உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, January 30, 2015

இப்படியும் ஒரு மனைவியா? அட என்னான்னு சொல்வேணுங்கோஇப்படியும் ஒரு மனைவியா? அட என்னான்னு சொல்வேணுங்கோ

நேற்று இரவு பெட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தேன். அப்போது அருகில் படுத்திருந்த மனைவி எழுந்து பாத்ரூம் பக்கம் போகும் சத்தம் கேட்டது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அட பாவி மனுசா நீ நல்லா இருப்பியா? உனக்கு இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா என்று  கத்தியாவரே கையில் உள்ள பூரிக்கட்டையால் என்னை அடிக்கத் தொடங்கினாள்.

அதிர்ஷடகார ஆண்கள் தூங்கும் போது மனைவி சத்தம் இல்லாமல் முத்தம் தர தொடங்கி ஆசையாக அணைத்து கொள்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். 

ஆனால் நமக்கு அந்த அதிர்ஷம் எல்லாம் இல்லை அது கூட பரவாயில்லை ஆனால் தூங்கி கொண்டிருக்கும் போது பூரிக்கட்டையால் அடி வாங்குவது இருக்கிறதே அது நமக்கு மட்டும்தான் கிடைக்கும் போல . உடம்பில் திடீரென்று பூரிக்கட்டை தாக்கியது .வலி பொறுக்காமல் கதறி கொண்டே எழுந்தேன்.

அப்போது என் மனைவி மேலும் கத்த தொடங்கி நீ என்னமோ பதிவு எழுதுற, சாட் பண்ணுறேன்னு சும்மா உன்னை விட்டு வைச்சுருந்தேன் ஆனால் இன்றுதான் தெரிந்தது நீ. ஒரு பெண்ணை நம்ம வீட்டுக்கு கூட்டி வந்ததும் இல்லாமல் அவளை நம்ம பெட் ரூமில் உள்ள பாத்ருமில் ஒழிச்சா வைச்சிருக்க பாவி மனுஷா நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று மேலும் தாக்க தொடங்கினாள்

 உடனே நான் கதறியபடி அடியே என்னடி உளருகிறாய் என்னடி ஆச்சு நீ சரியான லூசா நான் அதுவும் ஒரு பெண்ணை பாத்ருமிற்குள் ஒழிச்சு வைச்சுருக்கேனா அதுவும் என்னை பார்த்த பின்னும் எந்த பொண்ணாவது வழிவாளா என்ன , நான் என்ன சூர்யாவா அல்லது அஜித்தா  நீ என்னடி பேசுற என்றேன்

அதுக்கு அவள் நான் என்ன பொய்யா சொல்லுறேன் நான் என் கண்ணால் பார்த்தைதானே சொல்லுறேன் என்று சொல்லி என் தலையில் கொஞ்சம் இருக்கும் முடியை பிடித்து என்னை இழுத்து கொண்டு பாத்ரூமிற்கு கூட்டிச் சென்று இங்க பாரு, யாரு இவள் இப்படி ஒரு பெண்ணை இதற்கு முன்னால் நான் பார்த்தே இல்லை அதுவும் நம்ம பாத்ருமில் என்றாள்

அதை பார்த்த நான் அடிப்பாவி என்று சொல்லி பாத்ருமில் உள்ள குழாயில் தண்ணிரை பிடித்து அவள் முஞ்சியில் தெளித்து அடியே நல்லா கண்ணை திறந்து பாருடி அது வேறு யாருமில்ல நீதானடி இதுக்குதான் சொல்லுறது தூக்க கலக்கத்தில் கண்ணாடியை பார்க்காதே அதுவும் உன் மேக்கப் கலைஞ்ச பின் பார்க்காதே என்று சொல்லுவது. நீ சொன்ன பொண்ணு யாருமில்ல அது நீதானடி என்று சொன்னதும் தன் தவறை உணர்ந்தாள். ஆனாலும் அதுக்கு மன்னிப்பு கேட்காமல் அதுக்குதான் நான் சொன்னேன் பாத்ருமில் இவ்வள்வு பெரிய ஆள் உயரக் கண்ணாடியை மாட்டி வைக்காதிர்கள் அப்படி மாட்டி வைத்தது உங்கள் தவறுதான் என்று சொல்லி தூங்கச் சென்றாள்

அடி வாங்கிய நானோ தூக்கம் வராமல் இப்படி பதிவு எழுதி உங்களிடம் நடந்தவைகளை கொட்டிக் கொண்டிருக்கிறேன்
 ஹும்ம்ம்ம்ம்ம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : நான் படித்த துணுக்கை என் வழியில் மாற்றி சொல்லி இருக்கிறேன்...

10 comments :

 1. ஐயோ, பாவம் ! தைலம் ஏதாவது தடவி கொஞ்சம் உடம்ப பார்த்து கொள்ளுங்கள். உள்காயம் ஏதாவது இருக்க போவது!

  ReplyDelete
 2. கண்ணாடியில் பார்க்கும்போது கவனம் தேவை.

  ReplyDelete
 3. பரவாயில்லையே உண்மையை அப்படியே எழுதிட்டீங்களே...

  ReplyDelete
 4. எப்படியும் அடி வாங்கப் போவது நீங்கள் தான்! :)))

  ReplyDelete
 5. ஹஹஹஹஹஹ் உண்மையத்தான் செல்றேனுங்கோ நு சொல்லி இப்படி உண்மையெல்லாம் போட்டு உடைக்கிறீங்களே! தமிழா....அப்ப அந்த டிஸ்கி.....

  ReplyDelete
 6. என்ன தான் மாமியின் மேல் கோபம் இருந்தாலும்....
  நீங்கள் அவரை இப்படி கலாய்க்கக்கூடாது..... நான் மாமியின் சார்பில்
  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 7. அடி வாங்கிட்டு துணுக்குன்னு சொல்லி எங்களை துணுக்குற வச்சிட்டீங்களே...

  ரசிக்க வைத்தது.

  ReplyDelete
 8. அதிர்ஷ்டமான ஆம்பிளைகள்.. அப்படியும் ஒரு வர்க்கம் இருக்கோ?

  ReplyDelete
 9. அட கடவுளே துணுக்கு என்று தெரியாமல் நான் வேறு ரொம்பவே கவலை பட்டு உருகி கண் கலங்கி ம்..ம்..ம். பாவம் இந்த மதுரை தமிழன் என்றுதான். அடி வாங்குவதற்காகவே கற்பனைகள் வளர்கிறதே. ம்..ம்..ம் தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog