Monday, July 27, 2015



avargal unmaigal
அப்துல் கலாம் மறைவு இந்திய மாணவர்களுக்கு பெரும் இழப்பு

முன்னாள் ஜனாதிபதியும் இந்திய விஞ்ஞானியுமான அப்துல் கலாம் Indian Institute of Management உரையாற்றிய போது மயங்கி விழுந்தார் அதன் பின் ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற போது அவர் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்பதைவிட வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது. அவரின் இழப்பு இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு பெரும் இழப்புதான்


Kalam -- the 11th President on India between 2002 and 2007 -- was born in Rameswaram on October 15, 1931, to the family of a boatman.

He played a pivotal role in India's Pokhran-II nuclear test in 1998, the first since the test by India in 1974. He was known as the missile man of India.

During his term as President, he was popularly known as the People's President. Success followed Dr Kalam. Prithvi, Agni, Akash, Trishul and Nag missiles were huge successes.

For his achievements, he was awarded the Padma Bhushan and Bharat Ratna, and then he became the 11th President of India in 2002.

அப்துல்கலாம் குடும்பத்தினருக்கும் அவரை ஆசிரியராக  நினைத்து தொடர்ந்த அனைவருக்கும் அவர்கள் உண்மைகள் தளத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்

அப்துல்கலாமை பற்றி எடுத்து சொல்ல நிறைய இருக்கிறது அதை பலரும் வரும் தினங்களில் பகிரப் போவதால் இரங்கலை மற்றும் பதிவு செய்து விட்டு செல்கிறேன்

Kasthuri Rengan  என்ற ஆசிரியரின் மிக எளிமையான அதே நேரத்தில் நேர்த்தியாக சொன்ன இரங்கல் செய்தியை இங்கே நானும் பதிவு செய்விரும்புகிறேன்

நிறைவுற்றது ஒரு சாதனைப் பயணம்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வாசிப்பை நோக்கி இளம் தலைமுறையை திருப்பிய ஒரு அற்புத மனிதர் தனது சாதனைப் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.
நன்றிகளோடு நினைவுகூர்கிறேன்.
போய்வாருங்கள் எங்கள் ஞானத்தந்தையே.

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. செய்தி கேட்டதும் மனது மிகவும் வேதனை அடைந்துவிட்டது! நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம்! மாணவர்களுக்கு மிகப் பெரிய இழப்புதான்...அவரது கனவை நாமும், நமது சந்ததியினரும் நனவாக்குவதே, நம்மால் முடிந்த அளவேனும் செய்வதே நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலி! மரியாதை! அவரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம். நாங்களும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைச் சேர்ப்பதில் சேர்ந்து கொள்கின்றோம்.

    ReplyDelete
  2. வேதனையான செய்தி அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  3. பேரிழப்புதான். இருந்தாலும் அவர் தூண்டிய உணர்வுகள் விதைத்துவிட்ட விதைகள் நன்கு விருட்சமாகும்.

    ReplyDelete
  4. அனைவருக்கும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மாபெரும் இழப்பு...

    அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...

    ReplyDelete
  5. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
    நல்லதொரு மாணவச் செல்வங்களை உருவாக்குவதே அவர் ஆன்மாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

    ReplyDelete
  6. அவர் உடல் மறைந்தாலும்
    அவர்தம் புகழ் என்றுமே மறையாது
    அன்னாரின் ஆன்மா எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் சாந்தியடைய பிரார்த்திப்போம்

    ReplyDelete
  7. விதைத்தவர் விண்ணகம் சென்றார்-அன்னார் விதைத்த
    விதைகள் விருட்சமாகும் விரைவில்

    ReplyDelete
  8. நல்லதொரு விடிவெள்ளி மறைந்து போனது! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  9. ஏழ்மையில் பிறந்து எளிமையாய் வாழ்ந்து இந்திய தலைமகனாய் ஆகி,மறைந்த இன்றுவரை நாட்டுகாவே வாழ்ந்தவர்! இவர் போல் இருப்பவர் எவரும் இலர் மறவ இயலா மாமனிதர்!இனியாவது அவர் வழி நடப்போம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.