உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 4, 2015

யுவன் சங்கரை விஜயகாந்த் வாழ்த்தினால் எப்படி வாழ்த்துவார்?யுவன் சங்கரை விஜயகாந்த் வாழ்த்தினால் எப்படி வாழ்த்துவார்?

கலாய்க்க

யுவன் சங்கர் திருமண விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு வாழ்த்தினால் எப்படி வாழ்த்துவார்?
இந்நாள் மீண்டும் மீண்டும் வர வாழ்த்துகிறேன் என்றுதான் வாழ்த்துவார்


மதுரைத்தமிழனின் வாழ்த்து : இது போல மேலும் பல திருமணங்களை செய்து சாதனைகள் புரிய யுவான் சங்கரை வாழ்த்துக்கிறேன்2018ல் நடக்கும் திருமணத்திற்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர கடைசிநாள் 2016 டிசம்பர் 31. எம்மதமும் சம்மதம் ஆனால் என் பொட்டி நிறம்பணும் அவ்வளவுதான் மக்காஸ்செய்தி : தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை ரூ.165 கோடி: எதிர்பார்த்ததை விட குறைவு;
தமிழக முதல்வர பன்னீர் செல்வம் நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு போய்விடுவார் போலிருக்கிறதேசெய்தி :புதிய திரைப்பட டிவிடிக்கள் வீடு வீடாக விற்பனை - சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறோம்: சேரன்
அப்ப ரஜினியின் அடுத்த படம் இப்படிதான்  ரீலீஸ் பண்ணுப்படுமோ?


சிரிக்க :

மதுரைத்தமிழன்: திருவள்ளுவரை விட என் மனைவிதான் ரொம்ப ஸ்மார்ட்
திண்டுக்கல்தன்பாலன்: மதுரைத்தமிழா சும்மாவாச்சும் சொல்லாதீங்க் அதற்கு ஏதாவது புருஃப் இருக்கா?
மதுரைத்தமிழன்: தனபாலன் சார் திருவள்ளுவர் எதையும் ஒரு அடியில் சொல்லி புரிய வைப்பதில்லை அவர் இரண்டு அடியில்தான் எல்லாவற்றையும் புரியும்படி சொல்லி இருக்கிறார் ஆனால் என் மனைவியோ ஒரே அடியில் (பூரிக்கட்டை) எல்லாவற்றையும் புரிய வச்சிடுவா...! இப்ப சொல்லுங்க யாரு ஸ்மார்ட் என்று
தனபாலன்: மதுர ஆளைவிடுப்பா நான் ஏதாவது சொல்லப் போக பூரிக்கட்டை என்னை நோக்கி வந்துச்சுன்னா நான் என்ன பண்றது இந்த விளையாட்டுக்கு நான் வரல

டீச்சர் : இது வரைக்கும் நடத்தி முடிச்ச பாடத்துல எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க .
மாணவன் : மேடம் நீங்க கணக்கு டீச்சரா  இல்லை இங்கிலீஷ் டீச்சரா ?
(இந்த ஜோக்கை படிக்கும் போது மைதிலி டீச்சர் உங்கள் ஞாபகத்திற்கு வந்தா அதற்கு நான் காரணம் அல்ல)

சிந்திக்க :

பெண்கள்  தெருவில் இறங்கி நடந்தாலே கற்பழிப்பு வரை செல்லுகிற இந்தியாவில். தான் யாரென்ற அடையாளத்தை மறைக்கும் வசதியுள்ள இணையத்தில் ஒரு பெண் கிடைத்தால் விட்டிவிடுவார்களா என்ன?அதனால் பெண்கள்தான் மிக ஜாக்கிரைதையாக இணையத்தில் செயல்படனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

21 comments :

 1. நிச்சயமா திருவள்ளுவரை மிஞ்சிட்டாங்கதான். மைதிலி டீச்சர் வேற வந்து அரையடியில புரியவைப்பாங்க

  ReplyDelete
  Replies
  1. மைதிலி டீச்சரை விட்டு புரிய வைப்பதற்கு பதிலாக அடிக்க வைக்க ஐடியா தருகிற மாதிரி இருக்குதே

   Delete
 2. பணம் புகழ் வந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதில்லை.யோவான் சங்கர் அதற்கு உதாரணம் . பரிதாபப் படத்தான்முடிகிறது

  ReplyDelete
  Replies
  1. பணம் என்றும் நிம்மதியை தருவதில்லை மனம்தான் நிம்மதியை தருகிறது யுவன் அடிக்கடி மனைவியை மாற்றுவதற்கு பதிலாக இருக்கும் மனைவியின் மனதை மாற்ற அல்லது புரிந்து நடந்தாலே வாழ்க்கையில் வெற்றி பெறலாம் பாவம் இதை சொல்ல அவருக்கு பெரியவர்கள் யாரும் அருகில் இல்லை என்பது வருத்ததைதான் தருகிறது

   Delete
 3. அதெல்லாம் ஒரு சந்தேகமும் இல்லையே அவ்வளவு தெளிவாத் தானே இருக்கு. சரி சிந்திக்கிறேன் இனிமேல் ok தானே சரி சரி இனியாவின் வலையை போய் பாருங்கள் ok வா
  ரசித்தேன் நன்றி பதிவுக்கு.

  ReplyDelete
 4. திருவள்ளுவர் 1330 திருக்குறளை ரெண்டு ரெண்டு அடியா சொன்னார். ஆனா மேடம் கொடுத்த ஒரு அடிகளுக்கு கணக்கே இல்லையே:((( அந்த கணக்கே தெரியாத போது இந்த கணக்கு மட்டும் புரியவா போகுது!!!! ஆனா அத்தனை ஒரு அடி வாங்கியும் திருந்துன மாதிரி தெரியலையே??

  ReplyDelete
  Replies
  1. டீச்சரம்மா அடி வாங்குனா யாரும் திருந்தமாட்டாங்க புத்தி இருந்தா தான் திருந்துவாங்க ஆனா அதுதான் எனக்கு சுத்தமா கிடையாதே...இருக்கும் யாரும் தரமாட்டேங்கிறாங்க... ஒரு வேளை உங்ககிட்ட படிச்சிருந்த பத்தி வந்திருக்குமோ என்னவோ ஹும்ம்ம்

   Delete
 5. 2018ல் நடக்க போகும் திருமணத்தின் விளம்பரம் நல்லாயிருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ரசித்து பாராட்டியதற்கு நன்றி

   Delete
 6. இந்த மாதிரி கிராப்பிக்ஸ் எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க பாஸூ.....

  ReplyDelete
  Replies
  1. நீங்க அமெரிக்கா வரும் போது சொல்லுங்க எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன். ஆனா கிராபிக்ஸ் குரு நம்ம பாலகணேஷ் சாருதான் அவரை சென்னையில் பார்த்தால் வுட்டுடாதீங்க

   Delete
 7. 2016 வரை காத்திருக்க வேண்டுமா....?

  ReplyDelete
  Replies
  1. அதுவரை உங்களால் பொறுத்திருக்க முடியாதா என்ன? ஹீஹீ

   Delete
 8. டீச்சரிடம் கேட்ட சந்தேகம் - வயிறு குலுங்க வைத்தது. விஜயகாந்த் இவ்வளவு தெளிவாக வீழ்த்துவாரா?

  ReplyDelete
  Replies
  1. அரசியல் வானில் விஜயகாந்த் ஒரு காமெடியர் சார்

   Delete
 9. புத்தாண்டின் ஆரம்பத்துலேயே, டிடியையும்,டீச்சரையும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டீர்கள். சந்தோஷம்.

  டீச்சர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை காணோமே (எத்தனை அடி வாங்கியிருப்பீங்க?)

  ReplyDelete
  Replies
  1. இது என்ன எம்ஜியார் சிவாஜி ரஜினி நடித்த படமா என்ன அடியை கணெக்கிட்டு மூன்று அடி வாங்கியபின் திருப்பி கொடுக்க வாழ்க்கையா வாழக்கை இங்கு அடி மட்டும் சத்தமில்லாமல் வாங்கிக்கிடணும் சத்தம் போட்டு எண்ண ஆரம்பித்த்தால் எண்ணவா செய்யுறேனு ரவுண்டுகட்டி அடிப்பாங்க

   Delete
 10. ஹாஹாஹா! செம கலாய்ப்பு!

  ReplyDelete
 11. ஒரு அடி, அரை அடி விஷயங்களை ரசிக்க முடிந்தது.

  யுவன் புதிய சாதனை படைக்க நினைக்கிறார் போலும்!

  ReplyDelete
 12. பூரிக்கட்டையக் காணமேனு நினைச்சு போட்டா நியூ இயர்க்கு நிறைய பூரிக்கட்டை வந்தாச்சு போல...பதிவுகள் வருதுனு சொல்லுங்க.....ஹஹஹ் உங்க பதிவுகளை மிகவும் நாங்கள் ரசிப்பதால் ......மிக்க நன்றி தமிழா! ஜி+ பண்ணியதற்கு-கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog