உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 25, 2015

ஒபாமாவும் மோடியும் பேசிய ( நகைச்சுவை ) பிசினஸ் டீல்ஒபாமாவும் மோடியும் பேசிய ( நகைச்சுவை ) பிசினஸ் டீல்  

ஹரே மோடிஜி கேம்சோ

ஹலோ மிஸ்டர் ஒபாமா ஹவ் ஆர் யூ?

என்ன மோடிஜி இங்கிலீஷில் பேசி வெளுத்து வாங்குறீங்க?

ஹீஹீ இங்கிலீஷ்காரங்கிட்ட இங்கிலீஷில் பேசினால்தான் காரியம் நடக்கும் அதனாலதான்

சரி குடிக்க ஏதாவது கொடுங்க?

ஜூஸ் சாப்பிடுறீங்களா இல்லை வெஜிடபள் சூப் கொண்டு வர சொல்லட்டுமா?


யோவ் நீ திருந்தவே மாட்டாயா என்ன? போய் எதாவது ஒயின் எடுத்துகிட்டு வாயா இல்லேன்னா ஒரு பிஸினஸும் தரமாட்டேன்

சார் மன்னிச்சுகோங்க ஒயின் என்ன ரெமிமார்டின் கொண்டு வர சொல்லுறேன்

ஒபாமாஜி எங்க குடியரசு தின நிகழ்ச்சி  எப்படி இருந்துச்சு.

நல்லாதான் இருந்துச்சு. அப்புறம் கூட்டம் கூட்டாம நடந்து போன பசங்க எல்லாம் யாரு எந்த ஸ்கூலு பசங்க

ஒபாமாஜி அது ஸ்கூல் பசங்க இல்லை எங்க நாட்டு ராணுவப்படை?

என்ன நீங்க ராணுவப்படை எல்லாம் வைச்சிருக்கீங்களா?

ஆமாம் உலகத்தில் மிகப் பெரிய ராணுவப்படைகளில் எங்க படையும் பெரியது எங்க பக்கத்து நாடான பாகிஸ்தானைவிட பெரியது

அப்படியா அவங்க நல்லா சண்டை போடுவாங்களா?

அதை ஏன் கேட்குறீங்க பாகிஸ்தாங்காரன் இவங்களை நோக்கி சுட்டால் இவங்க பதிலுக்கு சுடாம எங்ககிட்ட திருப்பி சுட நல்ல காலம் பாத்து சொல்லுங்க என்று கேட்டுகிட்டு நிப்பாங்க நாங்கதான் ராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து சொல்லுவோம்.. அப்படி நாங்க பார்த்து சொல்லுறதுக்குள்ள 10 பேரை பாகிஸ்தான் இராணுவம் போட்டு தள்ளிட்டு போயிடுவாங்க

மோடிஜி இவங்களை பார்த்தது எனக்கொரு ஐடியா வந்திருக்கு. பேசாமால் நான் இவர்களை உபயோகித்து கொள்கிறேன் அதாவது :ஐடி'ல ஆப்சோர்ஸ்க்கு ஆளை எடுப்பது மாதிரி இவங்களை நாங்க வேலைக்கு எடுத்து ஈராக் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் இதற்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் நீங்கள் ஒகே சொன்னால் அமெரிக்க வங்கிகளில் உங்களுக்கு  நிறைய பணம் போட்டு வைக்கிறேன்

ஒபாமாஜி எனக்கு டபுள் ஒகே அப்புறம் இராணுவம் மாதிரி இன்னொரு குருப்பு என்னிடம் உண்டு அதற்கு  RSS என்று பெயர் அவங்களுக்கு நல்ல பயிற்சி உண்டு அவங்க வெடிகுண்டு எங்க வைச்சாலும் பழி என்னவோ முஸ்ஸிம் திவிரவாதிகள் மேல்தான் விழும். இந்த குருப்பு உங்களுக்கு வேண்டுமானல் கொஞ்ச ரேட் அதிகம்

அந்த மாதிரி படை எங்களுக்கு வேண்டாம்

அப்புறம் வேற ஏதாவது பிசினஸ்?

எங்க நாட்டுல பழைய ராணுவ தளவாடங்கள் இருக்கிறது அது எல்லாம் அவுட் ஆப் டேட்டா இருக்கு அதை இனிமேல் உபயோகப்படுத்தவே முடியாது .அதை உங்க நாட்டு ராணுவத்திற்காக வாங்கி கொள்ளுங்களேன்

ஒபாமாஜி நீங்களே அதை அவுட் ஆப் டேட் என்றும் உபயோகப்படுத்தவே முடியாது என்றும் சொல்லிட்டீங்க அதை வாங்கி எங்க ராணுவம் என்ன பண்ணும்Republic Day: Obama has seen better guns and tanks
The show of weapons which the US president will see on January 26 are mostly leftovers from the Soviet era.

யோவ் மோடிஜி  எங்களுக்கு வேண்டாத கோழியின் லெக் பீஸை என்ன செய்வது என்று தெரியாமல் 10 ஆண்டுகள் சேமித்து வைத்ததையே நல்ல விலை கொடுத்து வாங்கினிங்க இல்லை. அப்புறம் இதை வாங்க மட்டும் ஏன் இவ்வளவு பேச்சு. மோடிஜி நல்ல கேட்டுக்குங்க இந்த ராணுவ தளவாடங்களை உங்க ராணுவத்தின் ஷோகேஸில் வைக்கதான் சொல்லுறேன் உங்க ராணுவம் ஒரு போதும் சண்டை போடாது அப்ப எதுக்குய்யா உங்களுக்கு புது தளவாடங்கள். இதை வாங்கிக்கோ உனக்கு நல்ல கமிஷன் தரேன்

அப்ப சரி அதை நான் வாங்கிகுறேன்

அப்புறம் எங்க ஊருல தடை செய்யப்பட்ட மருந்துக்கள் அளவிற்கு அதிகமாக இருக்குது அதை வாங்கிகிறீங்களா?

நல்ல கமிஷன் கொடுத்தா கோடிகோடியாக வாங்கிகிறேன்

அப்பாடி எங்கடா நீங்க, :நான் என் நாட்டு மக்களை காப்பாற்ற போறேன் என்று சொல்லி வாங்காமல் விட்டுவிடுவீங்களோ என்று பயந்துட்டு இருந்தேன் மோடிஜி

அட ஒபாமாஜி எங்க மக்களை காப்பாற்ற நான் பாரதமாதாகி ஜே என்று சொல்லி அதனுடன் இந்துத்துவா கருத்துகளை பேசி எல்லோரையும் காவி உடை உடுத்த சொல்லினால், இந்திய மக்கள் நான் அவர்களை காக்க வந்த அவதாரமாக நினைத்து கொள்வார்கள் அது போதும் என் மக்களுக்கு ஹீஹீ

அப்புறம் இன்சூரென்ஸ் கம்பெனிக்கு அனுமதி உண்டா?

எனக்கும் என் நண்பர்களுக்கும் நல்ல கமிஷன் உறுதி தந்தால் நிச்சயம் உண்டு

ஹரே மோடிஜி நீ நாட்டுக்கு பிரதமார இல்லை பிஸினஸ்மேனாய்யா?

பட்டேல்(குஜராத்திகள்) பாடையில் போகிறவரைக்கும் பணம் பார்க்கும் பிஸினஸ்மேன்தான் அப்படி அவன் இல்லேன்னா அவன் குஜராத்தியே இல்லை

ஹாஹா மோடிஜி நீ எங்க நாட்டுக்கு வந்து என் கூட சாப்பிடாம தண்ணிமட்டும் குடிச்சுகிட்டு போன போது நினைச்சேன் நீங்க ஒன்றுக்கும் லாய்க்கு இல்லாத ஆளு என்று .ஆனா நீ பலே கில்லாடிய இருக்கிறய்யா

அப்படி நான் கில்லாடி நடிகனாக இல்லேன்னா அத்வானி போன்ற பெரிய தலைங்களை எல்லாம் அப்படியே செல்லா காசாக்கி. இப்படி நான் பெரிய ஆளாக ஆகி இருக்க முடியுமா என்ன? அப்புறம் ஒபாமாஜி உலகத்தில் எல்லா மக்களிடேயும் நல்ல நடிச்சு  எளிதாக ஏமாற்ற முடிஞ்ச எனக்கு இந்த தமிழக மக்களை மட்டும் ஒன்றும் பண்ண முடியல அது மட்டும் ஏன் என்று தெரியல.

அது எனக்கு தெரியும் மோடிஜி நீங்க இந்தியாவில் எல்லாப் பகுதியிலும் அமோகமாக ஜெயித்து தமிழகத்தில் ஜெயிக்காமல் போன போதே நம்ம மதுரை தமிழனிடம் போன் போட்டு கேட்டேன் என்னப்பா ஏன் தமிழகத்தில் மட்டும் மோடி ஜெயிக்கவில்லை உனக்கு காரணம் ஏதும் தெரியுமா என்றேன்

அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா மோடி ஊடகங்கள் மூலமாகவும் நேராகவும் நடிக்கிறார். அவர் மட்டும் சினிமாவில் நடித்து அதுவும் நயன்தார அமலாபால் அனுஷ்கா போன்றவர்கள் கூட ஜோடியாக  நடித்து ஒரு குத்து பாட்டில் ஆடி இருந்தால் அவர் அனைத்து ஒட்டுகளையும் அள்ளி அதிமுக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட டெபாசிட் கூட வாங்கி இருக்காதுன்னு சொன்னான்

யாரு அந்த மதுரைத்தமிழந்தானே.. அவன் சொன்னா எல்லாம் சரியா இருக்கும் அவன் என்கூட இருந்த மாதிரி அப்படிய் உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறான் அவன் மட்டும் எங்க கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் நல்லா இருக்கும் அவன் சரியான நக்கல் பேர்விளி.... அவன் என்னை நக்கல் பண்ணியே பெரிய ஆளாகிட்டான்..ஆமாம் ஒபாமாஜி அவன் என்ன உங்க சீக்ரெட் சர்வீஸ் ஆளா என்ன?

சரி சரி மீண்டும் நம்ம பிஸினஸ் பேச்சை அப்புறம் வச்சிக் கொள்வோம் இப்ப நான் போய் அமெரிக்காவின் முதல் லேடியை பார்க்க போகிறேன் அதுதான்ய்யா என் மனைவியை சொல்லுறேன் இல்லேன்னா பூரிக்கட்டை பறக்க ஆரம்பிச்சிடும் அதுவும் இந்த பூரிக்கட்டை  உபயோகத்தை என் மனைவி மதுரைத்தமிழ்ன மனைவிகிட்ட கத்துக்கிட்டா அதுல இருந்து எனக்கு பயமாகவே இருக்கு ,அந்த மதுரைத்தமிழன் எப்படிதான் தினமும் அடி வாங்கி உயிர் வாழுகிறானோ? அது சரி மோடிஜி நான் வந்ததில் இருந்து உங்க மனைவியை பார்க்கவே இல்லையே ?ஏன் எங்கிட்ட அறிமுகப்படுத்தவில்லை

ஒபாமஜி நான் இந்தியாவில் இருக்கும் உண்மையான் ஆம்பிளை சிங்கம் அதுனால என் மனைவியை தூக்க்கி ஏறிஞ்சுட்டேன் அதுனாலதான் இப்ப நிம்மதியா நினைச்சதை சாதிக்கிறேன் அதுமட்டுமல்ல அவ கூட வசிக்காததால் நான் விவேகானந்தர் வேசஷம் போட்டு இருக்கிறேன் ஹீஹீ
அப்ப நாம மீண்டும் அமெரிக்காவில் பார்ப்போம். எங்களுக்கு   நிறைய பிஸினஸ் கொடுத்தற்கு சாரி எனக்கு கமிஷன் தந்தற்கு நன்றி


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: எனது பதிவுகள் படித்து ரசித்து சிரித்து கலாய்க்கமட்டுமே எழுதப்படுகிறது யாரையும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல அது ஒபாமாவாக, மோடியாக , கலைஞராக, ஜெயலலிதாவாக,ஸ்டாலினாக, சாருவாக, விஜயகாந்தாக, தமிழிசையாக ஏன் தமிழ் பதிவர் மைதிலி, விசுAwsome, முத்துநிலவன் அவர்களாக  இருந்தாலும் சரி எல்லோரும் ஒன்றுதான்.. ஆஆ ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் என்னை பூரிக்கட்டையால் அடிக்கும் மனைவியாக இருந்தாலும் சரி

12 comments :

 1. வாங்க தமிழா வாங்க.. சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லாம் நாசூக்க சொல்லிட்டு, போற நேரத்தில் என் பெயரை தட்டி விட்டு சென்றீர்கள் பாருங்கல், அதில் தான் நம் மதுரை குசும்பை கண்டேன்.

  ReplyDelete
 2. ஹே!!! header சூப்பர் தல!!!! ரொம்ப சூப்பர்! ரசனையா இருக்கு :)
  பதிவு ரொம்ப லெங்தா இருக்கு. இருங்க பாஸ் . வரேன்:)

  ReplyDelete
 3. நகைச்சுவையாக இருப்பினும் பல உண்மைகள் உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ராணுவத்தையும் அரசியல்வாதிகள் தான் கெடுக்கிறாங்க:) வருஷம் முழுக்க எல்லையில் பனியில் குடும்பத்தை பிரிந்து நாட்டுக்காக காவல்காத்து, இந்த வீணாப்போன அரசியல்வாதிகளால் கேலிக்கூத்தாகி இருக்கும் ராணுவத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது:(

  ReplyDelete
 5. வணக்கம்
  உண்மைகள் பல இருக்கிறது.. நகைச்சுவையாக சொன்னது சிறப்பாக உள்ளது..
  இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. இதையெல்லாம் செய்து விட்டு ஒரு அறிக்கை வெளியிடுவார்கள் ....பல நல்லுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப் பட்டன :)
  த ம 4

  ReplyDelete
 7. ரசித்தோம் ரசித்தோம்! ஒபாமாவுக்கு/மனைவிக்கு பூரிக்கட்டை கொடுத்த மதுரைத் தமிழன் என் மோடிக்கு/மனைவிக்கு சப்ளை கொடுக்கவில்லை!!? அங்க இருந்துகிட்டு நாட்டுக்காக எவ்வளவு பதிவுகள் போடறீங்க இத மட்டும் மறந்துட்டீங்களே! நியாயமா...

  ReplyDelete
 8. ரசித்தேன். பூரிக்கட்டை மூலம் நீங்கள் இன்னும் பெயர் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog