சமுக வலைத்தளங்களில் பிரபலமாவது
எப்படி?
சோஷியல் தளங்களான ப்ளாக்கர்,
பேஸ்புக், டிவிட்டர் தளங்களில் பிரபலமாவது என்பது இப்போது பலருக்கும் ஆசைதான் .ஆனால்
பெண்கள் மிக எளிதில் பிரபலம் ஆகிவிடுவார்கள். ஆனால் ஆண்களின் நிலமை அப்படி அல்ல. ஆனால்
பல ஆண்கள் தாங்கள் சொல்லும் நல்ல கருத்துகளை பலர் படிக்க விரும்புவார்கள்
ஆனால் நல்ல கருத்தை படிக்க ஆள் இல்லாமல் பெண்கள் போடும்
மொக்கை பதிவுகளை படிக்க ஈமொய்ப்பது போல மொய்ப்பார்கள்.(இப்படிதான் அப்ப அப்ப புலிக்குட்டிகளான கிரேஸ் மைதிலி சசிகலா சீண்டி விடனும்)
அப்படி மொய்க்கும் கூட்டத்தை நீங்கள் சொல்லும் கருத்தை படித்து பாராட்ட்ட செய்வது மிக
எளிது அதற்காக நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும் அப்படி எடுத்தால் நீங்களும்
பிரபலம்தான்.
அப்படி நீங்கள் பிரபலமாக
சில வழிகளை நான் சொல்லப் போகிறேன்,
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது
உங்களிடம் உள்ள பழைய நாவல்களை( சாண்டியல்யன் நாவல்கள் அல்லது பொன்னியின் செல்வன் சிலப்பதிகாரம்
போன்ற இலக்கிய புத்தகம் ) நீங்க படியுங்க. அதில் இருந்து உங்களுக்கு பிடித்த ஒரு பெண்ணின்
பெயரை தேர்ந்தெடுத்து அதை வைத்து ஜிமெயிலில் ஒரு அக்கவுண்டை ஒப்பன் பண்ணி அதன் மூலம்
பேஸ்புக் டிவிட்டர் அல்லது ப்ளாக்கரில் ஒரு அக்கவுண்டை ஆரம்பியுங்கள்.
அடுத்தாக அப்படி ஆரம்பித்த
தளங்களில் புரோபைல் படம் ஒன்று போட வேண்டும் அதில் உங்கள் ஒரிஜினல் படத்தை போட்டுவீடாதீர்கள்.
அதன் பிறகு யாரும் எட்டிப் பார்க்கமாட்டார்கள்( இது ஜிமெயில் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்
பெண்களுக்கும் பொருந்தும்) அதனால் அழகான நடிகையின் புகைப்படங்களையோ அல்லது அழகான மலரின்
படத்தையோ தேர்வு செய்யவும்.
இனிமேல்தான் ஜாக்கிரதையாக
இருக்கனும் எடுத்தவுடனே தமிழில் பதிவு இட்டுவிடாதீர்கள். ஆங்கிலத்தில் குட்மார்னிங்க்
சொல்லுங்கள் .அப்புறம் அழகான நாய்குட்டி படம்
போட்டுவிட்டு ஸோ ஸ்வீட்டுன்னு சொல்லி பதிவு போடுங்கள்.
இப்படி சுயமா இது போன்ற பத்து
பதிவுகளை இங்கிலீசில் போடுங்கள். அதன் பின்
சினிமா பிரபலங்களின் பதிவுகளை .கருத்துக்களை ஷேர் செய்யுங்கள் . பெண்ணியக்கம்
பற்றி பேசுங்கள் அப்படியே சில நாள் செய்யனும் .ஏன்னா இந்த தொழில்ல பொறுமை மிக மிக அவசியம்.
அதுக்கு அப்புறம் அவர்கள்
உண்மைகள் போல உள்ள அக்கவுண்டை பாலோ செய்யுங்கள். எங்கள் பதிவுகளுக்கு கருத்து சொல்லுங்கள்.
எல்லாம் தங்கிலீஷில்தான் இருக்க வேண்டும்
அதன் பின் உங்கள் பதிவுகளில்
தமிழில் எப்படி டைப் செய்வது என்று ஒரு கேள்விகேட்டு பதிவிடுங்கள். அதை முதலில் பார்க்கும்
என்னை போல உள்ளவர்கள் அது ரொம்ப எளிது அதற்கு தனபாலனிடம் கேளுங்கள்
அவர் மிக எளிமையாக சொல்லி தருவார் என்று சொல்லி அவரின் இமெயில் ஐடியை தருவோம்
அல்லது சிலர் வலிய வலியவந்து உங்களுக்கு தமிழில் டைபடிப்பது என்பதை இன்பாக்ஸில் வந்து
சொல்லி தருவார்கள்
அப்புறம் நீங்க
பெண்ணா பதிவிட ஆரம்பித்து கொஞ்சம் பெண் பதிவர்கள்
கிட்ட அடிக்கடி பேச்சு கொடுக்கணும்.. இதற்கு
மைதிலி .கிரேஸ் சசிகலா, துளசி டீச்சர் ,கீதா மேடம் ,தேனம்மை போன்றவர்களின் தளத்திற்கு
போய் கமெண்ட் இடனும்
அது போல மதுரைத்தமிழனின் 'அவர்கள் உண்மைகள்' தளதித்ற்கு போய் பெண்
மாதிரியே கருத்திடனும் .. நெழிவு சுழிவு பாவனை எல்லாம் மிக சரியா இருக்கணும் அதே நேரத்தில்
மிக கவனமாக இருக்கனும். அடிக்கடி அவன் பெண்களை அல்லது அவன்
மனைவியை கிண்டல் கேலி செய்யும் பதிவுகளில் க்ர்ர்ர்ர், ப்ர்ர்ர்ர் , வெவெவெவெ,, ஆவ்வ்வ்வ்
அப்டின்னு அடிக்கடி சொல்லனும். மாமிகிட்ட சொல்லி பூரிக்கட்டையால் உங்களை இன்னும் நல்ல
போடச் சொல்லனும் என்று கருத்துகள் போட்டுட்டே இருக்கணும்..அங்கே மைதிலி மாதிரி பெண்கள்
கருத்துகள் இட்ட உடனே டியர் யூ ஆர் ரைட்டுன்னு சொல்லனும்.
அது போல முத்துநிலவன்
,மது, தனபாலன். வை,கோபாலகிருஷணன், ரமணி ,பாலகணேஷ்.முரளி போன்றவர்களின் தளத்திற்கு போய்
அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல அண்ணா, ஐயா, சகா என்று விளித்து கருத்துகள் போடனும்.
அதே சமயத்தில் வேறு யாரவது
இன்பாக்ஸிலாவது அல்லது இமெயிலிலாவது தொடர்பு
கொண்ட்டா பதிலே அளிக்க கூடாது அதை அப்படியே இக்னோர் பண்ணனும்.
இதல்லாம முதலில் செய்யுங்க
அதன் பிறகு உங்களை தொடரும் பலோவர்களை கண்டு நீங்கள் பிரமிச்சுதான் போவீங்க. இதை பார்த்ததும்
நீங்க மிகப் பெரிய சமுகப் பேராளியாக மாறிடுவிங்க. அப்படி ஆகும் சமயத்தில் நீங்கள் நான்
பெண்ணல்ல ஒரு ஆண்தான் என்று சொல்ல மனது துடிக்கும் ஆனால் அதை மட்டும் கண்டிப்பாக செஞ்சுடுடாதீங்க.
அப்படி செஞ்சா உங்க நிலமை காங்கிரஸ் கட்சி மாதிரி
மாறிவிடும்.
எப்படி என் ஐடியா
இது போன்ற மேலும் பல நல்ல
செய்திகளை உங்களிடம் பகிர நான் சிந்தனைகள் செய்ய நேரம் தேவை என்பதால் இப்போதுவிடை பெற்று
அடுத்த பயனுள்ள பதிவோடு உங்களை சந்திக்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி
: நேற்று புதுக்கோட்டையில் நடந்த வலைபதிவர் விழாவை எனது நேரப்படி அதிகாலை நான்கு
மணிநேரம் வரை தொடர்ந்து பார்த்தேன் அதுக்கு அப்புறம் விழாவிற்கு வந்தவர்கள் என்னை மட்டும்
அழைக்காமல் சாப்பிட சென்றுவிட்டனர் உடனே நான் அழுது கொண்டே படுக்க சென்றுவிட்டேன் அதன்
பின் காலை வழக்கம் போல 6.30 க்கு எழுந்து பார்த்தால் விழாவிற்கு வந்தவர்கள் ஸ்நாக்கை
தின்று கொண்டே எஸ்ராவின் பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்.
நான் வந்ததது தெரிந்ததால் என்னவோ எஸ்ரா சட்டென்று பேச்சை முடித்து சென்றுவிட்டார்.
இல்லையென்றால் இந்த மதுரைத்தமிழன் தன்னை கலாய்துவிடுவான் என்ற பயம் போல... ஹீஹீ அந்த
பயம் இருக்கட்டும்.. விழாக்குழுவினர் எதிர்பார்த்தபடி விழா நல்லபடியாக வெற்றிகரமாக
முடிந்தது... கடைசியாக ஒரு செய்தி இந்த விழாவிற்கு இசை ஏற்பாடு செய்தது யாரப்பா? ஏன்
இந்த கொடுமை?
பதிவை ரசித்தேன். நல்ல யோசனைகள். நேற்று பதிவர் விழா நேரலையைக் கண்டபடியே நீங்கள், கேஜிஜி, ராம்ஜி யாஹூ, விசுவாசம் ஆகியோர் பங்கு கொண்ட கலந்துரையாடல்களை கேஜிஜி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததப் படித்து ரசித்தேன்.
ReplyDeleteதம +1
கேஜிஜி யார் லிங்க தரமுடியுமா?
Deleteகேஜிஜி எங்கள் ஆசிரியர்களில் ஒருவர். கே ஜி கௌதமன்!
Deleteமைதிலியை கலாய்க்க வேண்டும் என்ற சதித்திட்டதோடு எழுதப்பட்ட இந்த அரசியல்(!?!?) பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்!!! :))) முடியல....சிரிப்பு வந்துடுச்சு!
ReplyDeleteஎன்னது நீங்க வரலையா!!!! அப்போ அந்த தாத்தா யாரு!!! நீங்க தான் மாறுவேஷத்தில் வந்திருகீங்கனு நானும், தில்லையகம் கீதுவும், சசியும் ரொம்ப நேரம் அவர்கூட பேசிக்கிட்டு இருந்தோமே!!!!!
அப்ப மைதிலி பேருல எழுதுகிற ஆள் யாரு? நான் தாத்தா வேடத்தில் வந்திருப்பேன் என்று நினைத்தற்கு நன்றி அப்ப நான் இன்னும் இளைஞானகத்தான் இருக்கிறேன்....... சரி நாந்தான் அந்த வேடத்தில் வந்திருப்பதை அறிந்தும் நீங்கள் மூவரும் எங்கிட்ட ஏன் வந்து பேசவில்லை???????????????????????????????????
Deleteநாங்கதான் உங்க கூட தானே பேசிக்கிட்டிருந்தோம்...
Deleteகீதா...
வணக்கம்
ReplyDeleteஐடியா நல்லா இருக்கு ஆனால் நம்மைப்போன்றோர்கள் செய்யமுடியாது... காரணம் பொறுமை இல்லை... நல்லா கலாய்த்து விட்டீர்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்ப உங்களுக்கு பிரபலம் ஆக ஆசை இல்லை போல இருக்கிறது
Deleteநான் ஒரு பிரபல பதிவர் இருக்கிறது உங்க கண்ணுக்குத் தெரியலயா?
ReplyDeleteஇது பிரபலம் ஆக விரும்புபவர்களுக்கும் பிரபலம் ஆனவர்களுக்குமான பதிவு.. ஆனால் மிக மிக பிரபலம் ஆனவராச்சே அதனாலதான் உங்களை பற்றி சொல்லவில்லை
Deleteஅருமை
ReplyDeleteநன்றி நகைச்சுவை பதிவாளரே
Deleteஅட !! அப்ப , பொ.செ , சாண்டில்யன் ஹீரோயின் பெயரில் வந்தா கவனிக்கணும் ந்னு சொல்றீங்க !! ரைட்டு !! ஆமா , உங்க "அவள்" பெயர் என்ன :)
ReplyDeleteபொ.செ சாண்டில்யன் எல்லாம் மற்றவங்களுக்கு ஆனால் நான் கொஞ்சம் ஸ்மார்ட்டான ஆளு அதனால ஸ்மித்தா ரமேஷ்ன்னு பெயர் வைச்சு இருக்கேன்.... உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் வாய் தவறி உண்மையை சொல்லிட்டேனே ஹீஹீ
Deleteநான் வலைபதிவு ஆரம்பிக்கிறதுக்கு முன்னால சொல்லியிருக்க கூடாதா..? வட போச்சே..!
ReplyDeleteத ம 3
நீங்கதான் இந்த் ஐடியாவெல்லாம் இல்லாமலே பிரபலம் ஆகிவிட்டீங்களே
Deleteஇப்படி தொழில் நுணுக்கமெல்லாம் சொல்லித் தரக் கூடாது!
ReplyDeleteநாம மட்டும் எவ்வளவு நாள் பிரபலமாக இருக்கிறது சென்னை பித்தன் சார் நாம என்ன கலைஞரா பதவியை நம் கையிலே வைச்சு இருக்கிறது இளைஞர்களுக்கு நாம வழி விடத்தானே செய்யனும் அதனாலதான் இந்த ஐடியாவை நான் சொல்லி தந்து இருக்கிறேன்
DeleteVery good ideas about getting famous. Wish I have known it before. :)
ReplyDeleteஐடியா ஏதும் இல்லாமலே நீங்க தினம் தினம் பதிவுகள் மிக அட்டகாசமாக இட்டு கலக்குறீங்களே முகுந்தம்மா
Deleteதங்கள் ஆலோசனைப்படி இனி வலையில் முகம் காட்டாமல் உலவ ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான்.
ReplyDeleteநீங்க மேடை ஏறினாலும் முகம் காட்டாமல் அவசர அவசரமா ஒடின ஆள் ஆச்சே...ஆமாம் அப்படி என்ன அவசரம் அடுப்பில் உலை வைச்சிட்டு வந்த மாதிரி ஒரே ஒட்டம் பிடிச்சிட்டீங்களே
Deleteமேடை ஏறியதும் பூரிக்கட்டைகள் என்னை நோக்கி வருவதாக இருந்தது ஆதலால் ஓடி வந்து விட்டேன். அங்கு பிடித்த ஓட்டம் தான் அதோடு இரவு 12 வீடு வந்து சேர.
Deleteடாப் ஆலோசனைகள்!
ReplyDeleteஅப்ப இன்னொரு வலைத்தளம் ஆரம்பிக்க போறீங்களா?
Deleteஇந்தமாதிரி பலவிதமான ஐடியாக்கள் எல்லாம் பதிவிட்ட பிறகுதான், நான் பிளாக் தொடங்கலாம் என்று இருக்கிறேன். சீக்கிரம் ஐடியாக்கள் எல்லாம் ரிலீஸ் பண்ணுங்கள்.
ReplyDeleteஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்கள் ஏன் கணவர் பெயரில் (துரை) ஆண் பெயர் உள்ள பிளாக் வைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? பதிவுலகத்தில் என்ன பயம் வேண்டிக்கிடக்கிறது? மதுரைத் தமிழச்சி என்று வைத்துக்கொண்டால் தவறொன்றுமில்லையே...
ஹாஹா ஹா பயமா எனக்கா யாரை பார்த்து இந்த கேள்வியை கேட்டீங்க ?( இந்த கேள்வியை என் மனைவி பக்கத்தில் இருக்கும் போதுமட்டும் கேட்காதீங்க)
Deleteஇந்த யோசனை எனக்கு வராம போச்சே...
ReplyDeleteஇந்த மாதிரி யோசனைகள் எல்லாம் பத்தாம் வகுப்பு பெயிலானவங்களுக்குதான் வரும் உங்களை மாதிரி நல்லா படிச்சவங்களுக்கெல்லாம் வராது தம்பி
Deleteஆஹா! இது இப்படியா இல்லை அப்படியா.... :)
ReplyDeleteநல்லா ஓய்வெடுத்துட்டுச் சிந்தியுங்கள் சகோ..காத்திருக்கிறோம்
பரிசுத் தொகையில் பாதி உங்ககிட்ட இருந்து வருகிற வரைக்கும் நான் ஒய்வு எடுக்கப் போவதில்லை
Deleteஹஹஹஹ் கலக்கல் பதிவு! லேட்டாகிப் போச்சு...
ReplyDeleteகரெக்ட்டுதான் தமிழா...உங்க ஐடியா எல்லாம் ரொம்பவே சரி...நான் என் முகத்த போட்டதுனாலதான் ஹும்...
கீதா: ஹப்பா கீதான பேரப் பார்த்ததும் நாம மாட்டிக்கிட்டோமா நு நினைச்சேன்..ஹப்பா பக்கத்துல மேடம் பார்த்ததும்தான் ஆசுவாசம்...தப்பிச்சோம்னு...உங்க வாயிலருந்துதான்..அஹஹ்ஹ....
உங்க மேல என்ன கேஸ் போடலாம்னு யோசனை...எங்க குழுவ இப்படிக் கலாய்ச்சதுக்கு...பாவம் புள்ளைங்க...அதுலயும் எங்க சசி ரொம்பவே பாவம்...
ReplyDeleteகீதா
நல்ல அறிவுரைதான் ஆனால் எனக்கு முன்பே இந்த அறிவுரை உதிக்கவில்லை
ReplyDeleteநீங்கள் சுதாரித்து கொண்டீர்கள் மலையப்பன்