Tuesday, July 7, 2015




தமிழக  பேராளிகள் சென்றது எங்கே?


தாலியை அறுத்த போதும் பூணலை அறுத்தப் போதும் பொங்கிய பேராளிகள் இப்போது தலையறுத்த போது எங்கே சென்றார்கள்

சிசு கொலைகளை பார்த்து அமைதியாக சென்ற தமிழகத்தில் இப்போது கெளரவ கொலைகளும் அதிக அளவில் நடக்க ஆரம்பித்துவிட்டது. அதற்காக குரல் கொடுக்க வேண்டிய தலைவர்களின் குரல் ஒலிக்காமல் இருப்பதற்கு பிண்ணணி அவர்கள் அந்த கொலை குழுவிற்கு தலைவர்களாக இருப்பதுதானோ?


வேறு சாதிப்பையன்/ பொண்ணு வேண்டாம் என்று அடித்து கொல்லுபவர்கள் ஹாஸ்பிடல் சென்றால் எங்க சாதிப் பையன் ரத்தம் மட்டும் இருந்தால் செலுத்துங்கள் என்று சொலுவதில்லையே

__________________________________ 


செய்தி :அதானி குழுமத்திடம் இருந்து "அதிகவிலைக்கு 'மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது

அதானி குழுமத்திடம் இருந்து "அதிகவிலைக்கு 'மின்சாரம் வாங்க காரணம் அவங்கதான் கலப்படம் இல்லாத மிக சுத்தமான மின்சாரம் சப்ளை பண்ணுறாங்களாம்

அடுத்த லோக்சபா தேர்தலின் போது மோடி சொல்லப் போவது எங்களுக்கு இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் நிச்சயம் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வந்துவிடுவோம் என்றுதான் இருக்கும்

மோடி அரசின் சாதனை தாங்கள் ஆட்சி செய்த  முதல் ஆண்டு முழுவதும் அவர்கள் செய்த ஊழல்கள் வெளியே தெரியாமல் பாதுகாத்ததுதான்

 __________________________________
இந்த கால மக்கள் நீங்கள் அழுகிறீர்களோ அல்லது வருத்தத்தில் இருக்கிறீர்களோ அல்லது வேதனையில் துடிக்கிறீர்களோ என்று எல்லாம் பார்ப்பதில்லை அவர்கள் உங்களிடம் பார்ப்பது எல்லாம் நீங்கள் என்ன தவறுகள் செய்கிறீர்களோ என்பதைமட்டும்தான்


ஒரு இளம் பெண் தன் அம்மாவின் மதிப்பை  தான் கருவுற்று இருக்கும் சமயத்தில்தான் உண்மையில் உணர்கிறார்கள்


சினிமா தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் இணையத்தில் எழுதுபவர்களுக்கு இனிமேல் நன்றி சொல்லி டைட்டில் போடவேண்டும். காரணம் படத்தை பற்றி ஸ்டேடஸ் போடுவதற்காகவே இவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து படம் பார்க்கிறார்கள் இவர்கள் திருட்டி டிவிடியில் பார்த்து ஸ்டேடஸ் போடுபவர்கள் அல்ல
 __________________________________
ரயில்வே துறையில் ஜாதி வெறி கவுண்டர் பெண்களுக்கு தனி வரிசை கிடையாது என்று கூறி தனிப்பட்ட காழ்ப்புனர்ச்சியை வெளிப்படுத்தும் ரயில்வே நிர்வாகம்


இந்த் துணுக்கைஎழுதியவர் Bharani Venkatachalam


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. தவறுகளை திருத்துக் கொள்ளவும் உதவும் என்று(ம்) எண்ணலாம்...

    நல்லாத்தான் இருக்கு துணுக்கு...!

    ReplyDelete
  2. வணக்கம்,
    அருமையான பதிவு, மருத்துவமனையில் சொல்லட்டும், எங்கள் இன மருத்துவர் செவிலியர் உதவியாள் இவர்கள் மட்டும் எங்களுக்கு மருத்துவம் பார்க்கட்டும் என்று,,,,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
  3. துணுக்குகள் செம..அதிலும் சாதி வெறி பற்றி வந்திருப்பது கலக்கல்..

    ReplyDelete
  4. துணுக்குகள் செம... சினிமா ஸ்டேட்டர், கவுண்டர் பொண்ணு... சாதி வெறி... கலக்கல்...

    ReplyDelete
  5. நீங்கள் சாதியைப் பற்றி எழுதியது சரிதான். சைவம் சாப்பிடும் நான், லண்டன் சென்றால் பிட்சா சாப்பிடுவேன். மும்பையில் இருந்தால் வடா பாவ், புலாவ் ரைஸ் சாப்பிடுவேன். தமிழ்னாட்டில் இருந்தால் சாம்பார், ரசம் என்று தேடும். தமிழ்னாட்டில் ரசத்தைப் பற்றி ஓகோன்னு பேசினே..லண்டன்ல ஏன் ரசம் இருந்தால்தான் சாப்பிடுவேன் என்று இருக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது?

    சாதி, இனம் எல்லாம் ரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று இலக்கியத்தில் குறிப்பிடும்படி, சாதி புரையோடிப்போய்விட்டது. நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால், இட ஒதுக்கீடு என்று கொண்டுவரும்போதே, 1,2,3,4 என்று நம்பரை மட்டும் கொடுத்து (மொத்தம் 4 அல்லது 5 தான்) இடஒதுக்கீடு கொடுத்திருந்தால், காலப்போக்கில், சாதிமறைய வாய்ப்பு உண்டு. சாதியை வைத்துக் கொடுத்ததனால், ஒரு சாதியிலேயே நூற்றுக்கணக்கான பிரிவுகள் வந்துவிட்டன. எப்படி சாதி மறக்கும்?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.