உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 2, 2014

ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?
avargal unmaigal

             ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?
ஆயுத பூஜைக்கு ஆயுதங்களை வைச்சு பூஜை போடனுமாம். ஆனால் எனக்கு புத்தியே ஆயுதம் அதுக்காக அதை எடுத்து வைச்சு பூஜை பண்ண முடியுமா என்ன?இப்படி நான் என் நண்பரிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட என் மனைவி... என்னங்க புத்தியை பற்றி பேசுறீங்க அதுதான் உங்களுக்கு சுத்தமா இல்லையே என்றாள்.நான் உடனே புத்தி இல்லாத என்னை கட்டிக்கிட்ட நீ எவ்வளவு பெரிய முட்டாள் என்றேன்
யோவ் புத்தி இல்லாத ஒருவனுக்கு வாழ்வு கொடுக்கனும் என்கிறதுதான் என் வாழ்க்கையின் லட்சியம் அதுனாலதான் உன்னை கட்டிகிட்டு மாரடிக்கிறேன் என்கிறாள்.இப்படிதாங்க அவ புத்தி இல்லாம ஏதாவது பேசுவா...உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு புத்திசாலி என்று. புத்தி இல்லைன்னா நாமெல்லாம் இப்படி மொக்கை பதிவை போட முடியுமா என்ன?சரி வந்த விஷயத்தை சொல்ல மறந்து நான் எதை எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்.
நான் சொல்ல வந்தது எனது வலைதளம் வரும் நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்..வாழ்க்கையினில் துன்பம், துரோகம் எனும் வன்மத்தை அன்பு எனும் ஆயுதத்தால் யுத்தமின்றி வதம் செய்யும் இந்த நாள் மட்டுமல்ல வரும் நாட்களும் மகிழ்வான நாட்களாக இருக்க எனது வாழ்த்துக்கள்
டிஸ்கி :எங்க வீட்டு பூஜையில வைக்கப்படும் ஒரே ஆயுதம் பூரிக்கட்டை மட்டும்தானுங்க
சந்தேக டிஸ்கி : டாக்டர் எல்லாம் ஆபரேஷன் கருவிகளையெல்லாம் பூஜையில் வைப்பாங்களா என்ன?அன்புடன்
மதுரைத்தமிழன்


21 comments :

 1. ஹை!! நான் கூட இதை தான் என் தங்கையிடம் கேட்டேன்."ஏன் மதி, இந்த டாக்டர்கள் ஆயுத பூஜை அப்போ என்ன பிரே பண்ணுவாங்க? என் தங்கை சொன்னாள் "கடவுளே ! வேற யார் வேண்டுதலையும் கேட்காத, நான் வேண்டுறதை மட்டும் கவனி " ஹா..ஹ...ஹா...
  (இப்போ என்ன பிரச்சனைனா, ஹாலிடே மூடில் ரிலாக்ஸ் பண்ணிக்க என்னை மாதிரி நட்புக்கள் இந்த பக்கம் அதிகம் வருவோம். இந்த தமிழ் சகா அவரோட நட்பின் பொருட்டு வரும் என் போன்ற நண்பர்களை , சரஸ்வதி படம் போட்டேன். அதுனால ட்ராபிக் எகிறுச்சுனு பீல் பண்ண போறாரு:))) இதை தான் யானைக்கு தன் பலமே தெரிவதில்லைன்னு சொல்லுவாங்களோ?:)

  ReplyDelete
  Replies
  1. நான் பதிவு எழுத ஆரம்பித்ததில் இருந்து இப்படிதானுங்க பண்டிகை தினங்களுக்கு ஏற்ப வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.அது மற்றவர்களை சந்தோஷப்படுத்தும் நோக்கில்தான் வெளியிடுகிறேன் இப்படி போடுவது ஹிட்டுக்காக அல்ல. இதனால் ஹிட் ஏதும் கிடைகாதுங்க...கவிதை எழுதி பதிவிடும் பதிவகளுக்கு எப்படி ஹிட் கிடைக்காதோ அது மாதிரிதானுங்க இதுவும் ...


   ஆமாம் யானைன்னு யாரை சொல்லுறீங்க? நானெல்லாம் நாகேஷ் மாதிரிங்க

   Delete
 2. பூரிக்கட்டையை எதற்கு உங்கள் மனைவி பூஜையில் வைக்கிறார்கள் தெரியுமா நண்பரே, அப்போதுதான் அந்த பூரிக்கட்டைக்கு பலம் அதிகமாகி, உங்களுக்கு விழுகிற அடியெல்லாம் வெறும் உள்காயம் மட்டும் தான் ஏற்படுமாம்.
  அதனால் தான் பூரிக்கட்டையை பூஜையில் வைக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க சகோ.

   Delete

  2. பூரிக்கட்டை பலம் பெற்று வரும் போது நானும் பலம் பெற்று வர நிறைய முட்டைகள் சாப்பிட்டு உடம்பை த்ர்த்தி வருகிறேன் பார்ப்போம் பூஜைக்கு அப்புறம் உள்ள நிலமையை

   Delete
 3. சரிதான். அன்னைக்காவது அடி வாங்காம தப்பிக்கலாம் இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹஹா ஓ இப்படி ஒண்ணு இருக்கோ!

   Delete
  2. அண்ணா! கலக்கீடீங்க:)))

   Delete
  3. அடடா இது இன்னும் நல்லா இருக்கே.

   Delete
  4. பூரிக்கட்டைதான் தப்ப்பிக்கும் நான் இல்லை.... அடியில் இருந்து தப்பிக்க எனக்க் வழியே இல்லை...பூரிக்கட்டையை பூஜையில் வைத்த மனைவி இப்ப பெல்ட்டும் கையுமா அலையுறாங்க

   Delete
 4. ஆகமொத்தம் உங்க குடும்ப நிலவரத்தை வெளியே சொல்லி வீட்டுக்கு உள்ளே கலவரத்தை உண்டு பண்ணிட்டீங்க...

  ReplyDelete
 5. ஹாஹஹ தமிழா எஸ்கேப் ஆவதற்கு நல்ல வழி!

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்! மிகவும் ரசித்த தங்கள் வார்த்தைகள் அந்த ஆரன்சு கலர் அடிச்சு கொடுத்துருக்கீங்களே வாழ்க்கையில துன்பம், துரோகம்....அன்பு எனும் ஆயுதத்தால்...வெரி வெரி நைஸ் வாழ்த்துக்கள்!

  தங்களுக்கும் எங்கள் பூஜை வாழ்த்துக்கள்! (ஐயோ தமிழா இதை வேறு பூரிக்கட்டை பூஜைன்னு நினைச்சு தப்பா எடுத்துக்காதீங்க.....!!! ஹஹஹ்)

  ReplyDelete
 6. தமிழா! முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! எதற்கு?

  கீதாதான் எங்கள் மெயிலில் வரும் மெயில் செக் பண்ணி வேண்டாதது அழித்துவிடுவார். பின்னர் என்னிடம் தமிழ் ஃபான்ட் இல்லாததாலும், மொபைலில் பல சமயங்களில் அடிக்க முடியாத காரணத்தாலும் நான் தங்கிலிஷில் அடித்து கீதாவிற்கு அனுப்பி விடுவேன் இல்லை ட்ராஃப்டில் போட்டு விடுவேன் அதை கீதா தமிழில் அடித்து, அவர் சேர்க்க நினைத்தால் சேர்த்து அனுப்பிவிடுவார்.

  அப்படித்தான் நான் பல மேட்டர், பின்னூட்டங்கள், கதைகளுக்குக் குறிப்பு என்று அடித்து வைத்து இருந்தேன். அதிலேயே தெரியாமல் தங்களுக்கும் முகநூலில் பதில் கொடுக்க அடித்து வைத்திருந்தது மேட்டருடன் மிகக் ஸ் ஆகி இருக்க நான் அதை காப்பி பேஸ்ட் எடுத்து உங்களுக்கு அனுப்பியதில் நடுவில் ..வயித்தெரிச்சல கிளப்பாதீங்க என்ற வார்தைகள் சேர்ந்திருக்கின்றது...நான் டெக்னிகல் மேட்டரில் ரொம்பவே வீக்..பப்ளிஷ் செய்வது ..... தோழி கீதா அதை எல்லாம் பார்த்துக் கொள்வதால் நானும் கவனிப்பதில்லை....உங்கள் பதிலை நான் திரும்பவும் செக் செய்யாமல் அனுப்பி இருந்திருக்கின்றேன். அது அவருக்குத் தெரியாது. அவர் முக நூலிலும் இல்லை.

  கீதா வேண்டாத மெயில் எல்லாம் அழிக்க முனைந்த போது அந்த மெசேஜ் பார்த்து எனக்கு மெயில் கொடுக்க....என்னைத் திட்டி.... "என்னடா துளசி நீயா இந்த மாதிரி கொடுத்துருக்க? நீ வாயால கூட சொல்ல மாட்ட நெகட்டிவா பேச மாட்ட....எப்படி இப்படி நீ ஒரு பதில் எழுதிருக்க? அனுப்பறதுக்கு முன்னாடி செக் பண்ண மாட்டியா? என்னத்த காப்பி பேஸ்ட் பண்ணின? இல்ல எங்கிட்ட சொல்லிருந்த நான் செக் பண்ணிருப்பேன் ....." என்று செம திட்டு. எனக்கு அது முகநூலில் வராது உங்கள் பெட்டிக்குப் போகும் என்பதும் கீதா தான் இப்போது எழுதியிருந்தார்.....அதுவும் எனக்குத் தெரிந்திருக்க வில்லை. முதலில் புரியவில்லை. பின்னர் தான் விளங்கியது...கீதா விளைக்கிய பின். நான் எதற்கு பதில் கொடுத்திருந்தேன் என்று.....அது எனது தவறில் நடந்து விட்டது தமிழா......அப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் எனக்குச் சுத்தமாகக் கிடையாது! அது காப்பி பேஸ்ட் பண்னும் போது கவனக் குறைவால் அதுவும் மொபைலில் செய்யும் போது தவறுகள் நடந்து விடுகின்றது......நடந்தும் விட்டிருக்கிறது. இப்போதுதான் நான் அறியவும் செய்தேன்.

  தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் தமிழா! நான் வேண்டுமென்று அப்படிக் கொடுக்க வில்லை. நாங்கள் இருவருமே உங்கள் இடுகைகள் எல்லாவற்றையும் மிகவும் ரசித்து வாசிப்போம். கருத்து கூட பரிமாறிக் கொள்வோம். பார்க்கப் போனால் நான் அவரிடம் நீங்கள் நிறைய பேர் உங்கள் இடுகையை வாசித்திருந்ததைச் சொல்லியிருந்ததை மிகவும் பாராட்டிப் பேசியிருந்தேன். அதனால் தான் அவரது திட்டலும்.

  இதைத் தாங்கள் வெளியிடலாம். அதற்காகத்தான் கொடுத்துள்ளேன். நீங்கள் என்னைப் புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என்று நினைக்கின்றேன்

  துளசிதரன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.. நீங்கள் மட்டுமல்ல யாருவேண்டுமாலும் என்னை திட்டலாம் புகழலாம் ஆனா நான் எதையும் சிரியஸாக எடுத்து கொள்ளமாட்டேன்

   Delete
 7. உங்களுக்கும் இனிய ஸ்பெஷல் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை விஜயதசமி நல் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 8. பூரிக்கட்டை பூஜைக்குப் போய்விட்டால் அன்று உங்களுக்கும் விடுமுறைதானே தலைவரே...

  ReplyDelete
 9. ஆயுத பூஜையில் பூரிக்கட்டையை வைத்து வழிபட்டால்...பூரிக் கட்டை இல்லாமல் செம அடி வாங்கலாமாம்..

  ReplyDelete
 10. உங்களுக்கும் சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் சகோ பூரிக் கட்டைக்கு விடுதலையா அன்னிக்கு. ம்..ம்..ம்..
  தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 12. பூரிக்கட்டை இல்லாவிட்டால் நீர் சரிவர மாட்டீர் என்று தோன்றுகிறது..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog