Sunday, October 4, 2015




avargal unmaigal, god must be crazy
 மதுரைத்தமிழனின் நகைச்சுவை பிரார்த்தனைகளும் கடவுள் படும்பாடும்


மதுரைத்தமிழனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அதனால் நான் அவ்வப்போது பிரார்த்தனைகள் பண்ணுவதுண்டு. எனது நகைச்சுவை பிரார்த்தனைகளும் அதை கேட்ட கடவுள்படும்பாடும்தான் இந்த பதிவு.( பூரிக்கட்டையால் அடித்தும் சாப்பாடு தினமும் போடும் மனைவியையே கலாய்க்கும் இந்த மதுரைதமிழனுக்கு கடவுள் எம்மாத்திரம்.. கடவுளும் இந்த மதுரை தமிழனின் கலாய்ப்பில் இருந்து தப்பிக முடியாது)


திங்கள் : கடவுளே பெண்களின் பேஸ்புக் அக்கவுண்டிற்கு கிடைக்கும் அளவிற்கு எனக்கும் லைக்ஸும் கமெண்டுகளும் கிடைக்க ஏற்பாடு செய். (கடவுளின் மைண்ட் வாய்ஸ் : இந்த மதுரைத்தமிழன் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறானே. நானே அக்கவுண்ட் பேஸ்புக்கில் உருவாக்கினால்  பெண்கள் கிடைக்கும் லைக்ஸ் போல எனக்கே கிடைக்காது என்ற உண்மையை இவனிடம் இப்படி சொல்லுவது)

செவ்வாய் : கடவுளே எனக்கு பொறுமையை கொடு. அதை இப்போதே கொடு (கடவுளின் மைண்ட் வாய்ஸ் : இவன் வேண்டுகோள் விடாமல் நமக்கு கமெண்டிங்க பண்ணி நம்ம பொறுமையை சோதித்துவிடுவான் போல இருக்கே)


புதன் : கடவுளே தயவு செய்து என் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொடு. ஆனால் அதற்கு நான் இப்போது ரெடி இல்லை... (கடவுளின் மைண்ட் வாய்ஸ் : இவன் என்ன கேட்கிறான் ஒன்றுமே புரியவில்லையே வாழ்க்கையை மாற்றி அமைக்க கேட்கிறானா அல்லது வேண்டாம் என்கிறானா? பேசாம நாம் மனிதனாக பிறந்துவிடலாம் இல்லையென்றால் இவனை மாதிரி ஆட்கள் நம்மை சாக அடித்துவிடுவார்கள் அல்லது கிறுக்கு பிடிக்க செய்து விடுவார்கள்

வியாழன் : (மதுரைத்தமிழன் மனைவியிடம் பூரிக்கட்டை அடி வாங்கும் போது) கடவுளே நீ உண்மையிலே ருக்கிறாயா? நீ யார் ? எங்க இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? நீ ஒருத்தனா? ஒருத்தியா? அல்லது எத்தனை பேர் இருக்கிறீர்கள்? நான் கூப்பிடும் போது வராமல் அப்படி என்ன பேஸ் புக்கில் முழ்கி இருக்கிறீர்களா?( கடவுளின் மைண்ட் வாய்ஸ் : மனைவியிடம் அடி வாங்கும் போது என்னமா நம்மை பற்றி  கேள்வி கேட்கிறான். அவன் மிக அதிகம் பேசாம இருக்க அவன் வாயிலே நாலு அடி போட அவன் மனைவிக்கு வரம் தந்துவிட வேண்டியதுதான்.

வெள்ளி : கடவுளே நாலு ரவுண்ட் சரக்குதான் அடிச்சிருக்கேன் அதனால என் கால்கள் தடுமாறுகின்றன கைகள் நடுங்குகின்றன. நீ இருப்பது உண்மை என்றால் ஐந்தாவது ரவுண்டை நீயே மிக்ஸ் பண்ணி என் வாயில்லே நேராக ஊற்ற்றி விடேன். அப்போதுதான் நீ உண்மையில் இருப்பதை நான் நம்புவேன்( கடவுளின் மைண்ட் வாய்ஸ் :  நாம் இருப்பதை நம்ப வைப்பதற்கு என்ன செயல் எல்லாம் செய்ய வைக்கிறான். ஹும் நாம கடவுளா இல்லை இவனுக்கு ஊற்றி கொடுக்கும் பார் மேனா?)

சனி : கடவுளே என் எதிரிகள் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து அவர்களை ஆசீர்வதியும் ஆனால் அந்த தே... பையனை மட்டும் பஸ் சக்கரத்தில் மாட்டி அங்கேயே துடி துடித்து சாக அடியும் (கடவுளின் மைண்ட் வாய்ஸ் : இவனுக்கு போதை இன்னும் தெளியவில்லை போல அதனாலதான் இவன் எதிரிகளை காப்பாற்ற சொல்லுகிறானா அல்லது சாக அடிக்க சொல்லுகிறானா நம்மை எப்படியெல்லா குழப்புகிறான்)

ஞாயிறு : கடவுளே நீ படைத்த மனிதர்களிலேயே நீ மிகவும் பெருமைபடும் மனிதன் இந்த மதுரைத்தமிழன்தானே(கடவுளின் மைண்ட் வாய்ஸ் அய்யோ அய்யயோ இப்படி எல்லாம் இவன் நம்மை கலாய்ப்பான் என்று தெரிந்து இருந்தால் இவனை நாம் படைக்கமலேயே இருந்திருக்கலாம்)

இறுதியாக கடவுளுக்கு நன்றி : கடவுள்களே நீங்கள் இது நாள் வரைக்கும் செய்த உதவிகளுக்கு கோடான கோடி நன்றி. அதுமட்டுமல்ல என் மனைவி அவள் தங்கையை பார்க்க போகிறாள். அதனால என் வீட்டிற்கு வாருங்கள். Let's have a party at my home.

(கடவுளின் மைண்ட் வாய்ஸ் )இந்த மனிதர்கள் நினைத்தது நடந்துட்டா கடவுள் இருக்காருன்னு சொல்லுறாங்க அப்படி நடக்கலைனா கடவுளே இல்லைன்னு சொல்லுறாங்க இவனுங்க சொல்லுறபடி ஆடவா அல்லது சேவை செய்யவா நாம் இருக்கிறோம் இந்த மனுசன்கிட்ட நாம்  படும்பாடு கொஞ்சம்நஞ்சமல்ல. எல்லா உயிரினங்களையும் படைத்த நாம் இந்த மனுச ஜென்மத்தை மட்டும் படைக்காமல் இருந்திருக்கனும் அதிலும் இந்த மதுரைத்தமிழனை படைக்காமல் இருந்திருக்கனும்... ஹும்ம்ம்ம்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : கடவுள் வரம் தந்து நமக்கு கை நிறைய அள்ளி தருகிறாரோ இல்லையோ ஆனால் இந்த புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினர் தினம் தோறும் போட்டிகள் மேல் போட்டி வைத்து பரிசுகளை அள்ளிதருகிறார்கள். விபரம் அறிய இங்கே செல்லவும்.. இது கலாய்ப்பு செய்தி அல்ல உண்மை செய்தியே
http://bloggersmeet2015.blogspot.com/


19 comments:

  1. Replies
    1. பதிவை படித்து ரசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி ஸ்ரீராம்

      Delete
  2. ஹா ஹா......... நீங்கள் பூரிக்கட்டை அடிவாங்க மாட்டிக்கொண்டு முழிப்பது போல, கடவுளும் உங்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அப்படி மாட்டிக்கிட்டவர் நேற்று என் கனவில் வந்து ஐ லைக் யுவர் காமெடி என்றார். அப்படியா அப்ப இதை உங்கள் பக்தர்களிடம் ஷேர்பண்ணி இதுக்கு அதிக லைக்ஸ் வாங்கி தாங்க என்ற போது அவர் கண்ணீர்விட்டு அழுதவாரே சொன்னார் என் பக்தர்களுக்கு பெண்களின் பதிவுகளுக்கு லைக்ஸ் போடவே நேரம் இல்லை அவங்க எனக்கே லைக்ஸ் போடமாட்டாங்க அதில உனக்கு என்று சொல்லி கேட்டா அவங்க போடவா போறாங்க எனரு சொல்லி மறைந்துவிட்டார்

      Delete
  3. Replies
    1. அப்படி அவர் கன்பியூஸ் ஆகவில்லை என்றால் நாம சும்மா விட்டுவிடலாமா என்ன?

      Delete
  4. ஹஹஹஹ் தமிழா அவர் ஒருத்தர்தான் உருப்படியா இருக்காருன்னா அவரையுமா...ஹஹஹ்ஹ்

    இத்தனைப் பிரார்த்தனைகளுக்கு..ஒரே ஒரு பிரார்த்தனை செஞ்சிருந்தா அதான் உங்களை மாதிரியே ஒருத்தரை உருவாக்கச் சொல்லியிருந்தா, பதிவர் விழாவுக்கும் வரலாம்.....பூரிக்கட்டை அடியிலிருந்தும் தப்பிக்கலாம்ல...

    ReplyDelete
    Replies
    1. உலகத்தில் ஒருவரைப் போலவே எட்டு பேர் இருப்பாங்க என்று கேள்விபட்டு இருக்கிறேன். அது மாதிரி கடவுள் என்னை மாதிரி இன்னும் ஏழு பேரை படைத்து இருக்கலாம். பாவம் ஒருவேளை அவங்களுக்கு இன்னும் தமிழ் தெரியாததால் நம்ம வலையில் சிக்கவில்லை போல இருக்கிறது சிக்கி இருந்தா அனுப்பி இருக்கலாம் ஹும்ம் என்ன செய்யுறது இப்ப

      Delete
  5. பூரிக்கட்டை அடியிலும் உங்களால் இப்படி முடிகிறது எனும் போது,,,,,,,,
    சகோ,,,,,,, அடி சரியில்லைப் போல் இருக்கே,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லுவது போல எப்படிபட்ட அடியையும் தாங்கும் தலை அல்லது உடல் நம்மதுங்க ஹீஹீஹீ

      Delete
  6. ஹாஹா! நீங்கள் சொல்லுவது உண்மைதான் புதுகை பதிவர்கள்தான் இப்போதைய லேட்டஸ்ட் கடவுளர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவர்கள் இணையக் கடவுள்கள்

      Delete
  7. பாவம் தான்..... கடவுள் !!!!

    ReplyDelete
    Replies
    1. அடியாத்தே இவ்வளவு நாள் எங்கே இருந்தீக...........நலமா?

      Delete
  8. ஐயடா கடைசியா ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடவுளையுமா ? கவனம் ஜாக்கிரதை அவர் அனுப்பினா பூரிக்கட்டை தாங்கமாட்டீர்கள். ரசித்தேன் வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ நான் வெஜிடேரியனம்மா ஆட்டை கடித்து மாட்டை கடித்து என்பதெல்லாம் கிடையாதும்மா

      Delete
    2. நீங்க வேற மாடுன்னு சொல்லி என்னை வம்புல இழுத்து விடுறீங்க அதை யாராவது இந்தியாவில் உள்ளவர்கள் பார்த்தால் என்னை அடித்து கொன்று விட போகிறார்கள்

      Delete
  9. ஹலோ காட்..
    பயப்படாதீங. உங்களை மதுரை தமிழன்கிட்ட இருந்து காப்பத்த நான் வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்.

    ReplyDelete
  10. மதுரை மல்லியின் வாசத்தை விட பூரிக்கட்டை பிரபலமா ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.