ஆயுத பூஜை அன்றுமட்டும்
ஆயுதத்திற்கு பூஜை ஆனால் மற்ற நாட்களெல்லாம் ஆயுதத்தால் மதுரைத்தமிழனுக்கு பூஜையா?
ஆயுத பூஜை எதற்கு
கொண்டாடுகிறார்கள் என தெரியாமலே நான் வேலை பார்க்கும் நிறுவனம் கொண்டாடும் போது அதில் கலந்து மகிழ்ந்து இருக்கிறேன். ஆனால் கல்யாணத்திற்கு
அப்புறம்தான் ஆயுத பூஜையின் மிகப் பெரிய மகத்துவத்தையும் அதனுடைய பலன்களையும் மிக தெளிவாக
அறிந்து கொண்டேன். எனது ஆசையெல்லாம் வருடத்தின் அனைத்து நாட்களும் ஆயுதபூஜையாக இருக்க
கூடாதா என்பதே. அப்படி நான் நினைக்க காரணம் அன்றுமட்டும்தான் என் மனைவி பூரிக்கட்டையை
எடுக்கமாட்டாள். (மனைவியின் மைண்ட் வாயஸ்: ஒரு நாளைக்கு ஆயுதத்திற்கு ரெஸ்ட் கொடுத்ததும்
நம்மை பொதுவிடத்தில் நக்கல் பண்ணுகிறான் நாளையில்
இருந்து பூஜை நேரத்தை இன்னும் அதிகப்படுத்தினால்தான் இவன் சரி வருவான்)
திமுகவில்
இருக்கும் 90% சதவிகித ஹிந்துகளுக்கு
விடுமுறை தின வாழ்த்துக்கள்
# ஸ்டாலின் #கலைஞர்
ஆயுதபூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா? 2014ல்
வந்த நகைச்சுவை பதிவு. படித்து மறந்தவர்கள் மீண்டும் படித்து ரசிக்க நகைச்சுவை பதிவு
அன்புடன்
மதுரைத்தமிழன்
Ayudha Puja
is an integral part of the Navratri festival . a Hindu
festival which is traditionally celebrated in India.
வழக்கம்போல் பூரிக்கட்டை நகைசுவை இந்த பதிவிலும் மிளிர்கிறது. இன்னும் பல ஆயுதபூஜைகள் கண்டு, ஒவ்வொரு பூஜையிலும் பூரிக்கட்டை பலம் பெற்று உங்களைத் தாக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 1
ஆயுத பூஜையின் போது பூரிக்கட்டை பலம் பெறவில்லை நாந்தான் பலம் பெறுகிறேன் அந்த ஒரு நாளில் நான் பெறும் பலம்தான் ஆண்டு முழுவதும் தாக்குபிடிக்க வைக்கிறது
Deleteஆயுத பூஜை... இப்படி எழுதினால். தினம் தினம் உங்களுக்குப் பூஜை தான்!
ReplyDeleteஇங்கே தினமும் அர்ச்சனையோடுதான் பூஜையும் கிடைக்கிறது பூஜையைக் கூட தாக்குபிடிக்க முடிகிறது ஆனால் அர்ச்சனை??????????ஹும்
Deleteவல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் புரிந்தவர்களுக்கு பூரிக் கட்டையும் ஆயுதம்!!!
ReplyDeleteவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது சரிதான் ஆனால் இந்த மதுரைத்தமிழனுக்கு புல் சரக்கும் கேடயம்தான்
Deleteசதா பூரிக்கட்டையையே நினைத்து
ReplyDeleteகலங்கிடும் மதுரைத்தமிழன் மற்றும்
பயந்தாங்குளி பதிவர்களுக்கு சிறந்த மாற்றுவழி
இவ்விடம் தரப்படும்..
தேவையானவர்கள் அனுகவும் 100% உத்தரவாதத்துடன்.
ஆலோசனைக்கட்டணம், மற்றும் காப்பு கட்டணம் செலுத்தி அனுகவும்
பயமின்றி வாழ பயனுள்ள வழிகள்..
பூரிக்கட்டையை நினைத்து நான் கலங்கவில்லை அதை ஒவ்வொரு முறையும் நான் துணிச்சலோடுதான் எதிர் கொள்கிறேன்....ஆமாம் யார் அந்த பயந்தாம்குளி பதிவர்கள் அவர்களின் பெயரை இங்கு லிஸ்டாக போடவும்
Deleteஅங்கனயே இருந்துட்டு கேட்டா எப்புடி
Deleteஇங்கன ஒரு எட்டு வந்து பாத்துட்டு போறது.
நீங்க கேட்டத உடனே செய்து
உங்கள் வழியில் செயல்படும்
உங்கள் தொ(கு)ண்டனின் அன்பு அழைப்பு
மதுரைத் தமிழரே.....
ReplyDeleteஉங்கள் மனைவியிடம் சொல்லுங்கள். பூரிக்கட்டை ‘ஆயுதம் அல்ல‘ என்று.
அடுத்த வருடம் பூஜையில் வைக்க மாட்டார்கள்.
யம்மோவ் உங்களுக்கு மிக நல்ல எண்ணம்மா.... அந்த ஒரு நாள்தான் நான் அடிவாங்காமல் இருக்கிறேன் அது உங்களுக்கு பொறுக்கவில்லையா நல்லா இருங்கோம்மா நல்லா இருங்க..
Deleteஅடுத்த ஜென்மத்தில் நீங்கள் மதுரைத்தமிழனாக பிறக்க உங்களுக்கு சாபம் விடுகிறேன்
Deleteஹா ஹா........... எல்லா நாளும் ஆயுத பூஜை யாகக் கடவது என்று நான் சாபம் விடுகிறேன் ok வா சகோ சந்தோஷமா இப்போ. பலிக்கா விட்டால் நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டேன்.
ReplyDelete