ஒஸாமா பின்லேடனுக்கு
பின் உலகம் தேடும் குற்றவாளி
ஒஸாமா பின்லேடனுக்கு
பின் உலகில் தேடப்படும் போதை மன்னன் எல் சாப்போ சிறையில் இருந்து மீண்டு தப்பி ஒடினார்
எல் சாப்போ
(குட்டையன்) El Chapo (Spanish for
"shorty,) என்று அழைக்கபடும் ஜோகின் குஸ்மான் Guzman Forbes Magazine ல் உலகின் பவர்புல் மற்றும் பணக்காரன் என்று முத்திரை
குத்தப்பட்டவன், இந்த நபர் போதை பொருள் கடத்தும் தொழிலில் உலகின் நம்பர் 1.
ஒஸாமா பின்லேடனுக்கு
இணையாக தேடப்படும் (most wanted man in the world )உலகின் நம்பர் ஒன் மோசாமன ஆள். இவன் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில்
மட்டுமல்ல ஆசியா ஆஸ்திரேலியா ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் விஷத்தை ( போதைப்
பொருளை ) தெருக்கள் தோறும் விற்பனை செய்து வந்தான் என்ன நாம் டாஸ்மார்க் அரசாங்க அனுமதியுடன்
கடைகளில் விற்கப்படுகிறது ஆனால் இந்த போதை பொருட்கள் தெருக்களிலும் பார்ட்டிகள் நடக்கும்
க்ளப்புகளில் மறைமுகமாக விற்கப்படுகிறது அவ்வளவுதாங்க.
இவன் இந்த தொழிலளை
Fortune 500 company களுக்கு இணையாக நடத்தி வந்தான். மெக்ஸிகோ நாட்டில் இருந்துதான்
அமெரிக்காவிற்கு பல காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி வரும் காய்கறிகள் முக்கியமாக
வாழைப்பழம் மற்றும் வெள்ளிக்காய் போன்றவைகளை அனுப்பும் போது போலி வெள்ளரிக்காய் மற்றம்
வாழைப்பழம் செய்து அதினுள் இந்த போதைப் பொருட்களை வைத்து கடத்தி வந்தான்.இது மட்டுமல்லாமல்
பல புதுப்புது முறைகளில் கடத்தி வந்தான். உலகில் மிகப் பெரிய நெட்வொர்க்கை இவன் நேரிடையாகவே
நடத்தி வந்தான்
இவன் வால்மார்ட்
ஹோம் டிப்போ என்று சொல்லபடும் ரீடையல் ஸ்டோர்களுக்கு இணையாக ஆனால் அதே நேரத்தில் மறைமுகமாக
இவனது விற்பணை உலகெங்கும் படர்ந்து இருந்தன. இந்த El Chapo போதை கடத்தல் மன்னன் தான் முதன் முதலில் ஆர்க்கிடெக்ட் எஞ்னியர்ஸ் போன்றவர்களை வேலைக்கு
அமர்த்தி பல சுரங்கங்களை மெக்ஸிகோ மற்றும்
அமெரிக்காவிற்கு இடையில் அமைத்து அதினுள் ரயில்வே டிராக்குக்ளையும் வடிவமைத்து மிகப்
பெரிய சாம்ராஜ்த்தையே நடத்தி வந்தான்.
one of the
biggest suppliers of cocaine to the U.S. It is a lucrative business to be in
these days. Thirty-five million people in the U.S. use narcotics or abuse
prescription drugs, spending more than $64 billion annually
1990ல் உலகிலேயே
பெரிய போதை கடத்தல் மன்னனான இவனை 1992 வாக்கில்
தென் அமெரிக்காவில் ஒரு நாட்டில் கைது செய்து மெக்ஸிகோவில் சிறை வைத்தார்கள்.
2001 ஆம் ஆண்டு சிறையில் இருந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விட்டார்.
10 வருடம் வெளியே உல்லாசமாக இருந்தான்
அதன் பின் அவனது
செயல்பாடுகள் மிக அதிகரித்துவிட்டது அவனது பிஸினஸ் பில்லியன் கணக்கில் ஏகிற ஆரம்பித்தது.
அதுவும் அமெரிக்காவில் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்தது அமெரிக்க FBI களம் இறங்கியது
.அவனை பிடிக்க அதனால் அவர்கள் மெக்ஸிகோ நாட்டுடன் சேர்ந்து அவனை பிடிக்க முயற்சி செய்தனர். அவனது செயல்பாடுகள் சினிமாவையும் மிஞ்சும் அளவிற்கு
கற்பனைக்கு ஏட்டாத அளவில் தான் இருந்தன, அவன் தப்பிக்கும் வழிகள் ஜேம்ஸ்பாண்ட் படத்தை
மிஞ்சும் வண்ணம் இருந்தன. ஒரு வேளை ஜேம்ஸ் படத்தில் தப்பிக்கும் பல வழிகள் இவனிடம்
இருந்துதான் பெறப்பட்டன என்று சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை
அப்படிப்பட்ட
அவனை 2014ல்ம்அமெரிக்க அரசாங்கம் வலை விரித்து பிடித்து மெக்ஸிகோ அரசாங்கதிடம் ஒப்படைத்துவிட்டு
அங்குள்ள மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைத்துவிட்டது
ஆனால் என்ன
15 மாதத்தில் இந்த சிறையில் இருந்த அவன் 2 நாளுக்கு முன் அந்த ஜெயிலில் இருந்து தப்பிவிட்டான். அவன் இருந்த ரூமில் இருந்து
ஜெயிலுக்கு வெளியே வர சுரங்கபாதை அமைத்து அதன் மூலம் தப்பித்துவிட்டான் இந்த சுரங்கத்தை
அமைத்து தந்தவர்கள் மிக திறமை வாய்ந்த இஞ்சினியர்களாகத்தான் இருக்க முடியும் என்று
இப்போது தகவல் வந்து இருக்கிறது இதற்காக இவன் 50 மில்லியன் டாலரை செலவழித்துள்ளான்
இதற்கு ஜெயிலில் உள்ள அதிகாரிகலும் உடந்தையாக இல்லாமல் இது நடந்து இருக்க முடியாது
டிஸ்கி: ஒசாமை
பிடிக்கும் போது அவரை சுட்டுக் கொண்டு பிடித்தார்கள் ஆனால்ம் El Chapo வை பிடிக்கும் அப்படி எல்லாம் செய்யவில்லை.
இவனுக்கு சாதாரண சிறைத்தண்டனைதான் தரப்பட்டுள்ளது. இவனைப் போல உள்ள ஆட்களுக்கு தூக்கு
தண்டனை அல்லவா கொடுத்து இருக்க வேண்டும் அப்படி செய்யாமல் இருப்பதற்கு பின்னால் டர்டி
பாலிடிக்ஸ்தான் இருக்க வேண்டும் இவணை பிடிக்க மெக்ஸிகோ அரசாங்கம் முயற்சி செய்ட போது
1000 க்கும் மேலான போலீஸாரும் ராணுவத்தினரும் மற்றும் அந்த போதை கும்பல் நடவடிக்கைகளில்
ஈடுபட்ட 6000 கும் மேலான ஆட்களுக் செத்து இருக்கிறார்கள் அதற்கு காரணமான இவனுக்கு சிறைத்தண்டனை
மட்டும்தான் இவன் மெக்ஸிகோ ஜெயிலில் இருந்து தப்பிக்கு 50 மில்லியன் டாலரை செலவழித்து
இருக்கிறான் ஆனால் இவன் இந்தியா தேடப்படும் குற்றவாளியாக இருந்தால் குமாரசாமி போன்ற
நீதிபதியால் தீர்ப்பு சொல்லப்பட்டு நிராததிபதியாக இருந்திருப்பான் அல்லது அவன் நாடுகடந்த போக அரசாங்கமே உதவி செய்துவிட்டு
அதன் பின் தேடப்படும் குற்றாவாளி என அறிவித்து விட்டு அவனுக்கு மனிதாபிமான முறையில் மத்திய அமைச்சர்கள்
உதவி செய்து கொண்டிருப்பார்கள் ஒன்று உண்மை நீ குற்றவாளியாக இருந்து நீ பணக்காரனாக
இருந்தால் குற்றம் தொடர்ந்து செய்யலாம் சட்ட உனக்கு உதவி செய்யும் அல்லது நீ ஹெல்மேட் போடாமல் போனாலும் அது கிரிமனல் குற்றமாகும்
அன்புடன்
மதுரைத்தமிழன் ( டி,ஜே,துரை)
clear dirty politics
ReplyDeleteவிசு அவர்களின் தளத்திலும் இவரைப் பற்றி படித்தேன்! வித்தியாசமான கொள்ளைக்காரன் தான்!
ReplyDeleteஅட கடவுளே ! எவ்வளவு கெட்டித்தனமா கொடுமைகளை செய்கிறானே பாவி !
ReplyDelete