Friday, July 24, 2015



ஷர்மிலி மிஸ் அடிக்காதீங்க மிஸ்

நண்பர் ஸ்கூல் பையன் சில நாட்களுக்கு முன்னால்  தனது சொந்த அனுபவத்தை  அடிப்படையாகக் கொண்டு ஒரு பதிவை சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். எப்போதுமே கலாய்த்து கருத்துகளை இடும் நான் அந்த கதையை படித்ததும்  உண்மையில் நெஞ்சம் நெகிழந்தது அதனால் அவரை பாராட்டி சென்றேன் அந்த கதையை படித்த நண்பர் முரளியின்  மனதில் அந்த கதை  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு எண்ண அலைகளை அவர் மனதில் ஏற்படுத்தியதன் விளைவாக இன்னொரு கற்பனை முடிவை கதையாக எழுதிவெளியிட்டார் அதை படித்த நான் இதே கதையை பலர் படித்து அதை  அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஒரு முடிவை எழுதிவிட்டால் நன்றாக இருக்குமே என்று சொல்லி அதை தொடராக எழுதி சில பேர்களுக்கு வேண்டு கோளை விடுவித்தேன் என் வேண்டு கோளுக்குகிணங்க கடமை கண்ணியம் கட்டுபாடு என்று கொள்கையை வாழ்க்கையில் கடை பிடித்து மதுரைத்தமிழனுக்கு இணையாக காலய்க்கும் காலாய்க்கும்  பள்ளி ஆசிரியரான நம்ம சகோ மைதிலி  எனது வேண்டு கோளுக்கிணங்க அந்த கதை முடிவை மிக  அற்புதமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல நம்ம வாத்தியார் கணேஸும்  வழக்கமாக தனது நகைச்சுவை பாணியிலும் மற்றும் சகோ கிரேஸும் தனது பாணியில் எழுதி வெளியிட்டு இருக்கிறார்


இந்த கதை முடிவுகளை படித்த ஒருவர் சும்மா இருந்த என்னை உசுப்பி நீங்களும் உங்கள் முடிவை கலாய்து எழுதிவிடுங்கள் என கேட்டு கொண்டதருக்கிணங்க என் முடிவு இங்கே

அவரது கதையின் சுருக்கம்: தன் குழந்தையை டீச்சர் அடித்துவிட்டதை கேட்ட தந்தைக்கு சினம் ஏறி அந்த டீச்சருக்கு அடிக்க என்ன உரிமை இருக்கிறது என்று நினைத்து அந்த ஷர்மிலி டீச்சரை பார்த்து நாக்கை புடுங்கிற  மாதிரி  கேள்வி கேட்க  தந்தை தொடர்ந்து சில நாட்கள் செல்ல அங்கு டீச்சரை பார்க்க முடியவில்லை.  காரணம் அவரது தந்தை இறந்து விட்டார் கோபத்தோடு  புறப்பட்டவர் இரக்கத்தோடு காத்திருப்பதகா முடிகிறது . ஸ்கூல் பையனின் சிறுகதை
ஸ்கூல் பையனியன்  பதிவைப் படிக்க கிளிக் செய்க ஷர்மிலி மிஸ்
 அவருடைய பதிவில் கீழ்க்கண்டசிவப்பில் குறிப்பிட்ட  வாக்கியத்தை  தொடர்ந்து இதனை வாசிக்கவும்
அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்.
...ஸ்டாஃப்  ரூமில் ஷர்மிலி  மிஸ் இருப்பதாக சொல்ல கோபத்துடன் விரைந்தேன்

ஸ்டாப் ரூமில் மாம்பலக் கலர் புடவை அணிந்து தலையில் மல்லிகை பூ சூடி தன் பின் முதுகை காண்பித்தப்படி ஒரு பெண் நின்று இருந்தார் அவர்தான் டீச்சராக இருக்க வேண்டும் என்று நினைத்து மிஸ் என்று  அழைக்க அந்த பெண் திரும்பியதும் அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் என்தி மனது பாடத் துவங்கியது இப்படி

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
(பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க) அதன் பின் ஹேய் ஷ்ர்மிலி நீயா இது என்று கேட்க..
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கார்த்தி நீயாடா இது என்று அந்த டீச்சரும் குரல் கொடுத்து ஒடி(ஸ்லோமோஷனில்தான்)வந்து ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர்.. அதன் பின் குழந்தை அருகில் இருப்பதை உணர்ந்து விலகி நின்றனர்.

அதன் பின் என்னை தேடிதான் நீ வந்தாயா என்று கேட்க இல்லை ஷ்ர்மிலி என் குழந்தையை அவள் டீச்சர் அடித்துவிட்டார் அதனை தட்டி கேட்க வந்த இடத்தில் நீ இருப்பதை பார்த்தேன் என்றார்.. ஒ இதுவா உன் குழந்தை சாரிடா என்னை மன்னித்து கொள் என்றாள்

உடனே கார்த்தி  அடித்து நீதான் என்றால் ஒகேடா என் குழந்தை உன் குழந்தை மாதிரிதானே பரவாயில்லைடா என்று கூறி...இத்தனை ஆண்டுகாலாக என்னை விட்டு எங்கே விட்டு எங்கே சென்றாய் என்று சோகத்துடன் கேட்டேன்

கார்த்தி நம்ம காதலை அறிந்த என் பெற்றோர்கள் உடனே என்னை மிரட்டி டெல்லிக்கு அழைத்து சென்றுவிட்டார்கள் .அவர்களின் கண்காணிப்பில் இருந்து என்னால் தப்பி வரமுடியவில்லை அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை என்பதால் உறவினர்கள் இருக்கும் நம்ம ஊருக்கே மீண்டும் வந்துட்டோம் ஊருக்கு வந்தது முதல் உன்னைத்தான் தேடிகிட்டு இருந்தேன் பேஸ்புக்கெல்லாம் தேடினேன்(எப்படி கிடைப்பார் அதுதான் ஸ்கூல் பையன் பெயரில் இருந்தால்) நீ கிடைக்கலை. 2 நாள் முன்னால்தான் கடவுள் அப்பாவை அழைத்து கொண்டார் .அதனால்தான் என்னவோ இப்ப கடவுளே என் கண் முன்னால் உன்னை கொண்டு வந்து நிறுத்திட்டார் . அந்த கடவுளுக்கு நான் நன்றிதான் சொல்லனும்டா

 )முருகன் பெயரை வைச்சாலே இப்படிதானோ) இனிமே கவலைப்படாதே இனிமே நான் உன்னை தினமும் வந்து கவனிச்சுகிறேன் என சொல்லி  உன் போன் நம்பரை கொடு நான் அப்புறமா கால் பண்ணுறேன் இப்ப எலோரும் நம்மையே கவனிக்கிறார்கள என்று சொல்லி அவளிடம் இருந்து விடைப் பெற்றேன்.

ஆபிஸ் சென்றதும் வீட்டிற்கு போன் பண்ணி மனைவியிடம் அந்த டீச்சரை நல்லா மிரட்டி இருக்கிறேன். அதுமட்டுமல்ல இனிமேல் தினமும் நாந்தான் குழந்தையை கொண்டு வந்துவிட்டு கூட்டி செல்வதாக சொல்லி இருக்கிறேன் இனிமேல் இது போல அசம்பாவிதம் நடக்காம நான் பார்த்துக்கிறேன் இனிம ஸ்கூல் பக்கம் நீ போக வேண்டாம் அதை நான் கவனித்து கொள்கிறேன் அப்பதான் இந்த மாதிரி உள்ள டீச்சர்களுக்கு கொஞ்சமாவது பயம் வரும் சொல்லிவிட்டு எப்படா ஸ்கூல் முடியும் என எதிர்பார்த்து கனவில் ஆழ்ந்துவிட்டேன்.
இதை படித்த பின் இனிமேல் யாருக்காவது என்னை கதை எழுதுங்க என்று கேட்க துணிச்சல் உண்டா என்ன?

அன்புடன்
மதுரைத்தமிழன்( டி,ஜே.துரை)

42 comments:

  1. யோவ்..... இதுவரை பூரிக்கட்டை பறக்காத கா.ச. வீட்லகூட பறக்க வெச்சிருவீரு போலயே.. இத என் தங்கை பிரபா பாத்தான்னா அவன் முதுகு வீங்குறது நிச்சயம்.!!!

    ReplyDelete
    Replies
    1. (இது உண்மைகதை அல்ல உண்மைகதை அல்ல) ஸ்கூல் பையன் என்னை கூப்பிட்டு இப்படி போட சொல்லவில்லை என்று நான் சொன்னா யாரவது நம்பவா போறீங்க

      Delete
  2. ஆஹா! இப்படி ஒரு ரூட் இருக்கா? கதையை முடிப்பீங்கன்னு பாத்தா இன்னும் ஓடும் போல இருக்கே. தட்டிக் கேட்க போன இடத்தில் கட்டி(அணைத்து)க் கேட்டதை குழந்தை போட்டு கொடுத்தால் என்ன ஆகும்
    பூரிக் கட்டைன்னு ஒண்ணு இருக்கறதை மறந்துவிட்டார் மதுரை தமிழன்.
    மதுரை தமிழனின் ட்ரேட் மார்க் நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் சரவணன் ரொம்ப ஸ்மார்ட்டான ஆளு அவர் மதுரைத்தமிழன் மாதிரி அல்ல அதுனால குழந்தைகிட்ட அந்த டீச்சரை கட்டி அணைத்து இடுப்பில் நல்லா கிள்ளிவிட்டேன் நீ அதை நீ கவனிச்சியாட குழந்தை என கேட்பார் அவரை பார்த்த சந்தோஷத்தில் அழுததை அவர் கிள்ளியதால் அழுதாக கதை அளப்பார். அப்பாவின் வீரத்தை பற்றி வியக்காத பெண் குழந்தை இருக்குமா இந்த உலகத்தில்

      Delete
    2. ஹஹஹஹ்ஹ செம .....தாங்கலைப்பா..சிரிச்சு சிரிச்சு....

      Delete
  3. குறும்படம் எடுக்கலாம் என்று சொன்னார்கள்... திரைப்படமே எடுக்கலாம் போல... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. நீங்க தயாரிப்பாளர் என்றால் கோவை ஆவியும் துளசிசாரும் ரெடி

      Delete
  4. feeling பத்த வச்சிட்டியே பரட்டை..

    ReplyDelete
  5. டீச்சரா தமன்னா போட்டோ போட்டதுக்காகவே இந்தக் 'கதை' எனக்கு பிடிச்சிடுச்சு.. ஹிஹிஹி.. (கர்ச்சீப் எங்கப்பா?)

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆளான நஸியாவை போடலாம்தான் நினைத்தேன் அப்புறம் நீங்க கோவிச்சுக்குவீங்க என்றுதான் விட்டுடேன்

      Delete
  6. உங்கள் பாணியில் அதே கதை!...... ஸ்.பை. வீட்டிலும் பூரிக்கட்டை பறக்க வழி செய்துவிட்டீர்களே துரை....:)

    ReplyDelete
    Replies
    1. ஸ்பை மனைவி ரொம்ப அப்பாவிங்க அவங்க எங்க வீட்டுக்காரம்மா மாதிரி அல்லங்க அவங்களுக்கு கோபம் வந்தா மேக்ஸிமம் தலையனையை கொண்டுதான் ஸ்பையை அடிப்பாங்க

      Delete
  7. ஹா ஹா... இது இன்னும் வித்தியாசமான பதிவு.... ஏதாவது கருத்து சொன்னேன்னா இங்கயும் பூரிக்கட்டை பறக்கும்.... அவ்வவ்வ்வ்வ்....

    ReplyDelete
    Replies

    1. பயப்படாம கருத்து சொல்லுங்க ...என்னா கதை இங்க முடிந்துவிட்டது உங்க கருத்து மூலமா புதிய கதை எல்லாம் கட்டமாட்டோம்

      Delete
  8. அது சரி.. இன்னொரு குழந்தை இருந்து அது வேறே ஸ்கூலில் ஏதும் படிக்கலையே..?

    பத்த வச்சிட்டியே பரட்ட..

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு இன்னொரு குழந்தை இருக்குது அந்த குழந்தையும் அதே ஸ்கூலில்தான் படிக்குது என நினைக்கிறேன் ஆனால் இந்த குழந்தையையும் வேறு டீச்சர் அடிக்காதவரை ஸ்பை க்கு இன்னொரு காதலி இருக்கான்னு யாருக்கும் தெரியாது

      Delete
  9. மாறிமாறி எங்கெங்கோ போய் கடைசியில் இங்கு வந்துவிட்டதா?

    ReplyDelete
    Replies
    1. காற்றை போல இங்கு வந்துவிட்டு இந்நேரம் வேறு எங்காவது சென்று இருக்கும்

      Delete
  10. ஹா ஹா :) எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா :)
    பாவம் தம்பி கார்த்திக் .. haaa haaaa
    அது சரி சகோ ..அமலா வந்தது உங்க கனவில் தானே :)

    ReplyDelete
    Replies
    1. டெய்லி வாழ்க்கையில் நடப்பபதுதான் கனவாக வரும் அதனால் அமலாவிற்கு பதிலாக பூரிக்கட்டைதான் வருகிறது. அமலா அது ஒரு கனாக்காலம் ஹும்ம்ம்ம்ம்

      Delete
  11. ஹஹஹஹஹ்ஹ் எஞ்சலின் அவர்கள் நீங்களும் இந்தத் தொடரில் எழுதி இருக்கின்றீர்கள் என்று சொன்னது.....அப்ப கண்டிப்பா வில்லங்கம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே வந்தால்....அட அப்படியே வில்லங்கம் தான் ...நாங்க பேசிக்கிட்டு இப்படித்தான் நம்ம் தமிழன் எழுதிருப்பாருனு நினைச்சு வந்தா....அட சூப்பர்....ஆனா தமிழா , இது "யான் பெறும் இன்பம் பெறுக சரவணன்" என்ற ரீதியில் இருக்குதே...ஹஹாஹ்.அவங்க வீட்டுலயும் கட்டை பறக்கணுமா தமிழா...அஹஹஹ...ரொம்பவே ரசிச்சு வாசித்தோம்...உங்க அக்மார்க்!

    ReplyDelete
    Replies
    1. அட ஸ்கூல்பையன் என்ன மாதிரி எல்லாம் கிடையாதுங்க ரொம்ப ஸ்மார்ட்டான ஆளுங்க. அவங்க வீட்டாம்மா கோபடுறாங்க என்று தெரியவர ஆர்ம்பிக்கும் போதே உடனே ஊரில் இருக்கும் மிக உயர்ந்த ஹோட்டலுக்கு கூப்பிட்டு போய் அருமையான சாப்பாடு வாங்கி கொடுத்து கோபத்தை தணித்து அங்கே இருந்து சில போட்டோக்கள் எடுத்து அதை ஒரு பதிவாக போட்டுவிடுவாருங்க

      Delete
  12. அடடா செம தீப்பொறி பறக்குது போல ....பத்திக்கிட்டு எரியுது எரியுது ஐயையோ !

    ReplyDelete
    Replies
    1. துளசி சார் ஆசிரியாரான நீங்க எந்த குழந்தையும் அடிச்சுவிடாதீங்க் அப்படி நீங்க அடிச்சீங்க அப்புறம் அந்த குழ்ந்தையோட அம்மா சண்டை போட வந்து அப்புறம் அவங்க உங்க பழைய காதலியா இருக்கப் போறாங்க

      Delete
  13. ஹாஹாஹா! பூரிக்கட்டைக்கு ரூட் மாத்தி விட்டுருக்கீங்க போலிருக்கே!

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டைக்கு ரூட் மாத்த முடியாது அது எப்போதும் ஒன்வேயில்தான் செல்லும் அதுவும் மதுரைத்தமிழனின் உடலை நோக்கி மட்டும்தான்

      Delete
  14. இது மட்டும் விட்டுப் போயிருந்தது.... இதையும் படிச்சாச்சு!

    ReplyDelete
    Replies
    1. இதை படிச்சுட்டு நீங்க அப்படியே போகக் கூடாது யாரு எல்லாம் படிச்சு கருத்து இட்டாங்களோ அவங்க கண்டிப்பா இந்த கதைக்கு ஒரு முடிவை எழுதிவிட்டுதான் போகனும் என்பது எழுதாதவிதி

      Delete
    2. ஐயோ.... நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!

      :))))

      Delete
  15. அப்பவே சொன்னேன் !! இனியாச்செல்லம் தேரை இழுத்துத் தெருவிலே விடாதீங்க, இவரு டீச்சரை நாரடித்துவிடுவார்னு. கேட்டதா அந்த அப்பாவி பொண்ணு:(((

    ஆமா, அதென்ன சமந்தமே இல்லமா ஒரு பாட்டு!!! ஒ!! அது தான் கார்த்திக் சகா ட்ரீம் சாங்கா!! இப்போ அவர் வீட்டிலும் பூரிக்கட்டை பறப்பதாகக் கேள்வி:)))

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி பொண்ணு கேட்டதால்தான் இந்த பதிவே......

      Delete
  16. அடப்பாவமே....படத்தைப் பார்த்து இப்பதிவிற்கு இந்தப் படம் தேவையா என்று கேட்க நினைத்துப் படித்தேன்..நீங்க என்னடான்னா....

    குழந்தையின் அம்மாவை இங்கு வரும்படி அன்புடன் அக்கறையுடன் அழைக்கிறேன்.

    இந்த கதைக்கு ஓட்டும் போட்டுட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் டீச்சர் எல்லாம் இப்படி அழகாக இருக்கமாட்டார்களா என்ன? குழந்தையின் அம்மா என்றது ஸ்பை மனைவியைதானே என் மனைவியை இல்லைதானே அது வரைக்கும் நான் தப்பிச்சேன் வோட்டிற்கு மிகவும் நன்றி ஆனால் மீண்டும் என் தளத்திற்கு வந்தால் அதற்காக கஷ்டப்பட வேண்டாம் சகோ

      Delete
  17. \\\\\\\இதைப் படித்த பின் யாருக்காவது யாருக்காவது என்னை கதை எழுதுங்க என்று கேட்க துணிச்சல் உண்டா ///
    ஐயடா எப்படி வரும். பின்னூட்டம் இடவே நடுங்குது இல்ல. இருந்தாலும் உங்கள் பாணியில் அசத்திட்டீங்க சகோ ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. இப்படி அசத்திட்டாங்க என்று சொல்லி உசுப்பேத்த எல்லாம் வேண்டாம்

      Delete
  18. மிக்க நன்றி பதிவுக்கு ...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கருத்திற்கு....

      Delete
  19. அட இந்தக் கோணத்தில் யாரும் கதை சொல்லலையே...
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இப்படி கிறுக்குதனமாக யோசிக்க மதுரைத்தமிழனால்தான் முடியும்

      Delete
  20. வணக்கம் அய்யா,
    விடமாட்டீங்களா ஷர்மிலி டீச்சரை,,,,,,,,,,,,,,
    சூப்பர், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. விட்டுவிட்டேன் ஸ்கூல் பையனிடம்......

      Delete
  21. பாவம் அந்த ஷர்மிலி/ராதிகா மிஸ்! எல்லார் கிட்டேயும் மாட்டிட்டுத் தவிக்கிறாங்க. இங்கே என்னன்னா குழந்தையோட அப்பா முன்னாள் காதலனா? இது அப்புறமா எதிலே கொண்டு விடுமோ? :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.