Sunday, July 12, 2015




avargal unmaigal

இப்படியும் தமிழகத்தில் நடக்காமலா போகும்?


இப்படியும் தமிழகத்தில் செய்திகள் வராமலா போகும்!


தலைப்பு செய்திகள் 
1.நான்கு வயது சிறுவனுக்கு டீ குடிக்க வைத்து ரசித்த கொடூர இளைஞர்கள்
2. சரக்கு அடிக்காமல் பைக் ஒட்டிச் சென்ற வாலிபரைப் பிடித்த போலீஸ்
3.டாஸ்மாக் போலீஸ்படை என்ற புதிய பிரிவு தொடக்கம்
4 சரக்கு தரமில்லாததால் தாலிகட்ட மறுத்த மாப்பிள்ளை
5, டாஸ்மாக் apps  வெளியிடு
6.சரக்கு அடிப்பதற்காக அலுவலக நேரத்தைக் குறைக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் போராட்டம்
7.தமிழகத்தில் டீ காபி விலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
8. செவ்வாய் கிரகத்தில் காலடி வைத்த விஞ்ஞானி முதலில் அங்குக் கண்டது  தமிழன் வைத்திருக்கும் டாஸ்மாக் கடை

விரிவான செய்திகள் கீழே............................




சென்னை மவுண்ட் ரோட்டில் பைக்கில் சென்ற வாலிபரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீஸ் அவரை சோதனை செய்து பார்த்ததில் அவர் சரக்கை அடிக்காமலே வண்டி ஒட்டினர் என்பது தெரியவந்ததால் அவருக்கு போலீஸார் 500 ரூபாய் அபராதம் விதித்து இனிமேல் இது போல வண்டி ஒட்டினால் அவரது லைசன்ஸ் ரத்து செய்யப் படும் என்று எச்சரிக்கையும் விதித்தது.

நான்கு வயது சிறுவனுக்கு டீ குடிக்க வைத்து ரசிக்கும் சில கொடூர இளைஞர்கள் அடங்கிய வீடியோ, வாட்ஸ் அப் மூலம் பரவி அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நான்கு வயது சிறுவனுக்கு டீயை குடிக்கக் கொடுத்த இளைஞர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு குழந்தையைக் காபி குடிக்க வைத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டீ மற்றும் காபி கொடுத்தவர்கள் மீது 147 (சட்டவிரோதமாக கூடுதல்), 363 (கடத்தி செல்லுதல்),  34 (கொடூர செயலுக்கு குழுவாக இருந்து உடந்தையாக செயல்படுதல்), ஆர்.டபிள்யூ 25 ஜே ஜே (சிறுவர்களுக்கு வெறியூட்டும் போதை பொருட்களை கொடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட பிரிவுகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.இதே பிரிவின் கீழ் தற்போது வெளியாகி உள்ள இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு புதிய போலீஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதற்கு டாஸ்மாக் போலீஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த போலீஸாரின் வேலை அதிகம் குடித்துவிட்டு தங்கள் வீட்டிற்கு எப்படிப் போவதென்று தெரியாமல் தெருவில் அலைபவர்களைக் கண்டு பிடித்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடுவதுதான் இந்த போலீஸாரின் வேலை. இது மக்களிடையே மிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

கல்யாண வீட்டில் பரிமாறப்பட்ட சரக்கு தரம் இல்லாததால் மாப்பிள்ளை தாலி கட்டாமல் மணவறையை விட்டு வெளியேறினார்

மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் ஒரு apps யை வெளியிட்டுள்ளார் இந்த apps ன் சிறப்பு அம்சம் இதை எந்த டாஸ்மாக்கடையில் காண்பித்து ஸ்கேன் செய்தால் சரக்கிற்கான பணம் அவரின்  மாத சம்பளத்திலிருந்து ஆட்டோமெடிக்காக கழித்து கொள்ளப்படும். அது போல இந்த ஆப்ஸை பயணம் செய்வதற்கும் உபயோகிக்கலாம். இதனால் குடித்துவிட்டு பணத்தைத் தொலைப்பதிலிருந்து மக்கள் காப்பாற்றப் படுவார்கள்.

தமிழக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள் இவர்களின் இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கை அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் குடிப்பதற்கு வசதியாக அலுவலக நேரத்தை குறைத்து அலுவலகங்களை மூன்று மணிக்கே மூடிவிட வேண்டும் என்பதுதான். இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

முன்பு எல்லாம் சந்திரனில் முதலில் காலடி வைத்த மனிதன் அங்குப் பார்த்தது ஒரு மலையாள நாயர் டீ கடை வைத்து இருந்ததைத்தான் என்று எழுதுவார்கள் ஆனால் வருங்காலத்தில் செவ்வாய்க்கிரகத்தில் காலடி வைத்த முதல் மனிதன் பார்ப்பது அங்குத் தமிழன் ஒருவன் டாஸ்மாக் கடையை வைத்திருப்பதைத்தான் பார்க்க போகிறான்


avargal unmaigal



மாப்பிள்ளை சரக்கு அடிப்பார் என்று சொல்லி ஏமாற்றி கல்யாணம் செய்துவிட்டார் திருமணத்திற்கு அப்புறம்தான் தெரிந்தது அவர் சரக்கே அடிப்பதில்லை என்று அதனால் பெண் கோர்ட் படியேறி விவாகரத்து கேட்டார். பெண்ணின் பரிதாப நிலையைகண்டு நீதிபதி மாப்பிள்ளைக்கு அட்வைஸ் பண்ணிக் குடிக்கச் சொன்னார் அவர் அதற்கு மறுத்தால் மாப்பிள்ளைக்குச் சிறைத் தண்டனை கொடுத்து பெண்ணிற்கு விவாகரத்தையும் அளித்தார்

தமிழகத்தில் டீ காபி விலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி டீகாபி விற்பதோ அல்லது வாங்குவதோ சட்டப்படி குற்றம்


கள்ளக் காபி குடித்த 10 பேர்கள் சாவு 100 பேரின்  உடல் கவலைக்கிடம் ,கள்ளக் காபியை கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் பதவிவிலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.


என்னங்க இது போலப் பல செய்திகள் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவராமலா போகிடும்...


அன்புடன்
மதுரைத்தமிழன்.


9 comments:

  1. apps இப்போதே வந்தாலும் வரும்... ஆனாலும் அதனுள் பலரின் இலவச போட்டியும் வரும்... ஹா... ஹா...

    ReplyDelete
  2. அட!!! அடுத்த ஆட்சியிலேயே நடக்க வாய்ப்புண்டு

    ReplyDelete
  3. தமிழா வரதட்சணையா கூட டாஸ்மாக் வைச்சுத் தரோம்னு சொல்றாங்களாமே...அதையும் சேத்துக்கங்க...

    ReplyDelete
  4. Tasmac Apps நல்ல ஐடியா தான்.... இன்ஸ்டால் செய்து , கிளிக் செய்தால் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.. கூலிங் இல்லையென்றால் பணம் வாபஸ்.. அருகில் உள்ள tasmac retail store எத்தனை? எங்கிருக்கிறது?? போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்... :-)

    அம்மாவிடம் இதை சொல்லி , ஒரு கலைமாமணி (!?!?!) பட்டம் வாங்கி கொள்ளுங்கள்...ஹீ.ஹி...

    ReplyDelete
  5. வணக்கம்,
    வரும்,,,,,,,,,,,, ஆனா,,,,,,,,,,
    நல்ல பகிர்வு,
    நன்றி.

    ReplyDelete
  6. டாஸ்மாக்
    இந்நேரம்
    ஒழிந்திருக்க
    வேண்டும்
    ஆனால்
    முதல்வர் ஏனோ தாமதிக்கிறார்

    ReplyDelete
  7. நாட்டையும் வீட்டையும் உயிரையும் அழிக்கும் ஒன்றிற்குத் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி மக்களைப் பழக்குகிறது அரசு.

    இது எங்குபோய் முடியும் என்னும் ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.

    நன்றி

    ReplyDelete
  8. நீங்க தீர்க்கதரிசி தான் சகா:)

    ReplyDelete
  9. ம்...ம் அட எதிர்காலத்தை இப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே. எப்படி எல்லோரும் ஜோசியம் பார்க்க வரப் போறாங்கல்ல இதெல்லாம் நடந்தா ... நல்ல பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.