உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 15, 2014

இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?
இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?

செய்தி :பலாத்காரம் செய்ய போவதாக இமெயில் அனுப்பி மிரட்டிய இந்தியருக்கு 18 மாத சிறை!
[Thursday, 2014-06-12


அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டல் இமெயில் அனுப்பிய இந்தியர் ஒருவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கார்த்திகேயன் நடராஜன் (27) என்ற இந்தியர் வசிக்கிறார். அவர் தனது பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். இதை அந்த பெண் ஏற்கவில்லை.இந்நிலையில், அந்த பெண்ணுக்கு உன்னை நான் பலாத்காரம் செய்யப் போகிறேன் என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இமெயில் அனுப்பி மிரட்டல் விடுத்திருக்கிறார்.இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நோரா பாரி பிஷர் உத்தரவிட்டார். இதை அரசு தரப்பு வழக்கறிஞர் டேவிட் ஹிக்டன் தெரிவித்தார்.

இது என்ன இந்தியாவா தான் காதலை ஏற்காத பெண் மீது ஆசிட் ஊற்றுவதற்கு அல்லது பலாத்காரம் பண்ணுவதற்கு..... மிரட்டலுக்கே 18 மாதம் ஜெயில்.... கார்த்திகேயா நீ ரேப் பண்ண போவதாகதானே மிரட்டினாய்... இப்ப பாரு அமெரிக்க ஜெயில் உன் கூட இருக்கப் போகும் ஆண்களே உன்னை ரேப் பண்ணுவார்கள். அப்ப புரியும் உனக்கு ஒரு பெண் படும் துயரம்... கார்த்திகேயன் மட்டுமல்ல அமெரிக்கவுக்கு வரும் எவரும் தவற செய்யும் முன் அமெரிக்காவில் ஜெயிலில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் எவனுமே தவறு செய்யமாட்டார்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. ஏதோ இடிக்கிதே.

  ஜெயில்ல நடக்கற் ரேப்பப் பாத்தா எவ்னும் ரேப் பண்ணவே பயப்புடுவான் கரீங்க. அங்க இருக்கற் அத்தன பேரும் ரேப் பண்ணிட்டுத்தான உள்ள வந்திருப்பான். ஆனந்தம் - அகமும் புறமும் அப்டீன்னுகூட அமெரிக்கன் சிந்த்திக்க மாட்டானா.

  கோபாலன்

  ReplyDelete
 2. நான் நீதிபதியானால் :

  இந்த மாதிரி ரேபிஸ்ட் ஆளுங்கள 60 வயசுக் கெளவிங்களோட 60 வயசு வரைக்கும் ஜெயில்ல இருக்கவுட்டுட்டு அப்பரம் வேளீல அனுப்பிருவேன். தாய் பெண்ணே வணக்கம்ன்னு பாடிக்கிட்டே வெளீல வருவான் பாருங்க.

  கோபாலன்

  ReplyDelete
 3. கொஞ்சம் அமெரிக்க ஜெயிலில் நடக்கும் நிகழ்வுகளைத் தட்டிவிடறது.

  ReplyDelete
 4. என்ன தமிழா நம்ம பசங்க அமெரிக்கா போகணும்னு ஆசைப்படறதுல தப்பில்லை ஆனா அங்க போயும் இப்படி எல்லாம் செஞ்சு வம்புல மாட்டிக்கிட்டு மானத்த ராக்கெட்ல விடறாங்களே! போறதுக்கு முன்னாடி அமெரிக்காவப் பத்தி நல்ல தெரிஞ்சுகிட்டு போகச் சொல்லணும்....நீங்க தான் அதைக் கொஞ்சம் எழுதுங்களேன்! இங்க இல்லன்னாலும் ஃபேஸ்புக்குல எழுதுங்களேன் ....பசங்க படிப்பாங்கல்ல.....அப்புறம் போகணுமா வேண்டாமானு முடிவு பண்ணட்டும்....

  ReplyDelete
 5. ம்ம்ம்ம்.... இந்த மாதிரி எல்லாம் இங்கே நடக்க விடமாட்டார்கள் - வழக்கு முடியறதுக்கு பல வருஷம் ஆகுமே

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog