்பிக்கை வைத்தாலே போதும்.
அடுத்தவரை பற்றி அவதூறு பேசி விட்டு பின்பு வருத்தம் பேசி வருவது, சங்கத்திடம் போய் முறையிடுவது தேவதானா? சற்றே சிந்தித்து பாருங்கள்!
அனைத்து பதிவர்களும் அன்பானவர்களே!
நேரடி பேச்சின் மூலம் தெளிவு காண்பதே சிறப்பு!
கொள்ளை புறத்தின் வழியே அடுத்தவர் சொல் கேட்டு செயல்படுவது துன்பத்தின் தூணாகத் தான் நிற்கும். துயரத்தை போக்காது.
பண்டையக் காலத்தில் மதுரை மாநகரில் தமிழ் வளர்த்த சங்கம் மட்டுமே போதும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நீங்கள் எண்ணுவதும் நான் எண்ணுவதும் ஒன்றுதான் சங்கம் நம் ஒற்றுமையை குலைத்துவிடும்
Deleteசங்கங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்த எனக்கு உங்களின் கருத்துக்கள் யோசிக்க வைக்கின்றன!
ReplyDeleteசங்கம் இல்லாமலே பதிவர் விழா நடத்திகின்ற போதே பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறதை விழா நடத்துபவர்களே நன்கு அறிவார்கள். அதனால் சன்று ஆழ்ந்து யோசித்தால் அதன் பாதகங்கள் நமக்கு நன்றாக தெரியும்
Deleteதாங்கள் சொல்லுகின்ற செய்திகள் உண்மைதான் நண்பரே
ReplyDeleteபல சங்கங்களை பார்த்த அனுபவம் உங்களுக்கு மிக அதிகம் இருக்கும் என நினைக்கிறேன் அதனால்தான் நான் சொல்வது உங்களுக்கு உண்மையாகபடுகிறது
Deleteஇப்போதே பதிவர்கள் ஒற்றுமையாய் இருக்கிறோம்..சங்கம் வைத்தால் குலைந்துவிடுமோ என்ற பயம்தான் எனக்கும் வருகிறது சகோ.
ReplyDeleteஉங்களுக்காகவே சமர்ப்பிக்கப்படும் கவிதை:
கவிதைமேல் வழக்கா
கவிஞர்மேல் வழக்கா
நியாயமாத் தமிழா
மதுரைத் தமிழா
சங்கம் வளர்த்த மதுரை
பங்கம் வேண்டாம் தமிழா
கவிதைமேல் வழக்கா
கவிஞர்மேல் வழக்கா
:)) எப்பூடி?
இந்த அருமையான கவிதையை எழுதிய என் கவிதைக்கு(அதான் தோழி கிரேசுக்கு) போக்கே பார்சல்:)
Deleteஇப்படி கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே கவிஞர்கள் மதுரைத்தமிழனை பற்றி "அழகான" கவிதை எழுதி வெளியிடுவார்கள். அதனால்தான் நான் இப்படி.....ஹீஹீஹீ நாங்களும் மதுரைக்காரங்கதான் எப்பூடி ...ஹீஹீஹீ
Deleteமைதிலி நீங்க பொக்கே அனுப்புவதாக சொன்னது பொக்கைவாய் கிழவரைதானே.. ஏன் இந்த கோபம் எங்க ஊர் சகோ கிரேஸ் மேல......(மைதிலி வாய்ஸ்: நாம என்ன சொன்னாலும் இந்த மதுர அப்படியே திரிச்சுடுறானே மாமி சரியில்ல மதுர வாயில் இன்னும் பூரிக்கட்டையால் நாலு அடி அதுவும் மிகவும் பலமாக அடிக்கனும் ஹும்ம்ம்ம்ம்)
Deleteவணக்கம்
ReplyDeleteதாங்கள் சொல்லும் கருத்து சரியானது....பதிவர்கள் யாவரும் ஒற்றுமையாக உள்ளார்கள்.தேவை..தேவை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேவை தேவை என்று சொல்லி என்ன தேவை என்றுமட்டும் சொல்லாமலே சென்றுவிட்டீர்களே நண்பா
Deleteகிட்டத்தட்ட இதே மேட்டரை ‘பூனைக்கு மணி கட்டலாம்’ என்ற தலைப்பில் நம் திரு. யாதோ ரமணி சார் இன்றைக்கே [07.10.2015] ஓர் பதிவாக வெளியிட்டுள்ளார்கள். தாங்கள் ’பதிவர் சங்கம் வேண்டாம்’ என்று சொல்வதை அவர் அங்கு ‘பதிவர் சங்கம் வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.
ReplyDeleteஇதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு தங்களுக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டுள்ள சிலர் அங்கு வேறு மாதிரி அவருக்கு ஆதரவாக பின்னூட்டமிட்டுள்ளார்கள். பதிவினைப் படித்து மனதில் வாங்கிக்கொண்டு அதன்பின் பின்னூட்டமிடுவது இல்லை என்பதற்கு இவர்களே நல்ல உதாரணமாகக் காட்சியளிக்கின்றனர்.
பலபதிவர்கள் உண்மையான கருத்தை சொன்னால் நம்மை அந்த பதிவர் தப்பாக எடுத்து கொள்வார்களோ என்று கருதி அப்படி செய்கிறார்கள். அங்கு ரமணி சாரின் காருத்துக்கு எதிராக் சொன்னால் அவர் தப்பாக எடுத்து கொள்வார் என நினைக்கிறார்கள் அதையே இங்கும் செய்கிறார்கள் அதனால்தான் இந்த குழப்பம்.
Deleteநிறைய பேருக்கு பதிவுக்கு கருத்து சொல்வது பதிவருக்கு எதிராக கருத்து சொல்வது என்று நினைத்து கொள்கிறார்கள்..
அப்படிபட்ட எண்ணத்தை பதிவர்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும். இங்கு நான் சங்கம் வேண்டாம் என்பதற்கு காரணம் சொல்லி பதிவு இட்டு இருக்கிறேன் வேறு யாராவது மிகவும் நன்கு யோசித்து வேண்டும் என்பதற்கு நல்ல காரணம் சொன்னால் நான் மாறக் கூடும்.காரணம் அவர்கள் யோசனைகள் என்மனதில் தோன்றாமல் இருக்கலாம் அல்லவா
பதிவர் சங்கம் வேண்டும் - பதிவர் சங்கம் வேண்டாம் என்பதில் மட்டுமல்ல, வேறு கருத்துக்களிலும் சில பதிவர்கள் அரசியல்வாதிகள் மாதிரி இரட்டை வேடம் போடுகிறார்கள்.
Deleteதிரு. ரமணி சார் அவர்களின் அந்தப்பதிவின் இணைப்பு:
ReplyDeletehttp://yaathoramani.blogspot.in/2015/10/16.html
Deleteரமணி சாரின் பதிவை சென்று படிக்கிறேன் நன்றி
சங்கம் மீது நம்பிக்கையில்லை ஐயா))))
ReplyDeleteபூரிக்கட்டை அடிவாங்குவதே போதும்)))
ReplyDelete
Deleteசங்கம் அமைத்து என்னை பூரிக்கட்டை அடியில் இருந்து காப்பாற்றுவீர்கள் என்று பார்த்தால் என்னை இப்படி கைவிட்டு விட்டீர்களே?
த ம 3
ReplyDelete