இந்த காலத்தில்
இதயம் இல்லாதவர்களை நாம்மால் பார்க்க இயலும்.
ஆனால் இணைய தொடர்பு இல்லாதவர்களை நாம் பார்ப்பது என்பது இந்த காலத்தில் மிக அறிதாக
போய்விட்டது என்பது யாவரும் மறுக்க முடியாத உண்மை.
அப்படிபட்ட இணைய
தொடர்பால் நாம் அடைந்த பயன்கள் மிக அதிகமே ,அதில் நல்ல மற்ற கெட்ட பயன் களும் அடங்கும்
.அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே நல்லதோ கெட்டதோ கிடைக்கின்றன.
உலகில் சுதந்திர
நாடுகள் பல இருந்தாலும் அங்கு நாம் பல கருத்துக்களை மிக சுதந்திரமாக சொல்ல வாய்ப்புக்கள்
கிடைக்காது அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் நம் கருத்துக்கள் மிக குறுகிய இடத்திலே
அடைக்கப்பட்டு இருக்கும். இதற்கு காரணம் சில சுயநலவாதிகள் நமக்கு தலைவாரக இருப்பதாலும்
அந்த தலைவர்களின் அடிபுடியாக ஊடகங்கள் இருப்பாதாலும் நமது கருத்துக்கள் வெளிவர வாய்ப்பே
இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அதற்கெல்லாம் முற்றிபுள்ளி வைக்கும் விதமாக இணையம் மூலம்
நமக்கு கிடைத்திருப்பது சமுக இணையதளங்கள். அதில் மிக முக்கியமாக இருப்பது கூகுலின்
ப்ளாக் ஸ்பாட், பேஸ்புக், டுவிட்டர். இதன் மூலம் நமது கருத்துகள் வெகு வேகமாக உலகமெங்கும்
பரவுகிறது. இப்படி இணையம் மூலம் பங்கேற்பதன் மூலம் பல நாடுகளில் சமுகப் புரட்சியே ஏற்பட்டு
இருக்கிறது.
இங்கு நாம் சமுக
தளங்கள் என்று சொல்லும் போது பல தளங்கள் இருக்கின்றன. அதில் பேஸ்புக்
டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றன் தளங்கள் நதி நீரைப் போல அங்கு நாம் சொல்லும் கருத்துகள்
பருவ நிலைக்கு ஏற்ப நதிகளின் ஒட்டம் மாறுபடுவது போல இங்கு பதியும் நமது கருத்துகளின்
ஒட்டமும் மாறுகின்றது சில சமயங்களில் அது புயலை போல தாக்குவதும் சில சமயங்களில் அமைதியாக எந்த
சலனமும் இல்லாமல் நதியின் நீர் கடலில் கலப்பது போல நமது பதிவுகளும் கலந்து விடுகிறது. அதனால் இங்கு நாம் பதிவிடும் தகவல்களை நாம் அன்றன்று கவனிக்க வில்லை என்றால் கடலில் கலந்த
நீர் போல ஆகிவிடும்.
ஆனால் வலைதளங்களில்
எழுதுவது என்பது இமயமலைகளில் நமது கருத்துகளை செதுக்குவது போல. அது எந்த நேரத்திலும்
அழியாமல் நிலை நிற்ககூடிய அஜந்தா எல்லோரா குகை ஒவியங்களை போல காலம் காலமாக
நிற்கும்.
பேஸ்புக் டிவிட்டர்களின்
வரவால் வலைத்தளத்தின் வளர்ச்சி அடையவில்லை என பலர் நினைக்கிறார்கள். வலைத்தளம் என்பது
நமது இந்திய கலாச்சரத்தை போன்றது என்னதான் வெளிநாட்டு கலாச்சராம் நம்மை பலவகைகளில்
பாதித்தாலும் எப்படி இன்றும் நமது கலாச்சாரம் அழியாமல் நிற்கிறதோ அது போலத்தான் வலைதளமும்
நிலைத்து கம்பிரமாக நிற்கிறது.
அப்படிபட்ட பெருமையை
கொண்ட வலைத்தளங்களை பல பதிவர்கள் நடத்தி பல
தகவல்களை அள்ளித் தருகின்றனர். அப்படி பதிவுகளை பதியும் வலைத்தள பதிவர்கள் வருட வருடம்
சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். அது போல இந்த வருடம் தமிழ் வலைபதிவர்கள் ஒன்று கூடி புதுக்கோட்டையில் மீண்டும் சந்திக்கிறார்கள். இப்படி ஒரு சந்திப்பு நடத்தும் போது அந்த சந்திப்பு
பற்றிய விஷயங்கள் பல பதிவர்களுக்கு சென்று சேர்வதில்லை. இதை ஒரு ஆலோசனையாக சொல்லி இருந்தேன்.
இப்படி நான் சொல்லகாரணம் விழா நடத்துபவர்கள் பதிவுகள் எழுதி விழா பற்றிய தகவல் பதியும்
போது அது ஒரு குறுகிய வட்டத்தை மட்டும் அடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் அது மட்டுமல்ல
விழா நடத்துபவர்கள் பதிவர்கள் பற்றிய விபரங்களை பல திரட்டிகளின் மூலம் திரட்டினாலும்
அனைத்து பதிவர்களையும் அவர்களால் திரட்ட முடியாது காரணம் பல பதிவர்கள் அந்த மாதிரி
திரட்டுகளில் சேர்வதில்லை அல்லது அது பற்றி பலரும் தெரியாது இருக்கிறார்கள் என்பது
உண்மையே
அதனால் அப்படிபட்ட பதிவர்களுக்காக
விழாக் குழுவினர் சார்பாக இந்த பதிவு விழாவிற்கு வருகை தாருங்கள் என்று அழைப்பு விடுவிக்கிறேன் .வாருங்கள்
வலைபதிவு ஜாம்வான் பலரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள் .ஜாம்பவான்கள் என்று
சொன்னதும் பயந்து விடாதீர்கள் அவர்கள் அனைவரும் பழகுவதற்கு மிக எளிமையானவர்கள் இனிமையானவர்கள்.
வழக்கதிற்கும் மாறுபட்ட சந்திப்பாக அதே நேரத்தில் மிக பயனுள்ள சந்திப்பாக ஆக்க விழாக்
குழுவினர் மிக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்கள்.
எனது தளம் வரும்
அனைத்து வலைபதிவர்களையும் நேரில் சந்தித்து அழைக்க விருப்பம்தான் ஆனால் பட்ஜெட் இடம்
கொடுக்காததால் இங்கேயே அழைக்கிறேன்.
இதோ உங்களுக்கான
அழைப்பிதழ்.
|
|
இந்த விழாவில்
கலந்து பாருங்கள் அதன்பின் சொல்லுங்கள் இந்த விழா அவசியமா இல்லையா என்று. நிச்சயம்
நீங்கள் சொல்லப் போவது வருஷத்திற்கு ஒரு தடவைதானா மாதம் மாதம் கிடையாதா என்றுதான்.
டிஸ்கி: விழாவிற்கு
அழைத்த நீங்கள் விழாவில் கலந்து கொள்வது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று கேட்பவர்களுக்கு.
நான் விழாவிற்கு சென்றால் அங்கு அவர்களால் எனக்கு அரசியல் தலைவர்களிடம் பாதுகாப்பு
கொடுக்க இயலாது. அதற்க்காக அவர்கள் பெரும் செலவை செய்ய வேண்டியிருப்பதால் நான் அங்கு
செல்லவில்லை.அதனால் நண்பர் விசுவின் புத்தக திருவிழாவிற்கு என்னுடைய சார்பாக நான் அனுப்பிய
ஆள் கலந்து கொண்டது போல இந்த விழாவிலும் ஒருத்தர் கலந்து கொள்வார்.
டிஸ்கி: வலைத்தளம் இல்லாதவரா
நீங்கள்? உங்களுக்கு வலைத்தளம் தொடங்கி உங்கள் எண்ணங்களை பதிய ஆசையா? ஆனால் அதை எப்படி
செய்வது என்று தெரியவில்லையா? உங்கள் ஆசையை அல்லது கனவை நிறைவேற்ற ஒருவர் இருக்கிறார்.
அவரை தொடர்பு கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
.
அன்புடன்
மதுரைத்தமிழன்
என் புத்தக விழாவின் போது தாங்கள் அனுப்பிய ஆசாமியிடம் அவசரத்திற்கு கை மாத்தாக ஒரு தொகை வாங்கினேன். அதை மீண்டும் அனுப்பலாம் என்றால் அவர் இருப்பிடம் தெரியவில்லை. அதை காத்தி கணக்கில் எழுதி விடட்டா ?
ReplyDeleteகாந்தி வேண்டாம் ஒபாமா கணக்கில் போட்டுடுங்க
Deleteநன்றி நண்பரே! நீங்கள் எந்த முகமூடியில் வருகிறீர்கள் என்வதை எனக்கு மட்டும் ரகசியமா அப்பறமா சொல்லுங்க..ஆங்..சரி சரி.. ஓ! அப்படியா? நன்றி அய்யா
ReplyDeleteஉங்ககிட்ட ரகசியம் சொன்னா மைக்கை பிடிச்சு ஊரெல்லாம் சொல்லிடுவீங்க நான் வரல இந்த விளையாட்டுக்கு
Deleteசகா!! உங்க ஸ்டைல அட்டகாசமாக இருக்கே பதிவு!!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))
ReplyDeleteஉங்க அண்ணா ரொம்பவே படுத்துகிறார். கடைசி நிமிஷத்தில் மெயில் அனுப்பி வேண்டுகோள் வைக்கிறார். அடுத்த தடவை உங்க அண்ணாவை பார்த்தால் முதுகில் நல்லா ஒரு போடு போடப் போறேன்....
Deleteஅவர் மட்டும் தான் படுத்துறார்ன்னு சந்தோஷப்பட்டுகோங்க சகா:(( இங்க புதுக்கோட்டைல போன மாசம் வரை அக்கா, அண்ணா, சகா வா இருந்த எல்லாரும் இப்போ பதிவரா தான் பேசுறாங்க. என்கிட்டே மட்டும் இல்ல... அவங்க குடும்பத்திலும் அப்படிதான் பேசுறாங்க:))))) அவ்ளோ full form ல இருக்கோம் எல்லோரும். நீங்க தான் இதெல்லாம் மிஸ் பண்ணுவீங்களேன்னு பீல் ஆகுது:( விடுங்க...உங்களால எப்ப வரமுடியுதோ அப்போ சந்திப்பு ஒன்னு வச்சா போய்ச்சு!!
Deleteஅந்த ஒருவரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்... (உள்ளோம்)
ReplyDeleteச்சே என்னை பார்க்க உங்களுக்கு ஆவலாக இல்லை அந்த ஆளை பார்க்க ஆவலாக இருக்கிறீர்கள் ஹும்ம்ம்ம்ம்
Deleteஅட! நீங்களும்தானே கை கோர்த்துருக்கீங்க!!!! அசாத்தியமாக.... நினைச்சோம் எப்படி மதுரைத் தமிழன் வெளியிடாம திருவிழாவா அப்படினு!!! அப்புறம் எதுக்கு இந்த அழுகை??? னாங்கதான் நிறைய எழுத முடியாம போச்சு...
ReplyDeleteமாமி கொஞ்சம் சீக்கிரமாவே மொத்துங்கப்பா தமிழனை....பூரிக்கட்டையாலே....
பரவால்ல உங்கள் சார்பாக வரும் அந்த ஆளைச் சந்திக்க ஆவலுடன் உள்ளோம்...அப்ப நீங்க வரீங்கனு சொல்லிட்டுப் போங்களேன் ஹாஹ்ஹ்!!! வாங்க தமிழா!
ReplyDeleteஎன்ன இப்படி சொல்லீட்டீங்க... உங்ககிட்ட சொல்லிதான் அப்படிபட்ட ஆளை அனுப்ப ஏற்பாடு பண்னனும் என நினைத்தேன்
Deleteதுளசி அண்ணா, நான் நினச்சேன், நீங்க சொல்லிட்டீங்க :)
Deleteநீங்க எந்த வேஷத்துல வந்தாலும் கண்டு புடிச்சுருவோம்ல....
ReplyDelete
Deleteஅப்ப வேஷமே போடாமல் வந்துடுறேன் அப்ப யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாதே ஹீஹீஹீ ஐடியா கொடுத்தற்கு நன்றி
ஆமா..சார்லி சாப்ளின் மாதிரி மாறுவேடப்போட்டியில போய்க் கலந்துகிட்ட சார்லி சாப்ளினுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைச்சுதாம் னு சொல்ற கதை எதார்த்தமான உண்மையைத் தானே சொல்லுது? அது நடக்கவும் கூடியதுதானே? இப்ப நம்ம பரமசிவனார் வந்தாலும் நீ எங்க சிவாஜிமாதிரி இல்லயே? னு பக்தர்கள் நம்பாத உலகமிலலையா? எப்படியோ உங்க பேச்சு விழாவுல விளாவாரியா நடக்கப் போறது உண்மை..இது “இவர்கள் உண்மை“! எப்புடீ?
Deleteஅவசரமா கிறுக்குனது அப்டின்னு நீங்க சொல்றதே இப்டின்னா...
ReplyDeleteகலகிட்டீங்க சகோ.
விழாவிற்கு சென்று பெப்சிகளமாகக் கொண்டாடிவிட்டு வாருங்கள்.
நல்ல விரிவான அலசல் நண்பரே அருமை
ReplyDeleteதமிழ் மணம் 2
அழைப்பு அருமை!
ReplyDeleteவிரிவான வித்தியாசமான அழைப்பு!
ReplyDeleteஅருமை!
அங்கு விழாவில் எத்தனை பேருடன் உரையாட முடியும் புது நட்பை உருவாக்க முடியும் தெரியவில்லை. ஒருவரிடம் ஒரு நிமிடம் என்றாலும் குறைந்தது நான்குமணிநேரமாவது வேண்டும் . இல்லையென்றால் வெறும் ஹை ஹை பை பை ஆகி விடும் போல் தோன்றுகிறது
ReplyDeleteஅருமையாக அழைத்தீர்,,,,,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அழைப்பு அருமை நண்பரே
ReplyDeleteதம +1
அடடே! உங்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த முறையும் மிஸ் ஆகிவிட்டதே!
ReplyDeleteவித்தியாசமான அழைப்பாக இருக்கே..
ReplyDeleteநீங்கள் அடுத்த முறை இந்தியா வரும்போது சந்திப்போம்...
சந்திப்பின் முக்கியத்துவத்தை அழகாய் சொல்லி விட்டீர்கள் மதுரைத் தமிழனின் அழைப்பு இன்னும் பலரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteஜாம்பவான்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.
வித்தியாசமான முறையில் உங்கள் அழைப்பு! பலே!
ReplyDelete