வலியின் வேதனையிலும் டுவிட்டரில் நான் படித்து ரசித்தவை
முதலில் நான் இட்ட
டுவிட்ஸும் ஸ்டேடஸும் அதன் பின்னால் நான் படித்து ரசித்தவையும்
@மதுரைத்தமிழன்
அடுத்த சாதிக்கார பையன் வேண்டாமுன்னு சொல்லுறவங்க தனக்கு ரத்தம் தேவைப்படும் போது தங்க
சாதிக்காரன் ரத்தம் இருந்தா மட்டும் ஏத்துங்கன்னு சொல்ல கெத்து வேணும்
@மதுரைதமிழன் சாதி
சாதின்னு அடிச்சுகிறவங்க அடுத்த சாதிக்காரன் கிழேமட்டும் வேலை செய்யலாமா என்ன?
ஆடி மாசம் மனைவியை
பிரிந்து இருப்பதற்கு கஷ்டப்படும் மக்களே வருஷக்கணக்கில் மனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் நிலமையை நினைச்சு
பாருங்க( டேய் மதுரதமிழா உன் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுதுன்னா அவங்க கொடுத்து வைச்ச
மகாராசாக்கள் என்று தானே)
செய்தி :60 ஆண்டுகளாக
இந்தியாவில் கண்டுபிடிப்புக்களே இல்லை: இன்போசிஸ் நாராயணமூர்த்தி
இந்தியாவின மிகபெரும்
கல்வி நிறுவனத்தில் பயின்ற இவர் கண்டுபிடித்தது
இதை மட்டும்தான்.
@latha டுவிட்டரில்
:ஒரு பெண் நான் இன்று ரசம் வைத்தேன் என்று ஸ்டேடஸ் போட்டுஇருக்கு 350 லைக் போட்டு இருக்காங்க
கடவுளே
மதுரைத்தமிழன்
:இந்தகால பெண்ணிற்கும் ரசம் வைக்க தெரிந்திருக்கிறது என்பதால் எல்லோரும் லைக் பண்ணி
இருப்பார்கள்
வரலாறு நமக்கு
சொல்லித்தருவது இதுதான்
அசோகர் சாலை
நெடுகிலும் மரம் நட்டார்
ராமதாஸ் சாலையோர
மரங்களை எல்லாம் வெட்டிதள்ளினார்
@மதுரைத்தமிழன்
ஆண்களில் 2 வகை உண்டு ஓன்று காம வயப்படுபவர்கள்
மற்றொன்று காம வயப்படாதவர்கள் மாதிரி நடிப்பவர்கள் இந்த இரண்டு வகைகளில் வாராதவர்கள்
ஆண்களே அல்ல
மனிதன் படைத்த பொருட்களுக்கெல்லாம் factory settings' ஆப்சன் இருக்கு
ஆனால் கடவுள் படைத்த பொருளான நம்ப உடலுக்கு மட்டும் அது இல்ல அப்ப கடவுளோட மனிதன் புத்திசாலியா
----------------------------------டுவிட்டரில்
படித்ததில் பிடித்தது-------------------------------------------
@மீனம்மா வெளிநாட்டில்
இருந்துகொண்டு, பிள்ளை தன்னை தேடுகிறதா? என்று விசாரிக்கும் அப்பனின் கண்ணீர் அவ்வளவு
தூய்மையானது தாய்ப்பாலை விட!.
Chandrasekar®
அய்யய்யோ என் அப்பா சொல்ற அறிவுரைகள் எல்லாம் என் நல்லதுக்குத்தானே னு தோண ஆரம்பிச்சுடுச்சே.
.. அவ்வ்வ் எனக்கு வயசு ஆய்டுச்சோ ?!?!?
@jeevasusi2014 மதம் பார்த்து மனிதரிடம் பழகாமல்
நல்ல மனம் பார்த்து பழகுங்கள்,நாளை இறப்பின் போது மதம் ஊர்வலமாக வராது நல்ல மனம் கொண்ட மனிதனே வருவான்
@altappu கிட்னி நல்லா வேலை செய்யனும்னா தண்ணி
நிறைய குடிக்கனும். லிவர் நல்லா வேலை செய்யனும்னா தண்ணி கம்மியா குடிக்கனும்
நிலாத்தோழி @ நிறையக் குழந்தைகள் இருக்கும் ஏழைவீட்டில் ஒன்றிரண்டை தத்துகொடுப்பது
போல்தான் உங்களை வெளிநாட்டிற்கு அனுப்பியிருக்கிறோம் வெளிநாடுவாழ் இந்தியரே
@புதியவன் சக பெண்களின் சிறப்ப சொன்னா ஏத்துக்க
மறுக்குறது பெண்களின் இயல்பு
@ஜூனியர் ஓல்ட்மாங்க்
:பிறரிடம் சிரித்துப் பேசி உங்களுடன் மட்டும்
அமைதிக் கொள்ளும் நபர்கள் மீது கோபப்படாதீர், உங்களிடத்தில் அவர்களால் நடிக்கவியலாமலும்
இருக்கலாம்
@ஆல்தோட்டபூபதி
நம் 20 வயதுக்குள் காதலித்த பெண்ணையெல்லாம்,
அவளின் 40 வயதுக்கு மேல் பார்க்கவேக்கூடாது :-)
@thimirru கருப்பா
இருந்தாலும் பரவாயில்லைனு ரசிக்கிற ரெண்டே விசயம் தலைமுடியும் இரவும் தான்
Harish MáHá
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்!
சண்டியர் @ஒருத்தனை நேரடியா வீழ்த்த முடியலைனா அவன் என்ன சாதின்னு கண்டுபிடிக்கிறது
தான தமிழனின் வழக்கம் :-)
@இளந்தென்றல்
பொண்ணை மட்டும் அழைச்சிகிட்டு போன காதலனை
கொல்றாங்க ...
பொண்ணையும் பொருளையும்
சேர்த்து அள்ளிகிட்டு போன மாப்பிளைய கொண்டாடுறாங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: கடந்த
சில நாட்களாக உடலில் ஏற்பட்ட வலிகாராணமாக ஹாஸ்பிடலில்
எமெர்ஜென்ஸி வார்டில் அட்மிட் ஆகிய நான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன் வலிக்கு காரணம் கிட்னியில்
உள்ள கல்தான் என்று டாக்டர் கூறியுள்ளனர். அது 5mm அளவு உள்ள கல் என்று சொல்லி அனுப்பி
வைத்துவிட்டனர். அந்த கல் வைரக்கல்லா என்று அவர்கள் சொல்லாமல் மறைத்துவிட்டனர். அது வைரக்கல்லாக
இருந்தால் அதை இணையத்தில் நல்ல பதிவு எழுதும் பதிவர்களுக்கு கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன்..
இப்படிக்கு பிரசவ வலியை போல உள்ள வலியை எதிர் நோக்கி இருக்கும் மதுரைத்தமிழன்.
பின் குறிப்பு : பூரிக்கட்டையால்
அடி வாங்கிய உங்களுக்கு இந்த வலி எல்லாம் ஒன்றுமே இல்லை என்று எந்த டீச்சராவது கருத்து
சொன்னால் அவருக்கு இந்த வைரக்கல் பரிசு போட்டியில் இடம் கிடையாது
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
ReplyDeleteஉடம்ப நல்ல வச்சுகோங்க அப்பதான
பூரிகட்டைக்கு புற முதுகு காட்ட முடியும்.
பூரிக்கட்டைக்கு என்றும் புறமுதுகு காட்டியதில்லை இந்த மதுரைத்தமிழன் ஹீஹீ நன்றி சகோ
Deleteஅட! இப்படிக் கல்லைப் போட்டுவிட்டீர்களே! பின் குறிப்பு போட்டு...அப்படித்தான் சொல்ல நினைத்து வந்தால்...ஹஹஹஹ இங்கு ஒரு தகவல் நான் டீச்சர் இல்லையே..(கீதா)
ReplyDeleteசரி ஜோக்ஸ் அபார்ட் கிட்னி ஸ்டோன் வலி எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும்.....அந்த வலிக்கிடையிலும் கீற்றுக்களைக் கீசு கீசு என்று கீசி இருக்கின்றீர்கள்...எல்லாமே நல்லாருக்கு...இப்போது நலமா? தங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள் தமிழா...வாழைத்தண்டு கிடைக்கும் உங்கள் பகுதியில் என்று நினைக்கின்றோம்.......அது நன்றாக உதவுகின்றது. மருத்துவரும் உணவு பற்று பரிந்துரைத்திருப்பார்...சீக்கிரம் அந்தக் கல் வெளியேற பிரார்த்திக்கின்றோம்...
இந்தப் பதிவு வந்ததுமே கமென்ட் போட்டு போட்டு போகாமல் இப்போது போகும் என்று நினைத்து....
நன்றி சகோ
Deleteஹப்பா கமென்ட் போயிருச்சுனு தெரியுது...தமிழா மெயில் டெலிவரி என்று எப்போது கருத்து போட்டாலும் எங்கள் ஐடிக்கு வருகின்றது...
ReplyDeleteமெயில் டெலிவரி ஃபேயிலியர் என்று வருகின்றது
ReplyDeleteஉங்க மெயில் செட்டிங்கில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம். அதனால் கவலைப்படாதீர்கள்
Deleteரசித்தேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteகிட்னியில் கல்லா... உடல்நிலை பத்திரம் சகோ...
ReplyDeleteநன்றி சகோ
Deleteகல்லடைப்பு..... தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் துரை.... விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteரசிக்க வைத்தது...
ReplyDeleteஉடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்...
நன்றி சகோ
Deleteஅச்சோ..உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் சகோ
ReplyDeleteநன்றி சகோ
Deleteவயிரக் கல்லெல்லாம் விளைகிறதா உங்கள் உடம்பில் பார்த்துப்பா கவனம் யாரும் அறிந்தா குண்டுக்கட்ட கொண்டு போயிடப் போறாங்க பொன் முட்டை இடும் வாத்தைப் போல ம்..ம் எல்லாம் பூரிக்கட்டை ரகசியமா இருக்குமோ ..... அது சரி இப்போ நலம் தானே நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteம்..ம் இப்ப எல்லாம் கவிதை என்றால் காத தூரம் ஓடுகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது .....
நான் வைரக்கல்லாக இருக்குமோ என்று சந்தேகத்தில் என் மனைவியிடம் சொன்னேன் அதற்கு அவள் உங்க தலையில் இருக்கும் களிமண்தான் இப்படி கல்லாக மாறி உங்க கிட்னியில் வந்து சேர்ந்து இருக்கும் என்று நக்கல் பண்ணுறா ஹும்ம்ம்ம்
Deleteகவிதை படித்து புரிய மூளை வேண்டும் ஆனால் என்னிடம் இருப்பது என்னவோ மூளைக்கு பதில் களிமண்ணல்லவோ
Deleteஇப்படி ஒரு பிரச்சனையை சொல்லும் போது கலாய்க்க இந்த டீச்சருக்கு மனசு வராது சகா:(((
ReplyDeleteகஷ்டம் தான். ஆனா கஷ்டத்தோட கஷ்டமா இன்னொரு கஷ்டத்தை தாங்கிகங்க. ஆமா அட்வைஸ் பண்ணப் போறேன்.
ப்ளீஸ் தக்காளியை தவிர்த்து விடுங்க. அடுத்து கல் பிரச்சனையை, வலியை அதிகரிக்குமாம். வாழைத்தண்டு கிடைத்தால் வாரம் ஒரு முறையாவது ஜூஸ் செய்து குடியுங்க. உங்களுக்கு விகடன் பிடிக்காதுன்னு தெரியும். but இந்த வாரம் நல்ல சோறு பகுதியில் இந்த கிட்னி ஸ்டோன் பத்தி எழுதி இருக்காங்க. டைம் கிடைக்கும்போது படிச்சுபாருங்க. நேரநேரத்துக்கு அளவா சாப்பிட்டாலே பாதி பிரச்சனையை ஓவர். take care of your health!
///இப்படி ஒரு பிரச்சனையை சொல்லும் போது கலாய்க்க இந்த டீச்சருக்கு மனசு வராது சகா:///
Deleteசரி சரி வைரக்கல் பரிசு போட்டியில் உங்களுக்கு இடம் கொடுத்தாச்சு அதனால் இனிமே நீங்க கலாய்க்கலாம்...வலியை மறக்க கலாய்ப்பதுதான் சிறந்த மருந்து.
(((// கஷ்டம் தான். ஆனா கஷ்டத்தோட கஷ்டமா இன்னொரு கஷ்டத்தை தாங்கிகங்க. ஆமா அட்வைஸ் பண்ணப் போறேன்.//
அட்வைஸ் விளக்கெண்ய் மாதிரி கொடுக்கிறவங்க சுலபமாக கொடுத்துடுவாங்க ஆனால் குடிக்கிறங்கவங்களுக்குதான் அது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்
/ப்ளீஸ் தக்காளியை தவிர்த்து விடுங்க.//
நான் தவிர்க்கதான் நினைக்கிறேன் எனது அரசியல் நையாண்டிகளை படித்துவிட்டு அவனவன் தக்காளியால் அடிக்கிறாங்க... அப்புறம் தக்காளி போல இருக்கும் பெண்களை பார்த்தால் தவிர்க்க முடியலையே அதனால அவங்களையும் நட்பு வளையத்தில் சேர்த்துகிறேன்
/ வாழைத்தண்டு கிடைத்தால் வாரம் ஒரு முறையாவது ஜூஸ் செய்து குடியுங்க.///
இதை எங்க வீட்டாம்மாவிற்கு காண்பிக்கனும் அவங்க ஒரு நாளைக்கு 32 அவுன்ஸ்( 2 கோக்பாட்டில் அளவு) அளவு வாழத்தண்டு ஜுஸை குடிக்க சொல்லி மிரட்டுராங்க ஹும்ம் இதுக்குதான் சகோ பக்கத்தில் இருக்கணும் என்று சொல்லுவது
//உங்களுக்கு விகடன் பிடிக்காதுன்னு தெரியும். ///
எனக்கு பிடிக்காதுன்னு யாரு சொன்னா எனக்கு பிடிக்கும் காரணம் அது தரும் தகவல்களை விமரிசனம் செய்தால்தானே அதிக ஹிட்டுக்கள் கிடைக்கும் ஓ...மை காட் வாய் தவறி ரகசியத்தை உங்களிடம் சொல்லிட்டேனே
///நேரநேரத்துக்கு அளவா சாப்பிட்டாலே பாதி பிரச்சனையை ஓவர்.///
இது தப்பு நல்லா தண்ணி போட்டா சாரி தண்ணிகுடிச்சா கிட்னி ஸ்டோன் வராது,
சகோ உங்க அட்வைஸ் சுத்த வேஸ்ட்.... எங்க பக்கத்துவீட்டுகாரர் டாக்டர் அவரிடம் நடந்தை சொன்னேன் அவர் சொன்னார் நல்லா பீர் சாப்பிடு கல் எளிதாக வந்துடும் என்று... அவருக்கு கோயில் கட்ட நான் இப்ப இடம் பார்த்து கொண்டிருக்கிறேன் அந்த மாதிரி டாக்டர்தான் எனக்கு கடவுள் மாதிரி
*******நீங்கள் சொன்ன அட்வைஸ்களைத்தான் நான் இப்போ கடைபிடித்து வருகிறேன்....இப்போது வலியில்லை ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இது வரை கல் இன்னும் வெளியே வரவில்லை...
//take care of your health!//
தாங்க்யூ
உங்கள திருத்தவே முடியாது@!! பாவம் மாமி:(((
ReplyDeleteநல்லவனை திருத்த முயற்சியா என்ன நடக்குது இந்த உலகத்தில உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Deleteஆனாலும் சலிச்சுக்காம மேடம் சொல்ற படி செய்யுங்க பாஸ்! get well soon:)
ReplyDeleteமேடம் சொல்வதற்கு எதிராக நானெல்லாம் சலித்து கொள்ள முடியுமா என்ன அப்படி கூட என் கனவில் கூட செய்வதில்லை
Deleteகிட்னி ஸ்டோன்னா கல்லடைப்புன்னு எழுதியிருக்கு. அப்படின்ன உங்களுக்கு ஒரு சுலபமான வைத்தியம். பூரிக்கட்டையை வீசும்போது (வேற யார்.. உங்கள் மனைவியார்தான்), தலைக்குப் பதிலா கொஞ்சம் குதிச்சு இடுப்பக் காண்பீங்க. ஒரு சில தடவை இப்படிப் பண்ணினால் கல்லடைப்பு போயிடும்னு, நான் சொல்லலீங்கோ... நம்ம வடிவேவு ஒரு படத்துல சொல்லியிருக்கிறாருங்கோ.
ReplyDeleteJokes apart... வலி முதல் முறை வரும்போதுதான் தாங்கமுடியாமல் இருக்கும். டாக்டர்ட்ட காண்பிச்சாச்சுனா, கல் கரையறதுக்கு மருந்து கொடுப்பார்கள். கல் பெரிசாக இருந்திருந்தால் லேசர் சிகிச்சை பண்ணியிருப்பார்கள். கவலைப்பட வேண்டாம். என்னிடம் ஒரு பிலிப்பைன் நாட்டு டாக்டர் சொன்னது..சர்ர்ர்ரென்று வெளியேற்றாமல் விட்டு விட்டு கொஞ்சம் ஃபோர்ஸா சிறு'நீர் வெளியேற்றினால் இந்தத் தொந்தரவு குறையும் என்றார். (Please delete, if inappropriate)