Wednesday, July 29, 2015



உங்கள் பதிவை அனைவரும் பார்க்க படிக்க செய்வது எப்படி?

பழம் பெரும் பதிவர்களில் இருந்து புதிதாக வந்து பதிவு எழுதும் பதிவர்கள் வரை தினமும் பதிவுகள் எழுதி வெளியிடுகின்றனர். அப்படி எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதுதான் தான் எழுதிய பதிவுகள் அனைவராலும் படிக்கப் பட வேண்டும் என்பதுதான். அப்படி நினைப்பது தவறா என்று பார்த்தால் அது தவறில்லைதான் என்று நினைக்க தோன்றும். அப்படி நினப்பதும் ஒரு இயல்பான விஷயம்தானே .


அப்படி நினைப்பது தவறு இல்லை அது இயல்பான விஷயம் என்று முடிவு செய்துவிட்டோம். இப்படி முடிவு செய்துவிட்டு அப்படியே இருந்தால் எல்லோரையும் நம் பதிவை பார்வையிடச் செய்ய முடியுமா என்ன?


அப்ப என்ன செய்யனும் என்று யோசிக்கனும். அப்படி யோசிக்கையில்  நமக்கு சில ஐடியாக்கள் வரும்.  எனக்கு  இப்படி ஐடியா வந்துச்சு " உங்கள் பதிவை அனைவரும் பார்க்க படிக்க செய்வது எப்படி?" என்றஒரு தலைப்பை வைத்தால் எப்படியும் அதிக எண்ணிக்கையில் பலரும் வந்து படிப்பார்கள் என்று..

அதனால் இப்படி ஒரு தலைப்பை வைத்தால் பலரும் இங்கு வந்து பார்வையிடச் செய்வார்கள் இப்படிதான் அதிக மக்களை நம் பதிவை பார்வையிடச் செய்ய வைக்க வேண்டும்.


நான் சொன்ன ஐடியா உங்களுக்கு மிகவும் உதவும் என நினைக்கிறேன்

சரி சரி நீங்களும் என் மனைவி மாதிரி பூரிக்கட்டையை தூக்குவதற்கு முன் நான் இந்த இடத்தைவிட்டு எஸ்கேப் ஆகிறேன்



அன்புடன்
மதுரைத்தமிழன் ( டி.ஜே.துரை)

15 comments:

  1. ஆஹா! கோடீஸ்வரன் ஆவது எப்படின்னு வடிவேலு ஒருப்டத்தில சொன்ன மாதிரி இல்ல இருக்கு.
    பூரிக் கட்டை இல்ல உருட்டைக் கட்டையோட வந்தாலும் ஆச்சர்யப் படறதுக்கில்லை.

    ReplyDelete
  2. Replies
    1. அதானே.. மிகச் சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..

      Delete
  3. வணக்கம் அய்யா,
    தாங்கள் ஒரு பதிவில் சங்கஇலக்கியத்தில் பூரிக்கட்டை இருந்ததா? எனக் கேட்டதற்கு பதிவாசிரியர் உலக்கைத் தான் என்று பதில் சொன்னதை நினைவூட்ட வந்தேன்,,

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அஹா...நினைவை அழுத்தமாக்க நானும் உடன் வந்தேன் மகேஷ்வரி......

      Delete
  4. பாவம் அந்த பாண்டியன் ஜெபரத்தினம்!! உங்களை நம்பி வந்திருக்கார் பாருங்க:)))))

    ReplyDelete
  5. இவ்வாறும் குறும்பும் குழப்பமும் செய்யமுடியுமா?

    ReplyDelete
  6. நல்ல ஐடியா! :)))

    உங்க குறும்பு தெரிஞ்சவங்க ஜாக்கிரதை உணர்வுடன் தான் வருவோம்! :))

    த.ம. 4

    ReplyDelete
  7. நினைத்து நினைத்து சிரிக்க வைத்துவிட்டீர்களே ம்..ம் ரொம்ப சுட்டி தான்.

    ReplyDelete
  8. குறும்பு... பதிவுக்கு தலைப்பு வைப்பதில் கில்லாடி நீங்க...

    ReplyDelete
  9. பூரிக்கட்டையால உதை வாங்கினாலும் ஹிட்ஸ் எகிறுது இல்லே! அது போதும்! ஹாஹாஹா!

    ReplyDelete
  10. நகைச்சுவையும் சிந்தனையும் கலந்த பதிவு. உண்மைதான்... வார்த்தைகள்தான் கவிதை ஆகின்றன அவை தொடுக்கப்படும் விதத்தில் என்று...
    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  11. இருக்கற வேலையை விட்டுவிட்டு, என்ன போட்டிருக்கிறீர்கள் என்று பார்க்கவந்தால், கட்டையவா கொடுக்கறீங்க. ரொம்பக் (கொழுப்புதான்) குறும்புதான்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.