உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 2, 2015

தமிழகத்திற்கு இப்படிபட்ட முதல்வர் தேவையா?மெட்ரோ ரயிலில்  பயணம் செய்த ஸ்டாலினை அடித்த வாலிபர்.

இந்த கதைக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தம்மில்லை சொன்னா நம்புங்க பளீஸ்.

இணைய தளங்களில் உடன்பிறப்புகளின் கதறல்கள்.

தமிழகத்திற்கு இப்படிபட்ட வருங்கால முதல்வர் தேவையா? 

மெட்ரோ ரயிலில்  பயணம் செய்த ஸ்டாலினை அடித்த வாலிபர்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலினை அதில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தன் கன்னத்தால் ஸ்டாலினின் கைகளில் ஓங்கி அறைந்தார். ஆனால் அதை இந்த செய்தி ஊடகங்கள் திரித்து ஸ்டாலின்தான் அடித்தார் என்று திரித்து கூறுகின்றனர். அந்த வாலிபர் ஸ்டாலினை அடித்தற்காக ஆதாரப் பூர்வ வீடியோ களிப்பை இங்கு இணைத்துள்ளேன். அதை பார்த்து யாரு யாரை அடித்தார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்
இந்த கதைக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தம்மில்லை சொன்னா நம்புங்க பளீஸ்

ஒரு ஊரில் ஒருத்தனுக்கு குழந்தை பெற்று கொள்ள ஆசை வந்ததது.அதனால் தன் அப்பாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஜப்பான் வரைக்கும் சென்று பெண் பார்த்து கல்யாணம் செய்து கொண்டு அதன் பின் குழந்தை பெறுவதற்காக முயற்சிகள் பல முறை செய்து கொண்டிருந்தார் அப்படி அவர் முயற்சி செய்கையில் சந்தர்ப்ப சுழ்நிலை காரணமாக அவர் தான் வசித்த வீட்டை காலி செய்ய வேண்டி இருந்தது. அந்த காலிவீட்டிற்கு அவனது எதிரி ஒருவர் குடி வந்தார். அப்படி வந்தவருக்கும் குழந்தை ஆசை வந்து  ஒரு குழந்தையை பெற்று எடுத்து அதனை மிக பாதுகாப்பாக வளர்த்து வந்து அது நடக்கும் போது எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார்.. இதனை அறிந்த அந்த வீட்டில் முதலில் குடி  இருந்தவன். இந்த குழந்தை நான் போட்ட திட்டத்தால் பிறந்த குழந்தை என்று ஊர் எல்லாம் சொல்லி பெருமைப்பட்டானாம்,

அவன் அடித்த பெருமையை பற்றி ஊரே சிரித்தாம். ஆனால் அவனுக்கும் மட்டும் ஊர் ஏன் சிரித்தது என்று இன்னும் புரியவில்லையாம்
ஸ்டாலின் என்னை அடிக்கவில்லை என் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டினார் என்று அந்த இளைஞன் சொல்லவில்லை என்றால்  ஸ்டாலின் செல்லமாக தட்டியதைவிட கொஞ்சம் பலமாக நாங்கள் தட்டிக் கொடுப்போம் என்று ஸ்டாலின் அடிவருடிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞனிடம் சொன்னார்களாம்


ஸ்டாலின் கவுரவத்தை காப்பாற்ற  ஒரு இளைஞனை பொம்பளை பொறுக்கினு  “ப்ராண்ட்” பண்ணிட்டாய்ங்க இந்த உடன்பிறப்புகள் நல்லா இருங்கடே
இணைய தளங்களில் உடன்பிறப்புகளின் கதறல்கள்

ஜெயலலிதா மெட்ரோ ரயில் பயணத்தை ஆரம்பித்து வைக்கப் போகிறார் என்று செய்தி வெளிவந்ததும்  இணைய தளங்களில் உடன்பிறப்புகள் கதற ஆரம்பித்துவிட்டனர். அது கலைஞர் ஆரம்பித்து வைத்த திட்டமாம். அது சரி அதை யாரும் மறுத்தார்களா என்ன? அல்லது அந்த ரயிலை மெட்ரோ ஆம்புலன்ஸாகவா மாற்றினார் ஜெயலலிதா இல்லையே அப்படி செய்து இருந்தால் கதறில் ஒரு நியாயம் உண்டு. நியாமாக புத்திசாலி உடன்பிறப்புகளாக இருந்தால் கலைஞர் ஆரம்பித்த திட்டத்தை செயல்படுத்தி முடித்த முதல்வருக்கு நன்றி என்று பெரிய அளவில் பேனர் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் அதை விட்டு விட்டு.. அண்ணே அண்ணே நம்புங்கண்ணே இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கியது  ஸ்டாலின்தான்  அக்கா அக்கா இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கியது  ஸ்டாலின்தான் அம்மா அம்மா இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கியது  ஸ்டாலின்தான் என்று கதறுவதில் என்ன நியாயம்.

திமுக ஆரம்பிச்சு வைச்ச திட்டம் என்பதை அறியாத அறிவிலிகளாகவா தமிழக மக்கள் இருக்கிறார்கள், அப்படி  இருக்க ப்ளீஸ் ப்ளீஸ் நம்புங்களேன்.... நாங்க பொய் எல்லாம் சொல்லை உண்மையத்தான் சொல்லுறோம் நம்புங்களேன் என்று எல்லோறையும் கூவி கூவி அழைத்து இணையதளங்களில்  கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அது சரி மெட்ரோ ரயில் திட்டத்தை ஆரம்பிச்சு வைத்தது கலைஞர் .ஆனால் உடன்பிறப்புக்கள் இணைய தளங்களில் அதை ஸ்டாலின்தான், தன் சொந்த காசை போட்டு ஆரம்பித்து வைத்தது போல கலைஞர் பெயரை இருட்டடிப்பு செய்து எழுதிவருகின்றனறே இது நியாம்தானா உடன்பிறப்பே

தமிழகத்திற்கு இப்படிபட்ட வருங்கால முதல்வர் தேவையா?

மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளைஞன் செய்த ஏதோவொரு (அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு பெண்களுக்கிடையே ஸ்டாலின் அமர்ந்து அதை விளம்பரபடுத்துவதற்கு வீடியோ எடுக்கும் போது அந்த பெண்களின் முன்னால் நின்று  இருந்தது தவறா அதை சொல்லி தம்பி கொஞ்சம் தள்ளி நில்லுப்பா என்று சொல்லியிருந்தால் அவன் என்ன நகராமாலா இருப்பான்) செயல் ஸ்டாலினை எரிச்சல் படுத்தி இருக்கலாம் அதனால் அவர் அடித்து இருக்கலாம்.. அப்படி அவர் அடித்தது பற்றிய வீடியோக்கள் இணையம் எங்கும் பரவி கிடக்க நான் அந்த இளைஞனை அடிக்கவில்லை என்று ஒரு தலைவரும் அவரை சுற்றி உள்ளவர்களும் பொய் சொல்லுகிறார் என்றால் அந்த தலைவர் ஒரு மாநிலத்திற்கு முதல்வராக வந்தால் என்னென்ன பொய் சொல்ல மாட்டார். தலைவராக வரக் கூடிய ஒருவருக்கு பொறுமை மிக அவசியம் அதுவும் பொது இடத்தில் என்பதை கூட அறியாத முதியவராக இருக்கிறார் இவர். கலைஞரின் மகனாக  இருந்து அவரிடம் இருந்து பொறுமையை கூட கற்றுக் கொள்ளவில்லை என்றால் இவர் வேறு எதை கற்றுக் கொண்டிருப்பார என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது
அன்புடன்
மதுரைத்தமிழன்
14 comments :

 1. தப்பில்லை... ஆனால் தவறு...!

  ReplyDelete
  Replies
  1. சிம்பிளாக அதே நேரத்தில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் தனபாலன்

   Delete
 2. சரி..சரி.... பொய்யே சொல்லாதவர்களே முதலமைச்சராக தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்றால் பிறந்த வாய் பேச முடியாத குழந்தைகள்தான் முதலமைச்சாராக முடியும். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லையே

   Delete
 3. கேவலமாக இருக்கிறது....! என்னத்த சொல்ல...

  ReplyDelete
  Replies
  1. சொல்ல ஒன்றுமில்லைதான் அப்படியே சொன்னாலும் பலன் ஏதுமில்லை

   Delete
 4. 'ஸ்டாலின் பொம்பளை பொறுக்கிகளை தண்டிக்கிறார்' எனக் கேட்டால் கருணாநிதியே சிரித்துவிடுவார். இளம் வயதில் அவர் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது அதிமுகவிலிருக்கும் அன்றைய புகழ் பெற்ற இசுலாமிய பெண் செய்தி வாசிப்பாளர் அவரிடமிருந்து தப்பிக்க சினிமா பாணியில் பல வீட்டுக்கதவை தட்டினார் என்று திமுகவினரே சொல்லுவார்கள்.

  டம்ளர்களின் 'மறதியும் மன்னிப்பும்' உலகப்பிரசித்தமாயிற்றே - இதையெல்லாம் யாரும் இப்போது பேசுவதில்லை என சென்ற வாரம் நினைத்துகொண்டிருந்தேன். ஒத்திசைவு ராமசாமி இந்த வாரம் இதைப் பற்றி ஒரு பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

  https://othisaivu.wordpress.com/2015/06/29/post-511/

  ReplyDelete
 5. தமிழகத்திற்கு இப்படிபட்ட முதல்வர் தேவையா?

  மெட்டோ ரெயிலில் இவர் ஒரு வாலிபரை அடிச்சிருந்தாலும், சகோ நந்தவனத்தான் சொன்னது போல் செய்தி வாசிக்கும் இஸ்லாமிய பெண்மணிக்கு இவர் தவறு செய்திருந்தாலும், அதற்கு பாவ பிராய சித்தமாக இப்போ பர்தா என்கின்ற பிற்போக்குதனமான பெண்களை துணியால் மூடுதலுக்கு இவர் செம்பு தூக்கி கொண்டு திரிந்தாலும்,
  காட்டேரியுடன் பார்க்கும் போது இவர் முதல்வராக வருதில் தப்பில்லை.

  ReplyDelete
  Replies
  1. அது பிற்போக்குத்தனமா? முற்போக்குதனமா? என்பதை
   உடுத்துபவர்கள் முடிவு செய்யட்டும்.நீ யாருய்யா அத முடிவு பண்ண?
   எனக்கு கூடத்தான் பாப்பானுங்க பஞ்சகச்சம் கட்டுறதும்,
   பாப்பாத்திங்க மடிசார் உடுத்தறதும் பிற்போக்குதனமா படுது.
   ஏத்துப்பியா?

   Delete
  2. உங்களுக்கு பஞ்சகச்சம் கட்டுறதும்,மடிசார் உடுத்துறதும் பிடிக்கவில்லையெனில் தராளமாக சாதரண சேலை கட்டிக்கலாம். அல்லது ஜீன்ஸ் ,பாவாடை, சுடிதார் என்று அணியலாம், மேற்குலகு சட்டை அணியலாம். நான் குறிப்பிட்டது உடைகளை பற்றி அல்ல, பெண்களை மூடிவைக்கும் பிற்போக்குதனமான பர்தா பற்றி.

   Delete
 6. கன்னத்தில் அடித்ததும் எல்லோருக்கும் பொத்துக்கொண்டு வருகிறது. சாஷ்டாங்கமாக எல்லாரையும் விழ வைக்கும் ஆளின் மீது யாருக்கும் எதுவும் வருவதேயில்லையே. ஏன்?

  ReplyDelete
  Replies
  1. காலி விழுபவர்களுக்கும் அடிவாங்குபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. காலில் விழுந்தால் காரியங்கள் பல சாதிக்கலாம் அதனால் பல பலன் கிடைக்கும் என்று நினைத்து விழுகிறார்கள் மானங்கெட்ட ஆண்கள் .ஆனால் அடி வாங்குபவர்களுக்கு பலன் ஏதும் கிடைக்காது அதனால்தான் காலில் விழ வைப்பவர்கள் மீது யாருக்கும் கோபம் வருவதில்லை

   Delete
 7. ஸ்டாலின் விஜயகாந்தைக் காப்பியடிக்க நினைத்தார். ஆனால் தவறிப்போய்க் கட்சிக்காரர் என்று நினைத்து பொதுஜனத்தை அறைந்துவிட்டார். இதுக்குப்போயி...

  தருமி ஐயா சொல்வது சரியல்ல. என் காலில் விழுங்க என்று யாரும் சொல்வதில்லை. அப்படிப்பார்த்தால், கும்பிடு போடுவதும் காரியம் சாதிக்கத்தான். போலீஸ், அரசியல்வாதிகளின் செருப்பைத் துடைப்பதும் காரியம் சாதிக்கத்தான். அரசு வேலையில் இருந்த போலீஸ்காரர்களை, வீடு அலாட் பண்ணித் தனக்குச் சேவகம் செய்யவைப்பது சரியா? காக்கா பிடிப்பது எல்லோருடைய கல்ச்சர். ஆளுக்குத் தகுந்தபடி அளவு மாறுகிறது.

  கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் பண்ணுபவனும் தமிழந்தானே. ராகவேந்திரர் படம் பார்க்க வந்த பொதுஜனத்தின் காலில் பால் ஊற்றி வரவேற்றவனும் தமிழந்தானே.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog